Sunday, 27 August 2017

வியாபார, பணப்பிரச்சினை நீங்க எளிய பரிகாரம்..!!!

வியாபார, பணப்பிரச்சினை நீங்க எளிய பரிகாரம்..!!!
எளிய பரிகாரம்

தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சினை, பணப் பிரச்சினைகள் என்பன அதிகமானவர்களுக்கு உள்ள பிரச்சினைதான். எனினும் அதனை போக்குவதற்கு உள்ள எளிய பரிகாரம் குறித்து அதிகமானவர்கள் அவதானம் செலுத்துவதில்லை. இந்தப் பிரச்சினையை தீர்க்க உள்ள எளிய பரிகாரம்.
சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோஷம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் காலை குளித்து விட்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு பால், தேன், ஏலக்காய், கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பருப்பு ஆகிய ஐந்தையும் கலந்து, ஒரு புதிய கிண்ணத்தில் வைத்து மற்றொரு கிண்ணத்தில் பஞ்சாமிர்தத்தை படைத்து வழிபட வேண்டும்.
அப்போது ஐந்து முகம் கொண்ட வெள்ளி விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு சிறிது பஞ்சாமிர்தத்தை எடுத்துச்சென்று உங்கள் வியாபார தலத்தில் உள்ள முக்கிய வேலையாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வந்தால் தொழிலில் நட்டம் வராது. அப்படி செய்ய முடியாவிட்டால், நவதானியங்களை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் கடைவாசலில் கட்டுங்கள். கல்லாவிலும் போட்டு வையுங்கள். உங்கள் வியாபாரம் பெருகும்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment