Thursday 25 January 2018

நவக்கிரஹ சாந்திக்கு லால் கிதாப் வழங்கும் எளிய பரிகாரங்கள்


உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள்.தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை,புத்தி நடைபெறும் சமயங்களிலும் இதைச் செய்யலாம்.
1.சூரியபகவான் - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
2.சந்திரபகவான் - வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
3.செவ்வாய்பகவான் - தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
4.புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
5.குருபகவான் - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
6.சுக்ரபகவான் - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
7.சனிபகவான் - ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
8.கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
9.ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment