Wednesday 19 April 2017

ருத்ராட்சம்: அணிய வேண்டிய ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும் !!!

ருத்ராட்சம்: அணிய வேண்டிய ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும் !!!
சிவபெருமானால் உருவாக்கப்பட்டது ருத்திராட்சம் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம், ருத்ராட்சம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே சித்தர்கள் கருதினர். நோயை தீர்க்கும் மருந்தாகவும், இறையுணர்வை காக்கும் மணியாகவும், உடலில் பல்வேறு அதிர்வுகளை தரும் சக்தியாகவும் ருத்ராட்சம் விளங்கிவருகிறது.
மேலும் இந்த ருத்ராட்சத்தின் சிறப்பை பற்றி பல்வேறு சித்தர்கள், முனிவர்கள் பல்வேறு கோணங்களில் கூறியுள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய நட்சத்திரங்களுக்கு உரிய ருத்ராட்சத்தை அணிந்தால் மிகு பலன் எளிதாக கிடைக்கும் என்று சித்த முனிவர்கள் அனுபவபூர்வமாக குறிப்பிட்டுள்ளனர்.
அந்தவகையில், எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம்.
நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராட்சங்கள் மாறுபடும். எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம்.
1. அஸ்வினி – ஒன்பது முகம்.
2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி – இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.
6. திருவாதிரை – எட்டு முகம்.
7. புனர்பூசம் – ஐந்து முகம்.
8. பூசம் – ஏழு முகம்.
9. ஆயில்யம் – நான்கு முகம்.
10. மகம் – ஒன்பது முகம்.
11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் – பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் – இரண்டு முகம்.
14. சித்திரை – மூன்று முகம்.
15. ஸ்வாதி – எட்டு முகம்.
16. விசாகம் – ஐந்து முகம்.
17. அனுஷம் – ஏழு முகம்.
18. கேட்டை – நான்கு முகம்.
19. மூலம் – ஒன்பது முகம்.
20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.
22. திருவோணம் – இரண்டு முகம்.
23. அவிட்டம் – மூன்று முகம்.
24. சதயம் – எட்டு முகம்.
25. பூரட்டாதி – ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி – ஏழு முகம்.
27. ரேவதி – நான்கு முகம்
அந்தந்த நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராட்சத்தை அணிந்தால் அவர்களின் நட்சத்திரத்துக்குரிய பலம் பெருகுவதுடன் ருத்ராட்சத்தின் சக்தியும் அதிகரிக்கும். உதாரணத்திற்கு குழவிக் கல்லுடன் உரல் சேர்ந்தால் எந்த பொருளையும் அரைத்துவிடும். அதே குழவிக்கல்லுடன் பொருந்தாத உரல் சேர்த்தால் என்ன பயன்கிடைக்கும். அதுபோலத்தான் உரிய நட்சத்திரத்திற்குரியவர்கள் உரிய ருத்ராட்சத்தை பயன்படுத்தினால் வாழ்வில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து இன்பங்களும் எளிதாக வந்து சேரும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment