Tuesday, 15 August 2017

புத்திரதோஷங்கள்

புத்திரதோஷங்கள்
புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?
மொத்தம் எட்டுவிதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன.இவை அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும்.அவற்றை பார்ப்போம்.
1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது?
குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது,
பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர்,இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது;
பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது,
திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது;
மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது.
சரி! எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன?
முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும்,அவர்களை
வேதனைப்படுத்தியதாலும்,அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது
பிதுரு சாபம்.
இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.எப்போதும் ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால்
அவமானமும்,வேதனையும் தினசரி நடவடிக்கைகளாகும்.
சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும்,சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம்.அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது.சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியும்,சண்டை போட்டும் தாய்மாமன் சாபத்தால் ஏற்பட்ட புத்திரதோஷம்.
இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும்.பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும்,விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது.
சாதுக்கள்,மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம்.இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது,மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது,ஊமை,குருடு,செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் ஒரு வித ஆனால் கடுமையான புத்திர தோஷம்.
மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம்.இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும்,பண்டாரம்,பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும்.
மந்திர சாபம்,பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும்.
இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும், சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும்,குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது,பிள்ளைகளால் ஏற்படும் ஊதாரித்தனம்,துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும்.
இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது?
குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம்.
எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.
குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம்.
நமது பாவத்தை நாம் தான் சுமக்கிறோம்.அதுபோல,நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும்.
முடியாதவர்கள் நம் ரத்த உறவுகளை/ நம்பிக்கையான உறவுகளை வைத்துச் செய்யலாம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment