Friday, 11 August 2017

நீங்கள் கோடீஸ்வரனாக வேண்டுமா ?

நீங்கள் கோடீஸ்வரனாக வேண்டுமா ? ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் !!.
சில நிகழ்வுகளுக்கு , நீங்கள் என்னதான் முயன்றாலும், சரியான காரண காரியம் தெரிவதில்லை. ஒரு சில நொடிகளில் ஏற்படும் அதிசயங்கள், வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடுகிறது.
அப்படிப்பட்ட ஒரு பேரதிசயம்தான் இந்த தங்க ஆனந்த களிப்பு அறிமுகமான சம்பவம்.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் தென்காசிக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருக்கிறது. சுமார் இரண்டு வருட காலமாக இந்த தங்க ஆனந்த களிப்பை மனமுருக வேண்டி , இன்று அவர்கள் ஊரிலேயே வசதி மிகுந்த குடும்பமாக உயர்ந்து இருக்கிறது. சொத்து மதிப்பு இன்றைய தேதிக்கு - சுமார் 10 கோடியை தாண்டும்.
இத்தனைக்கும், இரண்டு வருடம் முன்பு வரை சொந்தமாக வீடு கட்ட , அவர்கள் வட்டிக்கு வெளியில் கடன் வாங்கியிருந்த தொகை மட்டும் 10 லட்சத்துக்கும் மேல். இந்த இரண்டு வருடத்தில் அபரிமிதமான வளர்ச்சி , உயர்வு.
காரணம் : அவர்களின் அயராத உழைப்பு , இறைவன் மேல் துளியும் சந்தேகம் இல்லாத பக்தி.
இரண்டு வருடத்திற்கு முன்னால் , கடன் சுமையால் ஏற்பட்ட சோர்வால் மனம் நொந்து - மகாலிங்கத்தை தரிசிக்க சதுரகிரி சென்ற போது - ஒரு அதிசயம்போல் துறவி ஒருவர் தானே வலிய வந்து பேச ஆரம்பித்து இருக்கிறார். இவர் தனது குடும்ப கஷ்டத்தை சொல்லி புலம்ப இந்த பாடலை தினமும் காலை வேளையில் பூஜை செய்யும்போது , விளக்கேற்றி பாடி வர சொல்லியிருக்கிறார்.
அவர் கூறிய இன்னொரு விஷயம் : பசு மாடு ஒன்று வாங்கி , தினமும் முதலில் கறக்கும் பாலை - சிவனுக்கு அபிஷேகம் செய்து வா. உன் வீட்டிற்கு வந்த மகா லட்சுமியாக நினைத்து அந்த பசுவை ஆராதனை செய்து வா. உனக்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஆசீர்வாதம் பண்ணி இருக்கிறார்.
இது எல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா? விடாமல் ஆறு மாதங்களுக்கு - பௌர்ணமி, அமாவாசை தினங்களில் மகாலிங்க தரிசனம் செய்தால் , உங்களுக்கு ஒரு பெரிய அதிசயம் நிகழும் என்று அவர் ஜாதகத்தைப் பார்த்து திருவாய் மலர்ந்தது அடியேன்தான்.
அவர்களின் நல்ல மனதிற்கு - இரண்டு பசு மாடு வாங்கி , படிப்படியாக மாட்டுப் பண்ணை, ஆடுகள் , கோழி, முயல் வளர்ப்பு , மீன் பண்ணை என்று இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கின்றனர். இருபது ஏக்கரில் பெரிய தோப்பு வாங்கி , சந்தோசமாக குடும்பம் நடத்துகின்றனர். இத்தனைக்கும் அவர் படித்து இருப்பது ஒரு டிப்ளோமா இன்ஜினியரிங் தான். இறை பணிக்கும், இயலாதவர்களுக்கும் தாராளமாக உதவி வருகின்றனர். சிறிது படோடபம் இருந்தாலும், துளியும் செல்வத்தால் வரும் திமிர், கர்வம் இல்லை.
இதற்கு காரணம் அவர்கள் சொல்வது மகாலிங்கத்தின் கருணை ! சுந்தர மகாலிங்கத்தின் கருணையே கருணை. சிவம் முழுவதுமாக ஆட்சி செய்யும் அற்புத சக்திகள் நிறைந்த ஸ்தலம் சதுரகிரி. கண்ணுக்கு புலப்படாத சித்தர்கள் நடமாடும் தவபூமி அது. ஒருமுறை நீங்கள் சதுரகிரி சென்று வர , உங்களின் பூர்வ ஜென்ம புண்ணியங்களின் பலன்கள் முழுவதும் உங்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கும். நீங்கள் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்ற பாதை உங்களுக்கு புலப்படும்.
அந்த நண்பருக்கு , ஜாதக ரீதியாக சுக்கிரனும், சந்திரனும் நல்ல நிலைமையில் இருப்பது ஒரு வலுவான காரணம்.( என் பார்வையில் )
காரணம் எதுவாக இருந்தாலும், நீங்களும் தான் முயன்று பாருங்களேன்..... இந்த பதிகத்தை பாடி தொடர்ந்து வழிபட்டு வருவது , உங்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் தரும் என்று நம்பி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
படத்தை க்ளிக் செய்தால் பெரியதாக காட்டும்.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு & வேற்குழவி வேட்கை
தங்க ஆனந்தக் களிப்பை உள்ளன்போடு பாராயணம் செய்வோர் இல்லத்தில் பொன் வரவு அதிகமாகுதல்,செல்வ யோகங்கள் பெருகுதல் பலிதமாகின்றன.
வேற்குழவி வேட்கை பாராயணம் புத்திர தோஷத்தை நீக்கி,சந்ததி விருத்தியும்,குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல குழந்தைகளை உருவாக்கும்.
உங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும் இதை தெரியப்படுத்துங்கள். மகாலிங்கத்தின் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்க ஆசிகள் !

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment