Friday, 14 July 2017

ராகு கேதுக்களின் பூர்வீகம் !!!!

ராகு கேதுக்களின் பூர்வீகம் !!!!
பாற் கடலை ஆதிசேஷன் என்ற நாகத்தைக் கயிறாகக் கொண்டு கடைந்து கொண்டே வரும்போது அமுதமும் விஷமும் கலந்தே வந்தன. மகா விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தேவர்களுக்கு அமுதத்தைக்கிண்ணத்தில் ஏந்தி கரண்டியால் கொடுப்பதற்காக தேவர்களை ஒருவரிசையாக அமரச் சொன்னார்.


இதை சூசகமாகக்கண்டு பிடித்த அசுரகுல ராகு சூரிய சந்திரர்கள் மத்தியில் அமர்ந்துவிட்டான். எல்லாரும் அமுதத்தை உண்டபின் சூரிய சந்திரன் ராகுவை யாரெனக்கண்டு பிடித்து மகா விஷ்ணுவிடம் கூற அவர் அசுரனான ராகுவின் தலையைக் கையிலிருந்த கரண்டியால் வெட்டிவிட்டார்.
கரண்டியால் துண்டிக்கப்பட்ட பிறகும் இந்த இரண்டு முண்டங்களும் அமுதம் உண்டதால் இறவாமல் உயிருடன் வாழத் தொடங்கின. தலைப்பாகம் ராகுவென்றும் உடல் பாகம் கேது என்றும் பெயர் பெற்றன. அவன் அவசரப்பட்டுச் செய்த காரியத்தால் அரக்கர்களும் அவரை தங்களுடன் சேர்ந்துக் கொள்ளவில்லை.
தேவர்களும் சேர்த்துக் கொள்ளவில்லை. அவன் கவலையுடன் பிரும்மாவிடம் சென்றான். அவர் பாதங்களில் பணிந்து தன் நிலையை வருத்தத்துடன் சொல்லி உடலையும் தலையையும் ஒன்று சேர்க்கும்படி கேட்டுக் கொண்டான். பிரும்மாமனம் இரங்கினார்.
'கசியப முனிவரின் பேரனே! உன்முன்னோர்களின் காரணமாக உனக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் திருமால் உன் தலையைத் துண்டித்திருக்கிறார். அதை ஒன்று சேர்க்கும் வல்லமை எனக்கு இல்லை. உன் உடலும் தலையும் பிரிந்து போகாமலிருக்க ஒரு வரமளிக்கிறேன். சூரியர் சந்திரர்களால் உனக்கு இந்த நிலை ஏற்பட்டது.
அவர்களுக்கு எதிர் திசையில் நீங்கள் சஞ்சரித்து நவக்கிரகத்தில் ஒருவனாக இருப்பாய். உன் தலைப்பகுதி ஒரு பக்கமும் அதற்கு நேர் எதிர்ப்பக்கம் உடல் பகுதியும் இருக்கும் தலைப்பகுதி என்பது ராகு என்றும் உடல்பகுதி கேது என்றும் பெயர்பெறும்.
ராசி மண்டலத்தில் உங்களுக்குச் சொந்தராசி இல்லாவிட்டாலும் நீங்கள் எந்த ராசியில் சஞ்சரிக்கிறீர்களோ அந்த ராசிக்கேற்ப பயன் அளிப்ப வராவீர்கள். எல்லா கிரகங்களின் வல்லமையும் உனக்கு ஏற்படும். ஜாதகத்தின் பாப புண்ணியத்திற்கேற்ப பயன் அளிப்பவராகவும் பழிவாங்குபவராகவும் செயல்படுவாயாக.
உன்னை ராகு-கேது-சாயா கிரகம்-நிழல் கிரகம் என்ற பெயரால் அழைப்பர். உன்னைக் காட்டிக் கொடுத்து இந்த நிலைக்குள்ளாக்கிய சூரிய சந்திரரை மறைத்து ஒளிமங்கச் செய்து கிரகணதோஷம் ஏற்படுத்தக் கூடியவராக விளங்குவீராக'' என்றார். அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றினார். கற்றறிவே இல்லாத சுவர்பானுவுக்கு நவக்கிரக பதவி அளிப்பது அவ்வளவு நல்லதல்ல.
ராகு கேது என்ற இரண்டு கிரகமாக அவன் சாஸ்திரங்களையும் கற்க வழி செய்ய வேண்டும் கடகராசியில் கேதுஇ ருக்இ யஜ×ர் சாம வேதங்களைக் கற்று ஞானகாரகனாகவும் மகர ராசியில் ராகு தங்கி அதர்வண வேதத்தையும் கற்று போக யோககாரனாகவும் விளங்க அருள் புரிந்தார். நவக்கிரகங்களில் சர்வ வல்லமை பெற்றவர்களாகத் திகழத் தொடங்கினார்கள்.
ராகு தசை கேது தசை காலங்களில் ஜாதகர் தம் முற்பிறவியின் பயனை அனுபவிக்கத்தவறமாட்டார். ஜாதகத்தில் ராகு கேது கேடு செய்பவராக இருந்தால் அவர்களுக்குச் சாந்தி செய்தால் நன்மை கிடைக்கும். பரிகாரமாக அவர்களைப் பூசித்து வந்தால் நன்மை பல கிடைக்கும்.
ராகுவும், கேதுவும் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை விழுங்கி விட வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களை இடப்புறமாக சுற்றிக்கொண்டு வருவதாகவும் அவர்களால்தான் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன. ராகுவை கரும்பாம்பு என்றும் கேதுவை செம்பாம்பு என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஒருவர் ஜாதகத்தில் ராகு கேதுகளால் தோஷங்களிலிருந்தால் காளஸ்திரி சென்று காளஸ்தீஸ்வரரையும் ஞானபர குணம்பிகையையும் வழிபடலாம். ராகு கேதுக்கு இல்லமோ வாரமோ இல்லாததால் எந்தக்கிழமையும் அவர்களுக்கு ஏற்றதே.
நீங்களே ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் முறையாக அந்தக்கிழமைகளில் நீராடி புளிப்பு அன்னம் உளுந்து சேர்ந்த பலகாரம் தயாரித்து நுனி இலையில் படைக்கவும் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். மந்தாரை மலர்கட்டி, மாந்தாரை மலராலேயே பூஜிக்க வேண்டும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த கிழமையில் விரதம் இருப்பதும் அவசியமாகும். ஏதாவது ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம், தேங்காய், பழம், பாக்கு வெற்றிலை படைக்கவும். ஐந்துவிதமாக மலர்கள் பூஜைக்குத் தேவை. பிரசாதத்தை யாராவது ஒருவருக்கோ, பலருக்கோ கொடுத்து பூஜிக்கச் சொல்லவும். தாம்பூலம், தட்சிணை கொடுத்து நமஸ்காரம் செய்யவும்.
பொதுவாக ராகு திசை நடைபெறும் காலத்தில் முற்பகுதியில் எல்லாவித செல்வங்களையும் வசதிகளையும் கொடுப்பார். ஆனால் பிற்பகுதியில் கொடுத்தவை அனைத்தையும் பறித்துக் கொள்வார். கேதுவால் ஆதிக்கம் செலுத்தப்படு கிறவர்கள் ஆன்மீகத்துறையில் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பார்கள்.
யோகம் மாந்திரீகம் போன்றவற்றில் இரகசியமாக ஈடுபடுவார்கள். நீதியும் நேர்மையும் தவறாமல் ஒழுக்கமாக வாழ்வார்கள். இவர்களில் பலரிடம் முன் கோபம் காணப்படும். இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பது அபூர்வம்.
எந்தக் கஷ்டம் வந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆடம்பரமாக ஆடையணிவதில் விருப்பம் இராது. ஆனால் எப்போதும் தூய்மையான ஆடைகளை அணிந்திருப்பார்கள். எதிலும் நிதானமாகவே நடந்து கொள்வார்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment