Showing posts with label palangalum. Show all posts
Showing posts with label palangalum. Show all posts

Saturday, 3 November 2018

சாஸ்திர பிரச்சனைகளும் தீர்வுகளும் - மாலைமுரசு டிவி 003 - Dr Srikumar Jothidam

சாஸ்திர பிரச்சனைகளும் தீர்வுகளும் - மாலைமுரசு டிவி 003



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com

Email ID :kamaleesrikumar@gmail.com

Monday, 29 October 2018

சாஸ்திர பிரச்சனைகளும் தீர்வுகளும் - மாலைமுரசு டிவி 001

சாஸ்திர பிரச்சனைகளும் தீர்வுகளும் - மாலைமுரசு டிவி 001 - Dr Srikumar Astrologer Chennai

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com

Email ID :kamaleesrikumar@gmail.com

Sunday, 22 April 2018

பரிகாரமும் பலன்களும் - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - Jothi Tv Astrology Show Part 11

பரிகாரமும் பலன்களும் - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - Jothi Tv Astrology Show Part 11



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - Jothi Tv Astrology Show Part 010

பரிகாரமும் பலன்களும் - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - Jothi Tv Astrology Show Part 010



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Wednesday, 14 February 2018

மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் பரிகாரம்

மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் பரிகாரம்


மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை விடுவிக்க இந்த பரிகாரம் உதவும்.மகாராஷ்டிரா,மத்தியப்ரதேசம் போன்ற மாநிலங்களில் இதைச் செய்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர் தானே செய்துகொள்ளலாம் அல்லது குடும்பத்தில் யாராவது ஒருவர் அவருக்கு இதைச் செய்யலாம்.

பரிகாரம்:-

வளர்பிறை அஷ்டமி,தேய்பிறை அஷ்டமி,அமாவாசை ஆகிய மூன்று நாட்களிலும் செய்ய வேண்டும்.

கொஞ்சம் மஞ்சளை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.கொஞ்சம்குங்குமத்தை நீரில் குலைத்து வைத்துக்கொள்ளவும்.கொஞ்சம் கண்மை எடுத்துக்கொள்ளவும்.

ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பர் எடுத்துக்கொள்ளவும்.அந்தப் பேப்பரில் மஞ்சளால் ஒரு கோடும், குங்குமக்கலவையால் ஒரு கோடும்,கண்மையால் ஒரு கோடுமாக மொத்தம் மூன்று கோடுகள் வரையவும்.பின்,வேகவைத்த அரிசிசாதம் கொஞ்சம் அந்தப் பேப்பரில் வைத்துக்கொண்டு அந்த சாதத்தின் மேல் கொஞ்சம் தயிர் விட்டு சாதத்தின் மேல் சிகப்பு மிளகாய் விதைகள் கொஞ்சம் தூவவும். .

பின் அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு மது/ போதைப் பழக்கத்துக்கு அடிமையானவரின் தலை மற்றும் உடலை 11 தடவை இடமிருந்து வலமாக ஓம் நமசிவாய என்று மனதுக்குள் ஜெபித்தபடியே சுற்றவும்.

11 தடவை சுற்றி முடித்த பின் அந்த பேப்பரையும் அதில் உள்ளவற்றையும் அப்படியே ஓடும் நீர்,கிணறு,ஏரி ,குளம்,கடல்,ஆறு எதிலாவது போட்டு விடவும். பின் காலையும் கையையும் கழுவிக் கொண்டு தலையில் கொஞ்சம் நீர் தெளித்துக் கொண்ட பின் வீட்டுக்குள் செல்லவும். 



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com

Email ID :kamaleesrikumar@gmail.com

Friday, 27 October 2017

முருக கடவுள்

தமிழ் கடவுள் முருக பெருமான் பற்றி...



கோவை செம்மொழி மாநாட்டில் திராவிக் கடவுளான சிவனின்மைந்தன் முருகனையும், சிவனை ருத்திரன் எனவும் வழிபட்டிருப்பதைஅறிஞர்கள் வெளியிட்டார்கள். அதைப் பற்றிய தொகுப்பு.
சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரியகடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கியகடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று“செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோபர்போலா, சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்த ஆய்வு கட்டுரையில்கூறியுள்ளார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழிமாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று,தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம்,திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவருக்குமாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கானதிராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதியஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில்மாநாட்டில் சமர்ப்பித்தார்.
அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது: சிந்து சமவெளி நாகரிகம்நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890-ம் ஆண்டுகளுக்குஇடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறிதியிட்டு கூறமுடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள்கண்டெடுக்கப்பட்டன. மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியாபகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன்அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு,எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்குகொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்தஎழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது. சிந்துசமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்துவடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டது. ஆனாலும் பாதுகாக்கப்பட்டசில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும், ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்டமொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளேயாகும்,அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டுவருகின்றன. எனினும், கி.மு. 1100 -600-ம் ஆண்டுகளில், வடமேற்குபகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவஎழுத்துக்களில்,முகம்,பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழிஎழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது.
வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவதுஎன்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிடமொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது.சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள்உதவிக்கு வருகின்றன. போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய“இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள் வடஇந்தியர்கள்வணங்கிய போர்க்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது.அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகுஅல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன.வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’என்னும் கடவுள், பச்சிளங்குழந்தையாக உருவாக்கப்பட்டும்,சமஸ்கிருதத்தில் “குமாரா’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகனும்,ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்துவடிவகுறியீடுகளால் குறிப்பிடப்படுகிறார்கள்.
இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள்என்று தெரியவருகிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்தைய எழுத்துவடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகிஉறுதியுடன் கூறமுடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களைகண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள்தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையைபற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர்பர்போலோ பேசினார்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Monday, 23 October 2017

பஞ்ச குண சிவ மூர்த்திகள்

பஞ்ச குண சிவ மூர்த்திகள்

பஞ்ச குணம்
சாந்தம், ஆனந்தம், ருத்திரம், வசீகரம், கருணை என ஐந்துகுணங்களையும் பஞ்ச குணம் என்கிறோம். 



மனிதர்களுக்குஇருப்பதைப் போல இந்தக் குணங்களை இறைவனுக்கும் பொருத்திப்பார்த்து மகிழந்தார்கள் சைவர்கள். நாமும் அந்த பஞ்ச வடிவ குணமூர்த்திகளை ரசிப்போம்.
ஆனந்த மூர்த்தி
ஆனந்தம். உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் உரியது. சிவன்தன்னுடைய ஆனந்தத்தினை வெளிபடுத்த நடனமாடும் வடவம்நடராஜர். எல்லையில்லா பெருமைகளை உடைய இந்த வடிவத்தில்,சிவ ஆனந்தத்தையும், சிவ தத்துவத்தையும் ஒரு சேர உணர முடியும்.
காலமூர்த்தி

மக்களைக் காக்கும் பொறுப்பு கடவுடையது. அந்த மக்களைக் காக்கும்பொருட்டு ஈசன் எடுத்த வடிவமே கால பைரவர். அழகியகோலத்துடன் காவலுக்கான மிருகம் நாயை வாகணமாகக் கொண்டஅற்புதக் கோலம். முழு சிவ வடிவத்தினை கால பைரவர் என்றுவாழ்த்தி வணங்குகின்றனர்.
வசீகர மூர்த்தி
பிச்சாண்டவர் கோலம் வசீகரத்தின் சிகரம். தருகாவனத்தில் இருந்தமுனிவர்களின் ஆணவம் அடக்க, அழகே உருவாய் முனிபத்தினிகளைபித்துபிடிக்க வைத்த வடிவம். பிக்ஷாடணர், பிச்சாண்டவர்,பிச்சாண்டி, பிச்சை தேவன் என்றெல்லாம் அழைக்கப்படும் வடிவம்இது.
கருணா மூர்த்தி
உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சிஅளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி. இறைவன் ஒரு இனியஅன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய் இருக்கும் உருவம்.குடும்ப உறவுகளின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கானஈசன் எடுத்த வடிவம்.
சாந்த மூர்த்தி
தட்சணாமூர்த்தி வடிவத்தை குரு என்று சைவர்கள் வணங்குகிறார்கள்.தென் திசையை நோக்கி ஞான வடிவினில் ஆலமரத்தின் கீழ்அமர்ந்திருப்பது இந்த வடிவின் சிறப்பு. முனிவர்களுக்கும்,மக்களுக்கும் ஞான அறிவை போதிக்கும் போதகராக ஈசன்இருக்கிறார்.

Friday, 13 October 2017

குரு பார்வை பற்றி


குரு பார்வை பற்றி ஜோதிட ஆய்வு...

ஐயா வணக்கம்,
கேள்வி :
ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள்,குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட
பாவத்தை,கிரகத்தை குரு பார்வை செய்தால் தோஷ நிவர்த்தி என பாரம்பரிய ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.இது எந்த அளவிற்கு சரி?
இதன் விதிவிலக்குகள் என்ன? விளக்கங்களை ஜோதிடதீபத்தில் எதிர்பார்க்கிறேன்.
பதில் :
ஒரு ஜாதகத்தில் பாதிக்க பட்ட ஒரு பாவகத்தை குரு பகவானின் பார்வை சரி செய்து நன்மையை வாரி வழங்கும் என்பதெல்லாம் உண்மையில்லை , குரு பார்வை தரும் தீமையை பற்றி அறியாதவர்கள் சொல்லும் வார்த்தையாகவே இதை எடுத்து கொள்ள முடியும் , தனுசு அல்லது மீன இலக்கின ஜாதகருக்கு முறையே மிதுனம் மற்றும் கன்னியில் ( நட்பு நிலை ) அமர்ந்து நேரெதிர் பார்வை செய்யும் குரு பகவான் தனது லக்கினத்தையே தானே 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் .
மேலும் தனுசு இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு மேஷத்தில் அமர்ந்து குரு பகவான் ( பகை நிலை )ஒன்பதாம் பார்வையாக தனது பாவகத்தை தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , இதே லக்கினத்தை சார்ந்தவருக்கு சிம்மத்தில் அமர்ந்த குரு பகவான் ( நட்பு நிலை ) ஐந்தாம் பார்வையாக தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , இதே போன்று மீன இலக்கின ஜாதகருக்கு கடகத்தில் அமர்ந்து குரு பகவான் ( உச்ச நிலை )ஒன்பதாம் பார்வையாக தனது பாவகத்தை தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும், இதே லக்கினத்தை சார்ந்தவருக்கு விருச்சகத்தில் அமர்ந்த குரு பகவான் ( பகை நிலை ) ஐந்தாம் பார்வையாக தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , மேற்கண்ட அமைப்பில் தனது லக்கினத்திர்க்கே தனது பார்வையில் இரண்டுவிதமான பலன்களை தரும் குரு பகவான் , ஒரு பாவகத்தை பார்வை செய்தால் அந்த பாவகம் அணைத்தது தோஷங்களையும் , குறைகளை நிவர்த்தி செய்யும் என்பது எப்படி ? என்று எங்களுக்கு தெரியவில்லை .
சரி உங்களுக்காக ஒரு எளிய விதி முறை சொல்கிறோம் புரிகிறதா என்று பாருங்கள் , அதாவது ஒரு ஜாதகத்தில் குரு பகவான் கோண அதிபதியாக வந்து (லக்கினம் ஐந்து ஒன்பது ), கோண பலம் பெற்று ( தனது வீட்டிற்கு முதல் , ஐந்து , ஒன்பது ) அமர்ந்தால் குரு பகவானின் பார்வை 100 சதவிகித நன்மையை தரும் .
ஒரு ஜாதகத்தில் குரு பகவான் கேந்திர அதிபதியாக வந்து ( நான்கு , எழு , பத்து ) மறைவு பலம் பெற்றால் ( தனது வீட்டிற்கு 2,6,8,12 ல் அமர்ந்தால் ) நன்மை தருவார் கேந்திர பலம் பெற்று ( நான்கு, எழு, பத்து ) ஒரு பாவகத்தை பார்வை செய்தால் 200 சதவிகிதம் தீமையான பலனை தரும், இந்த அடிப்படை விஷயத்தை புரிந்து கொண்டால் நிச்சயம் குரு பகவானின் பார்வையின் தன்மையை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , மேலும் குரு பார்வையின் நன்மை தீமையை லக்கினத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயம் செய்ய வேண்டும் .
கேள்வி :
நீசமான குருவின் பார்வைக்கு பலம் உண்டா?
பதில் :
ஒரு கிரகம் எந்த நிலையில் இருந்தாலும் அதன் பார்வை , பார்க்கும் இடத்திற்கு உண்டான நன்மை தீமை பலன்களை எவ்வித தங்கு தடையும் இன்றி செய்யும் , ஆக குரு நீச்சம் பெற்றாலும் சரி உச்சம் பெற்றாலும் சரி , பார்க்கும் பார்வை சம்பந்த பட்ட பாவகத்திர்க்கு நன்மை செய்கிறதா தீமை செய்கிறதா என்பதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் .
கேள்வி :
வக்ரமான குருவின் பார்வைக்கு பலம் உண்டா? அஸ்தமனமான குருவின் பார்வைக்கு பலம் உண்டா? ஆறு,எட்டு,12 ல் மறைந்த குருவின் பார்வைக்கு பலம் உண்டா?
பதில் :
நிச்சயம் உண்டு இதில் எவ்வித குழப்பமும் இல்லை . மேலும் குரு பகவான் வகிரகம், அஸ்தமனம்,மறைவு எந்த நிலை பெற்றாலும் சரி அதன் பார்வை பலத்தில் எவ்வித வேறுபாடும் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை .
கேள்வி :
லக்னத்திற்கு பாதகாதிபதியாக வரும் குருவின் பார்வையால் நன்மை உண்டா?
பதில் :
இந்த விஷயத்தை சுய ஜாதகம் கொண்டு நிர்ணயம் செய்வதே சால சிறந்தது ,
கேள்வி :
குருவின் 3பார்வைகளில் வித்யாசம் உண்டா?சமம் தானா?
பதில் :
குரு பகவானின் 3 விதமான பார்வையில் எவ்வித வேறுபாடும் இருக்க வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை .
கேள்வி :எந்த அமைப்பால் குருவின் பார்வையால் ஜாதகனுக்கு தீமை ஏற்படும்?
பதில் :
ஒரு ஜாதகத்தில் கேந்திரங்களுக்கு அதிபதியாக வரும் குருபகவான் , கேந்திர பலம் பெற்று தனது வீட்டை தானே பார்வை செய்யும்பொழுது ஜாதகர் அடையும் இன்னல்களுக்கு ஒரு அளவே இருக்காது , இந்த பலன் கோட்சார குருபகவானுக்கும் பொருந்தும் .

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Thursday, 31 August 2017

தீபம் ஏற்றும் முறையும் பலனும் !!!

தீபம் ஏற்றும் முறையும் பலனும் !!!

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம்
போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
தீபம் ஏற்றும் நேரம்
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
விளக்கு ஏற்றும் முறை
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும்.
முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.
விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)
எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய் -
விளக்கெண்ணெய் - புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) - அம்மன் அருள்
வேப்பெண்ணை - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
ஆமணக்கு எண்ணை - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.
எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்
விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்
திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள்
திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
• பருத்திப் பஞ்சு - குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
• வாழைத் தண்டின் நார் - முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
• தாமரைத்தண்டு நூல் - முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
• வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.
• புதிய மஞ்சள் துணி - நோய்கள் குணமாகும்.
• புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
• புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)
விளக்கின் தன்மை
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்
வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும்
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.
திருவிளக்கின் சிறப்பு
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
உங்கள் ஸ்ரீகாலபைரவி
விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.
தீபத்தை குளிர வைக்கும் முறை
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
உங்கள் ஸ்ரீகாலபைரவி
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது.
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்
விளக்கு ஏற்றும் பொழுது :
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே
விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்ட னாரே.
3. தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
சோதியே சுடரே சூழலொளி விளக்கே சுரிகுழல் பணைமுலைமடந்தைப்
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்தயனுமாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள் குருந்தம் மேவிய சீர்எம்
ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே
4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அருமறை சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
5. அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்
அமுது படைக்கும் போது :
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவி யாமே
எனவும் படைத்து :
பூந்தண் பொழில்சூழ் புலியூர் பொலிசெம்பொன் அம்பலத்தே
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.
(என ஓதி வாயின் புறத்தில் நீர்காட்டி விடுக.)
6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
திருநீறு :
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.
குங்குமம் :
சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி
கார்த்திகை பெண்களை போற்றும் நன்னாள்
நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர்.
இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.
சிவசக்தி தீபம்
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு
கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து,
உங்கள் ஸ்ரீகாலபைரவி
மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.
தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானையே அருணகிரிநாதர்""தீபமங்களஜோதீ நமோநம'' என்று திருப்புகழில் பாடுகிறார்.
இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.
ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப - தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் - கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் - விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் - பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.
ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Tuesday, 15 August 2017

*வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?*

*வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?*
தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டரக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.
தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் :
கோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து விளக்குகள்
தின்ணைகளில் : நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில் : இரண்டு விளக்குகள்
நிலைப்படியில் : இரண்டு விளக்குகள்
நடைகளில் : இரண்டு விளக்குகள்
முற்றத்தில் : நான்கு விளக்குகள்
பூஜையறையில் :
இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.
சமையல் அறையில் :
ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் :
எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.
தீபத்தின் வகைகள் :
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகைகள் உண்டு. அவை
சித்ர தீபம் :
வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.
மாலா தீபம் : அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.
ஆகாச தீபம் :
வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.
ஜல தீபம் :
தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.
படகு தீபம் :
கங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும்.
சர்வ தீபம் :
வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.
மோட்ச தீபம் :
முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.
சர்வாலய தீபம் :
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன்கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.
அகண்ட தீபம் :
மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.
லட்ச தீபம் :
ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.
மாவிளக்கு தீபம் :
அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Monday, 14 August 2017

கிரக பாதிப்புகள் நீங்க ஸ்ரீ சூரிய மந்திரம் !!!

கிரக பாதிப்புகள் நீங்க ஸ்ரீ சூரிய மந்திரம் !!!
ஜாதகத்தில் கிரகங்கள் அனுகூலமாக இல்லாமல் பலவிதமான துன்பங்கள் அனுபவித்து வருபவர்கள், அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனைப் பார்த்தபடி 108 தடவை ஜெபித்து வர கிரக பாதிப்புகள் குறைந்து நிம்மதியான வாழ்வு அமையும்.இந்த ஜெபத்தைக் காலையில் சூரிய உதயம் முதல் 6:45 க்குள் முடித்து விட வேண்டும்.பாதகமான கிரகங்களின் தசை,புத்தி நடப்பவர்களும் இந்த ஜெபத்தைச் செய்து பலன் பெறலாம்.
சூர்ய அல்லது சந்திர கிரகணத்தன்று ஜெபிக்க விசேஷமான பலன் கிட்டும்.
பீடாநாஷன ஸ்ரீ சூர்ய மந்திரம் :-
ஓம் நமோ பாஸ்கராய சர்வக்ரஹ பீடாநாஷனம் குரு குரு ஸ்வாஹா ||
வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

குழந்தைகளின் தொடர் அழுகை ,பயம் நீங்க!!!

குழந்தைகளின் தொடர் அழுகை ,பயம் நீங்க!!!

குழந்தைகள் காரணமின்றித் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால்,அல்லது தூக்கத்தில் இருந்து திடீர் என்று எழுந்து வீரிட்டு அழுது கொண்டே இருந்தால் கனவில் அல்லது உண்மையில் ஏதேனும் தீய சக்திகளைக் கண்டு பயந்திருக்கும்.அப்படி அடிக்கடி ஏற்பட்டால் சாமிக்கு ஏற்றிய ஊதுபத்தியின் சாம்பலைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.அந்தச் சாம்பலைக் கையில் வைத்துக் கொண்டு, கீழே உள்ள மந்திரத்தை 11 தடவை ஜெபித்துப் பைரவரை வேண்டி அதைக் குழந்தையின் நெற்றியில் பூசி விடக் குணம் கிடைத்துக் குழந்தை நிம்மதியாக உறங்கும்.

பாலரக்ஷ காலபைரவ மந்திரம் :-

கபாலமாளிகா கண்டம் ஜ்வாலாபாவக லோசனம் |
கபாலகதாம்த்யுக்ரம் கலியே காலபைரவம் ||


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Friday, 11 August 2017

தூக்கத்தில் நிம்மதி

தூக்கத்தில் நிம்மதி
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே- அந்தத் தூக்கமும் அமைதியும் நானா னால்…’ என்றொரு பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
இது ஷேக்ஸ்பியர் வரிகளின் தமிழாக்கம்.
ரோமியோ ஜுலியட்டில்…
Sleep Dwell upon Thine Eyes
peace in Thy Breast
Would I were Sleep and Peace
So Sweet to Rest
`தூங்குவது போலும் சாக்காடு; தூங்கி
விழிப்பது போலும் பிறப்பு’ – என்றான் வள்ளுவன்.
தூக்கத்தில் கிடைக்கும் மயான அமைதி வேறு எதிலே கிடைக்கப் போகிறது! அது கவலைகளை மூடி வைக்கிறது! கண்ணீரை ஒத்தி எடுக்கிறது; நாளையப் பொழுது பற்றிய கேள்விக் குறிகளை நிறுத்தி வைக்கிறது.
மானிட தர்மத்தை ஒழுங்காக நிறைவேற்றவே, மனிதன் அடிக்கடி தூங்கித் தூங்கி விழித்து எழுகிறான்.
நோயாளியைக் கேள்வி கேட்கும் டாக்டர், `தூக்கம் வருகிறதா? பசி எடுக்கிறதா?’ என்று இரண்டு கேள்விகளைத் தானே கேட்கிறார்.
உறக்கம் கெட்டவன் வாழ்க்கையே நரகம்.
தலையணைக்குக் கீழே துயரங்களைப் புதைத்து வைத்துக் கொண்டு, திரும்பிப் படுப்பவனுக்கு வேறு எந்த வகையிலே நிம்மதி?
மாத்திரை சாப்பிட்டுத் தூங்குகிறவன், கவலைகளைச் சாகடிக்கவில்லை; நரம்புகளைச் சாகடிக்கிறான்.
மரணம் இறுதியாக வரும்வரை, வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதி தூக்கமாக இருக்க வேண்டும்.
அதற்கென்ன வழி?
`வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?’
செத்துப் போனால் யாரும் கூட வரப் போவதில்லை; இருக்கின்ற காலத்தில் துடிப்பென்ன? திகைப்பென்ன?
நடப்பது நடக்கட்டும்; நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விடு; நிம்மதியான தூக்கம் வரும்.
எப்படிப் படுத்தால் தூக்கம் வருமோ அப்படிப் படு.
ஆனால், ஆடவன் குப்புறப் படுத்தாலும் படுக்கலாம்; பெண் மல்லாந்து படுக்கக் கூடாது; ஒருக்களித்துத்தான் படுக்க வேண்டும்.
அதனையும் முந்திய அத்தியாயத்தில் சொன்னபடி இடது கையில்தான் படுக்க வேண்டும். அப்போதுதான் இதயம் சுகமாக இயங்கும். சுவாசம் லகுவாக வெளிவரும்.
தூக்கத்தில் கனவே வரவில்லையென்றால் மிகவும் நல்லது; அது ஆழ்ந்த தூக்கம்.
ஆழ்ந்த தூக்கத்தின் மறுபகுதி தான் கனவு வருவது.
மேலே உத்திரம் உள்ள வீடாக இருந்தால், உத்திரத்துக்கு நேரே தலையை வைக்காதே; கனவு வரும்.
தலையணைக்கு அடியில் கொஞ்சம் விபூதியோ, குங்குமமோ வைத்துக் கொண்டு படு; கெட்ட கனவு வராது.
படுக்கப் போகும்போது பூஜை செய்துவிட்டுப் படு; பயமோ கவலையோ இருக்காது.
யாரையும் திட்டிவிட்டு, அதே கோபத்தோடு போய்ப் படுக்காதே; தூக்கம் வராது.
சாப்பிட்ட பிறகு, கொஞ்சம் குறுநடை போட்டுப் படு; தூக்கம் வரும்.
பக்கத்தில் நண்பனோ, மனைவியோ படுத்திருந்தால், நல்ல விஷயங்களைப் பேசிக் கொண்டே படு; தூக்கம் வரும்.
எந்தக் காரணம் கொண்டும், இரவிலே மணிக்கு மணி அடிக்கும் கடிகாரம் வைக்காதே; அது தூக்கத்தைக் கெடுப்பதற்கென்றே கண்டு பிடிக்கப்பட்டது.
சுகமான மிருதுவான சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே படு; தூக்கம் வந்து விடும்.
மலேசியாவில் `கோங்கான் கீரை’ என்றொரு கீரை இரவிலே தரப்படுகிறது. அதை மட்டும் காலை – இரவிலே சாப்பிடலாம்; அதைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் எந்த இடிச் சத்தமும் எழுப்பாது.
வாயுப் பதார்த்தங்களை இரவிலே சாப்பிடாதே; நள்ளிரவில் அது வயிற்றைப் புரட்டும்.
நான் இருபத்தெட்டு வருஷங்களாக இரவிலே இட்லி அல்லது தோசைதான் சாப்பிடுகிறேன்.
அண்மையில் ஒரு நாள், சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்தேன்; அன்று சுகமாக தூக்கம்! காரணம் அதில் உளுந்து இல்லை.
சர்க்கரை வியாதி இல்லாதவர்கள், தேங்காய்ப் பாலும் ஆப்பமும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தேங்காய்ப் பாலிலுள்ள மதமதப்பில் நல்ல தூக்கம் வரும்.
சட்டையோ, பனியனோ, போட்டுக் கொண்டு இரவிலே தூங்கக் கூடாது. பூச்சிகள் உள்ளே போனால் ஒரு தடவைக்கு மூன்று தடவை கடிக்கும்.
என்னதான் குளிரடித்தாலும் சடலத்தை மூடுவது போல் உடலை மூடிக் கொள்ளக் கூடாது; மூக்கு மட்டும் வெளியே சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
இரவிலே படுப்பதற்கு முன், பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நான்கு வெள்ளைப் பூண்டுப் பற்களைக் கடித்துத் தின்று விட்டுப் பால் குடிக்க வேண்டும்.
அதனால் வயிற்றில் இருக்கும் வாயு பகவான், காலையில் தன் மூதாதையர்களோடு ஐக்கியமாகி வெளியேறி விடுகிறான்.
அமுங்கி அமுங்கி `ஜோல்ட்’ அடிக்கும் மெத்தையில் யாரும் படுக்கக் கூடாது.
உடம்பின் நடுப்பகுதி தாழ்ந்தும், மேலும் கீழும் உயர்ந்தும் இருந்தால் புரண்டு படுப்பது சிரமம். அதனால் அடிக்கடி விழிப்பு வரும்.
வழுவழுப்பான தரையில் பாயை விரித்துப் படுப்பது வெகு சுகம்.
எங்கள் கிராமங்களில் பர்மாவில் இருந்து ஒரு பாய் வாங்கி வருவார்கள். `பர்மாப் பாய்’ என்று. மகாராஜாக்களின் மெத்தைகள் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.
இப்போது `பத்தமடைப் பாய்’ ஓரளவு அந்த நிலையில் இருக்கிறது.
வசதி உள்ளவர்கள், கடம்ப மரக் கட்டிலில் பாய் இல்லாமல் படுத்தால், உடம்பு வலியெல்லாம் தீர்ந்து விடும்.
வெட்ட வெளியில் படுக்கிறவர்கள், வேப்பங் காற்றில் படுக்க வேண்டும்.
இப்போது வேப்ப மரங்களே குறைந்து வருகின்றன. தோட்டம் உள்ளவர்கள் வேம்புகளை நட்டு வையுங்கள்.
இரவில் படுக்கும் போது, `ஆலிவ் எண்ணெய்’ என்று ஒரு எண்ணெய் இருக்கிறது. அதை முகத்தில் தடவிக் கொண்டு படுத்தால் காலையில் களை இழந்த முகம் கூடப் பிரகாசமாக இருக்கும்.
சினிமா நடிகைகள் முகத்தைக் கழுவும் போது அந்த எண்ணெய் போட்டுத்தான் கழுவுகிறார்கள். அதனால் `கருப்பி சிவப்பி’ யாகத் திகழ்கிறார் கள்.
எல்லாவற்றிற்கும் மேலாகச் சாயங் காலத்தில் மூன்று மைல் நடந்தோ, நன்றாக விளையாடி விட்டோ, குளித்துவிட்டுச் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள்; ஒரு பயலையும் கேட்க வேண்டாம்.
காலையில் விழிக்கும் பொழுது யார் முகத்திலும் விழிக்க விரும்பாவிட்டால், விழிக்கும்போது இரண்டு உள்ளங் கைகளையும் நன்றாகச் சூடேற்றி முகத்தில் தேய்த்து விட்டு அந்தக் கைகளைப் பாருங்கள்; அதுவே ஒரு சூரிய நமஸ்காரம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Thursday, 10 August 2017

முருகா என்றால் :

முருகா என்றால் :
முருகனது திருவடியை பூஜிக்க பூஜிக்க பூஜிக்க பாவவினைகளின் தன்மையை ஆழமாக உணர்வான். நாம் செய்த பாவங்கள் நம்மை மேலும் மேலும் பாவங்களை செய்யத் தூண்டி நம்மை நரகத்தில் தள்ளி எடுத்த இந்த அற்புதமான மானுட பிறப்பினின்று இழிநிலை பிறப்புகளை உண்டாக்கிவிடும் என்றும், பாவம் மிகுதியாக மிகுதியாக நாம் நாயாக, பன்றியாக, சொறிபிடித்த நாயாக, நொண்டி பன்றியாக, கழுதையாக, பாம்பாக மாறிமாறி நமது பாவவினை நம்மை பிறக்கச் செய்து இறுதியில் மலத்தில் நெளியும் புழுவாகவும் பிறக்கச் செய்துவிடும் என்பதையும் உணர்ந்து பாவத்தினால் வருகின்ற துன்பங்களை ஏற்றுக் கொள்வான் முருகபக்தன்.
முருகனை வணங்கா விட்டால் இந்த பாவங்கள் நம்மை சூழ சூழ பாவபுண்ணியத்தின் மீது நம்பிக்கை இல்லாதுபோய் பலவிதமான இழிபிறவிக்கு ஆளாவோம் என்பதை தெளிவாக உணர்ந்து முருகனை மேலும் மேலும் வணங்கிட, செய்த பாவவினைகள் செய்தவைதான், செய்த பாவங்களுக்கு மன்னிப்பு என்பது இறைவனிடத்தும் இல்லை, இயற்கையிடத்தும் இல்லை. நாம் செய்தவை நமக்கு அப்படியே திரும்பித்தான் வரும் என்பதையும் முருகன் அருளால் பாவவினைகளின் வேகத்தை குறைத்து மெதுமெதுவாக முருகன் அருள் துணையால் அனுபவித்து நீக்கி கொண்டும், முருகனருளால் மேலும் பாவங்களை செய்யாதிருக்க முருகன் துணையுடன் தானதருமங்களைச் செய்தும் தனது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் உணர்வான்.
நாம் செய்த பாவங்கள் நம்மை நோயாக தாக்கும்போது நாம் வணங்கிய முருகன் நமக்கு மருந்துவனாக வருவதையும், நோய் நீங்க மருந்தாகவும் அவனே வருவதையும், நோய் நீக்க தேவையான பொருளாக அவனே வருவதையும் தெள்ளத்தெளிவாக உணர்வதோடு பாவத்தின் தீவிரம் முருகன் அருளால் கடுகி விரைந்து குறைவதையும் காண்பான் முருகபக்தன்.
பாவத்தை உணரச்செய்வதும் முருகனின் கருணையே!
பாவத்தை அனுபவிக்க செய்வதும் முருகனின் கருணையே!
பாவத்தை அனுபவிக்க துணையாய் இருந்து காப்பதும் முருகனின் கருணையே!
ஆதலில் அருள்நிறை கருணையே வடிவான காத்தருள் புரிகின்ற எல்லாம்வல்ல இறைவனாம் முருகப்பெருமானின் திருவடிகளை மனம் உருகி பயபக்தியுடன்,
“ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!!” என்றோ
“ஓம் சரவண ஜோதியே நமோ நம!” என்றோ
“ஓம் சரவண பவ”
என்றோ முருகனது திருநாமங்களை தொடர்ந்து சொல்லி சொல்லி மந்திர உரு செய்ய செய்ய முருகப்பெருமான் நம்மை சார்ந்து நமது பாவங்களான உயிர்க்கொலை செய்து புலால் உண்கின்ற பழக்கத்திலிருந்து முதலில் விடுவிக்கின்றான். முன்செய்த பாவங்களிலிருந்து மீள, நம்மை புண்ணியவானாக்கும் பொருட்டு வணங்கினோர்க்கு தேவையான பொருளாதாரத்தை கொடுத்து ஏழை எளியோர்க்கு அன்னதானங்கள் செய்ய தூண்டி அன்னதானங்களை செய்ய செய்து புண்ணியவானாக மாற்றி மேல்நிலையை அடையச் செய்கின்றான். ஜீவதயவினை உணரச் செய்து நம்மை ஜீவதயவுடையோராக ஆக்கி தூயநெறியிலே நடந்திடச் செய்து நம்மை பெரும் புண்ணியவான்களாக ஆக்கி இறுதியில் மரணமிலாப் பெருவாழ்வு என்கிற பெறுதற்கரிய பெரும் பேற்றினையும் தந்தருளி நம்மையும் அவனைப் போலவே ஆக்கிக் கொள்கின்றான் முருகப்பெருமான் எனும் பெருங்கருணை தாய்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

விவாகரத்து தீர்வாகுமா..?

விவாகரத்து தீர்வாகுமா..?

தனி மனித உரிமைக்கு முக்கியத் துவம் கூடிவிட்ட இன்றைய கால கட்டத்தில், ஒவ்வொருவரும் தன்னுடைய விருப்பத்துக்கும் நலனுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் சூழல் வளர்ந்து விட்டது. இதன் காரணமாக இரு மனம் இணையவேண்டிய திருமண வாழ்க்கை கசந்து, ஏராளமான விவாகரத்துகள் நிகழ்கின்றன.
கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிக்கு விவாகரத்து தீர்வாகுமா? புராணங்களும் தர்மசாஸ்திரமும் சொல்லும் அறிவுரை என்ன?
தனிமை மகிழ்ச்சியளிக்காது என்கிறது சாஸ்திரம் (ஏகாகீ ந ரமதே). தனியாக இருந்த பரம்பொருள் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் இரு பகுதியாகப் பிரித்துக்கொண்டு படைப்பை நிறைவேற்றியது என்கிறது உபநிடதம். முழுமையின் இரு பகுதிகள் - ஆணும் பெண்ணும் இணையும்போதுதான் முழுமை பெறுகிறது என்று அது சொல் லாமல் சொல்லும் (ப்ரஜயாணி மனுஷ்ய: பூர்ண:). சேர்ந்து வாழ திருமணம் வேண்டும்; பிரிந்தால் அரைகுறையாகி விடும். இருவருக்கும் இன்பம் சூன்யமாகி விடும்.
அற்ப விஷயங்களைப் பெரிதாக்கி, மனக் கசப்பை எட்டி, பிரிய முற்படுவது அறிவீனம்.
புராணங்களில் தம்பதிகள் பிரிந்து மறுமணத்தில் இணைந்ததாக தகவல்கள் இல்லை. மும்மூர்த்திகளும் தங்கள் மனைவியருடன் சொற்போரில் ஈடுபடுவது உண்டு. ஆனால், அவர்கள் பிரிந்துசெல்ல வில்லை. அகல்யை குறித்து அவதூறு தோன்றியும், கௌதமர் விவாகரத்தை ஏற்கவில்லை. நளாயினி, நோய்வாய்ப் பட்ட தன் கணவனைத் துறக்கவில்லை. பிறர் மனைவியை ஆசைப்பட்ட அக்னியை, அவருடைய மனைவியான ஸ்வாஹா தேவி துறக்கவில்லை. கணவனை இழந்த மாத்ரியும் குந்தியும் மறுமணத்தை ஏற்கவில்லை. வேலையில் நிரந்தரத்தை விரும்பும் மனித இனம் மனைவியிலும் நிரந்தரத்தைப் பாது காக்கவேண்டும். புராணங்கள் அனைத்தும் கதாபாத்திரங்களின் வாயிலாக, 'இணைப்பைத் துண்டிக்கக்கூடாது' என்றே அறிவுறுத்துகின்றன.
பண்பும் பெருமையும் நிலைத்திருக்க, பிரியாமல் இருப்பது சிறப்பு. துன்பங்கள் துரத்தினாலும் அவற்றை அலட்சியப்படுத்தி, இணைந்து வாழும் வாழ்க்கையை உறுதியுடன் ஏற்று மகிழ வேண்டும். அது, தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் உயர்வு அளிக்கும்.சீர்திருத்தம் விவாகரத்தை அறிமுகம் செய்தது. சிந்தனை வளம் பெற்ற சிலரிடம் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெற்றி தென்பட்டாலும், பாமர மக்களைப் பாடாய்ப் படுத்துகிறது. நீதிமன்றத்தில் குவிந்திருக் கும் விவாகரத்துகளின் எண்ணிக்கை பெருகுவது சமுதாயத்துக்கு ஊனமாகும். பக்க விளைவுகள் இல்லாத சீர்திருத்தம் இன்றுவரை தோன்றவில்லை.
குடும்பக் கட்டுப்பாடு ஆண்- பெண்ணின் தகாத சந்திப்புக்கு ஏதுவாக திரைமறைவாக- மறைமுக மாகச் செயல்படுகிறது. விந்து வங்கி வாயிலாக வாடகைத் தாயின் உதவியுடன் குழந்தை பெறுவது வளர்ந்து வருகிறது. நேரடிச் சந்திப்பு இல்லை என்றா லும், மறைமுக சந்திப்பின் பலனை ஏற்க வைக்கிறது. இதுவும் சமுதாய சீர்கேட்டில் அடங்கும். சட்டம் இருப்ப தால், விவாகரத்தை ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமது பண்பு, கலாசார பெருமை ஆகியவற்றை எண்ணி, விவாகரத்தை வரவேற்காமல் இருப்பது சிறப்பு.
- இப்படி, விவாகரத்துக்கு எதிரான கோணமும் வாதமும் சிலரிடம் உண்டு. இவர்களுக்கு நேர்மாறானவர்களின் கருத்து என்னவாக இருக்கும், தெரியுமா?
மேற்சொன்ன கோட்பாடுகள் இன்றைய சூழலில் ஏற்கத் தக்கது அல்ல. திருமண உறவை முறித்துக்கொள்ள இரு வருக்கும் உரிமை இருக்கவேண்டும். அவர்கள் தனித்தனி யாகப் பிறந்தவர்கள். நல்ல எண்ணத்தில் இணைந்தார்கள். ஆனால், அவர்களின் இணைப்பு கசப்பானால், முறித்துக்கொள்வதுதான் துயரத்தில் இருந்து விடுபட ஒரே வழி!
'பெண்மை எங்கு பெருமைப்படுத்தப்படுகிறதோ, அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்' என்கிறார் மனு (யத்ர நார்யஸ்துபூஜ்யந்தேரமந்தேதத்ர தேவதா:). ஆணின் மறுபாதி பெண் என்கிறது வேதம் (அர்த்தோவா ஏஷ ஆத்மன: யத்பத்னீ). அறமானது பெண்மையை முன்னிலைப்படுத்திச் செயல்படும் (ஸ்த்ரீமூலம் ஹிதர்ம:). பெண் இல்லா மல் அறம் நிறைவு பெறாது. இது வேதத்தின் கணிப்பு.
ஆனால், சமுதாய மாற்றமானது பெண்மையை அடிமையாக்கி அலைக்கழிக்க வழிவகுத்தது. அவளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. கணவனுட னும் குடும்பத்தாருடனும் இணைந்து வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குழந்தைகளை ஈன்றெடுக்கும் யந்திரமாக மாற்றப்பட்டாள். வீட்டு வேலையின் சுமை அவளைத் தள்ளாட வைத்தது. கணவனின் விருப்பத்துக்கு அவள் கட்டாயமாக இணைய வேண்டும். அவளது ஆசாபாசங்கள் நிறைவேறா மலேயே மறைந்துவிடும். பெண்ணானவள் உயிர் பெற்ற ரோபோ போன்று வளைய வரவேண்டிய சூழல் உருவானது.
காலம் மாறியது. சீர்திருத்தவாதிகளின் செயல்பாடு அவளுக்கு விடுதலை அளித்தது. விரும்பிய கணவனை ஏற்கவும், துயரத்தில் சிக்கிய கணவனிடம் இருந்து விடுபடவும் வழி கிடைத்தது. அத்துடன், பறிபோன சமத்துவமும் சுதந்திரமும் கிடைத்தது. விருப்பமுள்ள கண வனை அவள் தேர்ந்தெடுக்கலாம். ஒத்துவரா விட்டால் அவனைத் துறந்து மற்றொருவனை ஏற்கலாம். கணவனுக்காக அவளது பிறப்புரி மையை இழக்கக்கூடாது. நளாயினியாகவோ, அனுசூயையாகவோ அவள் மாற இயலாது. பிறப்பில் சமம் என்கிற கோட்பாட்டை இழக்க முடியாது. அவள் வாழப் பிறந்தவள். இன்பத் தைச் சுவைத்து மகிழ அவளுக்கு உரிமை உண்டு. அது வெற்றி பெற, மறுமணத்தை ஏற்பதில் எந்தத் தவறும் இல்லை.
கணவனுக்கு இருக்கும் உரிமை மனைவிக்கும் இருக்கவேண்டும். தனது ஆசாபாசங்களை அடக்கிக் கொண்டு, கணவனுக்கு அடிமையாகச் செயல்பட வேண்டிய அவலம் அவளுக்கு இல்லை. இன்று தகப்பன் சொத்தில் பங்கும், விவாகரத்தும் பொருளா தார ரீதியிலும் மனோரீதியிலும் அவர்களை பிரகாச மான வாழ்க்கையைச் சுவைக்க வைத்திருக்கிறது. ஆக, விவாகரத்து அவர்களுக்கு வரப் பிரசாதம்.
இது தவறான கணிப்பு. ஆராயாமல் சொன்ன தகவல். இதை ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது.
முதல் மனைவி மூலம் வாரிசு இல்லை. வாரிசுக்காக இரண்டாவது மனைவியை ஏற்க, சாஸ்திரம் அனுமதிக்கும். ஆனால், முதல் மனைவி யின் தரம் குறையாமல், வாழ்க்கை முழுக்க அவளை அன்போடும் அரவணைப்போடும், முகம் சுளிக்காமல் பராமரிக்கவேண்டும். மனைவி நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் இருக்கிறார் என்றால், 2-வது திருமணத்துக்கு இடமுண்டு. ஆனால், உயிருள்ள வரை முதல் மனைவிக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மனைவி இறந்துவிட்டாள்; வேள்வியில் ஈடுபட மனம் விரும்புகிறது. அப்போது, 2-வது திருமணத்தை சாஸ்திரம் ஏற்கும்.
குடிப்பழக்கம், கெட்ட சகவாசம், கணவனைப் பிரிந்து வாழும் இயல்பு, விருப்பப்படி ஊர் சுற்றுவது, எப்போதும் உறக்கத்தில் ஆழ்ந்து கடமையைக் கைவிடுவது, பிறர் வீட்டில் குடியிருப்பது ஆகியன, மனைவி என்ற தகுதியை இழக்கச்செய்யும் என்கிறார் மனு (பானம் துஜனஸம்ஸர்க:...). இப்படியான சூழலில் மறுமணத்தை சாஸ்திரம் ஏற்கும். ஆனால், முதல் மனைவியைப் பாதுகாக்கும் நிபந்தனையோடுதான் திருமணம் செய்யலாம்.
போதைப் பொருளுக்கு அடிமையாவது, குடிப்பழக் கத்தைத் தொடருவது, மாற்றான் மனைவியுடன் தொடர்பு, மனைவியைத் துன்புறுத்துவது, வீட்டை யும் குழந்தைகளையும் கவனிக்காமல் இருப்பது, சூதாட்டம், பொய்- பித்தலாட்டம், திருட்டு, புனை சுருட்டு ஆகியவற்றில் ஒருவன் மாட்டிக்கொண்டாலும், ஒரு பெண் தன் கணவனை விட்டு வேறு மணத் தில் இறங்கக்கூடாது. கணவன் கைவிட்ட பொறுப்பு களை ஏற்று, துயரத்தைத் தாங்கும் மனவலிமையை வரவழைத்துக்கொண்டு, கெட்ட கணவனுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.
சுயநலம், பிறப்புரிமை, ஆசைகளைச் சுவைக்கும் ஆர்வம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி புதுக் கணவனை ஏற்க சாஸ்திரம் அனுமதிக்காது. திருமணம் ஆசைக்காக அல்ல; அறத்துக்காக. கணவன் பயனற்றவன் ஆனாலும், அவனைக் கணவனாக மதித்தால் பிறவிப்பயன் கிட்டும் என்கிறது சாஸ்திரம். நிலை இல்லாத சிற்றின்பம் கைக்கு எட்டாமல் போனாலும் பேரின்பம் எட்டி விடும் என்பதை உறுதி செய்கிறது சாஸ்திரம். பிறவிப்பயனை அடைவது திருமணத்தின் இலக்கு. லோகாயத சுகத்துக்காகத் திருமணம் இல்லை.
வீடு, வாகனம் போன்று ஒரு நுகர்பொருளாக பாவித்து மனைவியையும் கணவனையும் மாற்றிக் கொள்வதை சாஸ்திரம் ஏற்காது. சிறு வயதில் தகாத உறவைச் சந்தித்த பெண்மணிகளைச் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பது உண்டு. தனிமனிதனின் குடும்பப் பொறுப்பை அரசாங்கம் ஏற்காது. சண்டை சச்சரவு ஆனாலும், மகிழ்ச்சியானாலும் கணவன்- மனைவி இருவரும் பங்குபோட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். திருமணம் அறப்பின்னணியில் உருவா னது. ஒருத்தி ஒருவனோடு மட்டும்தான் இணைந்து இன்பத்தைச் சுவைக்கலாம். பல புருஷர்களின் தொடர்பு கலப்படத்தை உருவாக்கும். கலப்படம் நரகத்தின் அடித்தளம். அது சமுதாயத்தைச் சீர்குலைக்கும் என்று கண்ணன் சொல்வான் (ஸங்கரோ நரகாயைவ..).
உயர்வான நாட்டு நலனுக்காக தனி மனித உரிமையை அழிப்பது தவறாகாது. பாம்பு தீண்டிய விரலை வெட்டி விடுவதுண்டு. சக்கரை வியாதி யானது காலை விழுங்கும்போது, காலை அகற்று வது உண்டு. போக்குவரத்தைச் சீர்செய்ய குடிசை களை அகற்றுவது உண்டு. எதிரியை வென்று நாட்டைப் பாதுகாக்க, பல உயிர்கள் மாய்வதை ஏற்பது உண்டு. களை எடுப்பவன், பயிரின் பாது காப்பை உறுதி செய்யவேண்டும். சீர்திருத்தம் என்பது பூதாகரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடாது.
கலப்படம் ஆண்மையைப் பாதிக்காது. உடல் ரீதியான மாற்றம் பெண்களை பாதிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதேபோன்று ஆண்களுக்கும்... தாய், தங்கையிடத்தில் பெண்மையை உயர்வாகப் பார்க்கும் மனம், மனைவியிடமும் பார்க்கவேண் டும். விதை பாதிப்புக்கு உள்ளாகாது; விளைநிலமே பாதிப்புக்கு உள்ளாகும். விளைச்சலைப் பெருக்கு வதற்காகப் பயன்படுத்தப்படும் தகாத உரமானது, நிலத்தின் செழிப்பை உறிஞ்சிவிடும். விந்துவை ஏற்றுக் கருவறையில் மழலையை உருவாக்கித் தருவது பெண்மை. பலதரப்பட்ட விந்துவின் சேர்க்கை, பெண்மையை உருக்குலைய வைப்பது உண்டு. இலை முள்ளில் விழுந்தாலும், முள் இலையில் விழுந்தாலும், இலைக்கு மட்டுமே பாதிப்பு!
பெண் தனது விருப்பப்படி பல திருமணங்களில் இணையும் உரிமை வேண்டும் என்று வாதாடுவது புத்திசாலித்தனமாகாது. ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிலைநாட்ட மறுமணத்தைப் புகுத்துவது அறியாமையின் வெளிப்பாடு. விவாகரத்தை ஏற்று மறுமணத்தில் நுழைந்தவர்கள் மலர்ந்த முகத்தோடு காட்சியளித்தாலும், அவர்களின் அந்தரங்கம்கேள்விக் குறியாக இருக்கும். எனவே, பொறுமையை ஏற்று மறுமணத்தில் ஆசையை அடக்கினால், உடல்ரீதியா கவும் உள்ளரீதியாகவும் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபடலாம். விவாகரத்து இனிப்பான நஞ்சு.
தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை:
இந்தக் காலகட்டத்தில் 30 வயது முதல் 60 வயது வரை இளமை என்று சொல்லலாம். 50-க்குப் பிறகு இளமை குன்றினாலும், வேகம் தணிந்திருக்காது. 20-க்குப் பிறகு காதல் முளைத்தாலும் 30-ல் முழு வளர்ச்சி தென்படும். புதுப்பெண்ணை ஒதுக்கி, விவாகரத்தான வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பது, இனிமையான இளமையைக் கொச்சைப்படுத்துவது ஆகும்.
இரண்டு மூன்று விவாகரத்தைச் சந்திப்பவன், தனது குறுகிய கால இளமையைச் சுவைத்து மகிழாமலே முதுமையைத் தழுவிக் கொள்வான். விவாகரத்தான பெண்மணியை மணந்தவனுக்கு அவள் மாற்றான் மனைவியாக இருந்தவள் என்ற நெருடல் உள்ளூர இருக்கும். விவாகரத்தான ஆணைச் சந்திக்கும் பெண்ணுக்கும் அதே அனுபவம்தான். கொஞ்சல், குழையல் இல்லாத சந்திப்பில் சுரத்து இருக்காது. பயணச்சீட்டு கிடைக் காத நிலையில் 'தக்கால்' பயணச் சீட்டு போன்று, அவசரத்துக்குப் பயன்படுபவர்களாக இருவரும் மாறிவிடுவார்கள்.
உடலுறவைத் தெரிந்திராத இளமையே உண்மையான இன்பத்தை உணரும். முதல் சந்திப்பு முடிந்ததும் பெண்மையின் புதுப்பொலிவு மறைந்துவிடும் என்கிறது காமசாஸ்திரம். மனைவியோடு இணைந்து சிற்றின்பத்தைத் தவிர பேரின்பத்தையும் அடையவேண்டும் என்கிற விருப்பம் வலுத்தால், ஒரு திருமணத்தோடு முற்றுப் புள்ளி வைக்க மனம் துணிந்துவிடும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com