தடைகள் விலக,தைரியம் வளர,எதிரிகள் நீங்க ஸ்ரீ வீர நரசிம்ஹ மந்திரம்
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் மிகச் சிறந்த வரப்ரசாதி ஸ்ரீ நரசிம்ஹர். இவரை உபாசிப்பவர்கள் யாருக்கும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.நம் தரப்பில் நியாயம் இருந்தால் நம்மை எந்த விதமான தீமைகளில் இருந்தும் காத்து ரட்சிக்கவல்லவர் என்ற நம்பிக்கையோடு இவரை உபாசிக்கலாம்.சைவ உஅவு உண்பவர்கள் மட்டும் உபாசனை செய்யலாம்.மற்றவர்கள் சுத்தமாக இருக்கும் நாளில் மட்டும் ஜெபிக்கலாம்.
வேதத்திலும் ,தந்திர சாஸ்திரத்திலும் பல இடங்களில் வேறுபட்ட வழிமுறைகளில் இவரை உபாசனை செய்யும் முறைகள் உள்ளன.தந்திர சாஸ்திரம் 9 ரூபங்களில் நரசிம்ஹரை உபாசனை செய்யும் முறைகளையும் அதன் மாறுபட்ட பலன்களையும் விவரிக்கிறது.ஷண்மத ஸ்தாபகர் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த வீர நரசிம்ஹரை உபாசனை செய்தார்.இந்த உபாசனையின் பலனாக அவர் அடைந்த பலன்கள் அநேகம்.நோய் நீங்கப்பெற்றார், காபாலிகர்கள் செய்த அபிசார மாந்திரீகப் பிரயோகங்களை வெற்றி கண்டார் இப்படிப் பலப்பல......
ஜாதகத்தில் செவ்வாய் ,ராகு,சூரியன் இவர்களில் யாரேனும் ஒருவராவது பலம் பெற்றவர்கள் இவரை முழுமுதற் தெய்வமாக எண்ணி உபாசனை செய்யத் தகுதியானவர்கள்.ஸ்ரீ வீர நரசிம்மர் வழிபாடு எதிரிகளை நீக்கி ,வழக்குகளில் வெற்றி தந்து,நோய்களை நீக்கி,தடைகள் நீக்கி,பயம் போக்கி நிம்மதியான வாழ்வு தரும்.உபாசித்து உயர்வடைவீர்களாக.
ஜெப விதிமுறைகள் :-
ஜெப விதிமுறைகள் :-
1) ஜெபத்தை வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கவேண்டும்.
இரவில் 9 மணிக்கு மேல் ஜெபிக்கவும்.
இரவில் 9 மணிக்கு மேல் ஜெபிக்கவும்.
2) பன்னீரில் நனைத்துக் காய்ந்த சிகப்புத்துணியைத் திரியாக்கி நெய் விளக்கேற்றவும்.
3) சிகப்பு நிற ஆடை அணியவும்.
4) சிகப்புக் கம்பளி விரித்து அதன் மேல் அமர்ந்து ஜெபிக்கவும்.
5) சிகப்பு மணி மாலையைப் பயன்படுத்தி ஜெபிக்கவும்.
6) 51000எண்ணிக்கை ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.
மூலமந்திரம்
ஓம் க்ஷ்ரௌம் பட்
பிரயோகம்
மந்திரம் சித்தியான பின் பசு நெய்யால் 108 எண்ணிக்கை ஹோமம் செய்யவும்.
பின்னர் ஏதேனும் காரியமாக வெளியில் செல்கையில் இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து புருவ நடுவில்குங்குமம் அணிந்து செல்ல எந்தத் தீமையும் ஏற்படாது ரக்ஷையாய்க் காத்து வெற்றி தரும்.
பின்னர் ஏதேனும் காரியமாக வெளியில் செல்கையில் இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து புருவ நடுவில்குங்குமம் அணிந்து செல்ல எந்தத் தீமையும் ஏற்படாது ரக்ஷையாய்க் காத்து வெற்றி தரும்.
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment