Monday, 8 January 2018

முழிச்சு, முழிச்சு, பாக்குறேன்டா முடியலடா நாராயணா !

முழிச்சு, முழிச்சு, பாக்குறேன்டா முடியலடா நாராயணா !
,காலை எடுத்து எடுத்து வக்கிரேண்டா ,முடியலடா நாராயணா ! !
இந்த மாதிரி ரொம்ப பேர் புலம்புவதை பார்த்திருப்போம் ,ஆனால் அதற்கான காரணம் என்னவெனில் , நாம குடி இருக்கின்ற வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் நாம எவ்வளவுதான் முயன்றாலும் வாழ்கையில் முன்னேற்றம் என்பது கனவாகத்தான் போகும் .
சில விசயங்களை பின்பற்றினால் போதும் . உங்கள் இல்லத்தில் உள்ள அனைத்து வாட்டர் டாப் ஐயும் சரி பார்க்கவும் ஏதேனும் ஒன்றில் நீர் சொட்டினாலும் உடனே மாற்றுங்கள் .
மாதம் ஒரு முறை வீட்டை மாஸ் கிளீனிங் செய்யுங்கள் .அதாவது ஒட்டடை அடியுங்கள் .

வாரம் ஒரு முறை வீட்டை (செவ்வாய் ,வெள்ளி ,தவிர்த்து இதர ஏதேனும் ஒரு நாளில்) கழுவுங்கள் ,அவ்வாறு கழுவும் பொழது கை அளவு உப்பை எடுத்து தண்ணீரில் போட்டு கழுவவும் .
உங்கள் இல்லத்தில் ஓடாத வாட்ச் இருந்தால் ஓட வையுங்கள் , இல்லை எனில் நேரத்தை பத்து பத்து என செட் செய்யுங்கள் .
மாத்திரைகளை அடுப்படியில் வையுங்கள் . வீட்டில் எங்கு வைத்தாலும் நெகடிவ் உருவாகும் . வெள்ளி ,செவ்வாய் சாம்பிராணி தூபம் வீட்டில் போடுங்கள் ,
தினமும் ஒரு ஊது பத்தியாவது காலை மாலை வீட்டில் பற்ற வையுங்கள் .
குப்பைகளை தெருவில் கொட்டாதீர்கள் உரிய குப்பை தொட்டியில் கொட்டுங்கள் .
காலை, மாலை , தினமும் மங்கள இசை வீட்டில் முழங்கச் செய்யுங்கள் .
வீட்டில் உள்ள பழமையான பயன் இல்லாத பொருட்களை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் காரணம் பழமையை குறிப்பவர் சனி பகவான் .அங்கே அவர் குடி இருப்பார் .
ஒரு நாள் அணிந்த உடையை திரும்ப மறு நாள் அணியாதிர்கள் .
பணம் யாருக்கும் கொடுக்கும் பொழுது பணத்தை ஒரு குழந்தையை போல் பாவித்து அதனை தடவி அதன் பின்னர் நடு நெற்றியல் உள்ளங்கையில் பணத்தை வைத்து ,சென்று வா ! திரண்டு வா என மூன்று முறை மனதினில் உச்சரித்து பின் கொடுக்கவும் .
கடனாளியாக இருப்பவர்கள் குளிகை காலங்களில் தங்களின் கடனில் ஒரு பகுதியை செலுத்த மீதம் உள்ள கடனும் விரைவில் அடைபடும்.
தென்மேற்கு மூலையில் பீரோவை வையுங்கள் .
பணப்பெட்டியில் இஞ்சியை வையுங்கள் பின் ஒரு மாதம் கழித்து புதிய ஒன்றை வைத்து பழசை எடுத்து விடவும் .
வீட்டின் தென்கிழக்கு மூலையில்தான் மணி பிளான்ட் வைக்க வேண்டும் .
வீட்டில் சண்டை சச்சரவு இருந்தால் வெண்கடுகு தூபம் போடுங்கள் .
உங்கள் நிறுவனம் இயங்கவில்லையா ?.ஒரு நான்கு இறக்கை உடைய மினி டேபிள் பேன் வாங்கி ,அதில் இரு இறக்கைகளில் உங்களின் பெயரையும் ,மற்ற இரு இறக்கைகளில் உங்களின் நிறுவனத்தின் பெயரையும் எழுதுங்கள் , அந்த பேன் ஐ ரேகுலட்டர் லேட்டர் மூலம் கண்ட்ரோல் செய்து மிக மெதுவாக ஓடவிடவும் .பேன் ஐ வாயு மூலையில் வைத்து சுக்ர ஓரையில் ம ட்டும் ஓடவிடவும் .
உங்கள் இல்லத்தில் படுத்த நிலையில் உள்ள தெய்வங்களின் புகைப் படத்தை வீட்டில் வைக்க வேண்டாம் . வீட்டில் கஜ லக்ஷ்மி விளக்கு மட்டுமே ஏற்ற வேண்டும் ,காமாட்சி விளக்கு கோவிலில்தான் ஏற்றவேண்டும் . (புரியாதவர்கள் கேட்கவும் )
வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது ஒவ்வொரு முகத்திற்கும் இரண்டு திரி போட வேண்டும் .
சாப்பாட்டு நெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்த தீபம் ஏற்ற நன்மை நடக்கும் .
குளித்த பின்னர் முதலில் முதுகை துவட்டுங்கள் அதன் பின் மற்றவை .

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment