Thursday 29 June 2017

நவக்ரஹ ஸ்தோத்திரம் !!!

நவக்ரஹ ஸ்தோத்திரம் !!!


நவகிரகங்களை நாம் தினமும் துதித்து வணங்குவத்தின் மூலம் நமக்கு அந்தந்த நவகிரக நாயகர்களினால் ஏற்படும் தொல்லைகள் குறையும். அந்த ஒன்பது நாயகர்களும் அவர்களுக்கு இட்ட வேலைகளையே செய்கின்றார்களே தவிர வேண்டும் என்றே எவருக்கும் கெடுதல்களைப் புரிவது இல்லை. நாம் பூர்வ ஜென்மத்திலும், இந்த ஜென்மத்திலும் செய்துள்ள, செய்து வரும் பாவக் காரியங்களுக்கு ஏற்ப நமக்கு விதிக்கப்பட்டு உள்ள தண்டனையையே அவர்கள் தருகிறார்கள்.

நாம் செய்துள்ள பூர்வ ஜென்ம பாப, புண்ணியங்களின் கணக்கின்படி நமக்கு ஒரு குறிப்பிட்ட பிறப்பு தரப்படுகின்றது. நமக்கு கொடுக்கப்பட்டு உள்ள அப்படிப்பட்ட பிறப்பில் இன்ன காலத்தில் இன்ன தண்டனை, கீர்த்தி, சோதனை, போன்றவற்றை பெற வேண்டும் என முடிவு எடுக்கப்படுகின்றது. அதைத்தான் ஜாதகமாக கணித்து நம் ஜாதகத்தில் அந்த கிரக தோஷம் உள்ளது, இந்த கிரக தோஷம் உள்ளது எனக் கூறுவார்கள்.

கிரக தோஷம் என்ன என்றால் குறிப்பிட்ட தண்டனையை தரக்கூடிய நவகிரக நாயகர்கள் தரும் தண்டனை காலத்தையே கிரக தோஷம் என கூறப்படுகின்றது. அது மன வேதனை, பண விரயம், சரீர கஷ்டங்கள், தேவையட்ற அலைச்சல், கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, பொருள் நாசம் போன்றவை.
அப்படிபட்ட தண்டனைகளை தரவல்ல நவகோள நாயகர்களினால் அந்தந்த நேரத்தில் தரப்படும் தண்டனையை குறைத்து அளிக்கவும் முடியும்.

அதற்காகத்தான் நவகிரக தரிசனங்கள், அந்தந்த கிரகங்களுக்கு பீடை பரிகாரம் போன்றவற்றை செய்து அந்த தண்டனையை தரும் நாயகனை வேண்டி தவமிருக்க (தவம் என்பதை இங்கு வேண்டுகோள், விரதம், சுயக் கட்டுப்பாடுகள் போன்றவை என படிக்க வேண்டும்) அந்த வேண்டுகோளை வைக்கும் மனிதர் உண்மையான பக்தியுடன் தன்னை வேண்டுகிறாரா என சோதித்தப் பின் அவர் அதை ஏற்றுக் கொண்டால் அவரே அந்த தண்டனையின் கடினத் தன்மையைக் குறைக்கலாம். இல்லை தம்மை அந்த பாபிகள் வேண்டுவது மனதார அல்ல, மனிதனுக்கு பணம் கொடுத்து ( லஞ்சம்) செய்து கொள்ளப்படும் வேலையைப் போல எவரோ அதை செய், இதை செய் எனக் கூறியதைக் கேட்டு ஒரு வேலையைப் போல செய்ய நினைத்தால், எத்தனை வேண்டுதல்களை செய்தாலும் தண்டனையின் தன்மை குறையாது.

அது மட்டும் அல்ல அப்படிப்பட்ட வேண்டுதல்களை செய்வது உண்மையில் அவரை நம்புவதினால்தானா இல்லை மற்றவர்கள் கூறுகிறார்கள் என லாட்டரி சீட்டு வாங்குவது போல செய்கின்றார்களா என அவர் கண்காணிப்பார். அவ்வப்போது வேண்டும் என்றே சில கடின தண்டனையையும் சோதனைகளையும் தருவார். அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவரை வழிபட்டால் கிடைக்க உள்ளது நன்மைதானே தவிர வேறு அல்ல. அதே நேரத்தில் கொடும் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள் எத்தனைதான் வேண்டினாலும் அந்த தண்டனையை ஏற்றே ஆக வேண்டும். கொடும் தண்டனையை கொடுக்க நம்மை நோக்கி வருபவர் முன்னால் - நவகிரக நாயகரிடம்- நாம் கைகூப்பி நிற்கும்போது அவர் மனதில் நம் மீது பரிதாப உணர்வு தோன்றும். அப்போது அவர் தர உள்ள தண்டனையின் வேகத்தின் தன்மையும் குறையும்.

அப்படி தண்டனை தரும்போது மன உளைச்சலை தாங்கக் கூடிய சக்தி உள்ளவர்களுக்கு மன உளைச்சலை அதிகரித்தும், சரீர உபாதையை தாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு சரீர உபாதைகளை அதிகரித்தும், பணம் உள்ளவர்களுக்கு பண விரயத்தை ஏற்படுத்தியும் தண்டனைகளின் தன்மைகளை மாற்றி அமைப்பதுண்டு.
அதற்காகத்தான் கிரகப் பரிகாரம் என்ற பெயரில் அவர்களை பல வகைகளிலும் பூஜித்து திருப்பதிப்படுத்துதலும், அவரையே சுற்றி வந்து (நவகிரக பிரதர்ஷனம்) அவரை வேண்டுவதும் நடைபெறுகின்றன. அந்த வேண்டுகோள்களின் தன்மை நியாயமாக, நல்ல உணர்வோடு, பக்திபூர்வமாக இருந்தால் நமக்கு தரப்படும் தண்டனையின் வலி நமக்கு மனதில், வாழ்கையில் ஆழமான காயத்தை ஏற்படுத்தாமல் இருக்க அவர் நிச்சயம் நமக்கு உதவுவார்.

( மேலே தரப்பட்டுள்ளது ஒரு உபன்யாசத்தில் கேட்டது )

ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நவக்ரஹங்களை பூஜித்துவிட்டு மற்ற நாட்களில் அவர்களை மறப்பதைவிட தொடர்ந்து அவர்களை நாம் தினமும் வணங்கி வந்தால் நமக்கு வர உள்ள கஷ்ட நாட்கள் வராமலேயே இருக்கும். அதற்காக அந்த ஒன்பது நாயகர்களையும் தினமும் ஒரு முறை உளமார நினைத்து வணங்க மிக எளிய மந்திரம் தரப்பட்டு உள்ளது. அதை தினமும் உச்சரிப்பதின் மூலம் நமது வாழ்கை சிக்கல் இன்றி , பணப் பிரச்சனைகள் இன்றி, தடங்கல்கள் இன்றி சீராகச் சென்று கொண்டு இருக்கும் என்பது நிச்சயம். அனைத்துக்கும் தேவை நம்பிக்கை. தினமும் ஒருமுறை பூஜை அறையில் நின்று கடவுளை நோக்கி நாம் சொல்ல வேண்டிய நவகிரக மந்திரம் கீழே தரப்பட்டு உள்ளது.
வேலை செய்பவர்களுக்கு இதை வீட்டில் படிக்க நேரம் இல்லை என்றால், மந்திரத்தை தனியாக ஒரு காகிதத்தில் எழுதி அலுவலகத்தில் தமது மேஜைகளில் வைத்துக் கொண்டு அலுவலகத்தில் காலையில் தமது காரியத்தை துவக்கும் முன் ஒரு முறை படித்துவிட்டு காரியத்தை ஆரம்பித்தால் போதும். மாதம் ஒரு முறையாவது ஏதாவது ஆலயத்துக்குச் சென்று அங்கு உள்ள நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வரலாம். அது போதும்.

நவக்ரஹ ஸ்தோத்திரம் !!!

#க்ராஹனம் அதிராதித்யோ , லோக ரக்ஷண கரகாஹ் விஷமஸ்தன
சம்பூதம் , பீடம் ஹரது மீ ரவிஹ்
( அர்த்தம் :- அமர்ந்து உள்ள இடத்தில் இருந்து தொல்லை தர முடிந்தவரும்,
இந்த உலகையே காத்தருள்பவரும்
நஷத்திரங்களிலேயே முதல்வருமான சூரியனாரே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும் )

#ரோஹிநீஷ சுதா மூர்த்திம் , சுதகத்ரா சுதசனாஹ்
விஷமஸ்தன சம்பூதம் , பீடம் ஹரது மீ விதுஹ்
( அர்த்தம் :- அமர்ந்து உள்ள இடத்தில் இருந்து தொல்லை தர முடிந்தவரே
அமிருதமானவரே , அமிருதத்தின் மீது அமர்ந்து கொண்டு அமிருதத்தையும் பொழிபவரே ,
ரோஹிணி நஷத்திரத்தின் தலைவனான சந்திரனே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#பூமி புத்ரோ மகா தேஜோ , ஜகாத பாயக்ரித் சத
விஷ்டிக்ரித் வ்ரிஷ்டி ஹர்த்த ச்ச , பீடம் ஹரது மீ குசாஹ்
( அர்த்தம் :- நினைத்தால் மழையைத் தந்தும், நினைத்தால் அதை தடுத்தும்
இந்த உலகில் பயத்தை ஏற்படுத்தும் பூமியின் புதல்வனே,
என்றும் ஜொலித்தபடி இருக்கும் அங்காரகனே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#உத்பதரூபோ ஜகதம் , சந்த்ரபுத்ரோ மகாத்யுதி
சூர்யா பிரியா கரோ வித்வான் , பீடம் ஹரது மீ புதஹ்
( அர்த்தம் :- இந்த பூமியில் அனைத்தையும் படைப்பவனே
அதி புத்திசாலியும் சந்திரனின் மகனுமானவரே
சூரியனாரால் நேசிக்கப்படுபவரில் முதல்வரான புதனே,
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#தேவ மன்த்ரி விஷலக்ஷாஹ் , சத லோக ஹிதே ரதஹ்
அநேக சிஷ்ய சம்பூர்னஹ் , பீடம் ஹரது மீ குருஹ்
( அர்த்தம் :- பெரிய கண்களைக் கொண்டவரும்,
தேவ சபை அமைச்சருமானவரே
இந்த உலகை என்றும் காத்து நிற்க நினைப்பவரே
பல சீடர்களை தன்வசம் கொண்ட குரு பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#தைத்ய மன்த்ரி குருஸ்தேஷம் , ப்ரணதஸ்ச மஹாமதிஹ்
ப்ரபுஸ்தர க்ரஹனம் ச்ச , பீடம் ஹரது மீ ப்ரிஹு
( அர்த்தம் :- ராக்ஷசர்களுக்கு ஆசிரியராகவும், போதனை செய்பவராகவும் உள்ளவரே,
இந்த உலகில் அதி புத்திசாலியாக விளங்குபவரே
நஷத்திரங்கள் மற்றும் கோளங்களுக்கு தலைவனாக உள்ள சுக்ர பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#சூர்யா புத்ரோ தீர்க்ஹா தேஹோ , விஷலக்க்ஷ சிவ ப்ரியஹ்
மண்டாச்சர பிரசன்னத்ம , பீடம் ஹரது மீ சனிஹ்
( அர்த்தம் :- மெல்லச் சென்றாலும், என்றும் பொலிவுடன் இருப்பவரே,
சூரியனின் புதல்வரே, பெரும் உடல் அமைப்பை கொண்டவரே
சிவனைப் போன்ற பெரிய கண்களைக் கொண்ட சனி பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும் )

#அநேக ரூப வர்நைச்ச , ஷதசோத சஹஸ்ர ச
உத்பதரூபோ ஜகதாம் , பீடம் ஹரது மீ தமஹ்
( அர்த்தம் :- பெரிய தலை மற்றும் கம்பீரமான குரலைக் கொண்டவரே,
பலமான பெரிய பற்களைக் கொண்டவரே
நீண்ட தலை முடியுடன் உலவுகின்ற ராகு பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)

#மஹாசிரோ மஹாவக்த்ரோ , தீர்க்ஹ தம்ஸ்த்ரோ மஹாபலஹ்
அதானுஷ்சோர்த்வா கேஷஸ்ச , பீடம் ஹரது மீ சிக்ஹிஹ்
( அர்த்தம் :- வண்ணமயமான பல உருவங்களைக் கொண்டவரே
ஒரு முறை அல்ல பல்லாயிரம்முறை எம்மை தூய்மை படுத்துபவரே
பேராபத்துக்களின் உருவமான எம் கேது பகவானே
எங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com

Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment