Sunday, 27 August 2017

உங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவீங்கன்னு சொல்றோம்!

உங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவீங்கன்னு சொல்றோம்!

உங்கள் ராசிக்கு ஏற்றவாறு உங்களது உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால், நீங்கள் சந்திக்கும் உடல்நல பிரச்சனைகளின் அளவு குறையும் என்பது தெரியுமாகும்பம் கும்ப ராசிக்காரர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் கஷ்டப்படுவார்கள். இதனை தவிர்க்க பீச், பேரிக்காய், அத்திப் பழம், எலுமிச்சை, பேரிச்சம் பழம், மாதுளை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள
மகரம் மகர ராசிக்காரர்கள் எலும்பு தொடர்பான பிரச்சனையை அதிகம் சந்திப்பார்கள். முட்டைக்கோஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் பசலைக்கீரை, ஓட்ஸ், பால் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்.
தனுசு தனுசு ராசிக்காரர்களின் உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும். குறிப்பாக இடுப்பிலும், தொடையிலும் தான் கொழுப்புக்கள் சேரும். எனவே இந்த ராசிக்காரர்கள் தானியங்கள், ஸ்கிம்டு மில்க், மீன், தயிர் போன்றவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.
விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் நோய்த்தொற்றுகளால் அவஸ்தைப்படுவார்கள். எனவே இந்த ராசியைக் கொண்டவர்கள், பால், தயிர், வால்நட்ஸ், பாதாம், அன்னாசி போன்றவற்றை அதிகம் சேர்த்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்த்தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.
துலாம் துலாம் ராசிக்காரர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ஆல்கஹால் அருந்துவதையும் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த இரண்டு உணவுகளின் மீதுள்ள ஆசையால் அதிகம் உட்கொண்டு, அதனால் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பீட்ரூட், சோளம், கேரட், ஆப்பிள், உலர் திராட்சை போன்றவற்றை உட்கொள்வது நல்லது.
கன்னி கன்னி ராசிக்காரர்கள் செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். எனவே இந்த ராசிக்காரர்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதில் நார்ச்சத்துள்ள உணவுகளான ஓட்ஸ், வாழைப்பழம், பப்பாளி போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சிம்மம் சிம்ம ராசிக்காரர்கள் கொழுப்பு குறைவான உணவுகளை உட்கொள்வது, அவர்களை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ளும். அதிலும் சிம்ம ராசிக்காரர்கள் கடல் உணவுகள், எலுமிச்சை, தேங்காய், பீட்ரூட் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
கடகம் கடக ராசிக்காரர்கள் சற்று டென்சனாக இருந்தாலும், வயிறு முட்ட சாப்பிடுவார்கள். குறிப்பாக கலோரிகள் அதிகம் நிறைந்த தவறான உணவுகளைத் தான் உட்கொள்வார்கள். ஆனால் சரியான உணவுகளான பெர்ரிப் பழங்கள், பச்சை காய்கறிகள், மீன் போன்றவற்றை டென்சனாக இருக்கும் தருணங்களில் உட்கொண்டால், வயிறும் நிறையும், உடல் ஆரோக்கியமும் மேம்படும், டென்சனும் குறையும்.
மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். எனவே மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சிறந்த உணவுகளான பாதாம், மோர், கிரேப் ஃபுரூட், அஸ்பாரகஸ் போன்றவற்றை உட்கொள்வதோடு, தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். இதனால மன அழுத்தம் குறைவதோடு, இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.
ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். அதிலும் வயிறு உப்புசத்தால் தான் ரிஷப ராசிக்காரர்கள் அவஸ்தைப்படுவார்கள். இந்த வயிறு உப்புசத்தை சரிசெய்ய, பசலைக்கீரை, காய்கறி சாலட், கிரான்பெர்ரி மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேஷம் மேஷ ராசிக்காரர்கள் தலைவலி மற்றும் மூக்கடைப்பால் கஷ்டப்படுவார்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஆப்ரிக்காட், வாழைப்பழம், அத்திப்பழம், ப்ராக்கோலி, பீன்ஸ் போன்றவற்றை உட்கொண்டு வந்தால், நீங்கள் தொடர்ந்து அவஸ்தைப்பட்டு வரும் பிரச்சனை மாயமாக மறையும்.
மீன ராசிக்காரர்கள் சளி மற்றும் காய்ச்சலால் தான் அவஸ்தைப்படுவார்கள். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், மீன ராசிக்காரர்கள் சிக்கன், மட்டன், பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment