Wednesday 19 April 2017

மகான்களின் ஜீவ சமாதியில் எந்தக் கிழமையில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?

மகான்களின் ஜீவ சமாதியில் எந்தக் கிழமையில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?
திங்கட்கிழமை:
பகைவரோடு போராடி,போராடி களைத்துபோன நேர்மையாளர்கள், தங்களது நியாயமான பிரச்னைகள் தீர திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8 திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்;

செவ்வாய்க்கிழமை:
குலதெய்வம் தெரியாதவர்கள்,குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள்,குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள்,குல தெய்வத்தை அறியாமல் இருந்து ,அதனால் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்;
இப்படி 8 செவ்வாய்க்கிழமைகளுக்கு தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்;

புதன் கிழமை:
வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புவோர்,புதன் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 8 புதன்கிழமைகளுக்குச் செய்து வர ,நல்ல பொருளாதாரத் தன்னிறைவை அடைய முடியும்.

வியாழக்கிழமை:
தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த குருவைத் தேடுபவர்கள்,வியாழக்கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;

வெள்ளிக்கிழமை:
பணரீதியான பிரச்னைகள் இருப்போர்,பண நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;

சனிக்கிழமை:
பண நெருக்கடி,தொழில் மந்தநிலை,குடும்பப் பிரச்னைகள் என எல்லாவிதமான பிரச்னைகளும் தீர விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்துவர வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்துவிட்டாலே போதுமானது.

ஞாயிற்றுக்கிழமை:
நீண்டகாலமாக வழக்குடன் போராடிக்கொண்டிருப்பவர்கள்(எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி) ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள் மேற்கூறியவாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது.

இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி,அவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும்;இது ரொம்ப முக்கியம்.முட்டை,முட்டை கலந்த கேக்,புரோட்டா என மறைமுக அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்.யார் எந்த ஊரில் இருக்கிறார்களோ,அந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை முடிக்கலாம்;துக்கம்,பிறப்பு முதலியவற்றால் தொடர்ந்து 8 வாரங்கள் செய்ய முடியாவிட்டாலும்,விட்டு விட்டு செய்தாலும் போதுமானது.அதே சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி வழிபாடுகளை பின்பற்றக் கூடாது.எச்சரிக்கை!!!
இந்த தெய்வீக ரகசியத்தை ருத்ராட்சத் துறவி,சிவகடாட்சம் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சீடரும்,நமது ஆன்மீக குருவுமாகிய திரு.சிவமாரியப்பன்,புளியங்குடி அவர்களுக்கு நன்றிகள்!!!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment