இறைவன் அருளால் சித்தர்கள் மற்றும் மகான்களின் தொடர்பு கிடைக்க, நாம் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை.
1. நமது மனம் எப்போதும் மலர்ச்சியாக இருக்கவேண்டும். நம்மால் இயன்ற நல்ல தொண்டுகள் செய்து வர வேண்டும். இறையாற்றல் சிலரை தன்னாலே வழிநடத்தும், இறை காரியங்களை செய்யவும் வைக்கும். கர்வம் கூடாது.
2. நமக்கு வாய்ப்பு அளித்தவரை எந்த நேரத்திலும் மறக்கக் கூடாது. அவரை சிந்தனையில் நிறுத்தி அந்த நல்ல செயல்களில் ஈடுபடுங்கள். நல்ல செயல்களை விட்டு விலகும் போது மனம் குழப்பம் ஏற்படுத்தும். நம்பிக்கையுடன் இருங்கள்.
3. நமக்கு எது கிடைத்தாலும் கிடைத்ததை வைத்து இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உண்மையான பந்தம் இறையாற்றலே, இறுதியானது, அதனைக் காப்பாற்ற நல்லோர் இணக்கம் கொள்ளுங்கள்.
4. எல்லா உயிர்களிடம் அன்பாகவும் மனித நேயத்தோடு ஜீவகாருண்யமாக வாழுங்கள். முடிந்த வரை ஆன்மீக நூல்கள், நல்ல தத்துவம் அடங்கிய மகான்கள் நூல்கள் ஆகியவைகளை பிறருக்கு வாங்கி கொடுங்கள். உங்களை அறியாமலே ஆன்மபலம் கூடும்.
5. வாழ்க்கையில் முடிந்த அளவிற்கு அதிகமாக உண்மையாகவும், நல்லதுக்காக கொஞ்சம் பொய்யாக வாழலாம், தவறில்லை. மனம் எண்ணிய சில தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். ஆனால் மனத்தை பேராசையிலிருந்து விலகுங்கள்.
6. தற்போது யோகா, தியான பயிற்சி செய்வர்கள் முறையான வழியை பின்பற்ற தெரியாமல், சிலரை குருவாக நினைத்து அவர்களின் அறைகுறை அனுபவங்களைக் கேட்டு பெரிதென செய்கிறார்கள், பயனற்றது. அங்கு குற்ற உணர்ச்சியும், மனத்தாழ்வும் மட்டுமே குடி கொள்ளும். பயிற்சி கோடியில் ஒருவருக்கு மட்டுமே வாய்க்கும், அதுவும் சித்தர்களின் பரிபூரண அருளாலே! பயனற்ற வாழ்க்கை வாழாமல், நம்மால் முடியும் இறைவன் இருக்கிறார் என மன நம்பிக்கையுடன் நற்செயல்கள் செய்து வாழுங்கள்.
7. எந்த பொழுதிலும் தர்மம் செய்வதை வழக்கமாய் கொள்ளுங்கள், முடிந்த வரை இயலாத நோயாளிகளுக்கு மருந்து பெற்று தாருங்கள். பிறர் இன்பமாக வாழ வழி கொடுங்கள். பொறாமைப் படாதீர்கள். அன்போடு விட்டுக் கொடுக்க பழகுங்கள்.
8. குடும்பம் என்றோ, நட்பு என்றோ, சுற்றம் என்றோ, துன்பம் என்றோ, இன்பம் என்றோ எதையும் பிரித்து பார்த்து சிந்தனை செய்யாதீர். நாம் காணும் விதத்திலே, அந்த எண்ணத்தின் அடிப்படையிலே அது இருக்கின்றது. எதிலும் சிக்குண்டு சிதறாமல், சாதனை என்று பிதற்றாமல், இருப்பதை ஏற்றுக் கொண்டு இன்பமுற பயணியுங்கள். எதிர்பார்ப்பு அபாயகரமானது, ஆக இறைவனை கடிந்து கொள்ளாதீர்கள்
9. இழப்புக்கள் ஏற்பட்டால் பொறுமையாய் இருங்கள். யார் உங்களை விட்டு பிரிந்தாலும், சேர்ந்தாலும் உங்கள் செயலில் நில்லுங்கள், நீங்கள் இறைவனுக்கு அருகில் இருக்கின்றீர் என்பதனை மட்டும் எண்ணத்தில் கொள்ளுங்கள்.,இறையருள் உங்களை பக்குவப்படுத்தி பார்க்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
10. ஓடிக் கொண்டே இருக்காதீர்கள். இஷ்ட படி பல்வேறு வித்தைகள், தேவைகள் அடைய வெவ்வேறு இடம் நோக்கி தேடிக் கொண்டே செல்லாதீர்கள். உங்கள் தேடுதல் நீண்டு கொண்டே போனால், கடைசி வரை தேடிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் எதிர் கொண்டு பொறுப்பாய் ஒரே இடத்தில் நில்லுங்கள்.
இறைவன் தொடர்பு நமக்கு கிடைக்கும்.
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment