Friday, 30 June 2017

தொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் செல்வ வளத்தையும் தரும் திருவிற்குடி பைரவர் வழிபாடு!!!

தொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் செல்வ வளத்தையும் தரும் திருவிற்குடி பைரவர் வழிபாடு!!!


நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி,உங்களுக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டகாலம் தற்போது இருந்தாலும் சரி ;நீங்கள் இந்தப் பதிவில் உள்ளபடி பைரவர் வழிபாடு செய்துவிட்டால் பின்வரும் நன்மைகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்.இது சத்தியம்.அப்படி வழிபாடு செய்யும்முன்பாக நீங்கள் செய்ய வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் கூறிவிடுவது எனது கடமை! இந்த கட்டுப்பாடுகளுடன் இந்த வழிபாட்டைச் செய்தால் மட்டுமே நீங்கள் நினைக்கும் நன்மைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.அதென்ன நன்மைகள்?
1.தொழிலில் எப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை நீங்கள் அடைந்திருந்தாலும் சரி! அதிலிருந்து மீண்டு பழைய நிலையை எட்டிவிடுவீர்கள்.
2.இன்று உங்களுடைய பொருளாதார நிலை எப்பேர்ப்பட்ட தாழ்ந்த/சராசரியான/மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தாலும் சரி.அந்த சூழ்நிலை அடியோடு மாறி பெரும் செல்வச் செழிப்பை எட்டிவிடுவது சர்வ நிச்சயம்.

நீங்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்:
1.அசைவம் நிரந்தரமாக சாப்பிடக்கூடாது;(முட்டை,புரோட்டாவையும் மறந்துவிட வேண்டும்)ஏனெனில்,இந்த வழிபாடு செய்தபின்னர்,சில குறிப்பிட்ட மாதங்களில் அதற்குரிய பலன்கள் உங்களைத் தேடி வரும்.அப்படி வரும்போது,நீங்கள் அசைவம் சாப்பிடத் துவங்கியிருந்தால்,பைரவ வழிபாட்டுப்பலன்கள் உங்களை வந்துசேராது.
2.மதுவை(போதைப்பொருட்கள் அனைத்தையும்;இதில் சிகரெட் அடங்காது) நிரந்தரமாக மறந்துவிட வேண்டும்.ஏனெனில்,நீங்கள் சிந்திக்கும் திறனையும்,எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியத்தையும் இழந்துவிடுகிறீர்கள்.இதனால்,தினசரி வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை சரியாக புரியாமல் போய்விடுகிறது.
3.எந்த நாளில் இந்த வழிபாட்டைச் செய்யச் சொல்லுகிறோமோ,அந்த நாளும்,அதற்கு முந்தய நாளும் தாம்பத்தியம்/காமச் செயல்களில் ஈடுபடக்கூடாது.
4.இதற்காக நான் இந்த கோவிலுக்குப் போய்,இப்படிச் செய்யப் போகிறேன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது.
சரி,அடுத்து என்ன? திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் திருப்பயந்தங்குடி என்னும் ஊர் வரும்.அந்த ஊரை அடைந்ததும்,அங்கே திருவிற்குடிக்கு எப்படிச் செல்வது? என்பதை விசாரிக்க வேண்டும்.திருப்பயந்தங்குடியிலிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.இங்கே காலபைரவர் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவபெருமானாக இருந்து அருள்பாலிக்கிறார்.அது மட்டுமல்ல:

இங்கேதான் செல்வத்தின் அதிபதியான மஹாவிஷ்ணு துளசியால் இறைவனாகிய பைரவருக்கு அர்ச்சனை செய்து தனது சின்னமான சக்கரத்தை பெற்றார்.எனவே,அட்டவீரட்டானங்களில் திருவிற்குடி மிகமுக்கியமான கோவிலாக இருக்கிறது.இங்கே நாம் செய்ய வேண்டியது என்ன?
விநாயகர்,மூலவராகிய அருள்மிகு ஜலந்தராசுரவத மூர்த்தி,அம்பாள்,இலக்குமி ஆகியோருக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இங்கிருக்கும் பைரவருக்கு செவ்வரளிமாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளைக்கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் பைரவரைத் தவிர,மேற்கூறிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இந்த நேரத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.இவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகளுக்குத் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகம் முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும்/வேறு எவரது வீட்டுக்குச் செல்லாமலும் அவரவருடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.அவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு முடித்த 100 நாட்களுக்குள் வீழ்ச்சிநிலையில் இருக்கும் தொழில் மறுமலர்ச்சி அடையத் துவங்கும்;அல்லது பொருளாதார நெருக்கடி நிலை நீங்கி மிகப்பெரிய செல்வ வளத்தை அடையத் துவங்கும்.
பின்குறிப்பு: படத்தில் காணப்படுவது திரு அண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பாதங்கள் ஆகும்.முதல் யுகத்தில் மனிதர்கள் ஒவ்வொருவரின் உயரம் 24 அடிகள்.அந்தக் காலத்தில் ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தி இவ்வளவு உயரமாக இருந்திருக்கிறார். ஆதாரம்:ஸ்ரீகாகபுஜண்டரின் உபதேசங்களின் தொகுப்பாகிய பைரவ ரகசியம். ஓம்சிவசிவஓம்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment