Sunday, 20 August 2017

வியாபார தோஷம் நீங்க எளிய பரிகாரம்..!

வியாபார தோஷம் நீங்க எளிய பரிகாரம்..!
   ஒருவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் அது தீர பிரச்சனையாக இருக்கும். தொழில் என்பது ஒருவருக்கு முக்கியமான ஒன்று. வேலையில்லா மனிதனை இந்த உலகம் மதிக்காது. சிலர் சொந்த தொழில் செய்கின்றனர். அப்படி செய்யும் தொழிலில் பிரச்சனை ஏற்பட்டால் அதை நீக்க பரிகாரம் உள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.
பரிகாரம் :
 தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சனை, பணப்பிரச்சனைகள் நீங்க எளிய பரிகாரம் இது. சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோ~ம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினசரி காலை குளித்து விட்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு பால், தேன், ஏலக்காய், கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பருப்பு ஆகிய ஐந்தையும் கலந்து, ஒரு புதிய கிண்ணத்தில் வைத்து மற்றொரு கிண்ணத்தில் பஞ்சாமிர்தத்தை படைத்து வழிபட வேண்டும்.
 அப்போது ஐந்து முகம் கொண்ட வெள்ளி விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு சிறிது பஞ்சாமிர்தத்தை எடுத்துச்சென்று உங்கள் வியாபார தலத்தில் உள்ள முக்கிய வேலையாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
 இவ்வாறு தினசரி செய்து வந்தால் தொழிலில் நஷ்டம் வராது. அப்படி செய்ய இயலாவிட்டால், நவதானியங்களை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் கடைவாசலில் கட்டுங்கள். கல்லாவிலும் போட்டு வையுங்கள். உங்கள் வியாபாரம் பெருகும்.

No comments:

Post a Comment