Friday, 28 April 2017

அக்ஷய திருதியை !!!….என்ன செய்ய வேண்டும் அன்று ?

அக்ஷய திருதியை !!!….என்ன செய்ய வேண்டும் அன்று ?
அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள்‘’

எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது,அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது. இதற்கு உண்மையான அர்த்தம் என்ன வென்றால் இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான தருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான்.பூரியசஸ் மன்னரின் கதை சிறுவயது முதல் தமிழர் அனைவரும் அறிந்ததே, பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திரிதியை.
அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் “அட்சய பாத்திரம்” போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை “அட்சய திரிதியை” என்று சொல்லும் வழக்கம் வந்தது.
இந்து மதத்தை பொறுத்தவரை “வளருதல் அல்லது என்றுமே குறையாதது” என்னும் பொருளே “அட்சயம்”, பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான்.
அக்ஷய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அக்ஷய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் தினம் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
ஹிந்து இதிகாசப்படி, அக்ஷய திருதியை தினத்தன்றே வேத வியாசர் மகாபாரத இதிகாசத்தை அறிவுக்கும் தடைத் தகர்புக்குமான யானைத் தலைக் கடவுளர் விநாயகர் எழுதச் சொல்லி கட்டளையிட்டார். அது வழமையாக பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. புராண வேதப்புத்தகங்கள் அவர் எவ்வாறு கடலிலிருந்து நிலத்தை மீட்டார் என்பது பற்றிக் கூறுகின்றன.
செல்வத்திற்கு அதிபதியான கடவுளர் குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லக்ஷ்மியை வணங்குவார் என லக்ஷ்மி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில், குபேர லக்ஷ்மி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
கிருதயுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அட்சயத் திருதியை அன்றுதான்.
கண்ணபிரான் அட்சய திருதியைப் பற்றி, தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது. அந்தக் கதை:
சாகல் என்ற நகரில் தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன், வருடம் தோறும் அட்சய திருதியையின்போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்தான். அப்போதும் அட்சய திருதியை திருநாளில் தான தர்மங்கள், யாகம் ஆகியவற்றைச் செய்து மென்மேலும் சிறப்பு பெற்றான். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும்.
இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள். அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக ஸ்ரீவிநாயகர் வருவதாகவும் ஐதீகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.
கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம்தான் கங்கோத்ரி. கங்கையின் வலது கரையில் கங்கோத்ரிக்கான ஒரு கோயில் இருக்கிறது. 20 அடி உயரத்தில் உள்ள இந்த அழகிய கோயில் வெள்ளை கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அட்சய திருதியை அன்று இந்த கோயில் திறக்கப்படுகிறது. தீபாவளி முடிந்த பிறகு கோயில் மூடப்படும். கடுங்குளிர் காலத்தில் பனி உறைந்து கிடக்கும்போது இந்த திருவுருவச் சிலை 25 கி.மீ. கீழேயுள்ள ‘முகிமடம்’ என்ற கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அட்சய திருதியை அன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில், ‘முக்கூடல்’ எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் கூடும் துறையில், ஏராளமான பக்தர்கள் நீராடுகிறார்கள். அட்சய திருதியை அன்று இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.
16 கருட சேவை! அட்சய திருதியை நாளன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பதினாறு பெருமாள் கோயில்களில் இருந்து புறப்படும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு, குடந்தை பெரிய தெருவுக்கு வந்து தரிசனம் தருகின்றனர்.
தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.
பெண்கள் சொல்ல வேண்டிய பாஞ்சாலி அபய மந்திரம்!
சித்திரை மாத வளர்பிறையின் மூன்றாம்நாள், அட்சய திரிதியை நாளாகும். பெண் மானம் காத்த தினம் என இதை அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்ததுடன், தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார்.
துர்க்குணம் கொண்ட துரியோதனன், பாஞ்சாலியின் துகிலுரிய உத்தரவிட்டான். மானம் காக்கவேண்டி பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள்கூட அவளுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் தெய்வமே துணை என
சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலயா
ச்யுத!
கோவிந்த! புண்டரீகாக்ஷ!
ரக்ஷமாம் சரணாகதம்
எனக் கதறினாள். ஸ்ரீகண்ணனின் அருளால் பாஞ்சாலியின் மானமும் காப்பாற்றப்பட்டது.
இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்கள், பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி, கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெறலாம்.
உண்மையில் அன்று சுமங்கலி பூஜைசெய்வது மற்றும் உணவு, ஆடை போன்ற நம்மால் முடிந்த வாழ்வின் அடிப்படை பொருட்களை தானம் கொடுப்பதுதான் மிக சிறந்த செயலாகும். அன்றைய தினம் தானம் கொடுபவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை.
அட்சய திருதியைக்கு செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்று ஏன் வந்தது என்றால்? அத்தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை.
இந்து பெண்கள் தாலி முதல் அனைத்து தங்க ஆபரங்களையும் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியாக பார்ப்பதால் வந்த இடை சொருகல்தான் இந்த “தங்கம் வாங்க வேண்டும்” என்பது.

உண்மையில் அன்றைய தினம் லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று பார்த்தால், நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி மற்றும் “கல்”உப்பு போன்றவைதான்
நம் புது வீட்டின் கிரஹப் பிரவேசத்தில் முதன் முதலில் பசு நுழைய அத்துடன் “கல்”உப்பு மற்றும் அரிசியை முதலில் கொண்டு சென்று வைத்து, பின் கறந்த பசுவின்பாலை காய்ச்சுவது என்பது அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால் என்ற நம்பிக்கையில்தான் (இப்போது பாக்கெட் பால்தான் எல்லாம் என்பது வேறு விசயம்).
இது போல அட்சயத் திருதியை தினத்தில் லட்சுமிகரமான எந்த ஒரு மங்களகரமான பொருட்களையும் வாங்குவதே அடிப்படை அட்சயத் திருதியையின் அர்த்தம்.
கற்காலத்தில் இடி, மின்னல், பாம்பு என்று தனக்கு தீங்கு அல்லது தன்னை விட சத்தி கொண்ட இயற்கை, வானம் பூமி என்று அனைத்தும் மனிதனுக்கு கடவுளாக தெரிந்தது.
அந்த வழி வந்த நமக்கு இன்னும் நம் அடிப்படை எண்ணம் மாறாமல் இப்போது தங்கம் அல்லது பணத்தில் அதிக மதிப்பு கொண்டவை மட்டும் லட்சுமியாக(கடவுளாக) தெரிகிறது.
அப்படி பார்த்தல் கூட சுக்கிரனை உரிய கிரகமாக கொண்ட லட்சுமிக்கு பொருத்தமாக அட்சயதிருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என்பதுதான் சரியான கருத்து.
சான்றோர்கள் அட்சயத் திருதியை அன்று யாகங்கள் செய்யவும்,பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும்,அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தருமங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டுசெல்லவும் கூறினார்களே தவிர தற்காலங்களில் நடைபெறுவதைப் போல தங்க வெள்ளி நகைகளை வாங்கிக் குவிக்கச் சொல்லவில்லை.ஆக, அட்சயதிருதியை அன்று லட்சுமியை மட்டும் மனதில் கொண்டு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.
வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அன்று தானம் கொடுப்பதால் ஆயுள் பெருகும்.கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வு வளம் பெறும் என்று கூறப்படுகிறது.
அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோகளையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம் என்பதை புரிந்து கொண்டு, நம் வாரிசுகளுக்கும் இந்த உண்மை கருத்தை சொல்லி அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது நம் கடமையாகும்.
இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது, அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது எனறு நினைப்பது எந்த விதத்தில் சரி? அட்சய திருதியைக்கு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த அட்சயத் திருதியை மோகம் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. இந்நாளில் நகை வாங்க நகைக்கடைகளில் முன்பதிவு எல்லாம் செய்து கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மக்களின் இந்த மோகம்.
யோசிச்சு பார்த்தால் மக்களின் அறியாமையே இந்த முட்டாள் தனத்திற்கு காரணம்ன்னு தோன்றும். அரசியல் வாதிகளை போலவே நகை கடைக்காரர்களும் மக்களை முட்டாளாகவே வைத்து கொள்ள விரும்புகின்றனர்.
அட்சய திருதியை சொல்லியிருக்கும் நம் மதம் புண்ணியம் ,பாவத்தை பற்றியும் சொல்லியுள்ளது. அட்சய திருதி அன்று எத்தனை கிராம் தங்கம் வாங்கினோம் என்பதை அளவுகோலாக வைத்து இறைவன் நம்மை எடை போட போவதில்லை.
அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவது அல்ல நோக்கம்..
தங்கம் ,வைரம் போன்றவைக்கு விலை என்று ஒன்று உண்டு.ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயங்கள் என்று இவ்வுலகில் சில விஷயங்கள் இருக்கின்றன. உண்மையில் விலை மதிப்பில்லாதவை அவைகள் தாம். அவையெல்லாம் என்னவென்று யோசித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்.
ஆகவே……. இனி அடுத்த அட்சய திருதியில் இருந்தாவது ………வாங்காதீர்கள், கொடுங்கள். (வாங்கியே தீருவேன் என்றால் வாங்குவதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாதீர்கள் ——- கொடுங்கள்)
ஏழை மாணவர்கள் கல்வி கற்க உங்களால் முடிந்ததை கொடுங்கள். பசித்திருப்போருக்கு அன்னதானம் செய்யுங்கள். முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தருமங்களைச் செய்யுங்கள்.. அன்று செய்யும் நல்ல காரியங்களுக்கு ஒன்றுக்கு பத்தாக பலன் உண்டு. இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது எந்த விதத்தில் சரி???
ஆக, சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளான அட்சய திருதியையன்று செய்யும் எந்த ஒரு செயலும் விருத்தியாகும் என்றும், அதனால் அட்சயத் திருதியையன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து, தன்னால் ஆன தான தருமங்களை செய்து நல்ல முறைகள் வாழவே இந்து மதம் சொல்கிறது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Thursday, 27 April 2017

ஸ்ரீ சக்கர மகிமை

எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம்.
மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
"ஸ்ரீசக்கரத்தின் மகிமை"மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள்.
மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
"மூன்றின் பலம்"
முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர்.
அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.
1) முதல் ஆவரணம்
இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.
2) இரண்டாவது ஆவரணம்
பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.
3) மூன்றாவது ஆவரணம்
பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.
4) நான்காவது ஆவரணம்
இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.
5) ஐந்தாவது ஆவரணம்
பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.
6) ஆறாவது ஆவரணம்
அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.
7) ஏழாவது ஆவரணம்
புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.
8) எட்டாவது ஆவரணம்
மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.
8) ஒன்பதாவது ஆவரணம்
பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

திருமணம் நடைபெற பரிகாரங்கள்,விரதம்,வழிபாடு

திருமணம் நடைபெற பரிகாரங்கள்,விரதம்,வழிபாடு

விரத பலன்;
ஒரு வீட்டில் கணவன் விரதமிருந்து வழிபட்டால் கணவனுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். ஆனால் மனைவி விரதமிருந்து வழிபட்டால் மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவனுக்கும், குழந்தைக்கும் கூட நற்பலன்கள் கிடைக்கிறது.
குடும்ப பாதிப்பு, கஷ்டங்கள்; தினமும் வீட்டில் [அல்லது] உள்ளூர் பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.
. மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க; அஷ்டமி, நவமி, கரிநாள், ராகு காலம், எமகண்டம் தவிர்த்து, புதன், வியாழக்கிழமைகளில் அமிர்த யோகம், சித்தயோகக் காலத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது எதிர்காலக் கல்விக்கு நல்லது.
வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் விளகேற்றி வெள்ளை சிகப்பு அரளிப்பூ போட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தம்பதியரின் பெயர், ஜெனம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் தம்பதியர் இருவரும் ஒற்றுமையாக அன்னியோன்னிய நேசத்துடன் விளங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
நிரந்தர நல்ல வேலை கிடைக்க செவ்வாய்க்கு அதிபதி முருகனை நம்பிக்கையுடன் தினமும் வழிபட்டு வந்தால் 3 மாதத்திற்குள் வேலை கிடைக்கும்.
திருமணம் தாமதமாகி களத்திர தோசத்திற்குள்ளான பெணகள் செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30. மணி ராகு காலத்தில் துர்க்கை அம்மன் சன்னதியில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றுவதோடு நவகிரகங்களை ஒனபது முறை சுற்றினால் திருமணம் விரைவில் நடைபெறும்.
வியாபாரிகள் தங்களது கடைக்கு நல்லவர், கெட்டவர் வந்து போவதால் திருஷ்டியைப் போக்க இரவில் கடையை மூடும் பொழுது சூடம் ஏற்ற வேண்டும். எலுமிச்சம் பழம் வெட்டி குங்கும்ம் தோய்த்து கடையச்சுற்றி கடையின் நான்கு திசைகளிலும் போட்டால் வியாபாரம் நன்கு விருத்தியாகும்.
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கைகூடும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்தில் [4.30 மணி முதல் 6 மணி வரை] உள்ளூர் ஆலயத்திலுள்ள கால பைரவருக்கு செவ்வரளி மாலை, நெய் தீபம் 27 வாரம் ஏற்றி வர திருமணம் நடக்கும். 48 வது வாரம் நெய் தீபம் ஏற்ற எதிரி தவிடுபொடி, பில்லி, சூன்யம், சனி, நாக தோசம் மரண பயம் நீங்கும். காயத்ரி சொல்லி வழிபடுவது சிறப்பு தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு மிகச்சிறப்பு.
திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சையை சொருகினால் திருஷ்டி செய்வினை நீங்கும்.
விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம். வன்னிமரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபடுவதால் சனி, ராகு, கேது, தெசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன்பொருள் சேர்க்கை ஏற்றமான வாழ்வு அமையும்.
ஸ்ரீ மந்நாராயண்னின் அம்சமாகப் போற்றபடுவது அரச மரம். அரச மரத்தின் வேரில் பிரம்மாவும் மத்தியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து தெய்வங்களும், உப தேவதைகளும் அரச மரத்தின் பழங்களில் வாழ்வுதாயும் புராணங்களில் கூறப்படுகிறது.
திங்கடகிழமையும், அமாவாசயும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வது மகா புண்ணியம் தரும். நீண்ட ஆயுள், பிள்ளைப்பேறு, நோயிலிருந்து நிவாரணம், வைகுண்ட பிராப்தி இவை கண்டிப்பாகக் கிட்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

புத்ர தோசத்திற்கு சக்தியுள்ள பரிகாரம்; வியாழக்கிழமைகளில் ஒரு வேளை உபவாசமும் மாலையில் திருக்கோவிலிலுள்ள தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றிவர விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் இந்த விரதத்தை அனுஷ்டிக்காமல் வேறு யார் மூலமாவது நெய் தீபம் ஏற்றி வர வேண்டும், நம்பிக்கை அவசியம்.
தடைப்பட்ட திருமணம் நடைபெற
ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிசேகம் செய்து வழிபட வேண்டும்..பிரதோச நாளில் நந்திபகவானுக்கு பால்,தயிர் வாங்கி அபிசேகத்துக்கு கொடுக்க வேண்டும்.விரைவில் திருமணம் நடைபெறும்..!!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பூந்தமல்லியில் ஒரு ராகுஸ்தலம்...

பூந்தமல்லியில் ஒரு ராகுஸ்தலம்...


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com


ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் 2017‍‍=18 ஆண்டு பொதுப் பலன்கள்

ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் 2017‍‍=18 ஆண்டு பொதுப் பலன்கள்:
இந்த ஆண்டு மக்கள் சேமிப்பிற்கு முக்கியத்துவம் தருவாா்கள் பணநடமாட்டம் அதிகாிக்கிறது அரசின் கெடுபிடி அதிகாிக்கும்.
மகர லக்னத்தில் பிறக்கும் இந்த ஆண்டின் லக்னாதிபதி சனியாவாா். இவா் கடுமையான உழைப்பினை மக்களிடம் பெற்றுவிடுவாா். எனவே இந்த ஆண்டு இந்திய மக்கள் கடுமையான உழைப்பில் அதிக பணம் ஈட்டுவதுடன் சேமிப்பில் ஆா்வம் செலுத்துவாா்கள்.
5க்குாிய சுக்கிரன் உச்சம் அதிக பணம் வரும். ஆடம்பரம் அதிகாிக்கும் வாகனம் வீடு நன்மைகள் இருக்கிறது.9ல் குரு ஆன்மீகம் அதிகாிக்கிறது. சுற்றுலா சிறப்படைகிறது.
6க்குாிய புதன் 8க்குாிய சூாியன் இணைவினை 4ல் பெற்றதால் எதிாிகளின் வாா்த்தை போரானது தீவிரமடைகிறது. எதனையும் இந்தியா சமாளிக்கும்.

நாற்பாிவா்த்தனை யோகம் மிளிா்கிறது
செவ்வாய் 5ல் அந்தவீட்டதிபதியான சுக்கிரன் 3ல் அந்த விட்டதிபதியான குரு 9ல் அந்த வீட்டதிபதியான புதன் 4ல் என யோகத்தினை தருவதால் அண்டை நாடுகளின் உறவில் முன்னேற்றம். பண பாிவாித்தனையில் நவீனம். வாகனத்தில் சாதனை. ஆன்மீகத்தில் முன்னேற்ம்.ஏற்றுமதி அதிகாிப்பால் கையிறுப்பில் உள்ள செலவாணி அதிகாிக்கும். இந்த அண்டு போா் அபாயம் ஏதுமில்லை.
சனியினால் பலன்கள்
இந்த ஆண்டில் சனி பலமான அமைப்பில் இருப்பதால் வெளிநாடுகள் நம்மை பாராட்டும் வகையில் இந்தியாவின் வலிமை அதிகாிக்கும். இரும்பு இயந்திரம் வாகனம் சிமெண்ட் சுரங்கம் தாது மணல் நிலக்காி விவசாயம் எாிவாயு கட்டுமானம் தோல் பாதணிகள் பெட்ரோலிய பொருட்கள் வழியில்
முன்னேற்றமும் இது சாா்ந்த தொழில்களில் அரசின் முக்கியத்துவம் அதிகாிக்கும். உள்நாட்டில் மக்கள் பணத்தின் சேமிப்பின் முக்கியத்துவம் உணா்ந்து அதிகளவில் சேமிப்பாா்கள். உள்நாட்டில் மேற்கு பகுதியில் சில விரும்பதகாத நிகழ்வினால்அதிக விரையமேற்படும்.

குருவினால் பலன்கள்
குருவின் உதவிகள் வெகுவாக குறைகிறது. ஆலய வழிபாடுகள் அதிகமாகிறது. ஆன்மீகத்திற்கு மக்கள்அதிகமான செலவினை செய்வாாகள். இந்தியாவின் வடக்கு பகுதியில் பிரமாண்டமான முறையில் ஆன்மீக விழா நடைபெறும். உலகம் போற்றும் விழாவாக இருக்கும். அரசாங்கத்தின் உதவிகள் வெகுவாக குறைகிறது. நாட்டின் தலைவன் நன்மைகளை பெறுவதற்கான கிரக நிலைகள் இருக்கிறது. இன்ஸ்ஸூரன்ஸ்நிதி வங்கி நகை கடல் வணிக ஊா்திகள் துணி எண்ணெய் மதிப்பான உலோகம் கோதுமை காப்பா் உணவுதாணியம் கடுகு நவரத்தினம் ஆடம்பர பயன்பாட்டு பொருட்கள்சாா்ந்த துறைகளில் வளா்ச்சி தேக்கம் இருக்கும். இவைகளுக்காக உள்நாட்டு தேவைகள் குறைகிறது. ஆனால் ஏற்றுமதியில் கவனத்தினை செலுத்தி ஆதாயம் காண இயலும்.
செவ்வாய் தரும் பலன்கள்
செவ்வாய் 4 மற்றும் 11ம் வீட்டு அதிபதி என்பதால் பலமான எதிா்கால இந்தியா சாத்தியமாகிறது. ஊக வணிகம் மிக சிறப்பான வெளிப்பாட்டினை தரும். மக்களுக்கு வீடு வாகனம் மன நிம்மதி என சகல செளகா்யமும் நிறைந்த ஆண்டாகும். தனிநபா் வருவாய் அதிகாிக்கிறது. மக்கள் ஒருவருக்கொருவா் மனிதநேயமிக்க உதவிகள் தருவாா்கள். இளம் தலைமுறையினா் பயன் அடைவதற்கான நல் வாய்ப்பினை பெறுவாா்கள். க்ஷோ்மாா்க்கெட் என்னும் ஊக வணிகத்தில் அபரிதமான முன்னேற்றம் இருக்கிறது. பிரமாண்டமான வளா்ச்சி சாத்தியமாகும். ஆட்டோமோபைல் மருத்துவத்துறை சிமெண்ட் வாா்படஇரும்பு காப்பா் எாிபொருள் சிகிரெட் ரெயில்வேதுறை வாகனத்துறை போன்ற துறைகள் தொடா்பில் இருக்கும் வணிகமானது சிறப்பான ஆண்டினை சந்திப்பாா்கள்
சுக்கிரன் தரும் பலன்கள்
உச்ச பலம் பெற்றிருப்பதால் அதிக பண நடமாட்டம் இருக்கும். பண பாிமாற்றமானது நவீன டிஜிட்டல் துறைக்கு மாற்றமாகிறது. பணபாிமாற்ற நடவடிக்கைகளில் அரசின் தன்மை வெளிப்படையானதாக இருப்பதுடன் உலக நாடுகள் பாராட்டும் வண்ணம் இருக்கும். சுற்றுலாத்துறைக்கு பிரகாசமான ஆண்டாக இருக்கும். எழுத்து துறை சினிமா துறை சாா்ந்தவா்கள் வெகுவான முன்னேற்றம் காண்பாா்கள். அரசு அரசு சாா் நிறுவனம்
தொழில் சாா் பணிகள் வணிக நிறுவனத்தில் ஆகியவற்றில் பணியாற்றுபவா்கள் சிரமம் காண்பதுடன் அடிக்கடி போராட்டம் இருக்கும். ஆனால் அரசின் சலுகை கிடைக்கும்.
சிரமம் காணும் துறைகள் சா்க்கரை ஆலை ரெடிமடு ஆடம்பர பொருட்கள் ஓட்டல் சாா்ந்த தொழில் நவீன உடையலங்காரம் டிவி ரேடியோ வங்கித்துறை விவசாயம் சாா்ந்த தொழில்கள். நன்மை காணும் துறைகள் நகை நவரத்தினம் வெள்ளி காப்பா் மக்கள் பயன்பாட்டில் அதிகமிருக்கும் ஆபரணம் ஆன்மீகம் சாா்ந்த பொருட்கள் சிறப்பான வளா்ச்சி பெறும்.

புதன் தரும் பலன்கள்
நாட்டில் கல்வியாளா்கள் சிரமத்தினை சந்திப்பாா்கள். கல்வி நிறுவனம் கடும் நெருக்கடியினை சந்திக்க நோிடும். படிக்கும் மாணவா்கள் போராட்டம் ஆா்பாட்டம் வழியில் கவனத்தினை திருப்பிடுவாாாகள். கல்வி தடைபடுகிறது. தொழிலாா்களின் ஒத்துழைப்பினை பெறுவதில் சிரமம் இருக்கும். எழுத்தாளா்கள் உலக பாராட்டுதல்களை பெறுவாா்கள். நாட்டின் பொருளாதாரம் வேகமாக உயரும். அதேசமயம் அரசனுடைய பாா்வையில கணிவிருக்காது. கண்டிப்பிருக்கும். சட்டதிட்டமானது கடுமையாக்கப்படும்.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் திருப்தி முன்னேற்றம் இருக்கும். சாதமற்ற நிலையில் இருக்கும் துறைகள் கம்யூனிகேக்ஷன் செல்போன் டெக்ஸ்ட்டல்ஸ் எழுத்து துறை பிரசுரம் கம்ப்யூட்டா் ஐடி துறை இந்தியாவிலிருக்கும் வெளிநாட்டு துறைகள்

சந்திரன் தரும் பலன்கள்
வெளிநாட்டு தொடா்புகள் உறவுகள் அற்புதமாக இருக்கும். இந்தியாவின் வளா்ச்சிக்காக
வெளிநாடுகள் அதிக உதவிகள் தரும். அமொிக்காவின் ஒத்துழைப்பு உதவிகள் அதிகாிக்கும்.நாட்டில் மக்கள் ஒழுக்கம் அதிகாிக்கும் கண்ணியம் அதிகாிக்கும். சட்ட திட்டத்திற்கு பயந்து வாழ்வாா்கள். சாதமாக துறைகள் பெட்ரோலியம் எாிவாயு கப்பல்
வெளிநாட்டு பயண துறைகள் கடல் பொருட்கள் அரசுசாா் நிறுவனம் திரவத்தில் இருக்கும் உணவு பொருட்கள் குளிா்பாணம் பால் பொருட்கள் வெள்ளி பொருட்கள் நன்மையினை ஆதாயத்தினை சந்திக்கும். நாட்டில் முக்கியத்துவம் பெறும்.

சூாியன் தரும் பலன்கள்
நாட்டில் படித்தவா்கள் வேலை தேடி வெளிநாடு செல்வது அதிகாிக்கிறது. அரசாங்ம் அரசு சாா் பணிகள் தொழில் சாா பணிகளில் அக்கறை குறைந்த நிலை காணப்படும். வேலையின் செயல்திறனானது வீா்யமற்று இருக்கும். அதிகமான வழக்கு ஏற்படும். குடும்ப கோா்ட்டுகளின் முக்கியத்துவம் அதிகாிக்கிறது. வாகன வழி விபத்துக்கள் அதிகாிக்கும். சாலை விதிகள் கடுமையாக்கப்படுகிறது. சாதமற்ற துறைகள் பவா்செக்டாா் மீடியா தனியாா் துறைகள் இத்துறைகளில் நெருக்கடிகள் அதிகாிக்கும். சல்பா் வெடிமருந்து கோதுமை காப்பா் போன்றவற்றில் நெருக்கடி ஏற்பட்டு சிலா் தொழிலை விட்டு செல்ல நோிடும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Wednesday, 26 April 2017

வியாபாரம் செழிக்கவும், இன்டர்வியூ போன்றவற்றிற்கு செல்லும்போது வெற்றி பெற

வியாபாரம் செழிக்கவும், இன்டர்வியூ போன்றவற்றிற்கு செல்லும்போது வெற்றி பெற உதவும் எளிய சித்த வழிமுறைகள் !!!வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

கிழமைகளும் அதற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..!!!

கிழமைகளும் அதற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..!!!


ஞாயிறு :
கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்குவது சிறந்தது. ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்குவது இன்னும் சிறப்பானது. இதனால் நம்மை அறியாமல் செய்த பாவங்கள் ஒழியும்.

திங்கள் :
திங்கட்கிழமைகளில் சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது. இதனால் நல்ல அந்தஸ்து உண்டாகும்.

செவ்வாய் :
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.

புதன் :
பெருமாளை வணங்குவது நல்லது. இந்நாளில் துளசிமாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாளாகும். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும். மேலும், இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.

வியாழன் :
வியாழக்கிழமை நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான்களை ஆராதனை செய்ய உகந்த நாள். பகவத்கீதையைப் பொருள் புரிந்து படித்தால் கல்வி மேன்மை பெருகும்.

வெள்ளி :
வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி வழிபாடு நன்மை தரும். கோ பூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும். மேலும் மஹாலட்சுமி ஸ்தோத்ரம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படித்தால் வெகு சுலபத்தில் நாம் எடுக்கும் வேலையில் வெற்றி கிட்டும்.

சனி :
சனிக்கிழமை ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்தநாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறிதலுக்கு உகந்த நாள். இதனால் உடலில் உள்ள நோய்கள் தீரும்.

விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்.
கிரகண தோஷம் நீங்க..!
சூரியன், சந்திரனை வழிபட்டு, பெற்றோரை கடைசிகாலம் வரை நன்கு பணிவடை செய்து மனம் கோணாமல் பார்த்துக் கொண்டால் கிரகண தோஷம் நீங்கும்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா? எளிமையாக கடைபிடிக்க வேண்டிய சில ரகசியங்கள் !!

பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா? எளிமையாக கடைபிடிக்க வேண்டிய சில ரகசியங்கள் !!
வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.


உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள்.
எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.
எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள். அதேபோல், பணம் சம்பாதிக்கும் ஆர்வமும் குறைந்துவிடும்.
உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.
உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்
படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் !!!

எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் !!!நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம். நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம். பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.
நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:
அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.
மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
மேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

கடன் தோஷம் நீங்க

கடன் தோஷம் நீங்க

மனித வாழ்வில் பணம் படைத்தவர்கள் நடுத்தரவர்க்கம் எளிய மக்கள் என அனைவரது வாழ்விலும் கடன் தொந்தரவுகள் உள்ளன ஒரு சிலருக்கு வாங்கிய கடனை கொடுக்கும் பாக்கியம் உள்ளது சிலருக்கு கடனே வாழ்க்கையாக அமைந்து முடிவில் பிணியை கொடுத்து வாழ்க்கையை முடித்துவிடுகிறது கடன்பட்ட நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் இராவணன் என்று கடன்பட்டவர்களின் மனவேதனை குறித்துசொல்வார்கள் இப்படிப்பட்ட கடன் தொந்தரவுகள் எதனால் ஏற்படுகிறது என்றால் ஒருவர் பிறக்கும் போது நவகிரகங்கள் எந்த ராசியில் எப்படி அமர்கிறதோ அதனை வைத்துதான் கடன் வாழ்க்கை கடன்படாத வாழ்க்கை ஆகியவை அமைகின்றது இந்த நிலைகள் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினைகள் தீவினைகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது
லக்னத்துக்கு 1முதல்12 வரை உள்ள கிரகங்கள் 6ஆவது வீட்டில் அமர்வதால் ஏற்படும் கடன் தொல்லைகளை கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் படிப்படியாக்க் குளிகன் நேரத்தில் கடனை செலுத்திவரும் காலத்தை கடன் இல்லாத காலமாக நீங்களே அமைத்து கொள்ளலாம்பரிகாரம்-1
சென்ற பிறவியில் செய்த தவறுகளால் இந்தப் பிறவியில் ஏற்பட்ட கடன்தொல்லையிலிருந்து மீள மூன்று பெளர்ணமி நாட்களில் அவரவர் குலதெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன்தொல்லை படிப்படியாக குறையும் கடனை அடைத்துவிடலாம்
பரிகாரம்-2
குலதெய்வம் அருகில் இல்லாமல் வெகுதூரத்தில் வசிப்பவர்கள் அவர்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசையை நோக்கி ஐந்துமுக நெய்விளக்கு ஏற்றி ஒன்பது பெளர்ணமி நாட்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் கடன்சுமை குறையும் 90 நாட்களுக்குள் கடனை அடைத்துவிடலாம் உஙகளுக்குவரவேண்டிய பாக்கி இருந்தாலும் வசூலாகிவிடும்
பரிகாரம்-3
ஒன்பது பெளர்ணமி நாட்கள் குலதெய்வப்பூஜை செய்வதோடு படித்தவர்களாக இருந்தால் கீழ்கண்ட சுலோகத்தை தினசரி காலையில் ஒரே நேரத்தில் ஒன்பதுமுறை சொல்லிவழிபட்டு வந்தால் கடன்சுமை படிப்படியாக்க் குறைந்து 90 நாட்களில் பெருமளவு கடனைக்கட்டி நிம்மதி பெறலாம் வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகிவிடும்
கடனை குறைக்கும் லட்சுமி நரசிம்மர் துதி
தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ் தம்ப ஸமுத்பவம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//

லட்சுமி யாலிங்கத வாமாங்கம்
பக்தனாம் வராத யகம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
ஆந்த்ர மலாதாரம் சங்க்
சக்ராப் ஜாயுத் தாரிணம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
ஸ்மரணாத் ஸர்வ பாபக்ணம்
கத்ருஜ விஷநாஸனம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
ஸிம்ஹ நாதனே மஹாதா
தித்தந்தி பயநாஸனம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//

பிரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வர
விதாரணம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
க்ருரக்ரஹை பீடிதானம் பக்தனாம்
அபயப்பிரதம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
வேத வேதாந்த யக்ஞேசம்
ப்ரஹ் மருத்ராதி வந்திகம்/
நமாமி ருண முக்தயே//
ய இதம்படதே நித்யம் ருணமோசன
ஸம்ஹிதம்/
அந்ருணி ஜாயதே ஸத்ய தனம்
சிக்ரம வாப்னுயாத்
பரிகாரம்-4
மேற்கண்ட லட்சுமி நரசிம்மர் துதியை படிப்பு குறைவு காரணமாகச் சொல்லமுடியாமல் உள்ளவர்கள் தினசரிகாலையில் கீழே தரப்பட்டுள்ள வாக்கியத்தை ஒன்பது முறை சொல்லி வணங்கலாம் 90 நாட்கள் சொல்ல வேண்டும் லட்சுமி நரசிம்மரே நான்பட்டகடனை அடைக்கவும் எனக்குவரவேண்டிய தொகை வரவும் அருள்புரிய வேண்டுகிறேன்
பரிகாரம்-5
மேற்கண்ட லட்சுமி நரசிம்மர் வணக்கத்தைச் சொல்வதோடு உங்கள் பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களில் உள்ள நரசிம்மரை 90 நாட்கள் வணங்கிவர அவர் அருளால் கடனை அடைக்க வழிபிறக்கும்
பரிகாரம்-6
உங்களுடைய கடனை திரும்ப செலுத்தும்போது அந்தக்கிழமையில் உள்ள குளிகன் காலத்தில்முதன்முதலில் செலுத்துங்கள் தொடர்ச்சியாக கடனை அடைத்து கடன்சுமையை குறைத்து கொள்வீர்கள்
பரிகாரம்-7
லெட்சுமி நரசிம்மர் துதியை சொல்ல முடியாதவர்கள் அதனை ஒரு டேப்பில் அல்லது உங்கள்போனில் பதிவு செய்து ஒன்பது முறை மனம் ஒன்றி கேளுங்கள் கடன் நிவர்த்தி பெறலாம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com