Friday, 30 June 2017

காசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி?

காசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி?


இந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒருதடவையாவது காசி யாத்திரை செல்வது தான். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி? என்பதை காண்போம்:
காசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும். முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் சூட தீபாராதனை காட்டி கும்பிட வேண்டும். பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள வேண்டும்.
பிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும். அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் (1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம், 2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன், 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை 4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி, 5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு, 6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல் 7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். 8. நள தீர்த்தம், 9. நீல தீர்த்தம்,10.கவய தீர்த்தம்,11.கவாட்ச தீர்த்தம்,12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், 14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயா தீர்த்தம், 17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல் 18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி 20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல் 21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல் 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும். காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும். பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.
அதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும. இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

இறுதியில் இறை தூதர்களா, எமதூதர்களா? முடிவு உங்கள் கையில்..!!

இறுதியில் இறை தூதர்களா, எமதூதர்களா? முடிவு உங்கள் கையில்..!!
இறந்தவன் மகனால் முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது. இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும் மூன்றாம் நாள் பிண்டத்தால்மார்பும் நான்காம் நாளில் வயிறும் ஐந்தாம் நாளில் உந்தியும் ஆறாம் நாளில்பிருஷ்டமும் ஏழாம் நாளில் குய்யமும் எட்டாம் நாளில் தொடைகளும் ஒன்பதாம் நாளில்கால்களும் உண்டாகி பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம்முழுவதும் பூரணமாக உருவாகும்.
பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான்சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில்நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் நிகழ்த்தப்பட்ட எல்லாவிதமானகாரியங்களையும் நினைத்துப் பார்த்து அழுது துடிக்குமாம். மீண்டும் நம்மால் இப்படி வாழமுடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரிமலைசீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாகஒப்பிடப்படுகிறது.
கடந்தகால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம்கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போனஜீவன்கள் தான் என்பதையும் பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள்சரீரப்பிரிவைப் பற்றியோ மரணமடைந்ததைப் பற்றியோ துளி கூடக் கவலைப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள்பாசக்கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச் செல்வார்கள். அப்படி இழுத்துச் செல்லும்போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலை அமைப்புக்கொண்ட அமானுஷ்யவனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படும். அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்திக்காயப்படுத்தும். அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய்ஊளையிடுவதுபோல் ஆவி கத்தித் துடிக்கும்.
வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச் செல்லப்படுமாம். அந்தநகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும்அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்துகடித்துக் காயப்படுத்துமாம். மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்கமுடியாத தாகம் ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்தகொடுக்கப்படுமாம். அந்த நகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகியசதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம். இத்தகைய அருவருக்கத்தக்ககஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திரபாசம் ஏற்படுமாம். பாவத்தின்தண்டனையும் பாசத்தின் சோதனையும ஆவியைச் சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக் கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம்.

இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்கவழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத்தெட்டாவது நாளில கொடுக்கப்படும்சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்றநகரத்தை அடையும். அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பலவிதமான பிரேதக்கூட்டங்களும் நிறைந்திருக்கும். அங்கு இரண்டாவது மாசிக பிண்டத்தைப் பெற்ற பின்புசற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச் செல்லப்பட்டு திரைப்பஷிக மாசிகபிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்றபகுதியல் சிறிதுகாலம் தங்கி மூன்றாவது மாசிக பிண்டத்தைப் பெறுவார்கள். ஐந்துமற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற நதிக்கரையைஅடைவார்கள்.
சாதாரணமான நதிகளைப்போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது. அதற்குப் பதிலாகரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்தநதியைப் பாவம் செய்த ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள்ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள். புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப்பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டுவிடுவார்கள். இப்படி பலஇடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும்இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியைமட்டும் தான் ஜீவன்கள் இதுவரை கடந்து வந்திருக்குமாம்.
பக்குவப்பதம் என்ற இடத்தில் எட்டாம் மாதம் பிண்டத்தையும் துக்கதம் என்ற இடத்தில்ஒன்பதாவது பிண்டத்தையும் நாதாக்தாதம் என்ற இடத்தில் பத்தாவது பிண்டத்தையும்அதப்தம் என்ற இடத்தில் ப தினோறாவது பிண்டத்தையும் சீதாப்ரம் என்ற இடத்தில்பன்னிரெண்டாவது அதாவது வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள்.
மரணமடைந்து ஒரு வருடத்திற்குப் பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழையமுடியும். எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால்12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக் கணக்குகளைப் பார்ப்பார்கள். அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள்.
இங்கு நாம் எமலோகத்திற்குப் போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமானகஷ்ட நஷ்டங்களைப் பார்த்தோம். தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள்துன்பங்களை அனுபவிப்பது நியாயமானதுதான். நன்மையைச் செய்த ஆத்மாக்கள் கூடஇதே வழியில்தான் அழைத்து செல்லப்படுவார்களா? இதே துன்பங்களைதான்அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானதுதான். நமதுசாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களைமரணதேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள். இறைதூதர்கள் தான் வந்துஅழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது.

திதி - முன்னோர்களுக்கு கொடுங்கள். திருப்பம் , திருப்தி கிடைக்கும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

தொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் செல்வ வளத்தையும் தரும் திருவிற்குடி பைரவர் வழிபாடு!!!

தொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் செல்வ வளத்தையும் தரும் திருவிற்குடி பைரவர் வழிபாடு!!!


நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி,உங்களுக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டகாலம் தற்போது இருந்தாலும் சரி ;நீங்கள் இந்தப் பதிவில் உள்ளபடி பைரவர் வழிபாடு செய்துவிட்டால் பின்வரும் நன்மைகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்.இது சத்தியம்.அப்படி வழிபாடு செய்யும்முன்பாக நீங்கள் செய்ய வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் கூறிவிடுவது எனது கடமை! இந்த கட்டுப்பாடுகளுடன் இந்த வழிபாட்டைச் செய்தால் மட்டுமே நீங்கள் நினைக்கும் நன்மைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.அதென்ன நன்மைகள்?
1.தொழிலில் எப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை நீங்கள் அடைந்திருந்தாலும் சரி! அதிலிருந்து மீண்டு பழைய நிலையை எட்டிவிடுவீர்கள்.
2.இன்று உங்களுடைய பொருளாதார நிலை எப்பேர்ப்பட்ட தாழ்ந்த/சராசரியான/மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தாலும் சரி.அந்த சூழ்நிலை அடியோடு மாறி பெரும் செல்வச் செழிப்பை எட்டிவிடுவது சர்வ நிச்சயம்.

நீங்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்:
1.அசைவம் நிரந்தரமாக சாப்பிடக்கூடாது;(முட்டை,புரோட்டாவையும் மறந்துவிட வேண்டும்)ஏனெனில்,இந்த வழிபாடு செய்தபின்னர்,சில குறிப்பிட்ட மாதங்களில் அதற்குரிய பலன்கள் உங்களைத் தேடி வரும்.அப்படி வரும்போது,நீங்கள் அசைவம் சாப்பிடத் துவங்கியிருந்தால்,பைரவ வழிபாட்டுப்பலன்கள் உங்களை வந்துசேராது.
2.மதுவை(போதைப்பொருட்கள் அனைத்தையும்;இதில் சிகரெட் அடங்காது) நிரந்தரமாக மறந்துவிட வேண்டும்.ஏனெனில்,நீங்கள் சிந்திக்கும் திறனையும்,எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியத்தையும் இழந்துவிடுகிறீர்கள்.இதனால்,தினசரி வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை சரியாக புரியாமல் போய்விடுகிறது.
3.எந்த நாளில் இந்த வழிபாட்டைச் செய்யச் சொல்லுகிறோமோ,அந்த நாளும்,அதற்கு முந்தய நாளும் தாம்பத்தியம்/காமச் செயல்களில் ஈடுபடக்கூடாது.
4.இதற்காக நான் இந்த கோவிலுக்குப் போய்,இப்படிச் செய்யப் போகிறேன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது.
சரி,அடுத்து என்ன? திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் திருப்பயந்தங்குடி என்னும் ஊர் வரும்.அந்த ஊரை அடைந்ததும்,அங்கே திருவிற்குடிக்கு எப்படிச் செல்வது? என்பதை விசாரிக்க வேண்டும்.திருப்பயந்தங்குடியிலிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.இங்கே காலபைரவர் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவபெருமானாக இருந்து அருள்பாலிக்கிறார்.அது மட்டுமல்ல:

இங்கேதான் செல்வத்தின் அதிபதியான மஹாவிஷ்ணு துளசியால் இறைவனாகிய பைரவருக்கு அர்ச்சனை செய்து தனது சின்னமான சக்கரத்தை பெற்றார்.எனவே,அட்டவீரட்டானங்களில் திருவிற்குடி மிகமுக்கியமான கோவிலாக இருக்கிறது.இங்கே நாம் செய்ய வேண்டியது என்ன?
விநாயகர்,மூலவராகிய அருள்மிகு ஜலந்தராசுரவத மூர்த்தி,அம்பாள்,இலக்குமி ஆகியோருக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இங்கிருக்கும் பைரவருக்கு செவ்வரளிமாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளைக்கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் பைரவரைத் தவிர,மேற்கூறிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இந்த நேரத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.இவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகளுக்குத் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகம் முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும்/வேறு எவரது வீட்டுக்குச் செல்லாமலும் அவரவருடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.அவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு முடித்த 100 நாட்களுக்குள் வீழ்ச்சிநிலையில் இருக்கும் தொழில் மறுமலர்ச்சி அடையத் துவங்கும்;அல்லது பொருளாதார நெருக்கடி நிலை நீங்கி மிகப்பெரிய செல்வ வளத்தை அடையத் துவங்கும்.
பின்குறிப்பு: படத்தில் காணப்படுவது திரு அண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பாதங்கள் ஆகும்.முதல் யுகத்தில் மனிதர்கள் ஒவ்வொருவரின் உயரம் 24 அடிகள்.அந்தக் காலத்தில் ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தி இவ்வளவு உயரமாக இருந்திருக்கிறார். ஆதாரம்:ஸ்ரீகாகபுஜண்டரின் உபதேசங்களின் தொகுப்பாகிய பைரவ ரகசியம். ஓம்சிவசிவஓம்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

ஏழரை சனிக்கு செலவே இல்லாமல் எளிய பரிகாரம்

ஏழரை சனிக்கு செலவே இல்லாமல் எளிய பரிகாரம்


ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி இவைகள் தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள்.

அதில் தவறில்லை. ஆனால், செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது. நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும். கிரகம், நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும்.
சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து, சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும். இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம்.
சனி மட்டுமல்ல! பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்சனை இருந்தாலும், சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன் அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம். கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களை நம்மால் ஈர்க்க முடியும்.
10 அல்லது 15 நிமிடம் இந்த தியானத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன், கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ இருக்கும். உங்கள் பிறந்த நட்சத்திர நாளில், உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும்.
கிரகங்கள் ஒன்பதும் நம் உடம்பில் ஒவ்வொரு பாகத்தைக் குறிக்கும்.
சூரியன்- எலும்பு, சந்திரன்- ரத்தஓட்டம்,
செவ்வாய்- மஜ்ஜை,
புதன்- தோல்,
வியாழன்- மூளை, சுக்கிரன்- உயிர்ச்சக்தி,
சனி- நரம்பு மண்டலம்.
அந்தந்த உறுப்புகள் நலம் பெற அந்த கிரகத்தை நோக்கி தியானம் செய்யலாம். மொத்தத்தில், இரவு நேரத்தில் மட்டுமே கிரகம், நட்சத்திரங்களைக் கண்டு களிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப்பார்வை மூலம் பகல், இரவு பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை அடையலாம்.
இதை நடைமுறையில் கொண்டு வர நாம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. வீட்டிலேயே அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கிரகங்களின் இருப்பிடம் அறிந்து மனம் செலுத்தி தியானம் செய்வதே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவது உறுதி.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

திருமணமாகாதவர்களுக்கு அமாவாசை பரிகாரமுறை !!!

திருமணமாகாதவர்களுக்கு அமாவாசை பரிகாரமுறை !!!


திருமணம் ஆகாத ஆண்களுக்கு :

அமாவாசையன்று(அல்லது மாதம் தோறும் அமாவாசைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்) இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் சிறப்பு, திருமணமாகாத ஆண்கள் அமாவாசையன்று காலை 11 மணியில் இருந்து 12 மணிக்குள் அருகில் உள்ள சிவாலயத்திற்க்கு சென்று அங்கு உள்ள நாகலிங்கத்தின் மேல் சந்தனம் பூசி, பூமாலை அணிவித்து நாகலிங்கத்திற்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி பூஜை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
திருமணமாகாத பெண்களுக்கு:
பெண்கள் வெள்ளிக்கிழமை ராகுகால நேரமான 10.30 மணியில் இருந்து 12 மணிவரை அருகில் உள்ள சிவாலயத்தில் உள்ள வில்வமரத்தடியில் சுத்தம் செய்து அந்த இடத்தில் மஞ்சள் கலந்த நீரை தெளித்து எட்டுவகையான கோலம் இட்டு, கோலத்தின்மேல் எட்டு நெய்விளக்கேற்றி, மரத்திற்கு பூமாலை சாற்றி பூஜை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை. நாளை அமாவாசை அன்று செய்தால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அல்லது மாதம்தோறும் வரும் அமாவாசைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பாழடைந்த வீடுகள் வளர்ச்சி பெற பரிகாரம்!!!

பாழடைந்த வீடுகள் வளர்ச்சி பெற பரிகாரம்!!!


நமது சொந்த ஊரிலோ அல்லது மற்ற இடத்திலோ நமக்கு சொந்தமான வீடுகளோ, கடையோ பராமரிக்க முடியாமல் பாழடைந்து கிடக்கும். இப்படிப்பட்ட இடங்கள் லட்சுமி கடாட்சம் கிடைக்காமல் அருள் இழந்து இருக்கும்.

அப்படிப்பட்ட இடத்திற்க்கு லட்சுமி கடாட்சம் கிடைத்து அந்த இடம் மீண்டும் புதுப்பொழிவு பெறுவதற்கு இரட்டைக்கண் தேங்காய் ஒன்றை வாங்கி பாதியாக உடைத்து அதில் மஹாலட்சுமி எந்திரம்-அஞ்சனம்-எழுமிச்சைபழம் பாதியாகவெட்டி உள்ளே வைத்து மூடி அதை கட்டி பாழடைந்த நம் இடங்களில் புதைத்து வைக்கவேண்டும் 48 நாட்களுக்கு பிறகு அந்த இடத்தில் ஐஸ்வர்யம் பெருகி அந்த இடம் நல்ல விருத்திக்கு வரும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

குழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் !!!

குழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் !!!





குழந்தைகள் நன்றாக படிக்கவில்லையென்ற வருத்தம் பெற்றோர் பலருக்கும் இருக்கும். தன் குழந்தை நன்றாக படிக்கவில்லையே என்று பலரிடமும் புலம்பி தீர்ப்பார்கள் குழப்பத்தில் தவிப்பார்கள். சில குழந்தைகளுக்கு படித்தது நினைவில் இருந்தாலும் பரீட்சையில் மறந்து விடும். பாடங்களை உணர்ந்து படித்தாலும் மனதில் ஏறாது. சிலருக்கு ஜாதக தோஷ குறைப்பாட்டினால் இவ்வாறு இருக்கலாம். பரீட்சைக்கு சென்றவுடன் மறந்துவிடும். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. படித்தது நினைவில் இல்லாமல் கவலைப்படும் குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் உள்ளது.

இப்படிப்பட்டவர்கள் மாலை நேரத்தில் படிக்கும்போது வீட்டு பூஜையறையில் விளக்கில் சிறிது தேங்காய் எண்ணெய் மட்டும் விட்டு விளக்கேற்றி சுவாமிக்கு பூஜை செய்துவிட்டு கல்விக்கடவுளான சரஸ்வதியையோ, ஹயக்ரீவரையோ வணங்கி ஒரிரு மணி நேரம் விளக்கை எரிய வைத்துவிட்டு படித்தால் குழந்தைகளின் படிப்பு சிறக்கும். படித்தவை மனதில் தங்கும் பரீட்சையில் வெற்றி கிடைக்கும். விளக்கில் இருந்து வரும் நல்ல அதிர்வலைகள் நம் மூளையை சுறுசுறுப்பாக்கி இருக்கும் இடத்தையும் சுபிட்சமாக வைத்து நாம் படிப்பதை மனதில் எளிதாக பதியவைத்து படிக்கும் விஷயத்தை எளிதாக்குவது இதன் தத்துவம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

திக்குவாய் தோஷம் சரியாக மந்திர தந்திரம் !!!

