எனக்கு பிடித்த பதிவு!
✍🏻ஈர்ப்பு விதி என்பது ஒரு இரகசியம் ✍🏻ஈர்ப்பு விதி என்பது ஒரு காந்தநிலை ✍🏻எண்ணங்கள் பொருட்களாக பரிமாணிக்கும்
✍🏻நாம் போகும் இடத்தை சரியான நேரத்தில் சென்று அடைவதே ஈர்ப்பு விதி
✍🏻மன உளைச்சலுக்கு ஆளான ஒரு மனிதன் ஈர்ப்பு விதியை அவன் வெற்றிக்கான படிகளை தீர்மானித்து வாழ்க்கையின் ஈர்ப்பு விதியை நோக்கி அவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.
✍🏻ஈர்ப்பு விதியை கவர்ந்து இழுக்கும் விஷயங்கள் மக்கள் ,வேலை ,சந்தர்ப்பம் ,மன ஆரோக்கியம் ,செல்வாக்கு ,கடன் ,சந்தோஷம், சோகம் ,மற்றும் பொருள்கள் இது எல்லாமே ஈர்ப்புவிதி கவர்ந்திழுக்கும் விஷயங்கள்...
✍🏻உங்களின் மூளையை ஆராய்ந்து வெற்றி அடையுங்கள்
✍🏻உங்கள் எண்ணம் எதுவாக இருக்கின்றதோ ?அதுவாகவே நடக்கும்.
✍🏻உங்களில் மின்சார சக்தி என்பது ஒன்று இருக்கின்றது .இந்த மின்சார சக்தி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கின்றது ,எடுத்துக்காட்டாக ஒரு நெருப்பில் நீங்கள் சமைக்க முடியும் அதே நேரத்தில் இறக்கவும் முடியும்.
✍🏻இப்பொழுது உங்களுக்கு தேவையான சக்தி நேர்மறையாக சிந்திக்க தொடங்குவது ,நேர்மறை எண்ணங்களாக தொடங்க வேண்டும்.
✍🏻நம் எண்ணங்கள் யாவும் உடனே கைகூட வேண்டும் என்பது அவசியமில்லை அதற்கு சில கால இடைவெளியும் வேண்டும் ,அதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவது நல்லது.
✍🏻நீங்கள் செதுக்கும் நுணுக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டும்
✍🏻வாழ்க்கையில் நாம் ஈர்க்கின்ற விஷயத்தை விட ஈர்க்காத சில விஷயங்கள் நம்மை சீக்கிரம் வந்து அடையும்.அதாவது ,விபத்துக்கள் ,திடீரென வேலைகள் ,உடல்நிலை பற்றாக்குறையை இதுபோன்ற சில ஈர்க்காத விஷயங்கள் நமக்குள் நடக்கும் அதை உடைத்தெறிந்து நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி நேர்மறையாக இலக்குகளை அடைய வேண்டும்.
✍🏻ஒரு நாளைக்கு நம் மனதில் 60000 எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது
✍🏻எண்ணங்களை கவனிக்க வேண்டும். உணர்வுகள் மூலம் நம் எண்ணங்கள் காட்டிக்கொள்ளும்.அதாவது உங்களின் உணர்வுகள் அன்பாகவும் ,சந்தோசமாகவும் ,பரவசமாகவும் இருந்தால் நன்மையின் அறிகுறியே நல்லதே நடக்கும்.அதுவே உங்கள் உணர்வுகள் அன்பில்லாதவர்களாய், சந்தோசம் இல்லாதவர்களாய் ,கோபம் உடையவராய் இருந்தால் தீமையின் அறிகுறி நல்லது நடப்பது வாய்ப்புகள் குறைவு.
✍🏻நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்றால் உங்களால் உங்களின் வளர்ச்சியை பார்க்க முடியும்.
✍🏻உங்களுடைய உணர்வுகள் தான் உங்களுடைய எதிர்காலம்
✍🏻உங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் எதிர்காலத்தை உருவாக்கும்.
ஏன் எண்ணங்கள் தெளிவாக நேர்மறையாக இருந்தால் பிரபஞ்சத்தைக் கூட அடைய முடியும். சந்தோசமான மன நிலையை பார்க்க முடியும்.
✍🏻சந்தோசமான மன நிலையை குழந்தைகளுடன் விளையாடும் பொழுதும் ,செல்லப்பிராணிகள் உடன் விளையாடும் போதும் உணர்வீர்கள்.
📖இரகசியத்தை எப்படி கையாளுவது?
✍🏻 🪔 🤫 🧞♂️
✍🏻எல்லோரும் அலாவுதீன் கதையை அறிந்திருப்பீர்கள் அதாவது அந்த அலாவுதீனின் விளக்கை தேய்த்தவுடன் அதிலிருந்து ஒரு பூதம் வெளிவரும்.அது வெளிவந்தவுடன் “உங்களோடு விருப்பம் தான் எனக்கு கட்டளை”என்று கூறும்.
அதுபோல உங்கள் மனதிடம் கேளுங்கள் உங்களுடைய விருப்பம் என்னவென்று அதுவே கட்டளையாக எடுத்துக்கொண்டு நீங்கள் வாழ்க்கையில் முன்னேற தொடங்குங்கள்..
✍🏻என்ன புரியவில்லையா??
✍🏻நீங்கள்தான் அந்த பூதம் ,உங்கள் மனம்தான் விளக்கு ,உங்கள் மூளைதான் அலாவுதீன்.
இரகசியத்தை உருவாக்கும் செயல்முறைகள்?
✍🏻உங்களுக்கு என்ன வேண்டும் என்று தீர்மானியுங்கள் ,
முதலில் கேளுங்கள் அதை நம்புங்கள் அதை பெற்றதாய் உணருங்கள்.
✍🏻எதை எதையெல்லாம் நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த விருப்பமே உங்களை ஈர்க்கும்.
✍🏻நாம் இரவில் காரை ஓட்டும் பொழுது அதன் வெளிச்சம் அடுத்த 100 அடிகளுக்கும் மட்டுமே தெரியும் ,ஆனால் நாம் அடையும் இடத்திற்கு வெளிச்சம் இருக்கும் இடமே தெரியவில்லை.
நாம் நகரும் ஒவ்வொரு அடிகளும் அடுத்த வழிகளை உருவாக்கித் தருகிறது என்பது நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு அவசியம்.
வாழ்க்கையிலும் அப்படித்தான் நீங்கள் எடுத்து வைக்கும் அடுத்தடுத்த படிகளில் எதிர்காலத்தின் வெளிச்சத்தை அடைய முடியும்.
✍🏻நான் முளைப்பதற்கு
நீ என்னோடு விதைகளை விதைத்தால் மட்டும் நான் முளைப்பேன்
என்று எண்ணிவிடாதே நீ எந்த விதைகள் விதைத்தாலும் நான் முளைப்பேன் .....
புல்
சக்திவாய்ந்த செயல்முறைகள்:
✍🏻நம் எண்ணங்களின் வெளிப்பாடே நம் இன்றைய நிலை.
✍🏻 நன்றி உணர்தல்
காலை முதல் இரவு வரை உனக்கு என்னென்ன கிடைத்ததோ, அடைந்தாயோ அதற்கெல்லாம் முதலில் நன்றி தெரிவியுங்கள்.
✍🏻நன்றி உணர்தல் இரண்டு கல்லின் கதை,
ஒரு சிலை செதுக்கும் கலைஞன் அந்த இரண்டு கல்லிடம் ,நான் உங்களை சிலையாக மாற்றுகிறேன் என்று அதற்கு சில வலியும் நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் அப்படி நீங்கள் பொறுத்துக் கொண்டால் உங்களை நான் சிலையாக மாற்றி விடுவேன் என்று கேட்டான்.
அதில் ஒரு கல் என்னது வலிக்குமா ? என்னால் முடியாது என்னால் வலியெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டது.
ஆனால் அந்த இரண்டாவது கல்லோ சற்று யோசித்து வலிதானே நான் பொறுத்துக் கொள்கிறேன்.ஏனென்றால் நான் சிலையாக மாறி போகிறேன் அல்லவா! அதற்காகவே நான் இந்த வலியெல்லாம் பொறுத்துக் கொள்கிறேன் என்னை நீங்கள் செதுக்குங்கள் என்று கூறியது.
அந்தக் கலைஞன் அந்த இரண்டாவது கல்லை நன்றாக செதுக்கி ஒரு கடவுள் உருவமாக மாற்றினான், அதை ஒரு கோவிலில் வைத்து பூஜை செய்கிறார்கள் .பூஜை செய்து கொண்டிருக்கும் போது தேங்காய் உடைப்பதற்காக கலை தேடுகிறார்கள் கிடைத்ததோ அந்த முதல் கல் தான்....ஒருவர் உங்களை நன்றியோடு வெற்றி வழிக்கே அழைக்கிறார் என்றால் அந்த வலியையும் பொருத்து வெற்றியை அடைய முயற்சிக்க வேண்டும்....
✍🏻கற்பனை செய்:
உங்கள் இலக்குகளை அடைந்ததாக கற்பனை செய்யுங்கள் அதை உருவகப்படுத்திப் பாருங்கள் அதில் உங்கள் முன் தோன்றும்.
இதைப் படித்துவிட்டு ஒரு நிமிடம் கண்ணை மூடவும் ,எடுத்துக்காட்டாக நீங்கள் ஒலிம்பிக்கில் ஓடுவதாக எண்ணிக்கொள்ளுங்கள் ,ஒரு காரை ஓட்டுவதாக எண்ணிக் கொள்ளுங்கள் ,நீங்கள் சந்தோசமாக மிகச் சந்தோசமாக இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்..அத்தனையும் அத்தனையும் உங்கள் முன்னே தோன்றும் அதை நீங்கள் உணர்வீர்கள்.
✍🏻என்னால் மட்டுமே சொல்ல முடியாது.
✍🏻நீங்கள் மட்டுமே உணர வேண்டும்.
✍🏻உங்களிடம் மட்டுமே உள்ளது.
✍🏻அடிக்கடி அலாவுதீனின் விளக்கை பயன்படுத்துங்கள் அதாவது மனதிடம் கேளுங்கள் பூதமாய் இறங்கி உழையுங்கள், உங்களின் சக்திவாய்ந்த எண்ணங்களை அப்படியே கற்பனை செய்து பார்த்துக் கொண்டே இருங்கள் அதுவே உங்களின் வசீகரங்களின் முன்னோட்டம்..
பணத்திற்கான இரகசியம்::
✍🏻 மனிதனின் மனதால் எதை உருவாக்க முடிகிறதோ, அதை அடைய முடியும்.
✍🏻உன்னால் இருக்கும் பணத்தை வைத்து இப்பொழுது சந்தோசமாக இருக்க முடியவில்லை என்றால் உன்னிடம் அதிக பணம் இருக்கும் நேரத்தில் உன்னால் சந்தோசமாக இருக்க முடியாது..
✍🏻உன்னுடைய வருமானம் 10000 என்றால் 20,000 ஆக மாற்ற முடியும் ஏன் 500000 கூட மாற்ற முடியும் அதுதான் இரகசியம்.
✍🏻உங்களின் வேலை ஊக்கமளிக்க கூடிய ஒரு சிந்தனை வைத்துக்கொண்டு, அதனை நம்புதல் வேண்டும் ,அதன்படி நடத்தல் வேண்டும்.உங்களின் சிந்தனை பணமாக வைத்துக் கொண்டால் அது கிடைக்கும் என்று நம்புதல் வேண்டும் ,அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
✍🏻அகத்தில் சந்தோசமாகவும் அமைதியாகவும் இருந்து நோக்கம் சரியாக நல்வழியில் இருந்தால் ,புறத்தில் புற அமைதியும் சந்தோஷத்தையும் நீங்கள் பெற முடியும் ஏன் பணம் உங்களைத் தேடி வந்தடையும்..
✍🏻சில சோம்பேறிகள் இருக்கிறார்கள் எனக்கு பணமே தேவையில்லை !எனக்கு பணமே பிடிக்காது! ஆனால் அவர்கள் கூறுவதற்கான காரணம் அவர்கள் முயற்சிக்காமல் இருப்பது தான்.
✍🏻கடமைக்காக செய்யாதே உன் கடமைக்காக செய்.
உறவுக்கான ரகசியம்::
✍🏻ஒரு குட்டிக்கதை ஒரு இயக்குனர் அவரது மனதை அறிந்து புரியாமலேயே வாராவாரம் ஏன் தினமும் ஒவ்வொரு பெண்களிடம் தவறான உறவு வைத்துக் கொண்டிருந்தார். அவரின் வீட்டின் அறையில் பல்வேறு புகைப்படங்கள் பெண்களின் உருவப்படங்கள், ஒருநாள் இயக்குனருடன் நண்பர் உனக்கு என்ன தேவை இந்த பெண்களிடமிருந்து என்று கேட்டார்?? அந்த இயக்குனருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை அவரது விருப்பம் அவருக்கே புரியவில்லை.. சிறிது நிமிடம் கழித்து எனக்கு வாரத்தில் மூன்று நாள் மூன்று பெண்ணிடம் இருந்தால் போதும் என்று கூறினார்..
அதற்கு அவர் நண்பர் சுவற்றில் உள்ள 3 புகைப்படத்தை தவிர மீதி புகைப்படத்தை கழட்டி தூக்கி எறிய என்று கூறினார்.
படிப்படியாக அவரின் விருப்பம் என்ன என்று அவருக்கு தெரியவருகிறது.
அந்த மூன்று புகைப்படத்தில் இரண்டு புகைப்படத்தையும் தூக்கி எறிந்துவிட்டு ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்திருந்தான் அந்த புகைப்படம் தான் அவருடைய மனைவி அவர் மனைவிதான் .. மனைவி குழந்தை இதுதான் உண்மையான வாழ்க்கை என்று அவருடைய விருப்பம் அவர் மனதில் தெரியப்படுத்தியது.
✍🏻ஒருவரது விருப்பம் தெரியாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்றால் ,அவருடைய பழக்க வழக்கங்களும் அவருடைய சூழ்நிலைகளும் தான் ,எப்பொழுதும் தன்னுடைய விருப்பம் தெளிவாக அறிய வேண்டும் ! மற்றும் நம்மை சுற்றி உறவினர் நண்பர்களிடம் விருப்பம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் .
✍🏻முதலில் தன்னைத் தானே நீங்கள் பாராட்டி கொள்ள வேண்டும்.
✍🏻 தன்னைத்தானே இரசிக்க வேண்டும் இந்த இடத்தில் அழகைப்பற்றி இரசனை இல்லை நமக்கான ஓர் சுயமரியாதையும் நம்மை நேசித்தலும் அதன்பிறகு எல்லோரையும் நேசிக்கும் எண்ணம் இருத்தல் வேண்டும்.
✍🏻நீங்கள் உறவுக்கான இரகசியத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் குறை சொல்வதை நிறுத்த வேண்டும் உங்கள் குறையை போக்க என்ன வழியோ அவ்வழியே செய்திட வேண்டும்.
✍🏻உங்கள் உறவில் குறை சொல்வதை நிறுத்திவிட்டு அவர்கரளுடைய நிறை சொல்லுங்கள். நிறையை சொல்வதில் கவனம் செலுத்துங்கள்.
✍🏻மன்னிக்கும் குணம் தான் உறவின் இரகசியமே அடங்கியுள்ளது.
ஆரோக்கியத்திற்கான ரகசியம்::
✍🏻 நம் உடல் நம் எண்ணங்களால் உருவானது.
✍🏻 சாதாரண நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம் இல்லை .சாகும் நிலை நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்கான இரகசியம்.
✍🏻திறந்த மனது பிரபஞ்சத்தை அளிக்கும். ஆரோக்கியம் ,நிம்மதி ,இயற்கையோடு வாழ வேண்டும் எதிர்மறை வலிகள் இருக்கவே கூடாது.
✍🏻மன இறுக்கத்தை தூக்கி எறி.
✍🏻 ஏற்றத்தாழ்வு அறிகுறிகளை வைத்து பயப்படவேண்டாம்.
✍🏻 உங்களுக்கு ஏதாவது ஒரு நோய் வந்தால் கூட அதைப் பார்த்து பயப்படுவது முதலில் தவிருங்கள்!அது குணம் அடைந்ததாய் நீங்கள் உணருங்கள் !,அதில் நிஜமாகவே உங்கள் வாழ்க்கையில் குணமடைந்து நீங்கள் ஆரோக்கியத்திற்கான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
✍🏻 ஆயிரம் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத உங்களுடைய நோய் உங்கள் மனதால் குணப்படுத்த முடியும்.
✍🏻எவர் ஒருவர் சந்தோசமாக இருக்கின்றாரோ அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் ,அதே ஒருவர் சோகமாக இருந்தால் அவர் ஆரோக்கியமாக இல்லை என்றுதான் அர்த்தம்.
✍🏻ஆரோக்கியத்திற்கான இரகசியம் உங்கள் மனதின் சந்தோசம் மட்டுமே.
உலகத்திற்கான ரகசியம்::
✍🏻 உலகத்திற்கான இரகசியம், தேவைக்கான கவனம் செலுத்தினால் போதும் தேவையில்லாத்தற்கு கவனம் செலுத்த தேவையில்லை.
✍🏻நாம் பொதுவாக சமூகத்திற்காகவும் ஒரு நோய்க்கும் ,ஏழ்மைக்காகவும் ,போதைப்பொருள் தடுப்பதற்காகவும் வன்முறையை தட்டிக் கேட்பதற்கும் ,நாம் இந்த சமுதாயத்தில் எதிர்கொள்கிறோம் ஒரு போராட்டம் செய்கிறோம்.
✍🏻 எந்த ஒரு செயலிலும் நம் சக்திக்கு ஒரு எதிர் சக்தியும் உண்டு என்பதை உணர வேண்டும்.
✍🏻அன்பின் அடையாளம் அன்னை தெரசா, அமைதியின் அடையாளம் காந்தி. அதுபோன்ற உனக்கான அடையாளத்தை உருவாக்கு.
✍🏻 கவனம் போகின்ற இடம் எல்லாம் உன் சக்தி பாயும்.
✍🏻நான் உலகத்தை மாற்ற வேண்டும் நான் மக்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் அது உன்னுடைய வேலை இல்லை.உன்னுடைய வேலை இந்த பிரபஞ்சத்தை கையாழுவதுதான்
✍🏻 இந்த உலகத்தில் எல்லோர்க்கும் ஒரே விதமான தேவைகள் இருப்பதில்லை...!
✍🏻 உன் தேவை என்னவென்று தீர்மானி, தேவைக்கான முயற்ச்சியை தொடர்ச்சியாக செய் உலகம் உன் வசப்படும் ....!!!
உங்களுக்கான இரகசியம்::
✍🏻 உங்கள் கைகளை உற்றுப்பாருங்கள் உங்கள் கையில் சக்தி மிகுந்ததாக உணர்வீர்கள், ஆனால் அது உண்மை அல்ல உங்கள் கைகள் ஆற்றலால் அதிர்ந்து கொண்டிருக்கும்.
✍🏻 எல்லாமே ஆற்றல் என்ன புரியவில்லையா ???முதலில்
பிரபஞ்சம்
பால்வழி அண்டம்
மனிதன்
உடல் உறுப்பு
உயிரணு
அணு மூலக்கூறு
ஆற்றல்
✍🏻நீங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் உங்கள் மனம் பலவீனமாக இருந்தால் உங்களால் அந்த சக்தியைப் பெற முடியாது. இந்தப் பிரபஞ்சத்தையும் அடைய முடியாது.
✍🏻 உன்னுடைய ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
✍🏻சக்தியின் பாரம்பரிய நீ
கடவுளின் பிம்பமே உன் படைப்பு
கடவுள் நீதான்
பிரபஞ்சமே நம் உணர்வுகளின் வெளிப்பாடு...!!!
✍🏻உன்னுடைய தற்போதைய நிலை உனக்கான தகுதிக்கு ஏற்ற நிலை
✍🏻எல்லாமே நாமே .!
* நல்ல எண்ணத்தை உருவாக்கு,
* நல்ல உணர்வுகளை உருவாக்கு,
* நல்ல ஈர்ப்பு விதியை உருவாக்கு ,
* இளமையிலேயே வெற்றிபெறலாம்.
✍🏻 மனசாட்சி இருக்கும்போது மற்ற சாட்சிகள் வேண்டாம். மனமறிந்து செய்யும் செயலுக்கு மனமே நீதியாகும்.
✍🏻பாரம்பரிய பழக்கம் சமுதாய நடைமுறை கலாச்சாரத்தை இவற்றைத் தூக்கி எறிந்து, நாம் எல்லோரும் ஒன்று தான் என்று உணருங்கள்.
✍🏻 முடியும் ,முடியாது இது இரண்டுமே சரி!!
வாழ்க்கைக்கான இரகசியம்::
✍🏻உங்களின் நோக்கமும் திட்டமும் சரியாக இருக்க வேண்டும்.
✍🏻கண்ணதாசன் எழுதியது ,
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ,
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
அதுபோல நம் வாழ்க்கையில் எவனோ நம் விதியை கரும்பலகையில் ஏதாவது எழுதி வைத்து விடுவான் ஆனால் அதை அழித்து உன் விதியை மாற்று .
✍🏻உன் வாழ்க்கைக்கான இரகசியம் மூன்றே மூன்று விஷயம்
* ஒன்று மகிழ்ச்சி இருத்தல்
* இரண்டாவது அன்பாக பழகுதல்
* மூன்றாவது சுதந்திரமாய் உணர்தல்
✍🏻 உனக்கு பிடித்ததை எந்த ஒரு தயக்கமில்லாமல் செய்யப் பழகு.
✍🏻மற்றவர்களுக்காக நீ நடிக்காதே, உன்னுடைய வாழ்க்கையை நீ வாழ்.
✍🏻முடிவு சரியாக எடுங்கள்.
✍🏻 பேரானந்தம் அடையுங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் கதவைத் திறந்து நல்லதை தேடுங்கள் உங்கள் ரகசிய அத்தனையும் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள் உங்கள் சிந்தனை நல்லதாகவே இருக்கட்டும் சிந்தனை நல்லதையே நினையுங்கள் , நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே மாறுவாய்!!!!
✍🏻 வாழ்க்கையின் இரகசியம் தெரிந்தும் ,அதை வாழ்க்கையில் பயன்படுத்தவில்லை என்றால் அவன் தான் மிகப் பெரிய முட்டாள்.
* உங்களுக்குத் தெரிந்தால்
* நீங்கள் பயன்படுத்தாவிட்டால்
* நீங்கள் முட்டாள்
வாழ்க வளமுடன்.
நன்றி:-இரகசியம்
No comments:
Post a Comment