Thursday, 31 August 2017

பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க

பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் விஜயாபதி !
Rajarishi Vishwamithrar Temple at Vijayapathi
ராஜரிஷி விசுவாமித்திரர் சந்நிதி விஜயாபதி


இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது; எனவே, பிதுர் தோஷம் நீக்கிட நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அருகில் இருக்கும் விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலசயாகம் செய்ய வேண்டும். ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா கூறுவது
ஸ்ரீவிஸ்வாமித்ரமஹாலிங்கசுவாமி திருக்கோவில் . 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பாக,விஸ்வாமித்ர மகரிஷி அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயம் இது.சில நூறாண்டுகளுக்கு முன்பு,விஜயாபதி ஒரு மாபெரும் துறைமுக நகரமாக இருந்திருக்கிறது .இந்த விஸ்வாமித்ரர் மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவராகிய ஸ்ரீ விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது
எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு - ஒரு மாபெரும் வரப் பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு , பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வருகிறதாம்.
நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.நீங்கள் ஜாதகம் பார்க்கும் நபர்களுக்கு , கீழே குறிப்பிடும் அறிகுறிகள் , அமைப்பு இருந்தால் - நீங்கள் தாரளமாக பரிந்துரை செய்யலாம். !
இராமாயணகாலத்தில் தாடகையை கொன்றதாலும்,அதன்பிறகு சிறந்த சிவபக்தன் இராவணனை வதம் செய்ததாலும் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம்,தந்தை தசரதனின் பேச்சை மீறி வந்ததால் ஏற்பட்ட பிதுர் தோஷம் போன்றவை நீங்கிட, விஸ்வாமித்ர மகரிஷியால் முதன்முதலில் தில்லைவன காளியம்மாள் குடியிருக்கும் விஜயாபதியில் நவகலசயாகம் ஸ்ரீஇராமபிரானுக்கு செய்யப்பட்டது.
விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது, அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை, விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும்.விஜயாபதி இன்று விஜயாபதி மேலூர்,விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கின்றன.300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.
ஆக,இந்த கோவிலும் கிராமமும் யுகங்களைத் தாண்டி இருக்கின்றன. .
இங்கே,நவகலச யாகம் செய்ய மதியம் 12 மணிக்குள் வந்துவிடவேண்டும். இறங்குபொழுது எனப்படும் மதியம் 12 மணிக்குப் பிறகு நவகலச யாகம் செய்வதால்,நமது அனைத்து தோஷங்களும் நாசமடைந்துவிடும்.
ஒன்பது கலசங்களில் ஒன்பதுவிதமான திரவப்பொருட்களை நிரப்பி, நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, மந்திரங்களை ஓதி, இங்கிருக்கும் வில்வ மரத்தடியில் இந்த ஒன்பது கலச நீர்களும் உரிய ஜாதகரின் தலையில் ஊற்றுவார்கள்.அதன் பிறகு,அந்த ஈர ஆடையோடு, ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கடலுக்குச் சென்று கடலில் நீராட வேண்டும். நீராடிய பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடற்கரையில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும்,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறே) உருள வேண்டும்.அதன் பிறகு,மீண்டும் கடலில் சென்று நீராட வேண்டும்.இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.இப்படிச் செய்த பின்னர்,கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு,அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார்.நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,(வேறு ஆடை அணிந்துவிட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும்.
உடனே,கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் வந்தடையவேண்டும்.
தில்லை வனகாளிக்கு பூஜை செய்து இனிப்புகள்,எள் பதார்த்தம்,பழங்களை அங்கிருப்பவர்களிடம் விநியோகிக்க வேண்டும்.நவகலச யாகம் முற்றுப்பெறும்.உடனே, வேறு எந்த கோவிலுக்கும்,யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.இப்படிச் செய்வதால்,நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும்.இந்த தோஷங்களில் பிரேத சாபம்,நவக்கிரக சாபம்,குரு சாபம்,குல தெய்வ சாபம் நீங்கும்.
விஜயாபதி நெல்லை குமரி நெடுஞ்சாலையில் வள்ளியூரிலிருந்து பிரிந்து ராதாபுரம் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து 10 கிலோ மீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைந்திருக்கும் கிராமம் ஆகும். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிப்பதாக சொல்லுவார்கள்.அது ஒரளவே உண்மை.நிஜத்தில் இந்த விஜயாபதியில் தான் முக்கடலும் (வங்காள விரிகுடா, இந்து மகா சமுத்திரம்,அரபிக்கடல்) சங்கமிக்கிறது. இந்த நவகலச யாகம் செய்ய விரும்புவோர்
இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது.இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில், சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும்.
இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

ருத்ராட்சம் அணிவது பற்றி

ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.
ருத்ராட்சத்தை அணிபவனும்,வழிபடுபவனும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு,தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும்,உடையும் தருபவனும்,ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவனும் அனைத்துப்பாவங்களிலிருந்தும் விடுபட்டு,சிவலோகத்தை அடைகிறான்.
நம்பிக்கையோடும்,நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.
ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில்,அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.
சண்டாளனாகப் பிறந்தவனும்,ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும்.
கள் உண்பவனும்,மாமிசம் உண்பவனுமாகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.
ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும்,சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு பெறுவான்.அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன.
பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில்,அவன் இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.
பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான்.
காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;
கழுத்தில் அணிபவன் நூறுகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;
பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;
கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்;
இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.
ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது;
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத்தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
ருத்ராட்சத்தை உடலில் அணியாவிட்டாலும்,அதைப் பூஜிப்பவனும் கூட சிவலோகம் சென்றடைந்து சிவனைப் போலவே வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின்,அது கங்கையில் நீராடியதைவிட அதிகப்புண்ணியப்பலன்களைத் தரும்.
மனிதன் மட்டுமல்ல;ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால்,அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.
பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும்,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.
மறு ஜன்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன!!
காவாய் கனகத்திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!!
சிவாயநம.🌿
திருச்சிற்றம்பலம்!!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?
தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.
நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.
சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.
பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.
சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது. அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை. இருவரையும் ஒருசேர பார்க்க முடிவதில்லை. அந்த தாய்க்கு ஒருவர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார்.
ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம். ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.
அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.
இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர். அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.
இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.
குறிப்பு:- மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய். மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

தீபம் ஏற்றும் முறையும் பலனும் !!!

தீபம் ஏற்றும் முறையும் பலனும் !!!

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம்
போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
தீபம் ஏற்றும் நேரம்
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
விளக்கு ஏற்றும் முறை
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும்.
முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.
விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)
எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய் -
விளக்கெண்ணெய் - புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) - அம்மன் அருள்
வேப்பெண்ணை - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
ஆமணக்கு எண்ணை - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.
எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்
விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்
திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள்
திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
• பருத்திப் பஞ்சு - குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
• வாழைத் தண்டின் நார் - முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
• தாமரைத்தண்டு நூல் - முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
• வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.
• புதிய மஞ்சள் துணி - நோய்கள் குணமாகும்.
• புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
• புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)
விளக்கின் தன்மை
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்
வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும்
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.
திருவிளக்கின் சிறப்பு
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
உங்கள் ஸ்ரீகாலபைரவி
விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.
தீபத்தை குளிர வைக்கும் முறை
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
உங்கள் ஸ்ரீகாலபைரவி
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது.
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்
விளக்கு ஏற்றும் பொழுது :
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே
விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்ட னாரே.
3. தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
சோதியே சுடரே சூழலொளி விளக்கே சுரிகுழல் பணைமுலைமடந்தைப்
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்தயனுமாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள் குருந்தம் மேவிய சீர்எம்
ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே
4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அருமறை சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
5. அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்
அமுது படைக்கும் போது :
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவி யாமே
எனவும் படைத்து :
பூந்தண் பொழில்சூழ் புலியூர் பொலிசெம்பொன் அம்பலத்தே
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.
(என ஓதி வாயின் புறத்தில் நீர்காட்டி விடுக.)
6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
திருநீறு :
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.
குங்குமம் :
சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி
கார்த்திகை பெண்களை போற்றும் நன்னாள்
நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர்.
இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.
சிவசக்தி தீபம்
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு
கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து,
உங்கள் ஸ்ரீகாலபைரவி
மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.
தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானையே அருணகிரிநாதர்""தீபமங்களஜோதீ நமோநம'' என்று திருப்புகழில் பாடுகிறார்.
இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.
ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப - தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் - கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் - விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் - பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.
ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

27 நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களும், அமைவிடங்களும்

27 நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களும், அமைவிடங்களும்

*27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.*
இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் – இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.
மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே – லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து – பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.
நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை – உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.
உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும்.
*ஆலயங்களும், அமைவிடங்களும்
*அஸ்வினி – அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* திருவாரூரில் இருந்து 30கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டிஉள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒருகி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
*பரணி – அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* மயிலாடுதுறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடுவழியாக காரைக்கால் செல்லும் வழியில்நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.
*கார்த்திகை – அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
*ரோஹிணி – அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்*
*இருப்பிடம்:* காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
*மிருக சீரிஷம் – அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்*
*இருப்பிடம் தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
*திருவாதிரை – அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம் தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.
*புனர் பூசம் – அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம் வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
*பூசம் – அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்: *பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.
*ஆயில்யம் – அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்: *கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
*மகம் – அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
*பூரம் – அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.
*உத்திரம் – அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம் திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.
*ஹஸ்தம் – அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
*சித்திரை – அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்*
*இருப்பிடம்:* மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
*சுவாதி – அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்*
* *
*இருப்பிடம்:* சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.
*விசாகம் – அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்*
*இருப்பிடம் மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன
*அனுஷம் – அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்: *மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
*கேட்டை – அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்*
*இருப்பிடம்:* தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
*மூலம் – அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)
*பூராடம் – அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
*உத்திராடம் – அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்: *சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.
*திருவோணம் – பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்*
*இருப்பிடம்:* வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்
*அவிட்டம் – அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம் கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..
*சதயம் – அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.
*பூரட்டாதி – அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்*
*இருப்பிடம்: *திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.
*உத்திரட்டாதி – அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.
*ரேவதி – அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்*
*இருப்பிடம்:* திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது
எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் திருத்தாள் போற்றி…

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

இந்த ஸ்லோகம் நாம் தியானிக்க மட்டுமல்ல..

.நம்மைச் சார்ந்தவர்களுக்கு எழுதிக் கொடுத்து அவர்களையும் தியானிக்கச் சொல்லலாம்.

இதைப் பாராயணம் செய்யச் செய்ய நம் சொல்லும் செயலும் எப்பொழுதும் வெர்றியை நோக்கியே இருக்கும்.
“ஓம் நமோ பகவதே ப்ரஷாவாரிஷே
அனுஷ்டுப் சன்ன...
ஓம் பிரம்மமுகம், ஓம் விஷ்ணுமுகம்
ஓம் மகேஷ்வரமுகம் ஸ்ரீராமதூதாய
ஸ்ரீஹனுமாராயா...
றஹ றீங் யங் மங் சங்
ஐயும் கிலியும் சவ்வும் நங்மங்சங்
வருக வருக என் நாவின் மேல்
வசிய வசிய ஸ்வாஹா ! “நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Wednesday, 30 August 2017

மோட்ச தீபம்!

மோட்ச தீபம்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருந்தாலும், ஒரு ஆன்மீகவாதியின் இறுதியான வேண்டுதல் என்னவாக இருக்க வேண்டும்? அது மோட்சம் மட்டுமே. மோட்சம் அல்லது முக்தி என்பது மீண்டும் பிறவாத வரம் கேட்பது தான் இறைவனிடம் வேண்டப்படும் கடைசி வேண்டுதல். மனிதன் தான் செய்யும் கர்மாக்களுக்குத் தகுந்தாற் போல அடுத்தடுத்த பிறவிகள் அமையும் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்கின்றது.
உள்ளத் தூய்மையுடன், உண்மையான பக்தியுடன், ஆன்மீகம் காட்டும் தூய அறப்பாதையில் இறைவழிபாட்டைச் செய்தால் பிறவாநிலை கிடைக்கும் என்கின்றன புராணங்கள். உயர்ந்த பக்தியே உன்னத முக்திக்கு உண்டான வழி. கலிகாலத்தில் வாழும் நாம் மோட்சத்தை அடைய என்ன தான் வழி? பக்தி நிலையை சரியாக பின்பற்ற முடியுமா? மோட்சத்தை அடைய எளிய வழி எது? இக்கேள்விகளுக்கும் ஆன்மீகம் விடை தருகின்றது.
க்ருத யுகம், த்ரேதாயுகம், துவாபர யுகம் போன்ற காலங்களில் எங்கும் கோவில்கள் கிடையாது. கடும் தவம், பெரும் வேள்விகள், வடக்கிருத்தல் போன்றவையே மோட்சத்தை தரக்கூடியனவாக இருந்தன. அந்த யுகங்கள் இறைவனே நேரில் நின்ற காலம். ஆனால், கலியுகம் - இறைவனை ஆலயங்களில் தரிசித்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
நமது ஆன்றோர்கள் சில ஆலயங்களில் முக்தி தரும் ஆலயங்களாக வகுத்துள்ளார்கள். திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும், காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி கிடைக்கும், காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும். திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி கிடைக்கும். சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும்.
திருவாரூரிலே பிறந்தாலும், காஞ்சியிலே வாழ்வதும், காசியில் இறப்பதும் அனைவருக்கும் கிடைப்பது அரிது. சிதம்பரத்தை தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும். இந்த ஸ்தலத்தின் பூஜை பிரயோகங்களை வகுத்தவர் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனின் வடிவாகிய பதஞ்சலி மஹரிஷி. ஆயிரம் தலைகளில் உள்ள ஆயிரம் நாக்குகளால் கூட சிதம்பரத்தின் பெருமைகளை சொல்லிமுடிக்க முடியவில்லை என்கிறார் ஆதிசேஷன்.
நாம் வாழும் கால வெள்ளத்தின் கணக்குப் படியும், உடல் கணித படியும் அமைந்து தரிசித்தாலே முக்தியைத் தரவல்லது. சிதம்பரத்திற்கு நான்கு கோபுரங்கள் உண்டு. நான்கு கோபுரங்களும் நான்கு பொழுதுகள். ஒவ்வொரு கோபுரமும் ஏழு நிலைகளைக் கொண்டது. கோபுரத்தின் மேலே பதின்மூன்று கலசங்கள் உள்ளன. நான்கு கோபுரங்களின் உச்சியில் 365 விளக்குகள் ஏற்ற வசதியாக பெரும் அகல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த 365ம் ஒரு வருடத்தில் உள்ள நாட்களைக் குறிக்கின்றன. ஒருவர் இறந்து விட்டால் அவர் மோட்சம் செல்ல வசதியாக வெளிச்சம் வேண்டும் என வேண்டிக் கொண்டு அவருக்காக அவருடைய உறவினர்களோ அல்லது நண்பர்களோ ஏற்றக் கூடியது மோட்ச தீபம். இந்த மோட்ச தீபம் மிகவும் புனிதமானது.
ஆத்மாவுக்கு ஒரு நல்வழியைக் காட்டக் கூடியது. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்களும், இறந்து விட்ட முன்னோர்கள் நல்லபடியாக மோட்சம் அடைய வேண்டியும், முன்னோர்களுக்கு நற்கதி ஏற்பட வேண்டியும் ஏற்றப்படும் மோட்ச தீபம் மிகவும் பலனளிக்கக் கூடியது. இறந்து விட்ட முன்னோர்களுக்கான தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் போன்ற செயல்கள் செய்ய முடியாதவர்கள், அந்த ஆத்மா திருப்தி அடைய மோட்ச தீபம் ஏற்றப்படுகின்றது.
நான்கு கோபுரங்களும் நான்கு யுகங்களாக அமைந்திருக்கின்றன. கோபுரத்தின் ஏழு நிலைகளும் ஏழு பிறவிகளைக் குறிப்பன. ஒரு ஆன்மா ஏழு பிறப்புகளுக்குப் பிறகு தான் மோட்சம் சென்றடையும் என்று புராணங்கள் கூறுகின்றன.
முதலாவது அல்லது மூன்றாவது என்று எந்தப் பிறப்பில் இருந்தாலும் சிதம்பரத்தை தரிசனம் செய்வதால் மீதம் இருக்கும் பிறப்புகள் பிறக்காமல் நேராக மோட்சத்தை அடைய முடியும். தமிழ்நால்வரில் ஒருவரான அப்பர் சுவாமிகள், சிதம்பரத்தை வந்து தரிசித்தால் மோட்சம் கிடைத்து விடும்.
ஆகையால், நடராஜரின் திருவடி தரிசனத்தை காண வேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் என்றே மன்றாடுகின்றார். மோட்சம் தரும் காட்சியைக் கண்டு முக்தி நிலை பெறுவோம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

20 மந்திரம்

மந்திரம் ..!!!

1.கெட்ட கனவு, சகுன பாதிப்பில் இருந்து விடுபட:
எந்த கிழமையாக இருந்தாலும் அன்ற சூரிய உதயத்திற்கு முன்பு “ஓம் சிவசிவ ஓம்”மனதார ஜெபித்து வெண் பூசணியை உணவில் சேர்த்து சாப்பிட உடனே தோஷம் நீங்கும்.
2.நவக்கிரக தோஷம் விலக:
வீட்டில் நவதானியங்களை கொண்டு முளைப்பாரி போட்டு வளர்த்து அதனை ஏதாவது ஒரு வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் பூஜை செய்து ‘ஓம் அரி ஓம்” என்று 1008 உரு அருகம்புல் கொண்டு ஜெபித்து தண்ணீரில் முளைப்பாரியை கரைத்து விட உடனே நவக்கிரக தோஷம் விலகும்.
செவ்வாய் தோஷம் விலக :
செவ்வாய்தோஷம் பாதிப்பு உடையவர்கள் மண்கலயத்தில் கும்பம் வைத்து தேங்காய்க்கு பதிலாக வாழை பூவை வைத்து மல்லிகை பூவை கொண்டு 1008 உரு ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்று செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் ஜெபித்து (7 வாரம்) கடல் மற்றும் ஆற்று தண்ணீரில் வாழை பூவை விட்டு விட உடனே செவ்வாய்தோஷம் விலகும். 3.செய்வினை, ஏவல் பாதிப்பு விலக:
தினசரி விநாயகர் அகவல் படித்து, பிரண்டை துவையல் சாப்பிட்டு வரவும்
தேனில் “ஓம் அரி ஒம்”; மந்திரத்தை ஜெபித்து, தேனை சாப்பிட்டு வர செய்வினை, ஏவல் பாதிப்புகள் விலகும்.
4.குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட
குடிப்பழக்கத்தில் இருந்து கணவனை திருத்த விரும்பும் பெண்கள் புவனேஸ்வரி படம் வாங்கி அதில் பாஸ்போர்ட் சைஸ் அளவில் கணவன் படத்தினை உள்ளே வைத்து பிரேம் செய்து அந்த படத்தினை கன்னி மூலையில் வைத்து மல்லிகைப்பூ கொண்டு “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று 1008 உரு வீதம் 90 நாட்கள் ஜெபித்து பின்பு தினசரி 300 உரு ஜெபிக்க கட்டாயம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள்
5.கணவன், மனைவி ஒற்றுமை ஏற்பட:
ராகவேந்திரர் படத்திற்கு மல்லிகைப்பூ மாலை போட்டு அவரை குருவாக ஏற்று வணங்கி பின்பு அந்த படத்திற்கு முன்பு பட்டுத் துணியில் அமர்ந்து “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று தினசரி 300 உரு ஜெபிக்க கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படும்.
6.கேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்!
ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியது. நாராயணீயம் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம்.
இவர் மட்டுமல்லாமல் இன்னும் பலபேரும் இது போல நாராயணீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப் பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு தெய்வீகம் மிகுந்த சத்திய வாக்காக உள்ளது.
காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்த்ர சேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு பெண் கண் கலங்கி அழுதிருக்கிறார். தனக்குக் கேன்ஸர் நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார்.
அப்பெண்ணை கவலைப் படாதே. நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின் னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு... என்று அருளியிருக்கிறார்.
அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம் செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள்,
இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம்.
அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த- முத்தாபித- பத்மயோனி:
அனந்த பூமா மமரோக ராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
7.வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட:
(ஸ்தம்பனம் உடைய) வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு ஸ்தம்பித்து நின்று விட்டால் அந்த இடத்தில்
ஈசானியத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு “ஓம் அரி ஒம்”; என்று தினசரி 1008 உரு 48 நாட்கள் ஜெபிக்க முடக்கம் உடையும். 48 நாட்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
8.பாவகர்மாக்களில் இருந்து விடுபட:
இளநீரில் உள்ள தண்ணீரில் கல்கண்டு சேர்த்து அதில் 1008முறை “ஓம் சிவசிவ ஓம்” என்று தர்ப்பைப்புல் கொண்டு ஜெபித்து தினசரி சூரிய உதயத்திற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்பு இளநீரை குடிக்க வேண்டும். பின்பு, சிவபுராணம் படிக்க வேண்டும். இதனால் முன்ஜென்ம பாவ கர்மாக்கள் படிப்படியாக குறையும்.
9.காசி, கயா தரிசன பலன் கிட்டும் ஸ்லோகம்
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம் கயாப்ரயாகேத்வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம்
பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று ஆயுள் பருவங்களை அளிப்பதும் மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம். இந்த வில்வத்தை பரமேஸ்வரா, உமக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.
காசி என்ற மகா புண்ணிய தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரை தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்கு சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை ஈசனுக்கு அர்ப்பணிப்பதால்,
உன்னைச் சேரும்
10. ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க
ஸ்ரீ ராமம் ரகுதுலு திலகம் சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தசரம்’ அங்குல்யாபரண சோபிதம், சூடாமணி தர்ஸன கரம்
ஆங்சநேய மாஸ்ரயம், வைதேஹி மனோகரம்
வாகர சைன்ய ஸேவிதம், சர்வ மங்கள கார்யானு
கூலம் சத்தம் ஸ்ரீராமச்சந்திர பாலயமாம்
-இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிட்டும்.
ராம ராம ஹரே ராம்’
என்று தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தால் விஷ்ணு சகஸ்ர நாமம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிட்டும்.
11.திக்குவாய் சரியாக மந்திர தந்திரம்
1.உளுந்து 10 கிராம் ,கொள்ளு 10 கிராம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து தலையணைக்கடியில் வைத்து 90 நாட்கள் உறங்கி வர வேண்டும்.90 நாள் கழிந்ததும் அதை கோவில் குளங்களில் போட்டு விடவும்.
2.செம்புத்தட்டில் தேன் ஊற்றி அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதி பின் கீழ்க்கண்ட மந்திரத்தை குறைந்தது 27 தடவை ஜெபித்து அந்த தேனை அவர்கள் நாக்கில் தடவி விட்டு வரலாம்.இதை வளர்பிறை புதன்கிழமை புதன் ஹோரையில் தொடங்கவும்.பின் தினமோ அல்லது புதன்கிழமைகளிலோ செய்து வரலாம்.
மந்திரம்
1.ஓம் ஐம் வத வத வாக்வாதினி நமஹ.
இம்மந்திரத்தை முறை108 ஜபித்து வந்தால் திக்குவாய் சரியாகும்
12.கருட தரிசன பலன்கள்
கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும். மனக்குழப்பம் நீங்கும், பாவங்கள் தொடராது.
திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும். குடும்பம் செழித்தோங்கும்.
செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். தைரியம் உண்டாகும்.
புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும். வைப்பு சூன்யம் நீங்கும்
வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
வெள்ளி கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.தங்க ஆபரணங்கள் சேரும், அஷ்ட ஐஸ்வர்யமும் நிலைக்கும்
சனி – கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் முக்தி பெறலாம் ஞானம் உண்டாகும்.
13.வசிய மருந்து,(இடுமருந்து ) நீங்கிட
100 மி.லி.பசும்பால்,100 மி.லி.தேங்காய்ப்பால்,100 மி.லி.வெண்பூசணி என்ற தடியங்காய் பால் எடுத்து,சரிசமமாக கலந்து ஐந்துமிளகு இடித்துப்போட்டு,கொதிக்க வைத்து,பின் இறக்கி வைத்து,இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் ஒருநாள் விட்டு ஒரு நாள் என 3 முறை குடிக்க வேண்டும்.இதனால்,இடுமருந்து நீங்கிவிடும்.
அநேகர்களுக்கு,இடுமருந்து முறிவதற்கு,மனக்குழப்பத்திற்கு இந்த முப்பாலை பனங்கற்கண்டு சேர்த்தும்,நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இனிப்பு சேர்க்காமலும் கொடுப்பதால் குணமாகும்.
ஹோமியோ மருத்துவத்தில்
நக்ஸ்வாமிகா என்னும் மருந்தை 30 ஓ வீரியத்தில் ஒரு முறை,ஒரு டோஸ் கொடுத்தால் போதும்.இடுமருந்து முறிந்துவிடும்.
14. எல்லோரையும் மோகிக்க செய்யும் சக்தியும் உண்டாக உயர்ந்த பதவி, அதிகாரம் பெற மந்திரம்
ஸ்மித ஜ்யோத்ஸ்நாஜாலம் தவ வதந-சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா
அதஸ்தே ஸீதாம்ஸோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஸி நிஸி ப்ருஸம் காஞ்ஜிகதியா
--------------------------------------------------------------------------------
பொருள்: அம்பிகையே! உன்னுடைய முகமாகிய சந்திரன் பொழியும் புன்சிரிப்பாகிய அமுதம் போன்ற நிலவொளியை அளவின்றிப் பருகும் சகோர பக்ஷிகள், அதன் மிகையான தித்திப்பால் தங்கள் அலகுகள் உணர்விழந்தனவாக ஆகிவிட்டன எனக் கருதி, மாற்று ரஸமாகப் புளிப்பை விரும்பி சந்திரனின் கிரணங்களான அமுதப் பெருக்கை, புளித்த கஞ்சியாக எண்ணி வேண்டியவரை ஒவ்வோர் இரவிலும் அதைத் திருப்தியாகப் பருகி மகிழ்கின்றன.
ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 30,000 தடவை ஜபித்து வந்தால், உயர்ந்த பதவியையும், அதிகாரத்தையும் பெறலாம். இவ்வுலகில் எல்லோரையும் மோகிக்கச் செய்யும் சக்தியும் உண்டாகும்
15.வீடு, வாகனம், மனை, மனைவி முதலான ஸகல சுகங்களும் உண்டாக சுபிட்சம் ஏற்பட
மந்திரம்
த்ருஸா த்ராகீயஸ்யா தரதலித-நீலோத்பல-ருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநி-ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர:
பொருள்: சகல மங்களங்களையும் அளிப்பவளே! உன் கடைக்கண் பார்வை சற்றே மலர்ந்த கருநெய்தல் புஷ்பம் போல் விளங்குகின்றது. காது வரை நீண்டுள்ளது. உன்னை நெருங்காமல் உள்ள இந்த ஏழையை அந்தப் பார்வையால் தயவு செய்து ஸ்நானம் செய்துவை. அதனால் நான் புண்ணியமும் செல்வமும் பெறுவேன். இதனால் உனக்கு எந்தக் குறையும் இல்லை. சந்திரன்; காட்டிலும், அரண்மனையிலும் பாரபட்சமின்றி ஒரே விதமாகத்தானே காய்கின்றான்?
ஜபமுறையும் பலனும்
6 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை ஜபித்து வந்தால், வீடு, வாகனம், மனை, மனைவி முதலான ஸகல சுகங்களும் உண்டாகும். நாட்டில் சுபிட்சம் ஏற்படும்
16. தனவசியம் உண்டாக தரித்திரங்களை விரட்டும்
குபேர மந்திரம்
ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய
ஸம்வ்ருத்திம்மே தேகி தேகி தாபய ஸ்வாஹா''
இம்மந்திரத்தை 32 வீதம் தினம் ஜெபித்து வர பணக்கஷ்டமே வராது.
17.பிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ மாந்திரீக தாந்திரீக ரகசியம்.
கணவன் மனைவி .இதை மனைவிதான் செய்ய வேண்டும்.அதாவது பிரிந்து வாழும் மனைவிதான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.அவரது சார்பாக வேறு எவரும் செய்யக்கூடாது.
தட்டு ஒன்றில் குங்குமத்தைப் பரப்பி, அதில் தன் கணவரின் பெயரை எழுதி கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும்.
த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குரு
ஜபம் முடிந்ததும் அந்த தட்டை பூஜிக்க வேண்டும்.அதாவது தீபாராதனை செய்ய வேண்டும்.பிறகு அந்தகுங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்.(பூஜைக்கு முன்பு எப்போதும் போல் குங்குமம் இட்டுக் கொள்ளலாம்)
மறுநாள், இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்).
சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை ஜபித்துவர பலன் நிச்சயம்
18.ஆன்மிகம் கூறும் நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?
நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான்.
சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.
நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. அட்சய திருதியை தினம் ஒன்றில் தான் அம்பிகையைப் போற்றி கனகதாரா துதியினைப் பாடி தங்க நெல்லிக்கனி மழையைப் பொழியச் செய்தாராம் ஆதிசங்கர மகான். நெல்லி மரத்தில் திருமாலும் திருமகளும் சேர்ந்து உறைவதாகச் சொல்கின்றன புராணங்கள். ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு.
நெல்லிமரம் வளரும் வீட்டினைத் தீய சக்திகள் நெருங்காது. அங்கே துர்மரணம் நிகழாது. அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும். நெல்லிக் கனியை நிவேதனம் செய்வதாலும் அதன் இலைகளால் அர்ச்சிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். துவாதசி நாளில் ஏகாதசிவிரதத்தினை பூர்த்தி செய்து நெல்லிக்கனியை உண்பது அவசியம். இதனால் கங்கையில் நீராடிய பலனும், காசியில் வசித்த பலனும் கிட்டும். வெள்ளிக் கிழமைகளில் நெல்லி மரத்தினை வலம் வந்து வழிபடுபவர் திருமகளின் திருவருளைப் பெறுவர். அமாவாசை தினங்களிலும், இரவு நேரத்திலும் நெல்லிக்கனியை உண்பது கூடாது.
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.
கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும், இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம் குறைந்து விடும்.
19. விருட்ச சாஸ்திரம் ...
அரச மரத்தை சுற்றினால் - ஆண்பிள்ளை பிறக்கும்,
வேப்ப மரத்தை சுற்றினால் - கர்மவினைகள் தீரும்,
மாமரத்தை கண்டால் - மங்கள செய்தி வரும்,
விடதாழை மரம் - சனி தோஷம் போக்கும்,
பின்னை மரம் - திருமண தடைகளை நீக்கும்,
ஸம்தானாக மரம் - பிள்ளைகளின் தீய பழக்கங்களை நீக்கும்,
பாரிஜாத மரம் - உடலில் தீராத நோய்களை தீர்க்கும்,
பும்ஷிக மரம் - புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்,
அரிசந்தன மரம் - ஏவல், பில்லி, சூன்யங்களை போக்கும்,
குறுந்த மரம் - வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்,
கொன்றை மரம் - துஷ்ட சக்திகளை விரட்டும்,
ஞான மரம் - அறிவு, கல்வி, நல்ல ஞானத்தை தரும்,
கருநெல்லி - மகாலட்சுமியின் அருள் பார்வை உண்டாகும்,
நத்தைச்சூரி - நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்,
கல்லால மரம் - உலகத்திலுள்ள செல்வங்களை ஈர்த்து தரும்
20.வீட்டு மூலையில் 24 மணி நேரமும் 0 வாட்ஸ் பல்பு எப்போதும் எரியும்படி செய்து பாருங்கள். பணத்தட்டுப்பாடே வராது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com