Tuesday 14 November 2017

குழந்தை பிறப்பில் நவக்கிரகங்களின் பங்கு என்ன தெரியுமா..?

குழந்தை பிறப்பில் நவக்கிரகங்களின் பங்கு என்ன தெரியுமா..?


அவரவர் தமக்கு உள்ள
ஆயிசும் தொழிலும் பொன்னும்
இவர்களின் வித்தை செல்வம்
எழில் மரணங்கள் ஏழும்
தவமுடைய பிரம்ம தேவன்
தனது கை தொடங்கு முன்னால்
சிவனுடைய அருளினாலே
கர்ப்பத்தில் நிச்சயிப்பான்..
இந்த பாடல் நமக்கு ஒன்றை உணர்த்துகிறது.பிறப்பும்-இறப்பும் நம் கையில் இல்லை.இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.இனி குழந்தை உருவாக கிரகங்கள் எவ்வாறு உதவுகிறதென்று பார்ப்போம்.
ஒன்றாம் மாதம்...
கருத்தரிக்கும் முதல் மாத்த்தில் சுக்கிலம்-சுரோணிதம் இரண்டும் இரண்டறக் கலக்கும் வகையில் அதிபதியாகும்.(சுக்கிரன்)
இரண்டாம் மாதம்.
கருத்தரித்த இரண்டாம் மாதம் கரு பிண்டம் சிக்கென்று இளகி இருக்க செவ்வாய் அதிபதியாகிறார்.
மூன்றாம் மாதம்.
கருத்தரித்த மூன்றாம் மாதம் கை கால் மூளை உருவாக குரு அதிபதியாகிறார்.
நான்காம் மாதம்.
கருத்தரித்த நான்காம் மாதம் எலும்பும்-நரம்பும் உண்டாக சூரியன் அதிபதியாகிறார்.
ஐந்தாம் மாதம்.
தோல் மூலம் உடலமைப்பை ஏற்படுத்த உடல்காரகனான சந்திரன் அதிபதியாகிறார்.
ஆறாம் மாதம்.
ரோம்ம் நகம் உண்டாக சனி அதிபதியாகிறார்.
ஏழாம் மாதம்.
உயிர் உண்டாக புதன் காரணமாகிறார்.
எட்டாம் மாதம்.
ஜென்னத்தின் போது ஏற்படும் விதியை நிர்ணயிக்க அனைத்து கிரகங்களும் கணக்கின் வழி தர்மத்தை பரீசீலிக்கும்.
ஒன்பதாம் மாதம்.
உடல் முழுவதும் பூரணமாக வலுவடைய சந்திரனே அதிபதியாகிறார்.
பத்தாம் மாதம்.
சிரசு திரும்பி பூமி உதயமாகி ஆத்மா ஜனிக்க சூரியன் காரணமாகிறார்.
இப்படி நம் பிறப்பிற்கு நவ கிரகங்கள் காரணமாக அமைகின்றன.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment