Tuesday, 15 August 2017

சித்தர்கள் வாலை பற்றி என்ன கூறுகிறார்கள்?

சித்தர்கள் வாலை பற்றி என்ன கூறுகிறார்கள்?
மகான்களும் யோகிகளும் ஒருபோதும் மறைவதில்லை, தமது உடலை ஆடைகளை களைவதை போல களைந்து சூக்கும உடலோடு சிவனுடன் ஒன்றி வாழ்கின்றனர். இதனையே திருமூலர் "யோக சமாதி உகந்தவர் சித்தரே"என்கிறார். இன்றைய காலகட்டத்தில் பல பேர் தனது பெயருக்கு முன்பு ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, வாலை என்றும், பெயருக்கு பின்னால் சித்தர் என்றும் பட்டங்களை போட்டுக்கொண்டு அலைவதை மக்களை ஏமாற்றி பிழைப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.
அவர்களுக்கே தெரியுமோ தெரியாதோ வாலையை சித்தி செய்த ஒருவன் ஒரு மஹா சித்தர் ஆகிவிடலாம். நாம் போற்றி வணங்கும் பதினென் சித்தர், நவ நாத சித்தர் தொட்டு கடந்த நூற்றாண்டு தோன்றிய கடைப்பிள்ளை சித்தர் வரை வாலை சித்தி செய்துதான் பல சித்துக்களை உலகத்துக்கு செய்து கட்டினர். வாலை சித்தி பெற்ற தவசீலர்கள் அடையாத பலன்கள் உலகில் எதுவுமில்லை, சகல காரிய சித்தி, ரசம், ரசாயனம், அஞ்சனம், பாதுகா சாதனம், மூலிகை, குளிகை, கட்சம், சரஸ்வதம், முதலிய சித்துகளும் அணிமா, மகிமா, லகிமா, கிரிமா, ஈஸித்வம், வசித்வம், பகுரூப சித்தி, சுரூப சித்தி என்னும் அஷ்ட மஹா சித்தி பெற்று சித்தனுக்கு சித்தனாய் பெரும் புகழ் பெற்று இம்மை இன்பத்தை அனுபவித்து தேவி சயுச்யம் அடைவார் என சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இன்று பெயருக்கு முன் வாலை என்றும் சித்தர் என்றும் போட்டு கொள்ளும் நபர்கள் மேலே சாஸ்திரம் சொல்லும் ஒரு சித்தினையாவது செய்து காட்ட இயலுமா? இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடனேயே தற்கலத்தில் வாழ்ந்த ரமண மகரிஷி, யோகிராம் சுரத் குமார், ஓஷோ, யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, சச்சிதானந்த சுவாமிகள் முதல் இன்று வரை வாழ்ந்து வரும் பல சித்திகளை பெற்ற மஹா புருஷர்களும் கூட தன் பெயருக்கு முன்னால் வாலை என்றோ சித்தர் என்றோ அடைமொழிகளை போட்டுக் கொண்டதில்லை என அறியவும். ஏன் சிவனே ஆதிசங்கரராக அவதரித்தும் தன் பெயரை இன்றுவரை ஆதிசங்கரர் என்றே நிலைப்பெற செய்தார் எனவும் அறிக. சித்தர்கள் தமக்காக வாழாதவர்கள், தமக்காக காசு பணம் தேடாதவர்கள், என்றும் இறைவனுக்காகவும், இன்னலுற்ற மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள்.
"நாணயமாய் நடப்பவரே ஞானி
யோகியமாய் நடப்பவரே யோகி சகலமும் தள்ளியவரே சந்நியாசி
ஆண்டவனை அறிந்தவரே ஆண்ட ஒழுக்கம் உடையவரே துறவி சிந்தை தெளிந்திருப்பவன் அவனே சித்தன்
செகமெல்லாஞ் சிவமென்று அறிந்தோன் சித்தன்"
"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே..... வாலைக்கு வுருவமில்லை் என்றால்? உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் ஏன் இந்த பாடலை எழுதி உள்ளார்
கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி என்னும் நூலில் வாலை தெய்வம் பற்றி இப்படி சொல்கிறார்....
பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்....
வாலை தெய்வம் புற வழிபாடு ஓம் ஐயும் கிலியும் சவும் சவும் கிலியும்
ஐயும் வா வா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமக
வாலைதெய்வம் என்று வாலைபரமேஸ்வரி இவள் சித்தர்களுக்கு முழு முதற்கடவுள்.இவளைக் கொண்டே அறுபத்து நாலு கலைகளையும் சித்தர்கள் அறிந்தனர். இவளை திரிபுரை என்றும் , வாலை என்றும் ,பத்து வயதாளென்றும், பதினாறு வயதாள் என்றும், கன்னியென்றும்,பச்சைநிறத்தாளென்றும் ,சக்கரத்தாளென்றும் , வாமியென்றும் ,தேவியென்றும், மாயையென்றும்,புவனையென்றும்,அன்னையென்றும், ஆவுடையாளென்றும், தாரையென்றும் , அமுதக் கலசமென்றும்,தாயென்றும் உண்ணாமுலையென்றும் ,கோவுடையாளென்றும் , அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும் அழைப்பார்கள். வைத்தீஸ்வரனான ஈஸ்வரனே இவள் தயவில்தான் மண்ணையே மருந்தாகக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் புரிந்து வருகிறான்.இவளை அறிய ஏழு பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள்.
கண்டு கெட்ட வன்கோடி காணாமல் கெட்ட வன் கோடி கேட்டு கெட்ட வன் கோடி கேட்காமல் கெட்ட வன் கோடி பார்த்து கெட்டவன் கோடி பார்க்காமல் கெட்ட வன் கோடி கோடியிலே ஒருவனுக்கு விளங்கு மய்யா
வாலை தெய்வம்★
★வாலையை பணியாமல் சித்தராக முடியாது!
★அவளை யறியா அமரரும் இல்லை
★அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
★அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை
★அவளின்றி யூர் புகு மாறறி யே னே"
★அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது மணி ஒளி! சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா? சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!
★அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?
★ சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே!
★உடலில் சக்தி இருந்தால் தானே நடமாட முடியும்!
★பின்னரல்லவா தவம் செய்வது?! ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது!
★சக்தி - வாலை துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய இயலாது!
★பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும் சிவமயம்! சிவம் சக்தி மயம்!
★அவளே வாலை! தாய்!
★அந்த தாய் வாலை அருள் தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்!
★சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்!
★நம்மை கருவாய் வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே!
★நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்!
★உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி !
★அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை!
★வாலையை பணியாமல் யாரும் தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம் புரியவேண்டாமா?
★"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே!
முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்
கன்னியவள் குமரி யிலே கண்டு கொள் பணிந்தே"
“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”
இன்புற்றிருக்க ஈசனுடன் உறைந்ந அன்னையை சரனடைவோம்
சிவ சக்தி போற்றி.
அம்மா தாயே சரணம்
வாலையைக்கும்பிட்டு சித்தரானார்..
வாலைக்கொத்தாசையாய் சிவகர்த்தரானார்...
வாலைக்கு மேலான தெய்வமில்லை....
கொங்கண சித்தர் ...
தாயிர் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
சக்தி இல்லையேல் சிவம் இல்லை
அவளை அறிய முதலில் ஐவரை அறிய வேண்டும்
இருப்பிடம் உள்நாக்கு
இயக்குவது காற்று
கன்னி வாலை பெண்ணாகி தாயுமாகி உயர்ந்து நிற்கும்.
-------------------------------------------------------------
ஸ்ரீ பாலா மந்திர ஜபம்
மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,
சித்தர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்குப் புரிந்தாலும் எவ்வாறு,நமக்குள் எங்கு உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது (இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.
சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.
ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.
பீஜம் என்றால் விதை என்று பொருள்.விதைக்குள் எப்படி மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்குள் தெய்வங்கள் அடக்கம். எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாகச் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-
1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-
ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|
2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-
ஓம்|ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்||
இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி
3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-
ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||
இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி
முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.
மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை. எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.
வாலையடி சித்தருக்குத் தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.
பாலா மந்திரம் மிக உயர்வான சித்திகளைத் தரக் கூடியது.
சக்தி உபாசனை கத்தி மேல் பயணம் போன்றது.வசீகர சக்தி,ஆண், பெண் வசீகரம் எல்லாம் தருவதால் பல நேரங்களில் வழி தவறிப் போகும் சாத்தியம் உண்டு அப்படிச் செயல்பட்டால் உங்கள் மந்திர ஆற்றல் விரயமாகி வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைச் சந்திக்க நேரும்.
எனவே,முறைப்படி குருவிடம் சாபநிவர்த்தி செய்யப்பெற்று தீட்சை பெற்று ஜெபிப்பதே நிறைவான பலன்களைத் தரும்.
தீட்சை மற்றும் பிரயோக விதிகளை அறியத் தொடர்பு கொள்ளவும்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment