💐எளிமையான "கல்உப்பு" பரிகாரம்..!💐
🌹உங்கள் தீராத பொருளாதார பிரச்சனைகளும்.., உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் எளிதில் தீர உப்பில் மிளகை இப்படி செய்தால் போதுமே..!
🌹ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கும். அந்த பிரச்சனைகளுக்கான தீர்வை எதிர்நோக்கி இறை வழிபாடுகளில் ஈடுபடுவது உண்டு. எந்த பிரச்சனைகளுக்கு எந்த பரிகாரத்தை செய்தால் உடனே நிவர்த்தி அடையும் எனும் சூட்சமத்தை அறிந்து கொண்டிருந்தால் நிச்சயம் அந்த பிரச்சினைகளிலிருந்து விரைவாக விடுபட முடியும். இப்படி நம் வாழ்க்கையில் இருக்கும் பணப் பிரச்சனைகளுக்கும், தீராத உடல் ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய அற்புத பரிகாரம் தான் இந்த உப்பு பரிகாரம். அதை எப்படி முறையாக செய்ய வேண்டும்? அதனால் கிடைக்கும் பயன்கள் என்ன எனும் சூட்சமத்தை அறிந்து கொள்ளுங்கள்.
🌹கல் உப்பு என்பது பாற்கடலில் இருந்து எடுக்கப்படுவதால் மகாலட்சுமிக்கு இணையாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. பாற்கடலில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் பாதம்பட்ட இந்த கல் உப்பு வீட்டில் இருந்தாலே அந்த வீடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். அதனால் தான் நம் முன்னோர்கள் எல்லாம் சாதாரண உப்பை விட கல் உப்புக்கு அதிக மகத்துவம் கொடுத்து பயன்படுத்தி வந்தார்கள். நாமும் கல் உப்பினை பயன்படுத்தி ஆரோக்கியத்தையும், இறை சக்தியையும் வீட்டில் காத்துக்கொள்வது அவசியம்.
🌹ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியல் ரீதியாகவும் தூள் உப்பை தவிர்த்து விட்டு கல் உப்பை இன்றே பயன்படுத்த துவங்குங்கள். கல் உப்பை வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது சகல, சவுபாக்கியங்களையும் பெருக செய்யும் என்பது நம்பிக்கை. இந்த கல் உப்பை எப்போதும் பீங்கான் ஜாடியில் தான் போட்டு வைக்க வேண்டும். அதில் ஐந்து ரூபாய் நாணயங்களை சேர்த்து போட்டு வைப்பது அவசியம். இது மென்மேலும் நம்மிடம் இருக்கும் பணம் பெருகுவதற்கு வழிவகுக்கும்.
🌹அதே போல உங்களுடைய பூஜை அறையில் கொஞ்சமாக ஒரு பித்தளை அல்லது செம்பு கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் நான்கைந்து மிளகுகளைப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பு, மிளகுடன் சேரும் பொழுது நம் பிரச்சனைகளும் விரைவாக தீரும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும். வெள்ளிக்கிழமையில் இதை செய்து வைத்தால் அடுத்த வெள்ளிக்கிழமையில் கொண்டு போய் தண்ணீரில் கரைத்து ஊற்றி விட வேண்டும். அதுவரை உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் இதனை வைத்திருப்பது அவசியம்.
🌹எப்போதும் பூஜை அறையில் உங்களுக்கு மந்திரம் உச்சரிக்க தெரிந்தால் உச்சரியுங்கள் அல்லது ஒலி வடிவமாக மந்திரங்களை கேட்குமாறு பூஜை அறையை அமைத்துக் கொள்ளுங்கள். பூஜை செய்யும் பொழுது மட்டுமாவது மந்திரங்களை ஒலிக்க விடுங்கள். கோவிலில் ஒலிக்கும் மந்திரங்களின் அதிர்வலை நம் எண்ணங்கள் நேர்மறையாக பிரதிபலிக்கின்றன. அதனால் தான் கோவிலுக்கு செல்லும் பொழுது மனதில் அமைதி பிறக்கிறது. அதே போல நம் வீட்டிலும் மந்திரங்கள் ஒலிக்க நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களும், வீட்டில் இருக்கும் தீய சக்திகளும் நம்மை விட்டு விலகி நேர்மறையான சிந்தனைகள் பெருக்கும்.
🌹இதனால் தன்னம்பிக்கை அதிகரித்து, எதையும் நம்மால் சாதிக்கும் வல்லமை பிறக்கும். இறை சக்தி என்பது மந்திரங்களின் மூலம் நமக்கு எளிதாக கிடைக்கும். இந்த கல் உப்பு பரிகாரத்தை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வர நம்மிடம் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நம்மை விட்டு விலகி ஓடிவிடும். வெள்ளிக்கிழமையில் ஆரம்பித்து மறு வெள்ளிக்கிழமையில் அதனை முடித்து வைக்க வேண்டும். இதே போல தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வர வேண்டும். மிக மிக எளிமையாக இருக்கும் இந்த பரிகாரத்தை அனைவரும் முயற்சி செய்து பார்த்து பயன் பெறுங்கள்.
( இது அனைவருக்குமான பரிகார முறை ஆகும். அவரவர் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஊங்களின் தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வுசெய்து அதற்கேற்றபடியான பரிகார முறைகளை பின்பற்றி தீர்வு பெறலாம்)
🌹சுபமஸ்து🌹