Thursday, 29 June 2017

*கொல்லிமலை ரகசியம்*.

*கொல்லிமலை ரகசியம்*.


பல ஆண்டுகளுக்கு பிறகு 18 சித்தர்களின் தாய் வீடான கொல்லிமலை அரபளீஸ்வரர் ஆலயத்தை புனரமைக்க தொடங்கி உள்ளோம் மகா சித்தர்கள் டிரஸ்ட் அன்பர்களினால்... மே மாதம் 8 ம் திகதி கும்பாபிஷேகம்.... அனைவரும் இணைவோம்...
கொல்லிமலை, இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீட்டர் உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.
பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கி.பி. 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான்.
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த மலைகளில் கொல்லிமலையும் ஒன்று. நாமக்கல் அருகிலுள்ள கொல்லிமலையில்தான் எல்லா சித்தர்களும் யோகம், ஞானம், மருத்துவம் போன்ற அரிய கலைகளை சிவபெருமான் தலைமையில் நந்தி தேவரிடம் பயிற்சி எடுத்தனர் என்பர்.
இந்த மலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் உள்ளன. இதனால் கொல்லி மலையை மூலிகை மலை எனவும் அழைப்பார்கள்.
அடுக்கடுக்காக அமைந்திருக்கும் இந்த மலையின் நடுவில் ஒரு அருவி பாய்ந்தோடுகிறது. இந்த அருவி எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்தக் கொல்லிமலையில்தான் 18 சித்தர்களும் சிவபெருமானை குருவாக ஏற்றுச் செய்த குருமுப்பு என்ற மருந்தைத் தயாரித்தார்கள்.
இந்த முப்பு மருந்து நரை, திரை, மூப்பை மாற்றும் வல்லமை பெற்றது. இந்தக் குருமுப்பு மருந்தின் ஒரு பகுதியை 18 சித்தர்களும் தங்கள் மருத்துவப் பணிக்கு எடுத்துக்கொண்டு மீதியைக் கொல்லிமலையிலேயே அரங்கப்பம்மன் கோயில் அருகில் சித்தர்களின் தவசக்தியால் ஒரு பெரும் பள்ளத்தில் வைத்து அதன்மேல் பெரும் பாறையை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கான அடையாளமாக அந்தக் கோயிலின் முன் குறியிடப்பட்டிருக்கிறது. அத்தோடு மருந்துக்குக் காவலாக நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்களைக் காவல் இருக்கப் பணித்தனர்.
அதன் அடையாளமாகக் கிழக்குப் பக்கம் கருப்பண்ண சாமி சிலையும் மேற்குப்பக்கம் மாசி சின்னண்ணசாமியும், தெற்குப் பக்கம் கொல்லி யம்பாவையும், இதற்கு நடுவில் எட்டுக்கை காளியும் இருந்து காவல் இருக்கின்றனர். இந்தத் தெய்வங்களை இன்றும் மக்கள் பக்தியுடன் வழிபடுகின்றனர்.
கொல்லிமலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும் குறிப்பாக, சிறப்பான மூலிகையான முடவாட்டுக்கால் அதிகம் தென்படுகின்றன. இந்த மூலிகை மண்ணில் வளராது. பாறைகளின் மேலும், மரங்களின் மேலும் படரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. அதன் இலையே காய்ந்து சுருண்டு அதன்மேலே கவசம்போல் ஒட்டிக் கொள்ளும். இந்த மூலிகை காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது.
முடவாட்டுக்கால் மூலிகையை மனிதனின் கருவிலிருந்து இறுதிவரை மருந் தாகப் பயன்படுத்தலாம். இதை மருந்தாகப் பயன்படுத்த பக்குவம் தேவை. கருப்பை வளர்ச்சி முதல் சிறுநீரகம் சிறுத்துப் போதல், உள்ளுறுப்புகள் சுருங்காமல் இருக்கச் செய்யும், புற்றுநோயைப் போக்கும். அதோடு எல்லாவிதமான வாதம், பித்தம், சிலோத்தும நோய்களைச் சமநிலைப்படுத்தி உடலைப் பக்குவப்படுத்தும்.
முடவாட்டுக்கால் மூலிகையைப் பதப்படுத்தி மருந்தாகச் செய்யத் தெரியாத வர்கள் இதை சூப் செய்து சாப்பிடலாம். முடவாட்டுக்கால் மேல்தோலைச் சீவி பொடிப் பொடியாக நறுக்கிச் சிறிது மஞ்சள் பொடியும் உப்பும் போட்டு வேகவைத்து பிறகு வடிகட்டி அந்த மூலிகைச் சாறை (சூப்பாக) தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் அனைத்து நோய்களும் நீங்கிவிடும். ராஜ உருப்புகள் பலப்பட்டு ஆயுள் விருத்தியாகும்.
கொல்லிமலையில் 18 சித்தர்கள் வாழ்ந்து தவம் செய்துள்ளனர் என்பதற்கு அடையாளமாக கோரக்கர் குகை, ஔவையார் குகை, பாம்பாட்டிச் சித்தர் குகை, கோரக்கர் யாக குண்டம் போன்ற பல சித்தர்கள் வாழ்ந்த அடையாள இடங்கள் உள்ளன.
கோரக்கர் குண்டத்தில் காடை சம்பா அரிசி, கருங்குருவை அரிசியில் நெய் பொங்கல் வைத்து கரும்பு, வெல்லம் வைத்துப் படைத்து பக்தியோடு யாகம் செய்து பிறகு சிறிது தூரத்தில் உள்ள கூட்டாற்று மூலையில் தங்கினால் இன்றும் அன்று இரவு சித்தர்கள் ஜோதி ரூபத்தில் காட்சி தருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
இதை நான் ஓலைச்சுவடியில் பார்த்து முறையாக பூஜை செய்து கண்கூடாகக் கண்டேன்.
இன்றும் கொல்லி தலையில் அரங்கநாயகி உடனுறை அறப்பலீஸ்வரர் ஆலயத்தில் தினசரி 18 சித்தர்களும் காலை நேரத்தில் ஜோதி வடிவாக வந்து சிவனை வணங்கிச் செல்கின்றனர்.
இதை உண்மையான பக்தியோடு வணங்குபவர்கள் கண்களுக்குத்தான் ஜோதி வடிவான சித்தர்கள் காட்சி தருவார்கள்.
கொல்லிமலையில் பல இறையதிசயங்கள் அடங்கியுள்ளன. இதை முழுமை யாக அறிந்தவர், தெரிந்தவர் இல்லை.
கொல்லிமலையின் இறையதிசயத்தை முழுமையாக அறிந்து உரைக்க மனித மூளையால் முடியாது.
கொல்லிமலையில் 80 கிராமங்கள் உள்ளன.
தமிழ் மக்களான இவர்கள் விவசாயத்தை நம்பியே இருக்கின்றார்கள்.
கொல்லிமலையைச் சுற்றி 8 கோயில்கள் உள்ளன. முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில் செய்ய விரும்பி கொல்லி மலையைத் தேர்ந் தெடுத்ததாகவும், அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்குமாறு கொல்லிப் பாவையிடம் வேண்டியதாகவும் கதைகள் உள்ளன.
அதற்கிணங்க கொல்லிப் பாவை தனது வசியப் புன்னகையால் தீய சக்திகளை விரட்டியதாகவும் கூறுகின்றனர். கொல்லி மலையில், கொல்லிப் பாவைக்கு இன்றும் ஒரு கோவில் உள்ளது.
மலையின் தென் திசையில் உள்ள கொல்லிப்பாவை கோயிலை இதுவரை யாரும் சென்று பார்த்ததில்லை என்கிறார்கள். காரணம் கடும் காட்டைத் தாண்டிச் செல்லவேண்டும். அந்தக் காட்டை நோக்கி நடக்கும்போது மிகப் பெரிய கொடிய விஷம் கொண்ட கருவண்டுகள் நம்மைத் தாக்கும். இதனாலேயே யாரும் அங்கு செல்வதில்லை.
நாமக்கல் நகரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது.
கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களிலி ருந்து பேருந்து வசதி உள்ளது.
மலைப்பாதையின் தூரம் 26 கி.மீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.
சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுநர் களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார் மற்றும் வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாகச் செல்வது நன்று.
இறையதிசயமும் வீரியமான மூலிகைகளும் நிறைந்த கொல்லிமலை நீர் வளமும் நில வளமும் நிறைந்தது.
ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த கொல்லிமலையில் இன்னும் பல அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. சித்தர்கள் இங்கு நிகழ்த்திய அற்புதங்களையும் வீரியமான மூலிகைகளின் ரகசியங்களையும் அடுத்தடுத்துப் பார்ப்போம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

கண் பார்வை குறை நீங்க… எண்கண் முருகன்!

கண் பார்வை குறை நீங்க… எண்கண் முருகன்!


எண் பார்வையில் கோளாறு, செவ்வாய் தோஷம்,
கண்நோய் போன்ற பிரச்னைகளை நிவர்த்திக்கும்
தலமாக விளங்குகிறது எண்கண் திருக்கோயில்!

முருகப்பெருமானின் இந்த எண்கண் திருத்தலம்
திருவாரூர், கொடவாசல் வட்டத்தில் உள்ள முகுந்தனூருக்கு
அருகில் உள்ளது.

அசுரன் சூரபத்மனை வதம் செய்ய அன்னை உமாதேவி
வேலவனுக்கு வேல் வழங்கிய தலம் “சிக்கல்’ என்பார்கள்.

கந்தசஷ்டி திருவிழாவின்போது வேல் வழங்கும்விழா
சிக்கலில் சிறப்பாக நடைபெறும்.

வேல் வாங்கவரும் முருகன் திருமுகத்திலிருந்து வியர்வை
துளிர்த்து விழுவதை காணமுடியும். ஐந்து உலோகங்களைக்
கலந்து முருகனின் இந்த அற்புத உற்சவத் திருமேனியை
உருவாக்கிய சிற்பி, சிற்ப சாஸ்திரங்களில் நுணுக்கங்களை
நன்கு அறிந்து தேர்ச்சி பெற்றவர்.

சோழ மன்னரின் கீழ் குறுநில மன்னராய் ஆண்டுவந்த
முத்தரையரின் கீழிருந்தது இப்பகுதி. சிற்பி இத்தகைய
அற்புதச் சிலை போல் வேறு எவருக்கேனும் செய்து கொடுத்து
விடக்கூடாது என்று கருதிய மன்னன் சிற்பியின் வலக்கை
கட்டை விரலைத் தானமாகப் பெற்று விடுகிறான்.
ஆனால், சிற்பியின் எண்ணமும் விருப்பமும் வேறாக இருந்தன.

உலோகத்தில் செய்த உற்சவ திருமேனிபோல் உயிரோட்டம்
மிக்க கற்சிலையை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஜீவ சரீரமும் ரத்தம் போன்ற ரேகைகள், நீலமும் கருமையும்
கலந்த கல்லைத் தேர்ந்தெடுத்து, நல்ல முகூர்த்த நேரத்தில்
முருகனை தனது சிந்தையில் நிறுத்தி, ஆறுமுகமும்
பன்னிரெண்டு திருக்கரங்களும் கொண்ட ஆறுமுகக் கடவுளின்
திருமேனியை உருவாக்கினார்.

ஆறு திருமுகங்களும் பன்னிரெண்டு திருக்கரங்களோடு மயில்
மீது அமர்ந்திருக்கும் மூர்த்திக்கு மயிலின் இரண்டு கால்களே
ஆதாரமாய் அமைந்திருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.
இந்த தெய்வீகச் சிலையை நாம் இப்போதும் எட்டுக்குடி
திருத்தலத்தில் (திருத்துறைப் பூண்டியிலிருந்து சுமார் 15 கி.மீ.
தொலைவு) தரிசிக்கலாம்.
சிற்பக் கலையின் உன்னத சிகரமாக விளங்கும் எட்டுக்குடி
முருகனின் பேரழகையும் பெருஞ்சிறப்பையும் அறிந்த முத்தரச
மன்னன் சிற்பியின் இரு கண்களையும் பறித்து விடுமாறு
உத்தரவிட்டானாம்.
இரு கண்களையும் வலக்கை கட்டை விரலையும் இழந்த போதிலும்
கூட சிற்பி மனம் தளரவில்லை. வன்னி மரங்கள் அடர்ந்த வனத்தில்
ஒரு பாறையைத்தொட்டுப் பார்த்தபோது அது உத்தமமான கல்லாக
இருப்பது கண்டு,
ஒரு சிறுமியின் உதவியோடு அந்த கருங்கல்லில் ஆறுமுகன் மயில்
மீது அமர்ந்த கோலத்தில் ஓர் அற்புத சிலையை உருவாக்கினார்.
முருகனைப் பிரார்த்தித்துக்கொண்டு ஆறுமுகனுக்கு கண் திறக்கும்
தருணத்தில் சிற்பிக்கும் பார்வை வந்துவிட்டது.
சிற்பிக்கு பார்வை அருளியது எண்கண் முருகன்!
இத்திருத்தலத்தில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் கிழக்குநோக்கியும்
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனுக்கு உபதேசித் தருளியதால்
மூலவர் ஆறுமுகப் பெருமான் மயில் மீதமர்ந்த கோலத்தில் தெற்கு
நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறார்.
மூலவர் சந்நிதிக்கு ஞானசபை என்றும் அதன் கீழ்புறம் ஆறுமுகன்
உற்சவர் சந்நிதி தேவசபை என்றும் அழைக்கப்படுகிறது.
அதன் கீழ்புறம் நடராஜர் உற்சவ சந்நிதியும் அன்னை பிரகன்நாயகி
சந்நிதியும் தெற்கு பார்த்த சந்நிதிகளாகவே உள்ளன.
செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமான் இத்தலத்தில் தெற்கு
முகமாக அமர்ந்து காட்சியளிப்பது தனிச்சிறப்பு. செவ்வாய்தோஷ
நிவர்த்தித் தலமாக எண்கண் கருதப்படுகிறது.
கடன் பிரச்னை, சத்ருக்களின் தொல்லை, திருமணத்தடை போன்றவை
இத்தலத்து முருகனை வழிபட நிவர்த்தியாகிறது.
கண்பார்வை குறைந்தவர்கள், கண்நோய் உள்ளவர்கள், பிரதிமாதம்
விசாக நட்சத்திரத்தன்று எண்கண் திருத்தலத்தில் சண்முகார்ச்சனை
செய்து வழிபட கண்பார்வை முழுகுணம் பெறுவது இத்தலத்தின்
குறிப்பிடத்தக்க அற்புதமாகும்.
ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்
படுகிறது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

நவக்ரஹ ஸ்தோத்திரம் !!!

நவக்ரஹ ஸ்தோத்திரம் !!!


நவகிரகங்களை நாம் தினமும் துதித்து வணங்குவத்தின் மூலம் நமக்கு அந்தந்த நவகிரக நாயகர்களினால் ஏற்படும் தொல்லைகள் குறையும். அந்த ஒன்பது நாயகர்களும் அவர்களுக்கு இட்ட வேலைகளையே செய்கின்றார்களே தவிர வேண்டும் என்றே எவருக்கும் கெடுதல்களைப் புரிவது இல்லை. நாம் பூர்வ ஜென்மத்திலும், இந்த ஜென்மத்திலும் செய்துள்ள, செய்து வரும் பாவக் காரியங்களுக்கு ஏற்ப நமக்கு விதிக்கப்பட்டு உள்ள தண்டனையையே அவர்கள் தருகிறார்கள்.

நாம் செய்துள்ள பூர்வ ஜென்ம பாப, புண்ணியங்களின் கணக்கின்படி நமக்கு ஒரு குறிப்பிட்ட பிறப்பு தரப்படுகின்றது. நமக்கு கொடுக்கப்பட்டு உள்ள அப்படிப்பட்ட பிறப்பில் இன்ன காலத்தில் இன்ன தண்டனை, கீர்த்தி, சோதனை, போன்றவற்றை பெற வேண்டும் என முடிவு எடுக்கப்படுகின்றது. அதைத்தான் ஜாதகமாக கணித்து நம் ஜாதகத்தில் அந்த கிரக தோஷம் உள்ளது, இந்த கிரக தோஷம் உள்ளது எனக் கூறுவார்கள்.

கிரக தோஷம் என்ன என்றால் குறிப்பிட்ட தண்டனையை தரக்கூடிய நவகிரக நாயகர்கள் தரும் தண்டனை காலத்தையே கிரக தோஷம் என கூறப்படுகின்றது. அது மன வேதனை, பண விரயம், சரீர கஷ்டங்கள், தேவையட்ற அலைச்சல், கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, பொருள் நாசம் போன்றவை.
அப்படிபட்ட தண்டனைகளை தரவல்ல நவகோள நாயகர்களினால் அந்தந்த நேரத்தில் தரப்படும் தண்டனையை குறைத்து அளிக்கவும் முடியும்.

அதற்காகத்தான் நவகிரக தரிசனங்கள், அந்தந்த கிரகங்களுக்கு பீடை பரிகாரம் போன்றவற்றை செய்து அந்த தண்டனையை தரும் நாயகனை வேண்டி தவமிருக்க (தவம் என்பதை இங்கு வேண்டுகோள், விரதம், சுயக் கட்டுப்பாடுகள் போன்றவை என படிக்க வேண்டும்) அந்த வேண்டுகோளை வைக்கும் மனிதர் உண்மையான பக்தியுடன் தன்னை வேண்டுகிறாரா என சோதித்தப் பின் அவர் அதை ஏற்றுக் கொண்டால் அவரே அந்த தண்டனையின் கடினத் தன்மையைக் குறைக்கலாம். இல்லை தம்மை அந்த பாபிகள் வேண்டுவது மனதார அல்ல, மனிதனுக்கு பணம் கொடுத்து ( லஞ்சம்) செய்து கொள்ளப்படும் வேலையைப் போல எவரோ அதை செய், இதை செய் எனக் கூறியதைக் கேட்டு ஒரு வேலையைப் போல செய்ய நினைத்தால், எத்தனை வேண்டுதல்களை செய்தாலும் தண்டனையின் தன்மை குறையாது.

அது மட்டும் அல்ல அப்படிப்பட்ட வேண்டுதல்களை செய்வது உண்மையில் அவரை நம்புவதினால்தானா இல்லை மற்றவர்கள் கூறுகிறார்கள் என லாட்டரி சீட்டு வாங்குவது போல செய்கின்றார்களா என அவர் கண்காணிப்பார். அவ்வப்போது வேண்டும் என்றே சில கடின தண்டனையையும் சோதனைகளையும் தருவார். அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவரை வழிபட்டால் கிடைக்க உள்ளது நன்மைதானே தவிர வேறு அல்ல. அதே நேரத்தில் கொடும் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள் எத்தனைதான் வேண்டினாலும் அந்த தண்டனையை ஏற்றே ஆக வேண்டும். கொடும் தண்டனையை கொடுக்க நம்மை நோக்கி வருபவர் முன்னால் - நவகிரக நாயகரிடம்- நாம் கைகூப்பி நிற்கும்போது அவர் மனதில் நம் மீது பரிதாப உணர்வு தோன்றும். அப்போது அவர் தர உள்ள தண்டனையின் வேகத்தின் தன்மையும் குறையும்.

அப்படி தண்டனை தரும்போது மன உளைச்சலை தாங்கக் கூடிய சக்தி உள்ளவர்களுக்கு மன உளைச்சலை அதிகரித்தும், சரீர உபாதையை தாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு சரீர உபாதைகளை அதிகரித்தும், பணம் உள்ளவர்களுக்கு பண விரயத்தை ஏற்படுத்தியும் தண்டனைகளின் தன்மைகளை மாற்றி அமைப்பதுண்டு.
அதற்காகத்தான் கிரகப் பரிகாரம் என்ற பெயரில் அவர்களை பல வகைகளிலும் பூஜித்து திருப்பதிப்படுத்துதலும், அவரையே சுற்றி வந்து (நவகிரக பிரதர்ஷனம்) அவரை வேண்டுவதும் நடைபெறுகின்றன. அந்த வேண்டுகோள்களின் தன்மை நியாயமாக, நல்ல உணர்வோடு, பக்திபூர்வமாக இருந்தால் நமக்கு தரப்படும் தண்டனையின் வலி நமக்கு மனதில், வாழ்கையில் ஆழமான காயத்தை ஏற்படுத்தாமல் இருக்க அவர் நிச்சயம் நமக்கு உதவுவார்.

( மேலே தரப்பட்டுள்ளது ஒரு உபன்யாசத்தில் கேட்டது )

ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நவக்ரஹங்களை பூஜித்துவிட்டு மற்ற நாட்களில் அவர்களை மறப்பதைவிட தொடர்ந்து அவர்களை நாம் தினமும் வணங்கி வந்தால் நமக்கு வர உள்ள கஷ்ட நாட்கள் வராமலேயே இருக்கும். அதற்காக அந்த ஒன்பது நாயகர்களையும் தினமும் ஒரு முறை உளமார நினைத்து வணங்க மிக எளிய மந்திரம் தரப்பட்டு உள்ளது. அதை தினமும் உச்சரிப்பதின் மூலம் நமது வாழ்கை சிக்கல் இன்றி , பணப் பிரச்சனைகள் இன்றி, தடங்கல்கள் இன்றி சீராகச் சென்று கொண்டு இருக்கும் என்பது நிச்சயம். அனைத்துக்கும் தேவை நம்பிக்கை. தினமும் ஒருமுறை பூஜை அறையில் நின்று கடவுளை நோக்கி நாம் சொல்ல வேண்டிய நவகிரக மந்திரம் கீழே தரப்பட்டு உள்ளது.
வேலை செய்பவர்களுக்கு இதை வீட்டில் படிக்க நேரம் இல்லை என்றால், மந்திரத்தை தனியாக ஒரு காகிதத்தில் எழுதி அலுவலகத்தில் தமது மேஜைகளில் வைத்துக் கொண்டு அலுவலகத்தில் காலையில் தமது காரியத்தை துவக்கும் முன் ஒரு முறை படித்துவிட்டு காரியத்தை ஆரம்பித்தால் போதும். மாதம் ஒரு முறையாவது ஏதாவது ஆலயத்துக்குச் சென்று அங்கு உள்ள நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வரலாம். அது போதும்.

நவக்ரஹ ஸ்தோத்திரம் !!!

#க்ராஹனம் அதிராதித்யோ , லோக ரக்ஷண கரகாஹ் விஷமஸ்தன
சம்பூதம் , பீடம் ஹரது மீ ரவிஹ்
( அர்த்தம் :- அமர்ந்து உள்ள இடத்தில் இருந்து தொல்லை தர முடிந்தவரும்,
இந்த உலகையே காத்தருள்பவரும்
நஷத்திரங்களிலேயே முதல்வருமான சூரியனாரே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும் )

#ரோஹிநீஷ சுதா மூர்த்திம் , சுதகத்ரா சுதசனாஹ்
விஷமஸ்தன சம்பூதம் , பீடம் ஹரது மீ விதுஹ்
( அர்த்தம் :- அமர்ந்து உள்ள இடத்தில் இருந்து தொல்லை தர முடிந்தவரே
அமிருதமானவரே , அமிருதத்தின் மீது அமர்ந்து கொண்டு அமிருதத்தையும் பொழிபவரே ,
ரோஹிணி நஷத்திரத்தின் தலைவனான சந்திரனே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#பூமி புத்ரோ மகா தேஜோ , ஜகாத பாயக்ரித் சத
விஷ்டிக்ரித் வ்ரிஷ்டி ஹர்த்த ச்ச , பீடம் ஹரது மீ குசாஹ்
( அர்த்தம் :- நினைத்தால் மழையைத் தந்தும், நினைத்தால் அதை தடுத்தும்
இந்த உலகில் பயத்தை ஏற்படுத்தும் பூமியின் புதல்வனே,
என்றும் ஜொலித்தபடி இருக்கும் அங்காரகனே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#உத்பதரூபோ ஜகதம் , சந்த்ரபுத்ரோ மகாத்யுதி
சூர்யா பிரியா கரோ வித்வான் , பீடம் ஹரது மீ புதஹ்
( அர்த்தம் :- இந்த பூமியில் அனைத்தையும் படைப்பவனே
அதி புத்திசாலியும் சந்திரனின் மகனுமானவரே
சூரியனாரால் நேசிக்கப்படுபவரில் முதல்வரான புதனே,
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#தேவ மன்த்ரி விஷலக்ஷாஹ் , சத லோக ஹிதே ரதஹ்
அநேக சிஷ்ய சம்பூர்னஹ் , பீடம் ஹரது மீ குருஹ்
( அர்த்தம் :- பெரிய கண்களைக் கொண்டவரும்,
தேவ சபை அமைச்சருமானவரே
இந்த உலகை என்றும் காத்து நிற்க நினைப்பவரே
பல சீடர்களை தன்வசம் கொண்ட குரு பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#தைத்ய மன்த்ரி குருஸ்தேஷம் , ப்ரணதஸ்ச மஹாமதிஹ்
ப்ரபுஸ்தர க்ரஹனம் ச்ச , பீடம் ஹரது மீ ப்ரிஹு
( அர்த்தம் :- ராக்ஷசர்களுக்கு ஆசிரியராகவும், போதனை செய்பவராகவும் உள்ளவரே,
இந்த உலகில் அதி புத்திசாலியாக விளங்குபவரே
நஷத்திரங்கள் மற்றும் கோளங்களுக்கு தலைவனாக உள்ள சுக்ர பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#சூர்யா புத்ரோ தீர்க்ஹா தேஹோ , விஷலக்க்ஷ சிவ ப்ரியஹ்
மண்டாச்சர பிரசன்னத்ம , பீடம் ஹரது மீ சனிஹ்
( அர்த்தம் :- மெல்லச் சென்றாலும், என்றும் பொலிவுடன் இருப்பவரே,
சூரியனின் புதல்வரே, பெரும் உடல் அமைப்பை கொண்டவரே
சிவனைப் போன்ற பெரிய கண்களைக் கொண்ட சனி பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும் )

#அநேக ரூப வர்நைச்ச , ஷதசோத சஹஸ்ர ச
உத்பதரூபோ ஜகதாம் , பீடம் ஹரது மீ தமஹ்
( அர்த்தம் :- பெரிய தலை மற்றும் கம்பீரமான குரலைக் கொண்டவரே,
பலமான பெரிய பற்களைக் கொண்டவரே
நீண்ட தலை முடியுடன் உலவுகின்ற ராகு பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#மஹாசிரோ மஹாவக்த்ரோ , தீர்க்ஹ தம்ஸ்த்ரோ மஹாபலஹ்
அதானுஷ்சோர்த்வா கேஷஸ்ச , பீடம் ஹரது மீ சிக்ஹிஹ்
( அர்த்தம் :- வண்ணமயமான பல உருவங்களைக் கொண்டவரே
ஒரு முறை அல்ல பல்லாயிரம்முறை எம்மை தூய்மை படுத்துபவரே
பேராபத்துக்களின் உருவமான எம் கேது பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com

Email ID :kamaleesrikumar@gmail.com

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!


எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.
மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.
எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.
மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.
அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?
சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.
சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.
நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.
தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.
காவல் ஜமீன்!
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

நாரத முனிவர் தேவர்களை காத்த கதை. !!!

நாரத முனிவர் தேவர்களை காத்த கதை. !!!


முன்னொரு காலத்தில் ஹுண்டா என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் மிகவும் பலசாலி. அவனை தேவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. அடிக்கடி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை எழுந்து கொண்டே இருந்தது. ஒரு முறை ஹுண்டாவுக்கும் தேவர்களுக்கும் எழுந்த சண்டையில் யுத்தம் பல வருடங்கள் தொடர்ந்து நடந்தது. அதில் நஹுஷா தேவர்களுக்கு தலைமை தாங்கி யுத்தத்தை நடத்தினான். ஹுண்டா யுத்தத்தில் மரணம் அடைந்தாலும் அவன் மகன் அந்த யுத்தத்தை தொடர்ந்தான். அவனும் தந்தையைப் போல மகா பலசாலிதான். அது மட்டும் அல்ல தனக்கு இன்னும் அதிக சக்தி வேண்டும் என்பதற்காக கடுமையான தவத்தில் அமர்ந்து தன்னை எவரும் அழிக்க முடியாத சக்தியைப் சிவ பெருமானிடம் இருந்து பெற்றான். அவனை அழிக்க வேண்டுமானால் சிவபெருமானின் மனைவியான பார்வதியாலேயே முடியும் எனவும், அதுவும் அவன் சிவனின் காலடியில் பூஜை செய்யும்போது மட்டுமே நடக்க முடியும் என்றவாறு வரம் பெற்றான். சிவனின் காலடியில் பூஜை செய்யும்போது யார் எதற்காக அவனுடன் போய் சண்டை போட முடியும் ?
அதைக் கேட்ட தேவர்கள் பயந்து போய் நாரதரை அணுகினார்கள். ஆகவே அவனை எப்படி தோற்கடிப்பது என எண்ணிய நாரதர் ஒரு தந்திரம் செய்தார். விஷ்ணுவை ஒரு பெண் உருவில் சென்று ஹுண்டாவின் மகனை மயக்கச் செய்தார். பெண் உருவில் இருந்த விஷ்ணுவை அவன் மணக்க விரும்பினான். விஷ்ணுவோ அவனிடம் ஒரு குறிப்பிட்ட மலரின் பெயரைக் கூறி அதை எடுத்து வந்து சிவபெருமானின் காலடியில் போட்டப் பின் அதை எடுத்து வந்து தனக்கு மாலை போட்டால்தான் அவனை மணக்க முடியும் எனக் கூறினார். அவனும் அவர் கூறிய மலரைத் தேடி இடம் இடமாக அலைந்தான். மலர் கிடைக்கவில்லை.
அப்போது அவன் சுக்ராச்சாரியாரை சந்திக்க அவரும் அது மலரல்ல, பாற்கடலில் இருந்து வெளி வந்த விஷ்ணுவின் பரம பக்தையான ஒரு தேவதை எனவும், அவள் சிரித்தால் அவள் வாயில் இருந்து விழும் வெள்ளை மலர்களே அவை எனவும், அழுதால் சிவப்பு மலர்கள் விழும் எனவும் கூறினார். ஆனால் விஷ்ணு கேட்டது வெள்ளை மலரல்லவா என யோசனை செய்தான். அவர் சென்றதும் நாரதர் அங்கு வந்தார். அந்த தேவதையை எப்படி பார்ப்பது என அவன் அவரிடம் கேட்க அவரும் அவள் ஹிமயமலையின் வாயில் இருப்பதாகவும் அங்கு செல்வது கடினம் எனவும், அவள் சிரிக்கும்போது விழும் மலர்கள் கங்கை நதியில் மிதந்து வரும் எனவும் சிவப்பு மலர்கள் சில மணி நேரத்தில் வெள்ளையாக மாறிவிடும் எனவும் கூற அதை நம்பியவன் கங்கை கரைக்கு சென்று அமர்ந்தான். அதற்குள் நாரதர் அந்த தேவதையிடம் சென்று விஷ்ணுவை ஒரு அசுரன் பெண் உருவில் மாற்றி விட்டான் என பொய் கூறினார். அதைக் கேட்ட அந்த தேவதை அழுது புலம்ப அவள் வாயில் இருந்து சிவப்பு மலர்கள் விழுந்தன. அதை எடுத்துக் கொண்டு சிவபெருமானின் இருப்பிடத்துக்குப் போனான்.
சிவனுக்கு வெள்ளை மலர்களைத் தவிர வேறு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பதை பார்வதி விரும்பவில்லை. ஆகவே அவள் அந்த அசுரன் சிவப்பு மலர்களைக் கொண்டு வருவது பிடிக்காமல் வெள்ளை பூக்களைக் கொண்டு சிவனுக்கு பூஜை செய்யத் துவங்கினாள். அசுரன் வந்தான். இன்னொரு பக்கத்தில் அமர்ந்து கொண்டு சிவப்புப் பூக்களை சிவன் பாதத்தில் போட்டு பூஜிக்க ஆரம்பிக்க பார்வதி சிவப்பு மலர்களால் அவரை அன்று பூஜிக்கக் கூடாது என்றாள். அவனோ என்னும் சில மணி நேரத்தில் சிவப்புப் பூக்கள் வெள்ளையாகிவிடும் என்றான். ஆனால் அவ்ளோ அதை ஏற்கவில்லை. வாக்குவாதம் தொடர்ந்து சண்டையில் முடிய கோபமடைந்த பார்வதியின் ஆயுதத்தினால் அவன் அங்கேயே கொல்லப்பட்டான். தேவர்கள் நாரத முனிவருக்கு நன்றி கூறினார்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பசு எதனால் புனிதமாகக் கருதப்படுகின்றது?

பசு எதனால் புனிதமாகக் கருதப்படுகின்றது?


பசுவின் உடலில் லஷ்மி தேவி குடியிருக்கிறாள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் அது எப்படி உலகிற்குத் தெரிய வந்தது என்பதற்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் தான் குபேரனுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக குபேரரைப் போலவே பல வருடங்கள் தண்ணீரில் முழுகி இருந்து தவம் செய்தார். அவர் தண்ணீரில் இருந்தது எவருக்கும் தெரியாது. ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் தம் வலையை அந்த ஏரியில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது அந்த முனிவர் அந்த வலையில் மீன்களுடன் மாட்டிக் கொண்டார். வெளியே வலையை இழுத்த மீனவர்கள் அதில் இருந்த முனிவரைக் கண்டு அதிசயித்தனர்.
ஆனால் தன் தவத்தைக் அவர்கள் கலைத்து விட்ட கோபத்தினால் அவர் அவர்களை சபிக்கப் போனபோது அவர்கள் தம்முடைய அறியாமையினால் செய்து விட்ட காரியத்துக்கு மன்னிப்புக் கேட்டார்கள். அவரும் அவர்களை மன்னிக்க ஒரு நிபந்தனை விதித்தார். அந்த ஊர் அரசனிடம் சென்று நடந்ததைக் கூறி தன் தகுதிக்கு சமமான அன்பளிப்பை கொண்டு வந்து தந்தால் அவர்களுக்கு சாபம் தர மாட்டேன் எனக் கூற அவர்கள் மன்னனிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.
மன்னனும், முனிவர்தானே அவர்களை சோதிக்கிறார் என எண்ணி ஆயிரம் போர் காசுகளை தந்து அனுப்பினார். அனால் அதைக் கண்ட முனிவர் அதை தொடவில்லை. அது தனக்கு ஈடல்ல என திருப்பி அனுப்ப மன்னனும் அதையும் இதையும் என ஒவ்வொன்றாக தனது ராஜ்யத்தையே அனைத்து செல்வங்களுடன் தந்தும் கூட முனிவர் திருப்தி அடையவில்லை. அனைத்தையும் திருப்பி அனுப்பி விட்டார். ஆகவே என்ன செய்யலாம் என குழம்பித் தவித்தபோது அவர் அரசவையில் இருந்த மிகவும் அதிகமான கடவுள் பக்தி கொண்ட பண்டிதர் முனிவரின் எண்ணத்தை புரிந்து கொண்டார். அவருக்கு கிருஷ்ணருக்கு துளசி இலையை போட்டு அவர் எடைக்கு சமனாக்கிய கதை நினைவுக்கு வர மன்னனிடம் அந்த முனிவருக்கு ஒரு பசுவை மட்டும் தானமாகத் தரும்படிக் கூறினார்.
அரசன் பயந்தார். அத்தனை செல்வங்களுடன் கூடிய ராஜ்யத்தை தந்தும் திருப்தி அடையாத முனிவரா பசுவை எடுத்துக் கொள்வார் என அமைச்சரிடம் கேட்க, அவரோ பயப்படாமல் சென்று அதை செய்யுமாறு கூறினார். பசுவை அந்த முனிவர் முன்னால் கொண்டு நிறுத்தி அதை தானமாகத் தந்ததும் முனிவர் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு கூறினார் 'மன்னா இதனுடன் என்னை ஒப்பிடவே முடியாது. ஹிமயமலைப் போல உள்ள அதனுடன் என்னை ஒப்பிட்டால் அதன் ஒரு கடுகு அளவுக்குக் கூட நான் சமமல்ல. அதை தந்து என் கண்களைத் திறந்து விட்டீர்கள். நான் லஷ்மி தேவி தரும் அனைத்து செல்வத்தையும் அடைய நினைத்தேன். நீங்கள் லஷ்மி தேவியையே எனக்கு தந்து என்னை தலை குனிய வைத்து விட்டீர்கள் ' எனக் கூறி மீனவர்களை மன்னித்தார்.
அப்போது அவரிடம் அரசன் ஒரு சந்தேகம் கேட்டார் 'முனிவரே நான் அத்தனை ராஜ்யத்தை தந்தும் திருப்பதி அடையாத நீங்கள் எப்படி பசுவைத் தந்ததும் ,லஷ்மி தேவியையே தந்து விட்டீர்கள் அது போதும் எனக் கூறுகின்றீர்கள்' எனக் கேட்டார். முனிவர் கூறினார் ' மன்னா ஒரு முறை விஷ்ணு காமதேனுவை படைக்க எண்ணினார். ஒரு பசுவை வரவழைத்து அதை காமதேனுவாக மாற்ற எண்ணி அனைத்து தேவர்களையும் அழைத்து அதன் உடலில் சென்று அமருமாறு கூறினார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அனைத்து தேவர்களும் ஒரு பசுவின் உடலில் சென்று தங்கினர். தாமதமாக வந்த லஷ்மி தேவிக்கு பசுவின் எந்த இடத்திலும் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் பசுவின் உடலில் தான் அமர வேண்டும் என தீர்மானித்து விட்டதினால் காலியாக இருந்த அதன் ஆசன வாயில் சென்று அமர்ந்து கொண்டாள். அந்தப் பசு காமதேனுவாக மாறியது. அந்த பசு மூத்திரம் பெய்ய அது லஷ்மி தேவியின் உடலை தழுவிக் கொண்டு வந்தது. ஆகவேதான் பசுவின் பின் புரத்தை தொட்டு வணங்கினால் லஷ்மி கடாஷம் கிடைக்கும் என்ற ஐதீகம் வந்தது' எனக் கூறினார்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

கடன் தொல்லைகளை தீர்க்கும் தலம் !!!

கடன் தொல்லைகளை தீர்க்கும் தலம் !!!
ஞானாம்பிகை சமேத ரினவிமோச்னீஸ்வரர் 


திருவாரூர், கும்பகோணம் செல்லும் சாலையில், கும்பகோணத்தில் இருந்து பதினைத்து கிலோ தொலைவில் உள்ளது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சிவன் ஆலயம். அதை கடன்களை நிவர்த்தி செய்து தரும் ஆலயம் என்றே அழைகின்றார்கள். அந்த ஆலயம் உள்ள இடம் திருச்சேரி என்ற கிராமம். அந்த ஆலயத்தை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கடன்களை நிவர்த்தி செய்து கொள்ள வந்து வணங்கும் ஆலயம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜென்மத்திலும் பிறக்கும்போதே அவரவர் பித்ருக்கள், சில ரிஷி முனிவர்கள், மற்றும் சில தெய்வங்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கடன்பட்டு உள்ளார்கள் . அவற்றினால் ஏற்படும் தோஷங்கள் களைந்தால்தான் மறு ஜென்மம் ஏற்படாது என்பது மட்டும் அல்ல இந்த ஜென்மத்திலும் வாழ்கை சுமைகள் குறைந்து மன நலத்தோடு வாழ முடியும் என்பதே உண்மை. அந்த தெய்வ மற்றும் ரிஷி முனிவரின் கடன் பாக்கிகளே நமக்கு பல விதங்களிலும் தொல்லை தருகின்றது. அவற்றில் ஒன்றே வறுமை, கடன் போன்றவை. ஆகவே இந்த ஆலயத்தில் சென்று ரினவிமோச்னீஸ்வரர் எனும் கடன் நிவர்தீஸ்வரர் எனும் லிங்கத்தை வணங்கித் துதித்தால் பூர்வ ஜென்ம கடன்கள் மட்டும் அல்ல இந்த ஜென்மத்தில் அதனால் ஏற்படும் வறுமை ஒழியும், பட்டுள்ள கடன்களும் குறையும் என்கிறார்கள் .
இந்த ஆலயம் எப்படி உருவானது. முன்னொரு காலத்தில் மார்கண்டேய முனிவர் என்பவர் இந்த இடத்தில் வந்து தங்கி இருந்து தவம் செய்து வந்தார். அப்போது ஏற்பட்ட வறட்சியின் காரணமாக அந்த பூமியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் மடிந்தனர். பலர் உணவு கிடைக்காமல் தவித்தனர். ஆகவே அங்கு இருந்த மார்கண்டேய முனிவர் ஒரு சிவலிங்கத்தை அங்கு வடித்து , அந்த மக்களின் வறுமை ஒழிந்து அவர்கள் நலமாக இருக்க உன் அருளே வேண்டும் என சிவபெருமானை அவர்களுக்காகத் துதித்தார். சிவபெருமானும் அவருடைய கோரிக்கையை ஏற்று அந்த பூமியை மீண்டும் வளமிக்க பூமியாக்க மக்களின் துயரம் அகன்றது. அதன் விளைவாக மார்கண்டேய முனிவர் வழிபட்ட லிங்கம் இருந்த இடமே குலோத்துங்க சோழனினால் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆலயமாக கட்டப்பட்டது .
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்து சிவ லிங்கம்
ஆலயத்தில் ரினவிமோச்னீஸ்வரருடன் ஞானவல்லி என்ற பெயரில் பார்வதியும் உள்ளாள். தட்சிணாமூர்த்தி, துர்க்கை மற்றும் பைரவருக்கும் சன்னதிகள் உள்ளன. அந்த ஆலயத்தில் உள்ள கடன் நிவர்தீஸ்வரர் எனும் லிங்கத்தை பதினோரு திங்கள் கிழமைகள் வழிபட்டால் கடன் தொல்லைகள் நிச்சயமாகக் குறையும் என்று கூறுகிறார்கள். பதினோரு திங்கள் கிழமைகள் அங்கு செல்ல முடியாதவர்கள் ஆலயத்துக்கு பணம் அனுப்பி பத்து திங்கள் கிழமைகள் பூஜை செய்யச் சொல்கிறார்கள். பதினோராம் திங்கள் கிழமை அங்கு சென்று சாமிக்கு அபிஷேகம் செய்து வேண்டுகோளை முடித்துக் கொள்கிறார்கள். பத்து வாரமும் பூசைப் பிரசாதங்களை வேண்டுதல் செய்பவர்களுக்கு தபாலில் அனுப்புகிறார்கள். கடன் தொல்லைகள் குறைய மட்டும் அல்ல குழந்தை பேறு பெறவும், படிப்பில் மேன்மை கிடைக்கவும் வேண்டுதல் செய்கிறார்கள். ஆலயத்தின் அருகில் பிந்து சார தீர்த்தம், மார்கண்டேயர் குளம் போன்ற புனிதமான நீர்நிலைகளும் உள்ளன. ஆலய விலாசம் மற்றும் தொடர்பு கொள்ள :-
Sri S. Sundaramoorthy Gurukkal
2/45-B, South Street,
Thirucherai - 612 605.
Kumbakonam. (T.K)
Cell: 94426 37759
94437 37759

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com