Friday 5 May 2017

நவக்கிரக தோஷம் நீக்கும் இராமேசுவரம் வழிபாடு:-

நவக்கிரக தோஷம் நீக்கும் இராமேசுவரம் வழிபாடு:-
நாம் முற்பிறப்பில் செய்த பாவ கர்மாக்களின் காரணமாக இப்பிறப்பில் நம்முடைய ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் ஏற்படுகிறது. இத்தகைய பாவ கர்மாக்களை நமக்கு படம் பிடித்து காட்டும் கிரகம் ராகு, கேதுக்கள் ஆகும். இந்த ராகு, கேதுக்கள் ஒரு ஜாதகத்தில் 1, 7, 2, 8, 3, 9 ஆகிய இடங்களில் அமர்கின்ற பொழுது அவை நமக்கு முன்ஜென்ம கர்மாக்களை (பாவத்தை) இப்பிறப்பு ஜாதகத்தில் வெளிப்படுத்தும். இத்தகைய ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் போராட்டம், நிம்மதி குறைவு, பொருள் நஷ்டம், குழந்தையின்மை, ஏமாற்றம் ஏற்படுவதை அனுபவபூர்வமாக அறியலாம்.
மேலும் சனியின் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, சுக்கிரனின், பரணி, பூரம், பூராடம், சூரியனின் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு லக்கினத்திற்கு 6 மற்றும் 12ம் பாவங்களில் ராகு, கேது அமர்ந்து திசை நடத்தும் பொழுது கட்டாயம் முன்ஜென்ம, பாவகர்மாக்களை வெளிப்படுத்தி மிகவும் கஷ்டங்களை கொடுக்கும். இத்தகைய கிரக அமைப்பைக் கொண்டவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கு கட்டாயம் இவர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலம் இராமேஸ்வரம் ஆகும். இறைவன் இராமநாதர் ஆவார்.
இராமபிரான் இலங்கையில் இராவணன் முதலான அரக்கர்களைக் கொன்று இராமேஸ்வரம் தீவில் உள்ள கந்தமான பர்வதத்தில் வந்து தங்கினார். அரக்கர்களை கொன்ற பாவம் தீர சிவலிங்க பிரதிஷ்டை செய்ய எண்ணி அனுமனை அழைத்துக் கைலாயம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு ஆணையிட்டார். அனுமன் திரும்பி வர காலதாமதம் ஏற்பட்டதால் சீதா தேவியால் மணலால் பிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்தார். இதுவே இராமலிங்கம் ஆகும். இதனால் இராமேஸ்வரம் என்று பெயர் உண்டானது.
இந்த இராமேஸ்வரத்தின் மற்றொரு தனிச் சிறப்பு இங்கு உள்ள லிங்கம் ஆகும். பன்னிரெண்டு ஜோதிலிங்கத்தில் ஒன்று ஆகும். மேலும் இங்குள்ள கடலையும் சேர்த்து மொத்தம் 23 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நீராடினால் சகல பாவமும் நீங்கும் என்று இராமேஸ்வரம் ஸ்தலபுராணம் கூறுகிறது. இது தீர்த்தங்களின் சிறப்பு ஆகும்.
அக்னி தீர்த்தம்:
இது தான் ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரில் உள்ள கடல் ஆகும். அக்னி பகவான் இங்கு வந்து நீராடியதால் அக்னி தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. இங்கு அவரவர் வசதிக்கு ஏற்ப திலஹோமம் செய்து நீராடி பிதுர்கடன்களை செய்ய வேண்டும். திலஹோமம் செய்ய வசதி இல்லாதவர்கள் 16 நாட்கள் அசைவ உணவு மற்றும் மதுபானம், பீடி, சிகரெட் போன்றவைகளை தவிர்த்து விரதம் இருந்து இங்கு வந்து பச்சை நிற இளநீர் தேங்காயை வாங்கி மேல் பகுதியை வெட்டி துளையிட்டு இரண்டு கைகளாலும் தலைக்கு மேல் தூக்கியபடி சூரியனைக் காயத்ரி தேவியாக பாவித்து வேண்டி 11முறை காயத்ரி மந்திரத்தை ஜெபித்து பின்பு அந்த இளநீரை தனது தலையில் விட்டு கடலில் நீராடினால் பிதுர் தோஷங்கள் குறையும் நம்மை விட்டு நீங்கும்.
இந்த தீர்த்தங்களில் குளிக்கும் பொழுது கட்டாயம் மூன்று, நான்கு மற்றும் ஏழு முக ருத்திராட்சத்தை கண்டிப்பாக உடலில் அணிந்திருக்க வேண்டும். நாம் குளிக்கும் ஒவ்வொரு தீர்த்தத்திலும் அந்த சமயத்தில் நவக்கிரக தோஷம் நீக்கும். சூரியனின் சக்தி வாய்ந்த மந்திரத்தை ஜெபித்து கொண்டு குளித்து தீர்த்தமாட வேண்டும். மந்திரம் தெரியாதவர்கள் கீழ்வரும் மந்திரத்தை ஜெபிக்கலாம்.
ஓம் நமோ பாஸ்கராய மம சர்வ கிரஹாணாம் பீடா
நாசனம் குரு குரு சுவாஹா!
இறுதியாக வடக்கு முதல் பிரகாரத்தில் விசாலாட்சி சன்னதிக்கு அருகில் உள்ள கிணற்று தண்ணீர் தான கோடி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தை எத்தனை வருடமாக கலசங்களில் அடைத்து வைத்தாலும் கெடுவதில்லை. கிருஷ்ண பரமாத்மா கம்சனைக் கொன்ற பாவத்தை இந்த தீர்த்தத்தில் நீராடிதான் போக்கிக் கொண்டார். இப்படிப்பட்ட கோடி தீர்த்தத்தில் உள்ள நீரை கலசத்தில் எடுத்து சென்று வலம்புரி சங்கினால் சூரிய மந்திரத்தை சொல்லி தலையில் விட்டு நீராடி வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் நவக்கிரக தோஷம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நமது ஜாதகத்தில் சுப பலன்கள் செயல்பட ஆரம்பிக்கும். இதனை ஒவ்வொரு ஜோதிடரும் வருடத்திற்கொரு முறை செய்து கொண்டால் ஜோதிடத்தில் எந்த முடக்கமும் ஏற்படாது. ஜோதிடத் தொழிலும் சிறப்பாக நடக்கும்.



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment