Thursday 13 April 2017

சங்கடங்கள் தீர்க்கும் சனி பிரதோஷம்

சங்கடங்கள் தீர்க்கும் சனி பிரதோஷம்


🍀சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். 🍀சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரக்ஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். 🍀சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.🍀
-
🍀மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய்பிறை திரயோதசி (13 ஆம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை நேரம் மட்டும் தான். 🍀திரயோதசி நாளில் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலமாகும்.🍀
-
🍀இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். 🍀ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும். தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.🍀
-
🍀உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும்.🍀

🍀"நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
புந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும் குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே."🍀
--- (என்ற பாடல் 🍀#பிரதோஷ🍀 மகிமையை வலியுறுத்தும்)
-
🍀சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்தி பகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.🍀
-
🍀பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.🍀
-
🍀11-ஆம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12-ஆம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.🍀
-
🍀பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.🍀
-
🍀நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?🍀

🍀பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:🍀
-
01. 🍀#பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.🍀
-
02. 🍀#தயிர் - பல வளமும் உண்டாகும்🍀
-
03. 🍀#தேன் - இனிய சாரீரம் கிட்டும்🍀
-
04. 🍀#பழங்கள் - விளைச்சல் பெருகும்🍀
-
05. 🍀#பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்🍀
-
06. 🍀#நெய் - முக்தி பேறு கிட்டும்🍀
-
07. 🍀#இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்🍀
-
08. 🍀#சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்🍀
-
09. 🍀#எண்ணெய் - சுகவாழ்வு🍀
-
10. 🍀#சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்🍀
-
11. 🍀#மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்🍀
-
🍀"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"🍀
-
-
🍀தென்னாடுடைய சிவனே போற்றி!🍀
🍀எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🍀🍀
-
🍀காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!🍀
🍀கயிலை மலையானே போற்றி! போற்றி!🍀🍀
-
|| ----------- 🍀திருச்சிற்றம்பலம்🍀 ----------- ||

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment