Thursday 22 June 2017

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில்.!!!

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில்.!!!



தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் " எனக் கூறியப் பின் மறைந்து போனார். வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது.
வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச் செய்தார். அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது. மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர். அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது. தன்வந்தரி தனது கையில் அமிருதக் கலசத்தை வைத்துக் கொண்டு உள்ளவாறு காட்சி தருகின்றார். ஸ்ரீரங்கத்து ரங்கஸ்வாமி ஆலயத்தில் அவருக்கு தனி சன்னதி உள்ளது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்தரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபாட்டு வருகின்றனர் எனக் கூறுகிறார்கள்.
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா,
மருத்தோர்வட்டம்-688 012, ஆலப்புழா,
கேரளா திருவிழா: இங்கு ஓணத்தன்றும், பிறதிருவோண நட்சத்திர நாட்களிலும் பால் பாயாச வழிபாடு நடக்கிறது. சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டாதினம் நடத்தப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசி அன்று தன்வந்திரி பகவான் அவதாரம் செய்ததாக மகாபாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாள் தன்வந்திரி நாளாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு: தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது தலத்ததின் சிறப்பு.
திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பொது தகவல்: தேவலோக மருத்துவரான தன்வந்திரிக்கு ஓணத் திருவிழா அன்று இங்கு நடக்கும் பால்பாயாச வழிபாடு சிறப்பு மிக்கது.
தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்த்ரயே அம்ருத
கலசஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம.
பிரார்த்தனை குழந்தை பாக்கியம் கிடைக்க பக்தர்கள் சந்தான கோபாலன் என்ற கதகளி வழிபாடு நடத்துகின்றனர்.
நேர்த்திக்கடன்: சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக்காப்பும் செய்வது விசேஷம்.
குழந்தை பாக்கியம்: குழந்தை பாக்கியம் கிடைக்க பக்தர்கள் சந்தான கோபாலன் என்ற கதகளி வழிபாடு நடத்துகின்றனர். திருவோண நோன்பும், சந்தான வழிபாடும் இங்கு சிறப்பு வாய்ந்ததாகும். முக்குடி என்னும் மருந்தை 28 மூலிகைகள், பச்சை மருந்து ஆகியவற்றை தயிரில் கலந்து செய்கின்றனர். இது இந்தக் கோயிலில் முன்பதிவின் பேரில் கிடைக்கும். பூஜை செய்த மருந்தை தன்வந்திரியின் கையிலுள்ள தங்கக்குடத்தில் வைத்துள் ளனர். இதனைப் பருகுவதால் நோய்கள் குணமடைகிறது. சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக்காப்பும் செய்வது விசேஷம். இந்த வெண்ணெயைச் சாப்பிட்டால் அனைத்து நோய்களும் மறையும். விக்ரகத்தின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டைப்பூச்சி உள்ளது. கிருமிகள் ரத்தத்தில் இருப்பதால் அட்டை மூலம் ரத்தத்தை உறிஞ்ச வைப்பது அக்கால வழக்கம். இதைக் குறிக்கும் வகையில் தன்வந்திரியின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டை காணப்படுகிறது.
கயற்றேல் வானம் சடங்கு: இங்கு நடக்கும் உற்சவத்தின் போது ஆஸ்துமா, வாத நோய்கள் குணமடையவும், நினைத்தவை நடக்கவும் கயற்றேல் வானம் என்ற பூஜை செய்யப்படுகிறது. அமாவாசைகளில் நடக்கும் பிதுர்காரிய நிழ்ச்சியின் போது, காட்டு சேப்பங்கிழங்கு கொண்டு தயாரிக்கும் தாள்கறி நிவேதனம் செய்யப் படுகிறது. இந்த கிழங்கை தொட்டாலே அரிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட இதை பல மூலிகைகளுடன் சேர்த்து மருந்து செய்து உட்கொள்வதால் உடலுக்கு ஒன்றும் செய்வதில்லை. மாறாக நோய் தீர்க்கும் அருமருந்தாகிறது.
தல வரலாறு: நோய்குணமடைய தங்ககுடத்தில் மருந்து வழங்குபவர் தன்வந்திரி பகவான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும் போது ஜோதி வடிவாக மஞ்சள் ஆடை தரித்து ஆபரண அலங்காரத்துடன் அமிர்தகலசத்தை கையில் ஏந்தி தோன்றியவர் இவர். ஆயுர்வேதத்தின் பிதாவாக போற்றப்படுகிறார்.நான்கு கைகளை உடைய இவருக்கு, சங்கின் நாபியைப் போல மூன்று ரேகைகள் கழுத்தில் காணப்படும். தங்க ஆபரணங்கள் அணிந்து, சுருண்ட தலைமுடியுடன் இருப்பார். தசாவாதரத்துக்குப் பிறகு 11வது அவதாரமாக ஹயக்ரீவரும், 12வது அவதாரமாக தன்வந்திரியும் தோன்றினர். வயலார் கிராமத்தைச் சேர்ந்த தம்பான் இனத்தை சேர்ந்த ஒருவர் பல காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டர். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. வைக்கத்திலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வைக்கத்து அப்பன் சுவாமியை தரிசித்தார். வலி குறைந்தது. கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் வலி வந்தது. எனவே கோயிலிலேயே தங்கிவிட்டார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சிவன், பக்தனே, இந்த கோயிலை விட்டு நீ வெளியே சென்றால் உனக்கு மறுபடியும் வலி ஏற்படும், எனவே நீ, இங்கிருந்து சேர்த்தலைக்கு சென்று அங்குள்ள கேளம் குளத்தில் முழ்க வேண்டும். நீருக்கு அடியில் மூன்று விக்ரகம் கிடைக்கும். முதலில் கிடைக்கும் விக்ரகம் மிகவும் சக்தி வாய்ந்ததால் அதனை குளத்திலேயே போட்டுவிடு, இரண்டாவது விக்ரகத்தை ஒரு அந்தணருக்கு தானமாக கொடு. மூன்றாவதாக விக்ரகத்தை விதிப்படி பிரதிஷ்டை செய், அப்போது உன் நோய் அகலும், என்று கூறினார். அதன்படி இரண்டாவதாக கிடைத்த தன்வந்திரி விக்ரகத்தை வெள்ளுடு என்ற மனையை சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை, நம்பூதிரி தன்னுடைய வீட்டிலேயே வைத்து பூஜை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு மண்மூசு என்பவரின் உதவியுடன் கோயில் கட்டி, தன்வந்திரியை பிரதிஷ்டை செய்தார். இவர்கள் கோவில் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்திவந்தனர்.
இவர்களுக்கு பிறகு வந்த தலைமுறையினர், கோயில் யாருக்கு சொந்தம் என்ற உரிமை பிரச்னையை எழுப்பினர். இதனால் மண்மூசு குடும்பத்தார் விக்ரகத்தின் கையை உடைத்து எடுத்து சென்றனர். கோட்டயம் அருகிலுள்ள ஓளச்ச என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். வெள்ளுடு நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த விக்ரகத்தை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையை வெள்ளியில் செய்து பொருத்தினர். இவர் மேற்கு நோக்கி, வட்ட வடிவமான கர்ப்பகிரகத்தில் காட்சி தருகிறார்.
சிறப்பம்சம்: தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது தலத்ததின் சிறப்பு.
தன்வந்திரி அஷ்டோத்திர சத நாமாவளி!
ஓம் தந்வந்தரயே நம: ஓம் அதிதேவாய நம: ஓம் ஸுராஸுரவந்திதாய நம:
ஓம் வயஸ்ஸ்தாபகாய நம:ஓம் ஸர்வாமயத்வம்ஸகாய நம:
ஓம் பயாபஹாய நம: ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் விவிதௌஷததாத்ரே நம: ஓம் ஸர்வேச்வராய நம:
ஓம் சங்கசக்ரதராய நம: ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம:
ஓம் சல்யதந்த்ரவிசாரதாய நம: ஓம் திவ்யௌஷததராய நம:
ஓம் கருணாம்ருதஸாகராய நம: ஓம் ஸுககராய நம:
ஓம் சஸ்த்ரக்ரியாகுசலாய நம: ஓம் தீராய நம: ஓம் நிரீஹாய நம:
ஓம் சுபதாய நம: ஓம் மஹாதயாளவே நம: ஓம் பிஷக்தமாய நம:
ஓம் ப்ராணதாய நம: ஓம் வித்வத்வராய நம: ஓம் ஆர்த்தத்ராண பராணாய நம:
ஓம் ஆயுர்வேத ப்ரசாரகாய நம: ஓம் அஷ்டாங்கயோக நிபுணாய நம:
ஓம் ஜகதுத்தாரகாய நம: ஓம் அநுத்தமாய நம: ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் விஷ்ணவே நம: ஓம் ஸமாநாதிகவர்ஜிதாய நம: ஓம் ஸர்வப்ராணி ஸுஹ்ருதே நம:
ஓம் ஸர்வமங்களகராய நம: ஓம் ஸர்வார்த்ததாத்ரே நம: ஓம் மஹாமேதாவிநே நம:
ஓம் அம்ருதபாய நம: ஓம் ஸத்யஸ்ந்தாய நம: ஓம் ஆச்ரிதஜநவத்ஸலாய நம:
ஓம் ஸாங்காகதவேத வேத்யாய நம: ஓம் அம்ருதாசாய நம: ஓம் அம்ருதலபுஷே நம:
ஓம் ப்ராண நிலயாய நம: ஓம் புண்டரீகாக்ஷõய நம: ஓம் லோகாத்யக்ஷõய நம:
ஓம் ப்ராணஜீவநாய நம: ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம: ஓம் ஸத்கதிப்ரதாய நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம: ஓம் ஸமஸ்தடக்தஸுகதாத்ரே நம:
ஓம் ஸஹிஷ்ணவே நம: ஓம் ஸித்தாய நம: ஓம் ஸமாத்மநே நம: ஓம் வைத்யரத்நாய நம:
ஓம் அம்ருத்யவே நம: ஓம் மஹாகுரவே நம: ஓம் அம்ருதாம்சோத்பவாய நம:
ஓம் ÷க்ஷமக்ருதே நம: ஓம் வம்சவர்தநாய நம: ஓம் வீதபயாய நம: ஓம் ப்ராணப்ருதே நம:
ஓம் க்ஷீராப்திஜந்மநே நம: ஓம் சந்த்ர ஸஹோதராய நம: ஓம் ஸர்வலோக வந்திதாய நம:
ஓம் பரப்ரஹ்மணே நம: ஓம் யஜ்ஞபோக்தரே நம: ஓம் புணயச்லோகாய நம: ஓம் பூஜ்யாபாதாய நம: ஓம் ஸநாதநதமாய நம: ஓம் ஸ்வஸ்திதாய நம: ஓம் தீர்க்காயுஷ்காரகாய நம: ஓம் புராண புரு÷ஷாத்தமாய நம: ஓம் அமரப்ரபவே நம: ஓம் அம்ருதாய நம: ஓம் நாராயணாய நம: ஓம் ஒளஷதாய நம: ஓம் ஸர்வாநுகூலாய நம: ஓம் சோகநாசநாய நம: ஓம் லோகபந்தவே நம: ஓம் நாநாரோகார்த்தி பஞ்ஜநாய நம: ஓம் ப்ரஜாநாம் ஜீவஹேதவே நம: ஓம் ப்ரஜாரக்ஷணதீக்ஷிதாய நம: ஓம் சுக்லவாஸஸே நம: ஓம் புருஷார்த்த ப்ரதாய நம: ஓம் ப்ரசாந்தாத்மநே நம: ஓம் பக்தஸர்வார்த்த ஸாதகாய நம: ஓம் போகபாக்யப்ரதாத்ரே நம: ஓம் மஹைச்வர்யதாயகாய நம: ஓம் லோகசல்யஹ்ருதே நம: ஓம் சதுர்ப்புஜாய நம: ஓம் நவரத்நபுஜாய நம: ஓம் நிஸ்ஸீமமஹிம்நே நம: ஓம் கோவிதாநாம் பதயே நம: ஓம் திவோதாஸாய நம: ஓம் ப்ராணாசார்யாய நம: ஓம் பிஷங்மணயே நம: ஓம் த்ரைலோக்யாநாதாய நம: ஓம் பக்திகம்யாய நம: ஓம் தேஜோநிதயே நம: ஓம் காலகாலாய நம: ஓம் பராமார்த்தகுரவே நம: ஓம் ஜகதாநந்தகாரகாய நம: ஓம் ஆதிவைத்யாய நம: ஓம் ஸ்ரீரங்கநிலயாய நம: ஓம் ஸர்வஜநஸேவிதாய நம: ஓம் லக்ஷ்மீபதயே நம: ஓம் ஸர்வலோகரக்ஷõய நம: ஓம் காவேரீஸ்நாதஸந்துஷ்டாய நம: ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய விபூகிதாய நம:


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment