Monday, 31 July 2017

பிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா?

பிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா?


நரசிம்மரின் கோபத்தை அடக்க பிறந்தவர் சரபேஸ்வரர். அவரது இரண்டு சக்திகளாக பிரத்யங்கிராதேவியும், சூலினி துர்காதேவியும் சரபேஸ்வரரின் இரண்டு இறக்கைகளாக அவதரித்தனர். பிரத்யங்கிராதேவி பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த தேவியை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா என்ற ஐயப்பாடு பலரிடம் உள்ளது. இவளது தோற்றம் பயங்கரமாக உள்ளதால் இவ்வாறு பக்தர்கள் கருதுகிறார்கள். இவள் குடியிருக்கும் கோயிலுக்கும் செல்வதற்கு பலர் பயப்படுகிறார்கள். பிரத்யங்கிராதேவி உக்கிரமான தெய்வம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவளை வணங்கும் பக்தர்களிடம் இவள் சாந்தமாகவே நடந்து கொள்வாள். இவளை வணங்கிவிட்டு தர்மத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டால் அவர்களை அழித்துவிடுவாள் என்பது உறுதி. மந்திர, தந்திரங்கள் என கூறிக்கொண்டு பிரத்யங்கிராதேவியை முதன்மைப்படுத்தி சிலர் நாச காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை பிரத்யங்கிராதேவி நிச்சயமாக அழித்துவிடுவாள். அதேநேரம் இவளை நம்பி வணங்கும் பக்தர்களை எல்லாவிதமான நவக்கிரக தோஷங்களிலிருந்தும் காப்பாற்றி எல்லா ஐஸ்வர்யங்களையும், நேர்மையான நடத்தையையும் கொடுக்கிறாள். இவளை வணங்குவோர்,
புத்தி முக்தி பலப்ரதாயை நம:
சகல ஐஸ்வர்ய தாரிண்யை நம;
நவக்ரஹ ரூபிண்யை நம;
என சொல்லி வணங்கினாலே போதும். பூஜை அறையில் மிகவும் சுத்தமான இடத்தில் வைத்து, பயபக்தியுடன் மன சுத்தியுடன் இவளை வழிபட வேண்டும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

அம்மனின் 51 சக்தி பீடங்கள்


1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

வளைகாப்பு" சடங்கும் அதன் முக்கியத்துவமும்

வளைகாப்பு" சடங்கும் அதன் முக்கியத்துவமும்


”வளைகாப்பு” என்ற சடங்கு முக்கியமாக முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். அனேகமாக கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது.
நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கும் சம்பிரதாயங்களும் பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம் என்னும் இச் சடங்காகும்.
கருவுற்றிருக்கும் இளம் பெண்கள் பிரசவ காலம் நெருங்க நெருங்க பிரசவ நிகழ்வின் பயத்தினால் உளத் தென்பை இழந்து விடுகின்றார்கள். அதனால் அவர்களை அனுபவம் மிக்க தாயார், சகோதரிகள், மாமி, மச்சாள்மார், உற்றார் உறவினர் தங்கள் அனுபவங்களை அவர்களுக்கு கூறி தேற்றுகின்றனர். இருந்தும் ஒரு மனப்பயம் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றது. அதனால் இறை நம்பிக்கை கொண்டவர்கள் சமயசடங்குகள் செய்வதன் மூலம் அவர்களை மேலும் தேற்றி மகிழ்விக்கின்றனர்.
ஒரு குழந்தையின் குணாதிசயம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த மூன்றாவது trimester இல் தாய் வாழும் சூழல், தாயின் மன நிலை, தாயின் உடல் நலம் போன்றவை முக்கிய பங்காற்றுகிறது. தாயாவவள் பயந்த சுபாவத்துடன் கர்ப்பகாலத்தில் இருந்தால் பிள்ளையும் பயந்தங்கொள்ளியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை. அதனால்தான் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களை மகிழ்வோடு வாழ வைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள்.
பொதுவாக கர்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து 7 முதல் 9 மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு சிசு தாயின் கர்ப்பப்பையினுள் உள்ள நீரில் (குளத்தில்) கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை, வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது. உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் சிசுவுக்கு (குழந்தை) நன்றாக கேட்க துவங்குகிறது.
அது போல ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன் நல்வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகாப்பு என்றும் கூறலாம்.
தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைகிறது. மேலும் அது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.
நமது நவீனத்துவ ஆராய்ச்சிகளின்படி, கருவில் இருக்கும் சிசு, 20 வாரங்களுக்கு பின்பு ஒலியை கேட்கும் திறனை பெற்றுவிடுகின்றன என உறுதிப்படுத்துகின்றன
சில குடும்பங்களில் இவ் சடங்கை வேதியரை அழைத்து சிறப்பு யாகம் ஒன்றை செய்து "பும்சுவன சீமந்தம்" என்றும் நடத்துகின்றார்கள்.
பொதுவாகா சடங்கு (ritual) என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பாகும். இச் சடங்க்குகள் குறியீட்டுத் தன்மைகளைக் கொண்டதான இச் செயல்பாடுகள், மனிதரின் அல்லது சமூகத்தின் பயன் கருதிச் நிகழ்த்தப் பெறுகின்றன.
இந்து மத ஆகமங்களிலும், புராணங்களிலும் மனிதர் செய்ய வேண்டியதாக 41 வகை சடங்குகள் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் பல சடங்குகள் அவர்களது குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் அவர்களின் பெற்றோரால் செய்யப்பெற்று விடுகின்றன.
தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வரவழைத்து அங்கு வைத்தே வளைகாப்பு நடக்கும். அப்போது பெண்ணின் தாய் மகளுக்கு, லட்சுமியை பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம்பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார்.
முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். "வகிடு" என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள்.
யாப்பாணத் தமிழர்கள் பின்பற்றும் வளைகாப்பு சடங்கு முறை.
7 அல்லது 9 வது மாதத்தில் நல்ல ஒரு முகூர்த்த நாளில் கருவுற்ற பெண்ணை தோயவாத்து, புதுமணப் பெண்போல் அலங்கரித்து; உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் புடைசூழ நிறைகுடம், பழங்கள், பூக்கள், சந்தனக் குழம்பு, குங்குமம், கண்ணாடி வளையல்கள், அறுகரிசி, பன்னீர், பல வகை இனிப்புப் பண்டங்கள் பரப்பி வைக்கப்பட்ட மேடைக்கு கணவன் கர்பிணி மனைவியை அழைத்து வந்து சிம்மாசனம்போல் அலங்க்கரிக்கப் பெற்ற கதிரையில் அமரச்செய்வார்.
அதன் பின்னர் கருவுற்ற பெண்ணின் தாய் மாமன் தேங்காய் உடைக்க; கணவர் மலர்மாலை அணிவித்து கௌரவிப்பார். அதனைத் தொடர்ந்து நெற்றியில் குங்கு பொட்டு வைத்து, சந்தணக் குழம்பை இரு கன்னங்களிலும், கைகளிலும் பூசுவார். அத்துடன் வளையல்களை இரு கைகளிலும் அணிவிப்பார். அதனைத் தொடர்ந்து பன்னீர் தெளித்து அறுகரிசி இட்டு மனைவியையும் குழந்தையையும் வாழ்த்தி ஆசீர்வதிப்பார்,
அதற்கு அடுத்ததாக கருவுற்ற பெண்ணின் தாயார் அங்கு வைக்கபெற்றிருக்கும் இனிப்புப் பண்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து மகளுக்கு ஊட்டி, காப்புகள் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி போட்டு ஆசீர்வதிப்பார். அதுபோல் அங்கு வருகை தந்திருக்கும், பெரியோர்களும், உறவினர்களும் சந்தனம் பூசி, வளையல்கள் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி போட்டு வாழ்த்துக்கள் கூறி ஆசீர்வதிப்பார்கள்.
இறுதியாக "திருஷ்டி" கழிவதற்காக ஆரார்த்தி எடுப்பார்கள். வருகை தந்து, ஆசீர்வதித்து சிறப்பித்தோருக்கு தெட்சணையாக, தத்தமது வசதிக்கேற்ப, மஞ்சள், குங்குமம், புடைவைகளை வழங்கி மகிழ்விப்பார்கள். வேறு சிலர் மஞ்சள் குங்குமத்துடன் பழங்களும் சிறிய தொகைப் பணமும் தெட்சனையாக வழங்கி மகிழ்விப்பார்கள். இதன் போது வருகை தந்தவர்களும் கர்பிணி பெண்ணுக்கு அல்லது பிறக்கப்போகும் குழந்தைக்கு பாவிக்கக் கூடிய பொருட்களை பரிசில்களாக வழங்க்கியும் மகிழ்விப்பர்.
வளைகாப்பில் எல்லோரும் குழந்தையையும் தாயையும் வாழ்த்துவதால் அந்த பெண்ணுக்குள் இருக்கும் பிரசவ பயம் நீங்கி அல்லது குறைந்து மிகவும் சந்தோசமும், மனத்தைரியமும் ஏற்படுவதுடன் எல்லோரினதும் ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும், இறையருளும் கருவாக இருக்கும் சிசுவுக்கும், தாயாருக்கும் கிடைக்கப் பெறுவதனால் நல்வாழாவு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

காயத்ரி மந்திரங்கள்!

காயத்ரி மந்திரங்கள்! : GAYATRI MANTRAS !


ஒம் பூர்ப் புவஸ் வக
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.
1. வினாயகர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.
2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்
3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி
ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்
5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி
ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்
8. ஸ்ரீ ராமர் காயத்ரி
ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்
9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி
ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்
10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்
11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி
ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்
12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்
14. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்
15. ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
16. ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
17. நந்தீஸ்வரர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்
18. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி
ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்
19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
20. ஸ்ரீ காளி காயத்ரி
ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்
21. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்
22. காலபைரவர் காயத்ரி
ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்
23. சூரிய காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
24. சந்திர காயத்ரி
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
25. அங்காரக காயத்ரி
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்
26. புத காயத்ரி
ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்
27. குரு காயத்ரி
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்
28. சுக்ர காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
29. சனி காயத்ரி
ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்
30. ராகு காயத்ரி
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
31. கேது காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்
32. நவகிரஹ சாந்தி ஸ்லோகம்
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ
33. வருண காயத்ரி
ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்
இதை எல்லோரும் படித்தால் ரொம்ப நல்லது; நல்ல மழை பொழியணும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கோ

34. ஸ்ரீஅன்னபூரணி (என்றும் உணவு கிடைக்க)

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்
35. குபேரன்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்.....

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Tuesday, 25 July 2017

ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான பதிவு. மிகவும் அருமையான விளக்கம் .

ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான பதிவு. மிகவும் அருமையான விளக்கம் .


நாம் அனைவரும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம்.
ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை? இதை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் கேது
ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம்.
நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமை கள் இல்லை. அப்படியென்றால் ராகு- கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல!
நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள். ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசை யில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.
சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock wise) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.
மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப் பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் "வில் பவர்' -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.
ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார் கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம். , .
ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார் கோவிலும் ஆகும். ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ்வரம், பரமக்குடி அருகில் நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று பல ஸ்தலங்கள் உண்டு. கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல், பழூர் போன்ற ஸ்தலங்கள் உண்டு. ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளி யையும் துர்க்கையையும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.
புராணத்தில் ராகு- கேது
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள்.
திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்துகொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார் கள். அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்ப தாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது. அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு.
பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.
அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டு மென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களை யும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.
யார் இந்த சொர்ணபானு? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.
துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம். இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.
இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.
இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும். உதாரணமாக, ராகு மீனத்தில் நின்றிருப்பின் குருவின் பலனையே வழங்கும். கும்ப ராசியிலாவது அல்லது சனி கிரகத்துட னாவது சேர்ந்திருக்கும்போது சனி கிரகம் வழங்கக்கூடிய பலன் களையே வழங்குமென்று கூற வேண்டும். சனியைப் போல் ராகு பலன் தரும் என்றும்; செவ்வாயைப் போல் கேது பலன் தரும் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. அனுபவத்தில் இதுவும் ஓரளவுக்கு உண்மை யென்றே தோன்றுகிறது. சனி வழங்கக்கூடிய பலன்களை ராகுவும் செவ்வாய் வழங்க வேண்டிய பலன்களைக் கேதுவும் ஜாதகருக்கு அளிக்கின்றன. இது அனுபவ உண்மை.
ராகு- மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் வலுப்பெறுகிறது என்று சில நூல்கள் கூறுகின்றன. கேதுவுக்கென பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. இந்த இரு கோள் களுக்கும் இடையே ஆறு ராசிகள் அல்லது 180 பாகை வித்தியாசம் இருப்பதால், ராகுவுக்குக் கூறப்பட்ட ராசிகளுக்கு நேர் எதிர் ராசிகளாகிய துலாம், விருச்சிகம் ஆகியவற்றிலும் மற்றும் கூறப்படாத ராசிகளிலும் கேதுவுக்கு வலு அதிகம் என்று கொள்ளலாம். அவ்வாறே மத்திய ரேகைக்கு வட பாகத்தில் உள்ள ராசிகளாகிய மகரம் முதல் மிதுனம் வரை ராகு பலமுள்ளதாகவும்; தென் பாகத்தில் உள்ள கடகம் முதல் தனுசு வரையில் உள்ள ஆறு ராசிகளில் கேது பலமுடையதாகவும் இருக்கும் என்பதும் ஜோதிட ஆராய்ச்சி.
ஜோதிடத்தில் ராகு- கேது தன்மை
கிரகத்தன்மை ராகு கேது
1. நிறம் கருப்பு சிவப்பு
. குணம் குரூரம் குரூரம்
3. மலர் மந்தாரை செவ்வல்லி
4. ரத்தினம் கோமேதகம் வைடூரியம்
5. சமித்து அறுகு தர்ப்பை
6. தேசம் பர்ப்பரா தேசம் அந்தர்வேதி
7. தேவதை பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,
சித்திரகுப்தன், விநாயகர்
8. ப்ரத்தியதி தேவதை ஸர்பம் நான்முகன்
9. திசை தென்மேற்கு வடமேற்கு
10. வடிவம் முச்சில் (முறம்) கொடி வடிவம்
11. வாகனம் ஆடு சிங்கம்
12. தானியம் உளுந்து கொள்ளு
13. உலோகம் கருங்கல் துருக்கல்
14. காலம் ராகுகாலம் எமகண்டம்
15. கிழமை சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை
16. பிணி பித்தம் பித்தம்
17. சுவை புளிப்பு புளிப்பு
18. நட்பு கிரகங்கள் சனி, சுக்கிரன் சனி, சுக்கிரன்
19. பகை கிரகங்கள் சூரியன், சந்திரன், சூரியன், சந்திரன்,
செவ்வாய் செவ்வாய்
20. சம கிரகங்கள் புதன், குரு புதன், குரு
21 காரகம் பிதாமகன் (பாட்டனார்) மாதாமகி(பாட்டி)
22. தேக உறுப்பு முழங்கால் உள்ளங்கால்
23. நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, அசுவதி, மகம், மூலம்
சதயம்
24. தசை வருடம் 18 ஆண்டுகள் 7 ஆண்டுகள்
25. மனைவி சிம்ஹிகை சித்ரலேகா
26. உப கிரகம் வியதீபாதன் தூமகேது
27. உருவம்
அசுரத்தலை, ஐந்து பாம்புத் தலை,
ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)…

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்!*

*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்!*


 நீங்கள் பிறந்த தேதியின்படி, எந்த பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 இந்த உலகில் மனிதராக பிறந்தவர் யாராக இருந்தாலும், தான் பிறந்த தேதியைக் கொண்டு, அவர்களது குணநலன்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் அவர்களது எதிர்காலத்தைக் கூட கணிக்க முடியும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் ஒருவர் பிறந்த தேதியின் படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா?
 அவ்வாறு பொருட்களை வீட்டில் வைத்திருப்பதன் மூலம், பிறந்த தேதியின் பலனைப் பெற முடியும். அதன் படி ஒருவர் பிறந்த தேதியின் படி எந்த பொருட்களை வைத்திருக்க வேண்டும் எனக் காண்போம்.
 முக்கியமாக பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை, அதாவது அது ஒற்றை இலக்க எண்ணாக வரும் வரை கணக்கிட வேண்டும். உதாரணமாக, நீங்கள் பிறந்த தேதி 24 என்றால், அவர்கள் 6 ஆம் எண்ணிற்குரிய பொருட்களை வைக்க வேண்டும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 1 எனில் :
 அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அந்த புல்லாங்குழல் மரத்தால் ஆனதாக இருக்க வேண்டும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 2 எனில் :
 வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 3 எனில் :
 வீட்டின் வடகிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். ருத்ராட்ச மாலையைத் தவிர்க்க வேண்டும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 4 எனில் :
 அவர்கள் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க வேண்டும். உடைந்ததாக இருக்கக்கூடாது.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 5 எனில் :
 அவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 6 எனில் :
 வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 7 எனில் :
 அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் நிற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 8 எனில் :
 அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த கிரிஸ்டல் அனைத்துவிதமான கெட்ட ஆற்றலையும் ஈர்த்து, நல்ல ஆற்றலை வீட்டில் உலவச் செய்யும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 9 எனில் :
 அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது மிகவும் நல்லது.,. குறிப்பு ; இவைகளை வைக்கமுடியாதவர்கள் ஒரு மகிழமரம் , ஒரு வேப்பமரம் , புன்னைமரம் , பன்னீர் மரம் , நாவல் மரம் , இரண்டு தென்னை மரம் , துளசி செடி , மரகன்றுகள் வைக்க இடமில்லாதவர்கள் பள்ளிகூடம் கோவில் இதுபோன்ற இடங்களில் வைத்து பராமரிக்கலாம் மரகன்றுகள் தானமாக வழங்குங்கள் நல்லதே நடக்கும் குறையொன்றுமில்லை வாழ்க பல்லாண்டு

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

ஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...!

ஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...!


வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா? காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.
** செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.
* கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா? கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.
* திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன? அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.
* கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா? பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.
* பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா? இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.
** மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன? சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.
* வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் அதை விற்றுவிடுகின்றனர். இதற்கு சாஸ்திர ரீதியான காரணம் உண்டா? பன்றியைத் தவிர மற்ற மிருகங்கள் இடித்துவிட்டால் வாகனம் தங்கமாக மாறிவிடுமா? இதற்கு சாஸ்திரங்களையெல்லாம் இழுக்க வேண்டாம். வாகனங்களை விற்கவும் வேண்டாம். முதலில் எல்லோரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். "சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் இடிப்பவர்களெல்லாம் அடுத்த பிறவியில் பன்றியாகப் போகக் கடவது' என்று சபிக்குமளவுக்கு சிலர் வாகனம் ஓட்டுகின்றனர்.
* திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள். சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.
* கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா? முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.
* சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்? நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.
** நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்? பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
* பஞ்சாங்கத்தில் நட்சத்திரம், திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்? விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.
*கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதில்உள்ளதத்துவம் என்ன? மேலோட்டமாக பார்க்கும்போது திருடுவது போலத் தெரிந்தாலும், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அதை திருட்டாக எண்ண மாட்டோம். வெண்ணெய் என்பது பக்தி நிறைந்த வெள்ளை உள்ளத்தைக் குறிக்கும். அதை பரம்பொருளான கிருஷ்ணர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.
* விளக்கேற்றக் கூடிய திசைகள் யாவை? கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.
* நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா? இஷ்டதெய்வ சிலையை வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.
* பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
வாஸ்து,பூமி தோஷம் தீர்வூ
காண 9788431343
* ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் பழமொழியின் பொருள் என்ன? மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் சிவாலயம், சிவனடியார்களைத் தொழுதால் அறிவும், நல்வாழ்வும் கிட்டும் என்பது இதன் பொருள். நல்லறிவே மகிழ்ச்சியான வாழ்வின் அடித்தளம். இதனைத் தரும் ஆற்றல் ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே உண்டு. ஊர்கள் தோறும் சிவ, விஷ்ணு கோயில்கள் எழுப்பப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. வீட்டில் எவ்வளவு தான் ஜெபம்,ஹோமம், பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தான் நிறைவு உண்டாகும். சித்தாந்தம் கூறும் இவ்வளவும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' எனும் ஒரே வரியில் கூறிவிட்டார் அவ்வைப் பிராட்டியார்.
** புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ஆபாச சிலைகள் வடித்திருப்பதன் காரணம் என்ன? இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், "டிவி' போன்றவை வந்து இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனிதஇனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.
* சுவாமிக்கு சாத்திய மாலையை வாகனத்தின் முன் கட்டிக் கொள்ளலாமா? சுவாமிக்கு சாத்திய மாலைகள் பிரசாதம் எனும் புனிதப் பெயரையடைகின்றன. இவை காலில் படும்படியாக எங்கும் விழக்கூடாது.வாகனங்களில் கட்டிக் கொள்வதால் அது செல்லும் இடம் எல்லாம் சிதறி விழும். அதன் மீது மற்றைய வாகனங்கள் ஏறிச்செல்வது, நம் காலில் படுவது போன்ற தவறுகள் ஏற்படுகின்றன. இது பாவச் செயல். செய்யக்கூடாது.
* சிவலிங்க வழிபாட்டை வீட்டிலேயே செய்வது சரியா? என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழி நின்று நம் எல்லார் இல்லங்களிலும் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்தலும் மற்றும் அவரவர் குல வழக்கப்படி தெய்வ விக்ரகங்களை பூஜை செய்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இதற்கு ஆன்மார்த்த பூஜை என்று பெயர். கோயில்களில் செய்யப்படுவது பொது நலனுக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜை. இரண்டும் சரியாக நடந்தால் தான் நாமும் நாடும் சுபிட்சமாய் இருப்போம்.

* பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது. அதைப் போக்கும் வழி என்ன? காலம் சென்ற முன்னோருக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனுடைய சந்ததி தழைக்க அவரவர்களது முன்னோர் வழிபாடு எனும் பிதுர் காரியத்தை அவசியம் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் திதி கொடுத்தல், அமாவாசை தர்ப்பணம் செய்தல் போன்றவை பிதுர் காரியங்களாகும். இவற்றைச் சரியாக செய்யாதவர்களுக்கு பிதுர் தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைப் போக்கிக் கொள்ள ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றில் தில ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகும், பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்.

* திருமணத்திற்குப் பின் பெண்கள் பிறந்த வீட்டு குல தெ#வத்தை வழிபடலாமா? புகுந்த வீட்டுக் குல தெய்வம் தான் உங்களின் குலதெய்வமும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், தாய்வீட்டு குலதெய்வத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு, தாய் வீட்டுக் குல தெய்வக் கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். இது விசேஷமானதும் கூட.
* ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டை நதியில் விட்டுவிடலாமா? ஸ்ரீராமஜெயம் நோட்டில் எழுதுவதற்கு லிகிதநாமஜெபம் என்று பெயர். எழுதிய நோட்டை பூஜையறையில் வைப்பது சிறப்பு. இயலாவிட்டால் ராமநாம வங்கிகளுக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

** வீட்டிலிருந்து கிளம்பும்போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது உண்மைதானா?
சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்னையில்லை.

* வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? விளக்கம் தேவை. முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.

* அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக் கூடாது என்கிறார்களே, சரிதானா? எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத்தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழங்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும்.

* செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள். செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள்.
* சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
** அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா? நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை "ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி' என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.
ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா? நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.
* சிலர் கடவுள் வேடம் அணிந்து பிச்சை எடுக்கிறார்களே. இதை ஊக்கப்படுத்தலாமா? பிச்சை எடுப்பதே தவறு. இதில் கடவுள் வேடம் வேறு. கிடைக்கும் காசை எடுத்துக் கொண்டு வேடத்தைக்கூட கலைக்காமல் அசைவ ஓட்டலிலும் மதுபானக்கடைகளிலும் இவர்களைக் கண்டு வேதனைப்படுபவர்கள் ஏராளம். எனவே ஊக்குவிக்காதீர்கள். பிச்சைக்காரர்களே இல்லாத நாடாக இந்தியா மாற வேண்டும். பிச்சைஎடுப்பவர்கள் திருந்தி வேறு வழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். அவர்களது குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டும். எவ்வளவோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தோன்றியும் இவர்களை மாற்ற முடியவில்லையே!

ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் நிவர்த்தி செய்வது எப்படி? இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாகிவிட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படத் தோன்றுகிறது. இதற்குப்பரிகாரம் பிறக்கின்ற பெண் குழந்தைகளையாவது பாராட்டி சீராட்டி வளர்ப்பது தான்! பெண் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். ஜாதகப்படி பெண் சாபம் இருந்தால் சுமங்கலி பூஜை செய்யுங்கள்.

பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்? எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.
* கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா? நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது. சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது. அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது. எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தான் பிரதமர்.
* பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்ல வேண்டும்?

குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
** தற்காலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்கிறார்களா? விரும்புபவர்கள் எந்த தலத்திற்குச் செல்ல வேண்டும்? புத்திர பாக்கியம் வேண்டி செய்யப்படுகிற இந்த யாகத்தை, பலர் தங்கள் இல்லங்களிலேயே செய்து கொள்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை புத்திர காமேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் (நவக்கிரக புதன் ஸ்தலம்) ஆகியவை சிறப்புடையவை.
* கோயிலில் அரசமரம், வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து பக்தர்கள் வலம் வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன? அரசமரம் விஷ்ணுவின் வடிவம். இதனை "அசுவத்த நாராயணர்' என்பர். இதன் அருகில் வேப்பமரம் வைத்து மகாலட்சுமியாக எண்ணி, "அ”வத்த விவாஹம்' எனப்படும் அரசவேம்பு கல்யாணம் செய்ய வேண்டும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இவற்றை வலம் வந்தால், ஸ்ரீ லட்சுமி நாராயணரை வலம் வந்த பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்கி இனிய இல்லறமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

* மந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறையைக் கூறுங்கள்.இது கடையில் வாங்கும் மருந்தல்ல! சாப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து கொள்ள! அல்லது அறிந்து கொண்டு பிரார்த்தனையைத் துவங்க! குருநாதரிடத்தில் அவர் கூறும் மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, அவரவர் நலனுக்காக நம்பிக்கையுடன் ஜபம் செய்தால் பலன் கிடைக்கும். இது விஷயத்தில் ஆராய்ச்சி வேண்டாம்.

* வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து விட்டது. அதை அகற்ற மனமில்லை. மீண்டும் பயன்படுத்தலாமா? பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தால், தாராளமாக உபயோகிக்கலாம். தோஷம் எதுவும் கிடையாது. நல்ல பலனே ஏற்படும்
** யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்? இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.
""அக்னௌ ப்ரஸ்தாகுதி: ஸம்யக் ஆதித்யம் உபதிஷ்டதி
ஆதித்யாத் ஜாயதே விருஷ்டி: வ்ருஷ் டேரன்னம் தத:ப்ரஜா:''
யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும்.
* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துகிறார்கள். அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா? அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.
* கடவுளின் படம் அல்லது சிலை.. எது வழிபாட்டிற்கு உகந்தது? மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.
*ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது உண்மைதானா?
சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் வீட்டில் சிலருக்கு ஆகாது என்பது ஜோதிட சாஸ்திரப்படி உண்மைதான். அதற்காகப் பயந்து கொண்டு குழந்தைகளை வெறுக்கக் கூடாது. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸூமாகரம் போன்ற நூல்களில் இவற்றிற்கான பரிகாரம் கூறப்பட்டுள்ளது. இதன்படி தக்க பரிகாரம் செய்து கொண்டால்,தீயவையும் நல்லதாகிவிடும். விஷத்தையே மருந்தாக மாற்றும் நாம், ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்?
*வீட்டில் வழிபாட்டிற்காக இருக்கும் துளசிச் செடியின் இலைகளை மருந்துக்காகப் பறிக்கலாமா? வீட்டில் துளசிச் செடி வழிபாட்டில் இருப்பதே பெரிய மருந்து தான். இதன் இலைகளைப் பறிக்கக் கூடாது. வேறு துளசிச் செடிகளை வளர்த்து மருந்துக்கு உபயோகிக்கலாம்.
* ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்? மற்ற தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு சாத்துவது போல் ஆஞ்சநேயருக்குப் பிரியமான வெண்ணெயினால் சாத்துபடி செய்வது சிறப்பு. அவரது வாலில் தீ வைக்கப்பட்டதால், உஷ்ணத்தைத் தணிக்க பக்தர்கள் அன்புடன் வெண்ணெய் சாத்துகின்றனர்.
** சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா? அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலைபாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.
* அம்மனுக்குப் பூக்குழி இறங்குவது(தீ மிதித்தல்) எப்படி சாத்தியமாகிறது? நம்பிக்கையும் பக்தியும் முழுமையாக இருந்தால் சாத்தியம் தான். இந்நிலையில் இருப்பவர்களை மருளாளிகள் என்பர். பக்தி மிகுதியால் ஏற்படும் பரவச நிலையை மருட்சி என்று அழகிய தமிழ்ச்சொல் குறிப்பிடுகிறது. மருட்சி உடையவர்கள் மருளாளிகள். இவர்களுக்குத் தீயும், பூவும் ஒன்றாகத் தெரியும். இதனால் தான் தீ மிதித்தலை பூ மிதித்தல் என்று கூறுகிறார்கள். நம்பிக்கை இல்லாமலோ அல்லது சோதித்துப் பார்க்கவோ பூக்குழி இறங்கினால் கஷ்டம் தான்.
* கோயிலில் தெப்பக்குளம் இருப்பதன் நோக்கம் என்ன? திருக்குளம் என்ற பெயர் தான் முக்கியம். அதில் தெப்பம் விடுவதால் தெப்பக்குளமாகி விட்டது. திருக்குளம் அடிப்படையிலேயே சிந்திப்போம். ஒரு கோயிலில் மூல மூர்த்தியாக விளங்கும் தெய்வம் எப்படி முக்கியமோ, அதுபோலவே தீர்த்தம் (திருக்குளம்), தலவிருட்சம் ஆகிய இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் சிறப்பாக அமையும் கோயில் தான் க்ஷேத்திரம் என போற்றப்படும். இம்மூன்றுமே அத்திருக்கோயிலின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கும். திருக்குளத்தில் நீராடி, தெய்வத்தை தரிசித்து, தலவிருட்சத்தை வலம் வந்தால் தான் கோயில் தரிசனம் முழுமையடையும். ஒவ்வொரு கோயில் திருக்குளத்திற்கும் புராண வரலாற்றுச் சிறப்பு உண்டு. இதில் நீராடினால், இறையருளால் பாவம் நீங்கி மங்களமாக வாழலாம் என்பது திண்ணம். எவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு வந்தாலும் திருக்குளங்கள் பெரும்பாலும் வற்றுவதில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு இதுவே ஒரு வரப்பிரசாதம் தானே.
* ராகுகாலம், எமகண்டம் நேரத்தில் வெளியூர் செல்ல நேர்ந்தால் என்ன செய்வது ? அரசாணை, உடல்நிலைக் கோளாறு போன்ற விஷயங்களில் மேற்படி விஷயங்களைப் பின்பற்ற இயலாது. இதைத்தான் நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்பர். பஸ், ரயில், விமானம் போன்றவை ராகுகாலம், எமகண்டத்திற்காக காத்திருப்பது இல்லை. இது போன்ற சமயங்களில் நாம் "பரஸ்தானம்' என்ற ஒன்றைச் செய்து கொள்ளலாம். அதாவது ராகுகாலம், எமகண்டம் துவங்குவதற்கு முன்பே பயணப்பைகளுடன் வேறு இடத்திற்குச் சென்று விட வேண்டும். அப்படி கிளம்ப முடியாத பட்சத்தில், விநாயகருக்குச் சிதறுகாய் போட்டுப் புறப்படலாம்.
* காலை சூரிய வழிபாட்டில் தீபாராதனை காட்டி வணங்கலாமா? சூரியவழிபாடு என நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு தீபாராதனை எல்லாம் கிடையாது. வழிபாடு என்ற பெயரில் பூஜையாகச் செய்தீர்களானால் தீபாராதனை செய்யலாம்!!
நோய்க்கு மருந்தாவான்: காலையில் படுக்கையை விட்டு, ஹரி ஹரி என்று ஏழுமுறை சொல்ல வேண்டும்.பணிக்கு கிளம்பும் போதும், வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் காபி போடுவதற்கு முன்பும் கேசவாய நம என ஏழுமுறை சொல்ல வேண்டும்.
சாப்பிடும் முன்பு கோவிந்தனை(திருப்பதி ஏழுமலையான்) நினைக்க வேண்டும்.
இரவில் உறங்கச்செல்லும் போது மாதவா... மாதவா என ஏழுமுறை சொல்ல வேண்டும்!!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com