Tuesday 13 February 2018

சபரிமலை 18 படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்


*சபரிமலை 18 படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும் !


*முதல் படி*

பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.

*இரண்டாம் படி*

பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.

*மூன்றாம் படி*

கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.

*நான்காம் படி*

பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.

*ஐந்தாம் படி*

நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

*ஆறாம் படி*

கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.

*ஏழாம் படி*

இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

*எட்டாம் படி*

எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

*ஒன்பதாம் படி*

கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

*பத்தாம் படி*

அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.

*பதினொன்றாம் படி*

பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

*பனிரெண்டாம் படி*

இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பனிரெண்டாம் படி.

*பதிமூன்றாம் படி*

எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.

*பதினான்காம் படி*

யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

*பதினைந்தாம் படி*
தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

*பதினாறாம் படி*

இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.

*பதினேழாம் படி*

சர்வம் பிரம்மம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.

பதினெட்டாம் படி

யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி..

*சுவாமியே சரணம் ஐயப்பா..!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment