Monday 15 May 2017

ஞானிகளின் ஜீவ சமாதிகளுக்கு சென்றால் என்ன பலன் !!

ஞானிகளின் ஜீவ சமாதிகளுக்கு சென்றால் என்ன பலன் !

ஏன் ஞானிகளின் ஜீவ சமாதிகளுக்கு செல்ல வேண்டும் -அதற்கு நமக்குள்ளேயே எல்லாம் இருக்கிறது அதை கவனித்து வந்தால் போதுமானது என்று ஓரளவு பாதையை கடந்த ஆன்மீக நபர்கள் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்!!
ஆனால் ஒரு ஆழமான விஷயத்தையும் இதன் மூலம் தவற விடுகிறோம் !!
ஜீவசமாதிகளில் என்ன உள்ளது தானும் பிரபஞ்சமும் ஒன்றே என்ற இயற்கை தன்மையை உணர்ந்தவர்கள் - அந்த தன்மையை பெற்றுக் கொள்ள மலைகளில் தவம் செய்து வரும் பொழுது அங்கே இயற்கையாக உள்ள மலையும் தானும் இணையும் பொழுது அதாவது இயற்கையும் - மனிதனாக மனிதனுக்குள் இருக்கும் இயற்கையும் ஒன்று படுகிறது !! அங்கே ஒரு நல்ல positive vibration குவிக்கபடுகிறது !!
அங்கு தியானம் செய்த ஆன்மாக்கள்- tv பார்ப்பதில்லை - cell phone பேசுவது இல்லை - wats app ல face book ல கவனம் வைத்து தியானம்- பக்கத்து வீட்டு நபர்களை நோக்குவதில்லை -இது போன்ற கவர்ச்சிகரமான விஷயங்களை தவிர்த்து ஒன்றே ஒன்றில் ஒன்றி விடுகிறார்கள் - அங்கு தியானத்தன்மையை தவிர்த்து மற்ற எந்த ஒரு அலைக்கும் இடம் இல்லாமல் போகிறது !!
ஆனால் வீட்டில் தியானம் செய்கிறோம் கூடவே மீதி நேரத்தில் எல்லா மேலே குறிப்பிட்ட கவர்ச்சி விஷயங்களையும் செய்கிறோம் - ஒரு பாதி தியானம் மறு பாதி கவர்ச்சிக்கு (negative vibrations )மனம் தூண்ட படுவதால் நாம் முழுமையாக அமைதிக்கு உள்ளே போகாமல் தியானத்தின் தன்மையை தவற விடுகிறோம்!!
நாம் இயற்கையை நேரடியாக உணர்ந்து கொள்ள முடியாத காரணமே- அதை நம்மை போல மனிதனாக இருந்து உணர்ந்த ஞானிகளை துணை கொண்டு பாதைக்கு அவர்களை கருவியாக நாடுகிறோம்,
இதையும் நாம் இருக்கும் உணர்ச்சி வாய்ப்பட்ட சூழலில் இருந்தே நெருங்க நினைக்கிறோம் - ஆனால் உணர்ச்சி வாய்ப்பட்ட அலைகள் அவர்களை நெருங்க விடுவதில்லை !!
எனவே நாம் ----ஞானி ---இயற்கை என்பதை உணர- அதாவது உன் அலை தன்மையை - ஞானியின் அலை தன்மையையும் உள்வாங்கி அந்த இணைப்போடு இயற்கையை முழுமையாக உணர வேண்டும் எனில்!!
அவர்கள் ஜீவ சமாதிகளுக்கு அருகே இருந்து தியானம் செய்யும் பொழுது அவர்களின் ஆன்மாவை நமக்குள் இருக்கும் ஆன்மா தொட அதிக வாய்ப்புகள் உள்ளது !!
உணர்ச்சிகள் அற்ற தளத்தில் அதாவது கவர்ச்சிகள் தாண்டிய சூழல்களில் முழுமையாக உயிர்ப்புடன் மறை பொருளாக (ஜீவ சமாதிகள்) வாழ்ந்து வரும் (positive )உணர்வு அலையின் அருகே அவ்வப்போது சென்று வரும் பொழுது நாமும் அந்த உணர்வு தளத்தை எட்டி விட அதிக வாய்ப்பு உள்ளது !!
இந்த உணர்வு தளத்துக்கு உள்ளே நுழைய தான் நாம் பல பயிற்சி முறைகளையும் தியான யுக்திகளையும் கையால்கிறோம்!!
ஆழ்ந்த அமைதியில் அவர்கள் ஆன்மா இணைந்த இடங்களுக்கு நாம் செல்லும் பொழுது அந்த ஆழ்ந்த அமைதியில் உள்ள தியான தன்மை நமக்குள்ளும் நெருங்கும் வாய்ப்பு உள்ளது !!
உணர்ச்சிகளை கரைத்து உணர்வுக்கு உள்ளே சென்று நாமும் இயற்கையூடன் இணைய ஞானிகளின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வருவது சிறப்பு !!
மாதக் கணக்கில் செய்கின்ற பயிற்சிகள் மூலம் கிடைக்காத சில நுணுக்கமான உணர்வுகள் அதிர்வு அலைகளை - அமைதி தன்மையை - அங்கே அமைதியாக உக்காந்து கவனிக்கும் பொழுது 10 நிமிடங்களில் நம்மை சூழ்ந்து தழுவும் வாய்ப்பாக இருக்கும் !!
உன்னை உணரும் வரை இது போன்ற வாய்ப்புக்களை -எல்லாம் தெரியும் -இருக்கும் இடத்தில் பெற்று விட முடியும் என்று உணர்ச்சி வசப்படும் இடங்களில் இருந்து தேடி தவற விடாதே!!
எதிர்பார்ப்புகள் இல்லாமல் - கோரிக்கைகளை வைக்காமல் உன்னை நீ இழக்க தயாரான மனோ நிலையில் ஒரு மகிழ்ச்சியான சுற்றுலா வை போல எண்ணி செல்லும் பொழுது அந்த அமைதியை உணர்ந்து கொள்ள முடியும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment