Friday, 4 August 2017

*மந்திரங்கள் பற்றிய முழு விளக்கம்.*

*மந்திரங்கள் பற்றிய முழு விளக்கம்.*
***************************************


*மந்திரங்கள் – ஏழு அங்கங்கள்.*
மந்திரமும் யந்திரமும் தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள். அவற்றுள் மந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது. அவை:
1.ரிஷி 2. சந்தஸ் 3. தேவதை 4. பீஜம் 5.சக்தி 6. கீலகம் 7. அங்க நியாசம் என்பன.
*1. ரிஷி*
*********
மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),. எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி.
மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம்.
நமக்குச் சமமானவரை வணங்கும் போது நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். தேவதையை வணங்கும்போது இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.
*2. சந்தஸ்*
************
சந்தஸ் என்பது மந்தரத்தின் சொல் அமைப்பு. அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.
*3. தேவதை*
***************
தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவது தேவதா
நியாசம்.
*4. பீஜம்.*
**********
மிகச் சிறிய ஆலம்விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது. அந்த வித்துக்குப் பீஜம் என்பா்.
இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்கு வந்தன. அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன. ஒவ்வொரு சூக்கும ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு.
*5. சக்தி*
***********
அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும். வீரியம் தேஜஸ், பலம் என்பன சக்தியின் வெளிப்பாடுகள்.
*6. கீலகம்*
*************
சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கம்.
*மந்திரங்களின் ஆற்றல்*
******************************
மந்திரங்கள் என்பவை சில எழுத்துக்களின் சோ்க்கை. பல மந்திரங்களுக்குப் பொருள் இல்லை. ஆயினும் அந்த மந்திரங்களின் சப்தங்கட்குச் சக்தி அதிகம். பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.
இந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உருப்போட்டால் அதற்கு உகந்த ஓா் உருவம் உண்டாகி அவ்வுருவம் ஜெபிப்பவனுடைய கண்ணுக்குத் தோற்றம் அளிக்கும் என்றும், அந்த உருவத்திற்குச் சில காரியங்களைச் செய்யக் கூடிய வலிமை உண்டாகும் என்றும் சொல்வா். இந்த உருவங்களைப் படைக்கக்கூடிய எழுத்துக்களை எவ்வாறு கண்டு பிடித்து இணைத்தனா் என்பது வியப்பான ஒன்று. இந்த எழுத்துக்களையே ஆரம்ப காலத்தில் பீஜ அட்சரம்
என்று குறிப்பிட்டனா்.
மேலே குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலமாக மந்திரங்களை அமைத்து, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையின் பெயரை இட்டு, அவ்வகைத் தேவதைகளின் சக்தியை உணரச் செய்துள்ளனா்.
இத் தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. குட்டிச் சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்கள்: காளி, துா்க்கை, ஆஞ்சநேயா், நவக்கிரகங்கள் என்பன தேவதைகள்: சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி என்போர் அதிதேவதைகள்.
ஒவ்வொரு தெய்வத்தின் உருவத்தையும் நேரடியாகப் பார்த்துத் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் உள்ளது.
மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. எழுத்துக்களின் கூட்டம்தான். ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை. விஞ்ஞானிகள் ஒரு குளக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகள் (Vibrations) நீரின் மேலே மிதக்கின்ற இலேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்ததைக் கண்டு நாதத்துக்கே உருவம் கொடுக்கிற சக்தி உண்டு என்பதைக் கண்டறிந்தார்கள்.
ஒவ்வொரு ராகத்துக்கும் ராக தேவதைகள் உண்டு என்று இசை நூல்கள் கூறுகின்றன.
அக்பரின் சபையில் தான்சேன் என்ற இசைமேதை இருந்தார். இரவு நேரத்திற்குரிய ஒரு ராகத்தைப் பாடுமாறு அரசா் கட்டளை இட்டாராம். அப்போது தான்சேன் ஒரு மந்திரத்தை உச்சரித்தவுடன் அரண்மனையின் எல்லாப் பக்கங்களிலும் இருள் கவ்வியதாம். சில மந்திர உச்சாடனங்களின் மூலம் இயற்கையையே வசப்படுத்தலாம் என்று தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.
*இறையருளைப் பெற*
****************************
இறையருளைப் பெறுவதற்கு மந்திர உபாசனை சிறந்த சாதனம். மந்திர ஜெபத்துக்குரிய
வழி முறைகளையும் நுட்பங்களையும் தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.
மந்திரம் என்றால் தன்னை நினைப்பவரைக் காப்பது என்று பொருள். எல்லாம் வல்ல கடவுளுக்கு வடிவம் மூன்று. அவை 1. தூல வடிவம் 2. சூக்கும வடிவம் 3. அதி சூக்கும வடிவம். அவற்றுள் தூல வடிவம் என்பது மந்திர வடிவம் ஆகும். சூக்கும வடிவம் என்பது உயிருக்குயிராய் நமக்குள்ளே இருக்கிற வடிவம். அதி சூக்கும வடிவம் என்பது உண்மை அறிவாக, ஆனந்த மயமாக உள்ள சிற் சக்தி வடிவம். முன்னைய இரண்டும் பொது இயல்பு. பின்னையது சிறப்பு இயல்பு.
எல்லாவற்றையும் அறியச் செய்யும் ஆற்றல், உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல் என்னும் இரண்டு ஆற்றல்களைக் கொண்டவை மந்திரங்கள்.
*மந்திரங்கள் – அதி தேவதைகள்*
**********************************
உலகில் உள்ள பொருள்களை இருவகை 1. அசையும் பொருள் 2. அசையாப்பொருள். அசைபவை உயிர்கள். அசையாதவை ஜடப் பொருள்கள். இவ்வாறுள்ள எல்லாப் பொருள்களையும் இடமாகக் கொண்டு அவற்றை இயக்கி வைக்கிற அதி தேவதைகள் உண்டு. அந்த அதிதேவதைக்கு மந்திரங்கள் உண்டு. மந்திரங்களால் ஆகாத காரியம் இல்லை. இம்மந்திரங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது ஸ்ரீ வித்யை என்கிறது லலிதா சகஸ்ர நாமம். பெண் தெய்வங்கட்குரிய மந்தரங்களை ஸ்ரீ வித்யை என்பா். ஆண் தெய்வங்கட்குரிய மந்திரங்களை மந்திரம் என்றே குறிப்பிடுவா்.
*மந்திரமும் விதையும்.*
*************************
ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு தெய்வத்தின் சொரூபம் ஆகும். ஒவ்வொரு மந்திரத்திலும் உயிர்ச் சக்தி உறங்கிக் கிடக்கின்றது. அவை விதைகளைப் போன்றவை. விதை முளைத்துப் பலன் தர வேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் தேவையல்லவா?
ஒரு விதை முளைத்துப் பலன் கொடுக்க வேண்டுமானால் 1. உரிய காலம் வேண்டும். 2. உரிய நிலம் வேண்டும். 3. பக்குவப்பட்ட விதையாக இருக்க வேண்டும். 4. பழக்கப்பட்டவன் விதைக்க வேண்டும். 5. நல்ல கைராசி
வேண்டும். 6. விதை முளைக்கும் போது கூடவே களைகள் தோன்றும். அவற்றைக் களைய வேண்டும். 7. ஆடு மாடுகள் மனிதா்கள் போன்ற உயிர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். 8. நீா் பாய்ச்சி உரம் போட வேண்டும். 9. நன்கு விளைந்ததும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்து சோ்க்க வேண்டும்.
அதுபோலவே மந்திரங்களையும் உரிய காலத்தில் ஜெபிக்க வேண்டும். அவை மனத்தில் பதியும்படி மனநிலை அமைய வேண்டும். ஒரு குருவின் மூலமாகப் பெற வேண்டும். சந்தேகம் போக வேண்டும். அவ்வப்போது குருவைத் தரிசித்து மந்திர ஜெபத்துக்கு வலுவை ஊட்டிக் கொள்ள வேண்டும். மந்திரம் பலன்தர ஆரம்பிக்கும்போது அகங்காரம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*மந்திர உபாசனை*
**********************
எவன் ஒருவன் 14 வருடம் ஒரு குறிப்பிட்ட தெய்வ மந்திரத்தை இடைவிடாமல் ஜெபித்து வருகிறானோ அவனுக்கு அந்த மந்திரம் நிச்சயமாகப் பலன் கொடுக்கும். எனக்கு மந்திரம் பலிக்கவில்லை, பலன் தரவில்லை என்று மந்திர ஜெபத்தை விட்டு விடுபவா்கள் பாவிகள். மந்திரம் பலிப்பதுபோலப் பலித்து ஆளையும் கீழே தள்ளிவிடும்.
இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு நம்பிக்கையோடும், முயற்சியோடும் பக்தியோடும் உபாசிக்கிறவனே நல்ல உபாசகன்.
*பலவகை மந்திரங்கள்*
******************************
சில மந்திரங்கள் காய்களாக இருக்கிற நிலையில் பலன் தரும். சில பழுத்த பின் பலன் தரும். சில விதையாக இருக்கிற நிலையில் பலன் தரும். முட்செடி போன்ற மந்திரங்கள் உண்டு. தீமை தரும் மந்திரங்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலான மந்திரம் ஸ்ரீ வித்யை மந்திரம். அது ஏகாட்சரி, திரியட்சரி, நவாட்சரி, பஞ்சதசாட்சரி, ஸ்ரீவித்யை மந்திரம். அது ஏகாட்சரி, திரியட்சரி, நவாட்சரி, பஞ்சதசாட்சரி, ஸ்ரீவித்யை என் ஆறு வகைப்படும். ஓா் எழுத்துக் கொண்ட புவனேஸ்வரியின் பீஜ மந்திரம் உடையது ஏகாட்சரி, மூன்று பீஜ
மந்திரங்கள் கொண்ட வாலையின் மந்திரம் திரியட்சரி. சித்தா்கள் உபாசித்து உயா்வடையக் காரணமான மந்திரம் இது.
ஒன்பதாவது எழுத்துடைய அந்தரியின் மந்திரம் நவாட்சரி
15 பீஜங்கள் உடைய புவனாபதியின் மந்திரம் பஞ்சதசாட்சரி. ஸ்ரீம் என்னும் பீஜத்தை முதலில் கொண்ட 16 எழுத்து மந்திரம் சோடசி. 28 பீஜம் கொண்ட மந்திரம் மகா சோடசாட்சரி. 27 பீஜம் உள்ள மந்திரம் ஸ்ரீ பராவித்தை எனப்படும். சோடசி மந்திர உபாசனை செய்தவா் பகவான் இராமகிருஷ்ணா்.
*ஸ்ரீவித்யை உபாசகா்கள்*
**********************************
சக்தியின் ஸ்ரீவித்யை மந்திரங்களை உபாசித்து அருள் பெற்றவா்கள் உண்டு. இராமன், பலராமன், இலக்குவன், பரதன், சூரியன், அக்கினி, குபேரன், இந்திரன், பிரமன், திருமால், சிவன், கணபதி, கந்தன், மன்மதன், நந்தி, மனு, உலோபா முத்திரை, அகத்தியா், துா்வாசா், சநகாதி முனிவா்கள், திருமூலா் இவா்களெல்லாம் ஸ்ரீவித்யை மந்திரம் ஜெபித்து உயா்நிலை அடைந்தவா்களே ஆதிபராசக்தியின் அருள்பெற்று உயா்ந்தவா்களே!
தாடகையைக் கொல்ல இராமனுக்கு விசுவாமித்திரா் உபதேசம் கொடுத்த மந்திரம் பாலா மந்திரம். அதனை “வாலை மந்திரம்” என்பா். சித்தா்களின் உபாசனைத் தெய்வம் வாலையே ஆவாள்.
ஸ்ரீவித்யை போல சிறந்த இன்னொரு மந்திரம் உண்டு. அசபா காயத்ரி என்று பெயா். அது ஹம்சம், ஸோஹம் என்று இரண்டு வகை.
அசபை, அசபா, காயத்ரி, அம்ச மந்திரம், அங்குச மந்திரம், ஜீவ மந்திரம் எனப் பலபெயா் இதற்குண்டு.
இதனைப் பயபக்தியுடன் ஜெபித்தால் இறந்தவா்களை எழுப்பலாம். நினைத்த எல்லாம் கைகூடும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment