Monday, 4 September 2017

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?


1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
*1) பெண் சாபம் 
இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
*2) பிரேத சாபம் 
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
*3) பிரம்ம சாபம்:*
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
*4) சர்ப்ப சாபம்:*
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
*5) பித்ரு சாபம்:*
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
*6) கோ சாபம்:*
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
*7) பூமி சாபம்:*
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
*8) கங்கா சாபம்:*
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
*9) விருட்ச சாபம்:*
பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
*10) தேவ சாபம்:*
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
*11) ரிஷி சாபம்:*
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
*12) முனி சாபம்:*
எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
*13) குலதெய்வ சாபம் 
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.!!!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
~~~~~~~~~~~~~~~

அதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள், வழிபாடு முறைகள் !

அதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள், வழிபாடு முறைகள் !

நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் மட்டுமே, உங்களுக்கு அது தெரிய வரும். அந்த வகையில், சில அபூர்வ மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் - உங்களுக்கு அளப்பரிய ஆற்றல் கிடைக்க வாய்ப்புள்ளது.நம்பிக்கையுடன் , நீங்கள் செய்து வாருங்கள். செய்து வரும் காலத்திலேயே உங்களை சுற்றி நடக்கும் , மாற்றங்களை உணர முடியும்.
மகாலட்சுமியுடன் திருப்பாற்கடலில் தோன்றியது சங்கு.கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வலம்புரிச்சங்கு ஓங்கார ஒலியெழுப்பும். சாதாரணச் சங்கில் ஓம்கார ஒலி உள்ளடங்கியிருக்கும்.சங்கொலி துர் ஆவிகளை விரட்டும்.சங்குப்பக்கம் துர் ஆவிகள் வராது. அதனால், குழந்தைகளுக்குக் கூட சங்கில் பால் ஊற்றிப்புகட்டுவர்.
மனித மண்டை ஒட்டுப்பூஜையும்,சங்குப்பூஜையும் ஒன்றுதான்.மண்டைஓடு காளிக்குரியது.இது சத்ரு சம்ஹாரம் செய்யும். சங்கு லட்சுமிக்குரியது.சங்கு பூஜை செய்து வந்தால்,தன ஆகர்ஷணம் (பண வரவு பல மடங்கு அதிகரித்தல்) ஆகும்.
சங்கு காயத்ரி மூலம் பிற உலகத்துடன் சூட்சுமத் தொடர்பு கொண்டுள்ளனர். இப்போதும்,தமிழ்நாட்டில் மிகச் சில இடங்களில் இந்தத் தொடர்பு இருக்கிறது. சங்கினைப் பயன்படுத்தாத நேரத்தில்,வெள்ளிப்பாத்திரத்தில்,சுத்தமான நீரில் மூழ்க வைத்திருக்க வேண்டும். உபயோகிக்கும்போது அதை எடுத்து, தூய துணியினால் நன்கு துடைத்துவிட்டு, அதற்கு சாம்பிராணி புகைக் காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் முற்காலத்தில் துறவிகள் கர்ண எட்சிணி மற்றும் கர்ண பைரவர் மந்திரங்களை ஜபித்துள்ளனர்.அது துறவிகளின் உடற்கூறைப்பொறுத்து வலது காதிலோ அல்லது இடது காதிலோ முக்காலமும் உரைக்கும்.
மனதால் கேள்வி கேட்க,கேட்க, பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.
வடநாட்டில் சப்தாகர்ஷிணி என்னும் பெண் தேவதை மந்திரம்சொல்லி அருள்வாக்கு,ஜோதிடம்,கைரேகை,பிரசன்னம் என பல தொழில் செய்கின்றனர். சப்தாகர்ஷிணிக்கு ரூபம் கிடையாது.மந்திரம் மட்டும் உண்டு. அடிக்கடி பால் சாதம் ,வாழைப்பழம் சாப்பிட்டு வர சித்தியாகும். காதில் கனகபுஷ்பராகம் கடுக்கண் அணிவது ஒரு பிளஸ்பாய்ண்ட், பழைய வித்வத்கள் அனைவரும் கடுக்கண் அணிவர் இதற்குத்தான்.
நமது உடலை மந்திர உடலாக மாற்றிட வேண்டும்.மனம் விருப்பு வெறுப்பின்றி இருந்தால்தான் செய்திகளை தூய மனதில் எளிதில் பெறலாம். ஒரு லட்சம் தடவை சப்தாகர்ஷிணி மந்திரம் ஜபிக்க வேண்டும்.பின்,உங்களின் கைக்கு அடக்கமான வெண்மையான சங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் குரு அம்சம் எனில் வலதுகாதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,நீங்கள் சுக்கிர அம்சம் எனில் இடது காதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,அந்த ஒரு லட்சத்துக்கு மேல் ஜபித்து வர வேண்டும்.சங்கின் கீழ்ப்பகுதியி காதின் கீழ் மடலில் பொருத்தப்பிடித்துக் கொள்ள வேண்டும்.சங்கில் நல்லதேவதை தான் பேசும்.

சப்தாகர்ஷிணி மந்திரம்:
ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
சப்தாகர்ஷணி ஆகர்ஷய ஆகர்ஷய
வா வா ஸ்வாஹா
இந்தப் பயிற்சியை 21 வயது நிரம்பியவர்கள் தான் செய்ய வேண்டும்.எந்த மதத்தைச் சேர்ந்தவரும் செய்யலாம். பெண்கள் மாதஓய்வு நாட்களில் 5 நாட்கள் நிறுத்தவும். அனைவரும் அசைவம்,மது நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும். இந்தப்பயிற்சிக்கு தனி அறை அவசியம்.இயலாவிட்டால்,அந்த வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் மது,மாமிசம்,முட்டை தொடக்கூடாது.இது கட்டாயம்!!!
எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர்.எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை வீட்டிலும் வளர்க்கலாம்.இதன் பூவை வைத்து விநாயகருக்கும்,சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம்.விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும்.இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள்.வேர்ப்பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள்.அதனால்,அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது.தரமான விநாயகர் பிள்ளையார் பட்டியிலும்,சூரியனார் கோவிலிலும் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
அங்கு போக முடியாதவர்கள்,உங்களுக்கு நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு,அதன் வேரை எடுத்து உள்ளூர் ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளவும்.ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி,நிழலில் காய வைக்கவும்.இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு,நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்படி தயார் செய்து விட்டோம்.இனி,அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்;தூப தீப நைவேத்தியம் செய்யலாம்;ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தன ஆகர்ஷணம் உண்டாகும்.(ஆமாம்,பண வரவு பல மடங்காக அதிகரிக்கும்) சொர்ண கணபதி மந்திரம் அருகிலுள்ள சிவாச்சாரியாரிடம் அணுகி, அடிபணிந்து தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

சித்தர் பழமொழிகள்

சித்தர் பழமொழிகள்

1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்
1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்
உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.
5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.
6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.
விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

தீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை

தீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை

சிவபெருமான் உலகம் உய்யும் பொருட்டு எடுக்கும் வடிவங்கள் கணக்கில் அடங்காது. அவற்றில் சரபேஸ்வரராக எடுத்த வடிவம் வெகு சிறப்பு வாய்ந்தது. தானெனும் அகந்தை தாங்காத சுமையாகிப் போன ஹிரண்ய கசிபுவின் தெய்வ நிந்தனையை கேட்க வெண்ணாத பிரகலாதன் கேட்டபடி, தூணைப் பிளந்து வெளிவந்தார் நரசிம்மர்.
ஹிரண்ய கசிபுவின் நெஞ்சைப் பிளந்து, குடலை உருவி, உதிரம் குடித்து, அவன் கதை முடித்தும், கோபம் அடங்காமல் அசுர ரத்தம் தலைக்கேறி தேவரும் நடுங்கும் வண்ணம் அழிவு சக்தியாக ஆர்ப்பரித்து எழுகையில் சிவபெருமான் திருவடியில் அனைவரும் அடைக்கலம் புகுந்தனர்.
சிவபெருமான், பறவையும், மனித உடலும், மிருகமும் கலந்த ஒரு மகா பயங்கர வடிவெடுக்கின்றார். அவரே சரபேஸ்வரர். சரப திருவுருவின் நிழல் பட்ட உடனே நரசிம்மத்தின் உக்கிரம் ஒடுங்குகிறது.
உக்கிர நரசிம்ம அவதாரத்தினை, சாந்த நரசிம்மமாய், லட்சுமி நரசிம்மமாக, வெளிப்பட்ட ருத்ரத்தை தன்னுள்ளே ஐக்கியப்படுத்திக் கொண்டு சாந்த ரூபமாக, விளங்கும் ஸ்ரீ சரபேஸ்வரன் சகல சத்ரு நாசராகவும் பிறவிப் பிணியை அகற்றுபவராகவும், கஷ்டங்களை போக்குபவராகவும் விளங்குகிறார்.
பிரதோஷ நேரத்தில் தான் ஆதிபரம் பொருளாம் சிவபெருமான் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாய் அவதாரம் கொண்டு ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்கிரக சக்தியினைத் தணித்தார். எனவே, பிரதோஷ நேரத்தின் போது ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு அதி அற்புத பலன்களைப் பெற்றுத் தருகிறது.
இதேபோல், நித்யபிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை தினந்தோறும் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை வழிபட்டு வந்தால் எத்தகைய தீயசக்திகளையும் துணிவோடு எதிர்த்து நிற்கும் மன ஆற்றலைப் பெறலாம்.
சரபேஸ்வரர் ஸ்லோகம்
ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய
ஸ்ரீ சரபாஷ்டகம்
- இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

ஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்!!!!

ஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்!!!!


மருத்துவக் கடவுளும், ஆரோக்கியம் அருளும் அமிர்த கலசத்தைத் தமது கரங்களில் தாங்கியிருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் மந்திரத்தை இங்கே காணலாம்.
இந்த மந்திரத்தை ஏதாவதொன்றைத் தினமும் 48 முறைகள், பசும்பாலும், துளசி தீர்த்தமும் நைவேத்தியமாக வைத்து, உச்சாடனம் செய்து அவற்றை அருந்தி வரவேண்டும். இந்த முறையால் இழந்த ஆரோக்கியம் மீண்டும் திரும்பும். இதை நமது பிரச்சினைக்குத் தக்கவாறு பயன்படுத்திப் பலனடையலாம்.
‘ஓம் வைத்ய ராஜாய வித்மஹே
அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரஜோதயாத்’
‘ஓம் நாராயணாய வித்மஹே மஹா
ஒளஷதாய தீமஹி தந்நோ
தன்வந்திரி ப்ரஜோதயாத்’
இந்த இரண்டில் எது நமக்கு பிடித்தமானதோ அந்த ஒன்றை மட்டும் உச்சாடனம் செய்தால் போதுமானது. அதன் மூலமாகவே நாம் விரும்பும் நல்ல விளைவுகளைப் பெற்று மகிழலாம். 

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

நம்பினால் நம்புங்கள்.....!!!

நம்பினால் நம்புங்கள்.....!!!

மது,புகை,முறையற்ற காமம்,தீய எண்ணெங்கள் போன்ற பழக்கத்திலிருந்து விடுபட...
ஆறுமுகம், ஆறு கரம் உடைய முருக பெருமானை அவரவர்கள் நட்சத்திரத்தன்று அர்ச்சித்து குங்கிலியம்,வெண்கடுகு,சாம்பிராணி தூபம் இட்டு வழிபட தீய பழக்கம் உடனே நீங்குவது பேரதிசயம்...

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

அரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு!!!

அரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு!!!
To get government job to worship the sun fasting

சூரியன் ஒருவர் தலைமை பீடத்தில் அமரவும், அரசு அலுவல்கள் கிடைக்கவும், பல்களால் ஏற்படும் நோய்களுக்கும் காரணமாக அமைபவர் தினமும் சூரிய நமஸ்காரம் செய்தால் சிறப்பு. அரசு வேலை அமைய காரணமாக இருக்கும் சூரியனை வணங்குவதால் சூரியபகவான் உங்களுக்கு அரசாங்கத்தில் கடைமட்டம் என்று சொல்லக்கூடிய கடை நிலை வேலையையாவது வணங்குவார். வாரம் ஒரு முறை சூரியனுக்கு உகந்த நாளான ஞாயிறு அதிகாலை எழுந்து பிரம்ம முகூர்த்தமான 4.30 முதல் 6 மணி வரை ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்து விட்டு, காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் சூரிய உதயம் பார்க்கவும்.
சிறு வாழை இலையில் சூரியனுக்குரிய கோதுமை பதார்த்தங்கள், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், சிகப்பு மிளகாய் வைத்து வணங்கி வரவும். அன்று முழுவதும் சூரிய பகவானுக்கு விரதம் இருக்கவும். முடிந்தால் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விரதம் தொடங்கும் முதல் வாரம் மட்டுமாவது சிகப்பு வஸ்திரம் சூரியபகவானுக்கு வாங்கி சார்த்தவும். விரதம் இருக்கும் ஏதாவது ஒரு வாரம் ஞாயிறு அன்று சூரியனார் கோவிலுக்கு சென்று வணங்கி வரவும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com