திக்குவாய் தோஷம் சரியாக மந்திர தந்திரம் !!!



1. உளுந்து 10 கிராம் ,கொள்ளு 10 கிராம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து தலையணைக்கடியில் வைத்து 90 நாட்கள் உறங்கி வர வேண்டும் 90 நாள் கழிந்ததும் அதை கோவில் குளங்களில் போட்டு விடவும்.

2. செம்புத்தட்டில் தேன் ஊற்றி அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதி பின் கீழ்க்கண்ட மந்திரத்தை குறைந்தது 27 தடவை ஜெபித்து அந்த தேனை அவர்கள் நாக்கில் தடவி விட்டு வரலாம்.
இதை வளர்பிறை புதன்கிழமை புதன் ஹோரையில் தொடங்கவும். பின் தினமோ அல்லது புதன்கிழமைகளிலோ செய்து வந்தால் தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பது நம்பிக்கை. மந்திரம் 1.ஓம் ஐம் வத வத வாக்வாதினி நமஹ. இம்மந்திரத்தை முறை108 ஜபித்து வந்தால் திக்குவாய் சரியாகும்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் !!!

பிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் !!!


பெண்கள் நன்றாக குளித்துவிட்டு முதலில் குங்குமம் நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும் தட்டு ஒன்றில் கொஞ்சம் குங்குமத்தை பரப்பிக்கொள்ளவேண்டும், அதில் தன் கணவரின் பெயரை எழுதி கொள்ள வேண்டும் கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும்.

த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குரு

இந்த மந்திரத்தை பூஜை செய்து முடித்ததும் அந்த தட்டுக்கு பூஜை செய்ய வேண்டும். அதற்க்கு தீபாராதனை செய்ய வேண்டும். பிறகு பூஜை செய்யப்பட்ட குங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்
மறுநாளும் இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து தட்டுக்கு பூஜை செய்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்). கணவருடன் சேரும் வரை தினமும் தொடர்ந்து இந்த பரிகார வழிபாட்டை விடாமல் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

வரவேண்டிய பணம் வந்து சேர பரிஹாரம் !!!

வரவேண்டிய பணம் வந்து சேர பரிஹாரம் !!!




சிலருக்கு சில நிறுவனத்தில் வேலையில் பல நாட்கள் சம்பள பாக்கி இருக்கும். நிறுவனத்தின் திடீர் வறுமையால் வேலை செய்த பணம் கூட சரியான நேரத்தில் கிடைக்காது. இன்றைய சூழ் நிலையில் நெருங்கிய ஒருவருக்கு கடன் கொடுப்பதென்றாலே பயம்தான். கடன் திருப்பி வரவில்லை என்றால் நல்ல நட்பு வைத்திருக்கும் இடத்தில் தேவையில்லாத மனஸ்தாபங்கள் பிரச்சினைகள் ஏற்படும்.

நமக்கும் கடனை கொடுத்து விட்டு மிகவும் நெருங்கியவர்களிடம் அடிக்கடி நியாபகப்படுத்தி கேட்பதற்க்கு சற்று பயமாக இருக்கும். அப்படியே நாம் கேட்டாலும் நம்முடைய அவசரத்தேவைக்கு பணம் என்பது கிடைக்காது இவற்றை போக்குவதற்கு ஒரு எளிய பரிஹாரம் உள்ளது.
உப்பு, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை சிறிது இடித்து அதை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தென் மேற்கு மூலையில் வைத்துவிட்டால் வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும். இதனால் நம் துன்பம் நீங்கும்.
 
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Thursday, 29 June 2017

கடும் தோஷம் நீங்க பரிகாரம் !!!

கடும் தோஷம் நீங்க பரிகாரம் !!!


சிலருக்கு வாழ்வில் எதற்கெடுத்தாலும் தடை, சீக்கிரம் திருமணம் நடக்காமல், நடந்தாலும் மனைவியுடன் ஒற்றுமையில்லாமை, குழந்தை இல்லாமை, வேலை இல்லாமை போன்ற அனைத்துமே இருக்கும். சில பெண்களுக்கு வயதானாலும் திருமணம் நடக்க விடாமல் ஏதாவது தடைகள் இருந்து கொண்டே இருக்கும்.
ராகு, கேதுவால் ஏற்படும் நாகதோஷமும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற அனைத்தும் சேர்ந்து இருந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் அனைத்துமே சேர்ந்து ஒருவரது வாழ்வை நிலைகுலைய வைத்துவிடும். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த கோயில் பரிஹாரம் இது. இவர்கள் நேராக காளஹஸ்தி சென்று அங்கு அதற்க்குரிய பரிஹார பூஜை செய்து விட்டு அங்கிருந்து நேராக வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் செல்ல வேண்டும்.
அங்கு ராகு கால நேரத்தில் நடக்கும் பரிஹார பூஜையில் கலந்து விட்டு அன்று வேறு எங்கும் செல்லாமல் கும்பகோணத்திலேயே தங்கி விட வேண்டும். மறுநாள் எழுந்து திருவிடை மருதூர் கோவிலுக்கு சென்று பிரம்மஹத்தி பரிஹாரம் செய்து அங்குள்ள மகாலிங்கரை வணங்கி அங்குள்ள சுவாமிக்கும், மூகாம்பிகைக்கும் பெரிய மாலை ஒன்று வாங்கி சாற்ற வேண்டும்.
பின்பு வேறு எந்த கோவிலும் செல்லாமல் நேராக வீட்டுக்கு வந்துவிடவேண்டும். இந்த மூன்று கோவில்களை 5 நாட்களுக்குள் மேற்சொன்ன வரிசைப்படி காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம், திருவிடை மருதூர் என்று வரிசையாக தரிசிக்க வேண்டும். ஒரு நாள் ஒரு கோவில்தான் செல்ல வேண்டும். வேறு கோவில் எங்கும் செல்லக்கூடாது.
உங்களது சூழ்நிலைகளை பொறுத்து 5 நாட்களுக்குள் தரிசனத்தை முடித்தால் சிறப்பு. இப்படி செய்தால் ஒரு வருடங்களுக்குள் கண்டிப்பாக ஏதாவது சிறு மாற்றமாவது உங்கள் வாழ்வில் வந்து சேரும் என்பது நிச்சயம். சக்தி வாய்ந்த பரிஹாரம் இது. கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

கடும் குடல் நோயால் அவதிப்படுவோருக்கான பரிகாரம் !!!

கடும் குடல் நோயால் அவதிப்படுவோருக்கான பரிகாரம் !!!

குடல் நோயால் அவதிப்படுவோரின் நிலையை சொல்ல முடியாது. குடல் நோய் மற்றும் கடும் வயிற்றுவலிக்கான பரிகாரமாய் இந்த எளிய பரிகாரம் சொல்லப்படுகிறது.
அதன்படி குடல் நோய், வயிற்றுவலியால் அவதிப்படுவோர் ஒவ்வொரு மாதமும் வரும் மூல நட்சத்திர தினத்தன்று உங்கள் ஊரில் இருக்கும் ஆஞ்சனேயருக்கு 108 எலுமிச்சை வைத்த மாலை கட்டி அதை ஆஞ்சனேயருக்கு சாற்ற வேண்டும். அத்தோடு சேர்ந்து ஆஞ்சனேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்ற வேண்டும்.
இதனால் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சனேயர் மனம் மகிழ்ந்து உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி நோய்களை நீக்கி வாழ்வில் வளம் காண செய்வார் என்பது நம்பிக்கை.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

!!!"விதியை மாற்றும் பக்தி உணர்ச்சி"!!!

!!!"விதியை மாற்றும் பக்தி உணர்ச்சி"!!!


சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த ஒருவர்,தனது வாழ்நாளில் 96 கோடி தடவை ராமா என்ற மந்திரத்தை ஜபித்து முடித்திருந்தார்;அவரது 10 வது வயதில் அவரது அம்மாவின் உபதேசத்தின்படி ஆரம்பித்த ராமா மந்திர ஜபம்,அவரது 98 வது வயதில் ஜப எண்ணிக்கை 96 கோடியைக் கடந்திருந்தது;ஆமாம்! ஒரு நாளுக்கு 5 மணி நேரம் மட்டுமே தூங்குவார்;
விழித்திருக்கும் நேரம் முழுவதும்,நடக்கும் போதும்,சாப்பிடும் போதும்,எழுதும்போதும்,பணிபுரியும் போதும் ராமா ராமா ராமா என்று ஜபிப்பதை தனது கடமையாக வைத்துக் கொண்டார்;அவரைப் பெற்ற அன்னையின் உபதேசம் அப்படி அவரது ஆழ்மனதில் பதிந்தது;
96 கோடி தடவை ராமா என்று ஜபித்து முடித்ததும் அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்தது;
ஸ்ரீராமர்,ஸ்ரீசீதா,ஸ்ரீலட்சுமணர்,ஸ்ரீமாருதி என்று அனைவரும் ஒரே நேரத்தில் ப்ரசன்னமானார்கள்;ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் படமாக நமது வீடுகளில் இருப்பதை பார்த்திருப்போம்;அதில் எப்படி வரையப்பட்டிருக்கிறதோ,அதே போல அவருக்கு தரிசனம் கிடைத்தது;
நாம் வாழ்ந்து வரும் உலகத்திற்கும்,இங்கேயே சூட்சுமமாக இருக்கும் உலகத்திற்குமான தொடர்புப் புள்ளி மந்திர ஜபம் தான்;
(இதையே தான் ஒஷோவும் விவரித்திருக்கின்றார்=ஒரே ஒரு கதவுதான் நமக்கும்,அந்த சூட்சும உலகிற்கும் இடையெ இருக்கின்றது;அந்த கதவைத் திறக்கும் சாவி முறையான மந்திர ஜபமே)ஆமாம்! சில உக்கிரமான தெய்வங்களின் மந்திரங்களைத் தவிர மற்ற அனைத்து கடவுள்களின் மந்திரங்களை எப்போதும் எங்கும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்;
கலியுகத்தில் பிறந்து,பணத்தை நோக்கித்தான் பெரும்பாலானவர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்;பணம் அவசியம் தான்! ஆனால்,பணம் மட்டுமே தேவை என்று வாழ்வதால் ஏராளமான பாவங்களைச் செய்து விடுகிறோம்;
அடுத்தவர்களை மனம் நோகவைத்து சம்பாதிக்கும் பணம் கடுமையான கர்மவினையை நமக்குள் உருவாக்குகின்றது;
அடுத்தவர்களை ஏமாற்றி சம்பாதிக்கும் பணம்,ஏற்கனவே நேர்மையாக சம்பாதித்த சொத்துக்களையும் கரைந்து காணாமல் போக வைக்கின்றது;
அண்ணாமலை கிரிவலம் மட்டுமே முறையற்ற விதத்தில் சேர்த்த பணத்தில் உருவான கர்மவினையை நீக்கும் ஒரே சுயபரிகாரம் ஆகும்;
சிவாய நம என்ற மந்திரத்தை 28 கோடி முறை ஜபித்துவிட்டு,செம்பைப் பார்த்தால் அது தங்கமாக மாறிவிடும் என்ற தேவரகசியத்தை சித்தர்களின் தலைவர் அகத்தியர் நமக்கு உபதேசமாகக் கூறியிருக்கின்றார்;
நாம் அல்லது நமது மகன்/ளை தினமும் சிவாய நம என்ற மந்திரத்தை ஜபிக்க வைக்கலாம்;சில லட்சம் முறை ஜபித்ததும் நமக்கு பொன்னாசை,பணத்தாசை போய்விடும்;அதே சமயம் பணம் சார்ந்த பற்றாக்குறையும் நம்மைவிட்டு அகன்றுவிடும்;
அதனால் தான்,சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு ஒரு நாளும் துன்பம் இல்லை என்று பாடியுள்ளனர்;
மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்த சில மாதங்களுக்கு நமது மன வைராக்கியத்திற்கும்,நமது விதிக்கும் இடையே பெரும் போராட்டம் நடைபெறும்;அது நம்மை சோம்பலாக்கி தொடர்ந்து ஜபிக்க விடாமல் தடுக்க பலவிதமான சோதனைகள் வரவழைக்கும்;அசராமல் இருந்தால் நாம் ஜெயித்துவிடலாம்;
முயற்சி செய்வோமா........... ?

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com