Tuesday 14 November 2017

கோவிலில் செய்யக் கூடாதவை


கோவிலில் செய்யக்கூடாதவை




1) குளிக்காமல் கோவிலுக்கு போகக்கூடாது.

2) கர்ப்ப கிரஹத்தினுள் கடவுளுக்கு அலங்காரம் நடக்கும்போது திரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.

3) சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது.

4) ஆலயத்தில் நண்பர்களையோ பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்க கூடாது. இறைவனே மிகப் பெரியவன். அத்தகைய ஆலயத்தில் அனைவரும் சமம். மற்றவரின் காலில் விழுந்து வணங்கக் கூடாது

5) விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றை கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம்.

6) பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது. கோவிலுக்குள்ளேயோ, கோவில் மதிற்புறங்களிலோ எச்சில் துப்புதல், மலம், ஜலம் கழித்தல் கூடவே கூடாது.

7) விபூதி, சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்க கூடாது. அபிஷேகம் நடக்கும் பொழுது கோவிலைச் சுற்றி வரகூடாது

8) கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணையை தலையில் தடவிக் கொள்ள கூடாது.

9) சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.

10) ஆண்கள் சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது. அதிக அழுத்தமான வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக் கூடாது. இது மற்றோரின் கவனத்தை திசை திருப்பிவிடும். தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது

11) கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது. அடிமேல் அடி வைத்து வலம் வரவேண்டும். மிக நிதானமாக அனைத்து மூர்த்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும்.

12) எவருடனும் உலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பேசிக்கொண்டு கோவில்களில் வலம் வரக்கூடாது. ஆலயத்தினுள் தெய்வசக்தி நிரம்பியிருக்கும். அச்சக்தி நம் உடலில் ஊடுருவும்படி இறைவனையே மனம் முடிக்க நிரம்பி வலம் வருதல் வேண்டும்.

13) போதை வஸ்துக்கள், திண்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் பிரவேசிக்கக் கூடாது. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது.

14) புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

15) சிவன் பெருமான் கோவில்களில் கடவுளை வணங்கிய பின் சிறிது நேரம் அமர்ந்து வரவேண்டும். பெருமாள் கோவில்களில் அமரக்கூடாது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment