Showing posts with label best parikaram astrologer in chennai. Show all posts
Showing posts with label best parikaram astrologer in chennai. Show all posts

Saturday, 3 November 2018

சாஸ்திர பிரச்சனைகளும் தீர்வுகளும் - மாலைமுரசு டிவி 005 - Dr Srikumar Astrologer

சாஸ்திர பிரச்சனைகளும் தீர்வுகளும் - மாலைமுரசு டிவி 005


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Sunday, 22 April 2018

பரிகாரமும் பலன்களும் - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - Jothi Tv Astrology Show Part 12

பரிகாரமும் பலன்களும் - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - Jothi Tv Astrology Show Part 12



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - Jothi Tv Astrology Show Part 11

பரிகாரமும் பலன்களும் - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - Jothi Tv Astrology Show Part 11



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - Jothi Tv Astrology Show Part 09

பரிகாரமும் பலன்களும் - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - Jothi Tv Astrology Show Part 09



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Saturday, 6 January 2018

பாபம் போக்கும் ராம் நாமம் !!!

பாபம் போக்கும் ராம் நாமம் !!!

ஸ்ரீ கிருஷ்ண சைதைன்ய மஹாப்ரபு, ஸந்நியாஸம் வாங்கி க் கொண்டதும்,‌பாரத தேசம் முழுவதிலும் பாத யாத்திரையாக அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்றார்.
அப்படிச் செல்லும்போது ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்தை அடைந்தார்.
ஒவ்வொரு ஊரிலும் ப்ரபுவை ஏராளமானோர் வரவேற்று, வணங்கி அருள் பெற்றனர்.
ப்ரபுவின் ஸாந்நித்யதால் காட்டு விலங்களுகூட விரோதம் மறந்து அன்பு பாராட்டி க் கொண்டு தம்மை மறந்து அவரது மஹாமந்திர கீர்த்தனர்த்தை அனுபவித்தன. என்றால், மனிதர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?
ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்திலும் ஊர்ப் பெரியவர்களும், பொது மக்களும் ப்ரபுவை வரவேற்று, அவரோடு மஹாமந்திர கீர்த்தனம் செய்தனர்.
ப்ரபு கோவிலுக்குச் சென்று கூர்ம பகவானை தரிசனம் செய்து பிறகு அடுத்த ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்.
அவ்வூரில் ஒரு வயதானவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெரும் செல்வந்தராய் இருந்த அவர், நோய் வந்ததும், சொத்துக்கள் முழுவதையும் பிள்ளைகளிடமும் உறவினரிடமும் ஒப்படைத்து விட்டு வீட்டை விட்டு நீங்கினார். கூர்ம க்ஷேத்திரத்தை அடைந்தவர் நோயின் கொடுமையால் மேற்கொண்டு எங்கும்‌ செல்லாமல் அந்த ஊரிலேயே ஒரு பாழடைந்த வீட்டின் திண்ணையில்‌ தங்கிக்கொண்டார். உடல் முழுவதும் புழுக்கள் நெளியும்.
இந்த உடலால் ஒரு பயனும் இல்லையென்று நினைத்தேனே. உங்களுக்காவது உணவாகிறதே
என்று சொல்லி கீழே விழும் புழுக்களையும்‌எடுத்து தன் உடல்மீதே விட்டுக் கொள்வார்.
இரவு பகல் பாராமல்
வாசுதேவா வாசுதேவா
என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். எனவே அனைவரும் அவரை வாசுதேவர் என்றே குறிப்பிட்டனர். அவரது உண்மையான பெயர் ஒருவருக்கும் தெரியாது.
திண்ணையில் ஒரு மறைப்பின் பின்னாலேயே இருப்பார். ஒருவரும் அவரைப் பார்க்க அனுமதியார். ஊர் மக்கள் அவர்களாக விரும்பி அவருக்கு ஏதேனும்‌ உணவளித்து வந்தனர்.
இப்போது ஒரு மஹாத்மா வந்திருக்கிறார். நாம ஸ்வரூபமாய் இருக்கிறார். தங்க நிறத்தில் தேஜஸோடு ஜ்வலிக்கிறார்
என்றெல்லாம் ஊர் மக்கள் பேசிக்கொண்டு செல்வது வாசுதேவர் காதில் விழுந்தது.‌
அப்பேர்ப்பட்ட மஹாத்மாவாமே..
இளம்‌ ஸந்யாசியாமே
என் பாவத்தால் கோவிலுக்குத் தான் போகமுடியாது. நடமாடும் இறைவனான, அதுவும் நான் இருக்குமிடத்திற்கருகிலேயே வந்திருக்கும் சாதுவை தரிசனம்‌செய்யும் பாக்யம் இல்லையே.
கிளம்புகிறாராமே..
பலவாறு அழுதழுது மறுகிக்கொண்டிருந்தார்.
ஊர் எல்லை வரை சென்று விட்ட மஹாப்ரபு, சட்டென்று நின்றார்.
பிறகு ஒன்றும் பேசாமல் விடுவிடென்று ஊருக்குள் நடந்தார்.
எல்லோரும் மஹாப்ரபு ஊருக்குள் தங்க முடிவு செய்துவிட்டதாய் நினைத்து ஆனந்தமடைந்தனர்.
மஹாப்ரபு நேராக வாசுதேவர் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றார்.
வாசுதேவா வாசுதேவா
மதுரமாய் அவரது குரல் ஒலித்தது.
என்னையா,
இந்தப் பாவியையா
தேடி வந்து அழைத்ததே போதும் ப்ரபோ..
நான் தன்யனானேன். உம்மை தரிசனம் செய்யும் யோக்யதை எனக்கில்லை ப்ரபோ
வாசுதேவா வெளியே வா..
நான் பாவி ப்ரபோ, வேண்டாம்.
வாடா..
என்று ப்ரபு அதட்ட,
சட்டென்று வெளியே வந்த வாசுதேவரைப் பார்த்ததும் ஊர் மக்கள் அதிர்ந்து போயினர். பலர் பயந்துவிட்டனர்.
உடல் முழுதும் அழுகிச் சொட்டிக்கொண்டு, புழுக்கள்‌ மேய்ந்துகொண்டு, முகம் என்று ஒன்றைத் தேடும்படி இருந்தது வாசுதேவரின் உருவம்.
மஹாப்ரபு‌ வேகமாய்ச் சென்று வாசுதேவரை இழுத்து அணைத்துக்கொண்டார்.
அனைவருக்கும் மூச்சே நின்றுவிட்டது. இப்படி ஒரு உருவத்தை அணைத்துக்கொள்வதா?
ப்ரபுவால் மட்டுமே முடியும்.
ப்ரபு இழுத்து அணைத்துக்கொண்டதுதான் தாமதம், வாசுதேவரின் உடல் ப்ரபுவின் உடல் போலவே தங்கமயமாய் ஜ்வலித்தது.
நோயுமில்லை, புழுவுமில்லை.
கௌர் ஹரி என்று அழைக்கும்படியான தங்கமயமாய் ஜ்வலிக்கும் சைதன்யர் ஷ்யாம ஹரி யாகிவிட்டர்.
ஆம், ப்ரபுவின் உடல் கருப்பு வண்ணத்தில்‌மாறி ஜ்வலிக்க, துடித்துப் போனார் வாசுதேவர்.
ப்ரபோ, ஏன் ஏன் இப்படி? உங்கள் உடல் கருத்துவிட்டதே. என் பாவங்களை ஏன் வாங்கிக்கொண்டீர்கள்? திருப்பிக் கொடுங்கள்
கதறி அழுதவரைப் பார்த்துச் சிரித்தார் மஹாப்ரபு.
திருப்பிக் கொடுப்பதா?
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ‌ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு மஹாப்ரபு கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தார். அனைவரும் சேர்ந்து தம்மை மறந்து ஒரு முஹூர்த்தம் கீர்த்தனம் செய்ய, நாம ப்ரவாஹம் ஓடியது.
ஒரு முஹூர்த்த காலத்தில் மஹாப்ரபுவின் மேனி முன்னை விட இன்னும் அதிக ப்ரகாசத்துடன் தங்க நிறத்தில் ஜ்வலிக்க ஆரம்பித்தது.
மஹாமந்திர கீர்த்தனத்தினால்‌ எப்பேர்ப்பட்ட பாவமும் போகும்‌என்பதை ப்ரத்யக்ஷமாக நிரூபித்தார்‌ ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு.
#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
நன்றி:- ஜல்லியார் ஆன்மீககதைகள் வாட்ஸ் அப் குழு

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Sunday, 29 October 2017

இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் என்ன

இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் என்ன ?



7-ம் அதிபதி கெட்டு கெட்டவர்கள் வீட்டில் அமையப்பெற்றால் இருதார யோகம் உண்டு
7-ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது
7-ம் இடத்தில் அசுபர் இருந்தாலோ இரண்டு அசுபர்கள் 2-ம் இடத்தில் அமைந்தாலோ
7-ம் அதிபதி 10-ல் அமையப் பெற்று ஆட்சி, உச்சம், நட்பு பெற்று 10-ம் அதிபதியால் பாக்கப்பட்டாலோ
11-ம் வீட்டில் இரண்டு வலிமையான கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலோ
7-ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அம்சத்தில் சேர்ந்து காணப்பட்டாலோ
7-ம் அதிபதி கெட்டு 11-ல் இரு கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலோ
7-ம் இடத்தில் சுக்கிரன், சனி இணைந்து காணப்பட்டாலோ
சுக்கிரன் இரட்டை ராசியில் அமையப்பெற்று அந்த வீட்டிற்கு அதிபதி உச்சம் பெற்று 7-ம் அதிப்தி ஆட்சி பெற்று இருந்தால் இரண்டும்,இரண்டிற்கு மேற்பட்ட தாரங்கள் உண்டாகின்றது. 7-ம் இடத்தில் எத்தனை சுபகிரகங்கள் உண்டோ அத்தனை தாரங்கள் எனக் கொள்க.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Friday, 27 October 2017

முருக கடவுள்

தமிழ் கடவுள் முருக பெருமான் பற்றி...



கோவை செம்மொழி மாநாட்டில் திராவிக் கடவுளான சிவனின்மைந்தன் முருகனையும், சிவனை ருத்திரன் எனவும் வழிபட்டிருப்பதைஅறிஞர்கள் வெளியிட்டார்கள். அதைப் பற்றிய தொகுப்பு.
சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரியகடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கியகடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று“செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோபர்போலா, சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்த ஆய்வு கட்டுரையில்கூறியுள்ளார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழிமாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று,தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம்,திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவருக்குமாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கானதிராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதியஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில்மாநாட்டில் சமர்ப்பித்தார்.
அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது: சிந்து சமவெளி நாகரிகம்நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890-ம் ஆண்டுகளுக்குஇடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறிதியிட்டு கூறமுடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள்கண்டெடுக்கப்பட்டன. மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியாபகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன்அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு,எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்குகொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்தஎழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது. சிந்துசமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்துவடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டது. ஆனாலும் பாதுகாக்கப்பட்டசில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும், ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்டமொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளேயாகும்,அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டுவருகின்றன. எனினும், கி.மு. 1100 -600-ம் ஆண்டுகளில், வடமேற்குபகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவஎழுத்துக்களில்,முகம்,பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழிஎழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது.
வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவதுஎன்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிடமொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது.சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள்உதவிக்கு வருகின்றன. போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய“இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள் வடஇந்தியர்கள்வணங்கிய போர்க்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது.அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகுஅல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன.வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’என்னும் கடவுள், பச்சிளங்குழந்தையாக உருவாக்கப்பட்டும்,சமஸ்கிருதத்தில் “குமாரா’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகனும்,ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்துவடிவகுறியீடுகளால் குறிப்பிடப்படுகிறார்கள்.
இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள்என்று தெரியவருகிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்தைய எழுத்துவடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகிஉறுதியுடன் கூறமுடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களைகண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள்தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையைபற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர்பர்போலோ பேசினார்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

அதிசயம் ஆனால்அற்புதம் நாகலிங்கப் பூ


ஆன்மீக அதிசயம் - நாகலிங்க பூ



ஒரு லிங்கம் அதைச் சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கானமுனிவர்கள், அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடையபாம்பு. என்ன மர்மக்கதை போல இருக்கிறதா. நான் இது வரைசொன்னது ஒரு பூவைப் பற்றி
இதன் பெயர் நாகலிங்கப் பூ,.
அறிவியல் அதிசயம்
இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும். அமைப்பில் சிவலிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே,நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூசெடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்குமேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ளஇடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது.
தன்மை
மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும்,உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூ பார்க்கப்படுகிறது. இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவேஇருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.
மருத்துவத்திலும் அதிசயமே
ஆன்மீகம் மற்றும் அறிவியலில் இதன் அதிசியங்களைப்பார்த்துவிட்டோம். இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில்நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன. இந்த நாகலிங்கப்பூ சிலமூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கேகுறிப்பிடத்தக்கது. குளிர் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்தமருந்தாக பயன்படுகிறது.இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்குமருந்தாக உதவுகிறது.
காணப்படும் இடங்கள்
இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சிலசிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிலஇடங்களிலும் இருக்கிறது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Monday, 23 October 2017

சித்தமெல்லாம் சிவமயம் சித்தரிகள் ரகசியம் - அகத்தியர்

சித்தமெல்லாம் சிவமயம் சித்தரிகள் ரகசியம் - அகத்தியர்



அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன்முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன்,வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்டஅசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படிஅக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய்அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்துஅகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும்அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால்அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார்என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.
முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்தஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள்கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன்வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல்படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய
சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின்போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால்அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான்கட்டளையிட்டார்.
மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை,அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசைசென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்றஅகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும்உயரவில்லை.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.சுவேதன்என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார்.தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன்என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம்முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள்உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். தென்திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக்கடவுளின் ஆணைப்படி “*அகத்தியம்*” என்னும் நூலை இயற்றினார்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியைநடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்டகாதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும்ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன்வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர்முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்துபடைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக்கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்இதனை அகத்தியரிடம்
முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார்.வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும்வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்றுவயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்தவில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்தகங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிடகமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார்அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில்காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்துவேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர்தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்குபெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார்ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம்பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்றதிருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில்சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N.கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணிஅளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும்சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம்கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை
ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்புமுடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்துசாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய்பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள்பற்றி கூறியுள்ளார்.
*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை (கிடைத்தவரை) :*

1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் 

இவரால்செய்யப்பட்டதாகக்
கூறப்படுகிறது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

உங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவாரப்பாடல்!!!

சிவாய நம...
உங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவாரப்பாடல்!!!
நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:


உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்
கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை
ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி
வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
அசுவினி:
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.
பரணி:
கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே.
கார்த்திகை/கிருத்திகை:
செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.
ரோகிணி:
எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.
மிருக சீரிடம்:
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
திருவாதிரை/ஆதிரை:
கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.
புனர்பூசம்:
மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.
பூசம்:
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.
ஆயில்யம்:
கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே
மகம்:
பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.
பூரம்:
நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.
உத்திரம்:
போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.
அஸ்தம்:
வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.
சித்திரை:
நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.
சுவாதி:
காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.
விசாகம்:
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.
அனுஷம்:
மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.
கேட்டை:
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே
மூலம்:
கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.
பூராடம்:
நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.
உத்திராடம்:
குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
திருவோணம்/ஓணம்:
வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.
அவிட்டம் :
எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.
சதயம் :
கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.
பூரட்டாதி:
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.
உத்திரட்டாதி:
நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.
ரேவதி:
நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.
அன்பேசிவம்
ஓம் நமசிவாய

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Thursday, 12 October 2017

தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் !

தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் !
யம தீபம் 
-------------------


தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு.
யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.
அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.
இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.
யம தீபம் ஏற்றி ஹிந்து பலிதானிகளுக்கும், முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.
யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.
சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:
1. உங்கள் வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம்.
2. தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.
3. விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.
4. பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Sunday, 17 September 2017

இருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங்கள்

இருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங்கள்
ஜோதிட ரீதியாக இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு உரிய இருபத்தேழு விருட்சங்கள் உண்டு, அவை



1. அஸ்வினி - எட்டி,
2. பரணி - நெல்லி,
3. க்ருத்திகை - அத்தி,
4. ரோஹிணி - நாவல்,
5. ம்ருகசீர்ஷம் - கருங்காலி,
6. திருவாதிரை - செங்கரு,
7. புனர்பூசம் - மூங்கில்,
8. பூசம் - அரசு,
9. ஆயில்யம் - புன்னை,
10. மகம் - ஆலம்,
11. பூரம் - பலா,
12. உத்திரம் - அரளி,
13. ஹஸ்தம் - வேல்,
14. சித்திரை - வில்வம்,
15. ஸ்வாதி - மருதை,
16. விசாகம் - விளா,
17. அனுஷம் - மகிழம்,
18. கேட்டை - பிராய்,
19. மூலம் - மாமரம்,
20. பூராடம் - வஞ்சி,
21. உத்ராடம் - பலா,
22. திருவோணம் - எருக்கு,
23. அவிட்டம் - வன்னி,
24. சதயம் - கடம்பு,
25. பூரட்டாதி - தேமா,
26. உத்திரட்டாதி - வேம்பு,
27. ரேவதி - இலுப்பை.
உலக மக்கள்தொகை எத்தனை ஆயினும் அத்தனை பேரும் 27 நட்சத்திரத்துக்குள் அடக்கம். உங்கள் பிறந்த நட்சத்திரம் என்பது உங்கள் உயிரினை போன்றது. ஜோதிட ரீதியாக உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை வணங்கினாலே சகல தோஷங்களும் விலகும் என்பதனை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில் இந்த மரங்களை நட்டு பராமரித்து வந்தனர்.
இந்த ஒவ்வொரு விருட்சமும் மனித வாழ்வில் என்னற்ற பலன்களை தருகின்றன. இதன் மருத்துவ குணங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. இந்த விருட்சங்களின் ஈர்ப்பு சக்தியும், காந்த சக்தியும், தெய்வீகத் தன்மையும் அளப்பறியது.
இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது இறைவனுடன் இணைந்து வாழ்வதாகும், இந்த விருட்சங்கள் வெளியிடும் காற்றை சுவாசித்தாலே உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இவ்விருட்சங்களின் கீழ் அமர்ந்து தியானித்தாலே மனம் ஒடுங்கி தியானம் கைக்கூடும். சர்வ சித்திகளும் அடையலாம். புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பதும், அரச மரத்தினடியில் வினாயகர் அமர்ந்திருப்பதும் இவ்வுண்மையை விளக்குவதாகும்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.?

காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.!
1.அதிகாலையில் எழுந்துகரைதல்.
2.உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல்.
3.உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.
4.பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.
5.மாலையிலும் குளித்தல்,பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக்கொண்டவை.
6. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம்.
இது அஞ்சலி செய்வதற்குச்சமமாக கருதப்படுகிறது….மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்..
ஆனால் மெல்ல,மெல்ல இதை நாமே பெரிதுபடுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது… !!காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா….தெரியவில்லை!..
ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,
விபத்துக்கள்,வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
*செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.*தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும்,
உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்– *மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்வழிபாடுதான்.
*உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கள்உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமானசக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , *அற்புதமானஜீவ ராசி – காக்கை இனம்.*
குடும்ப ஒற்றுமைவேண்டும்
என்று நினைக்கும்
சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.தன்
உடன்பிறந்தவர்கள்
ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும்இருக்க,
தங்களிடம்பாசம்
உள்ளவர்களாகத்திகழ இந்தக்காணுப்பிடி பூஜையைச்செய்கிறார்கள்.
திறந்தவெளியில்
தரையைத்
தூய்மையாகமெழுகிக்
கோலமிடுவார்கள்.அங்கேவாழைஇலையைப்பரப்பிஅதில்வண்ணவண்ணசித்ரான்னங்களைஐந்து,ஏழு,ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,காக்கைகளை “கா…கா…’என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…கா…’என்றுகூவிதன்கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.
அந்தக்காக்கைகள் உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,அந்தவாழை இலையில் பொரி,பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
*மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.*இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள்.காக்கை சனிபகவானின்வாகனம்.காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில் *நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,*
*அண்டங்காக்கை* எனசிலவகைகள்உண்டு.
காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.அதனால்காக்கைக்கு உணவு அளித்தால் எமன்மகிழ்வாராம்.எமனும்சனியும்சகோதரர்கள்ஆவர்
*காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.*
தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்லசெய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம்வீட்டின் முன் உள்ள “கா…கா…’என்று பலமுறை குரல் கொடுக்கும்.இந்தப்பழக்கம் இன்றும் உண்டு. *காலையில் நாம் எழுவதற்கு* *முன்,காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தகாரியம் வெற்றி பெறும்.*நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்லபலன் உண்டு.
வீடு தேடிகாகங்கள் வந்துகரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும்.
காக்கைவழிபாடு செய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன்
வாழலாம் என்று ஆன்மீகம் கூறினாலும் மனிதனை அண்டி பிழைக்கும் ஒர் உயிரினம் நாகரீக வளர்ச்சியில் நாம் கவனிக்க தவறி அந்த இனம் அழியாமல் பாதுகாக்கபட வேண்டும்...

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com