Friday 3 November 2017

ஆயுஷ்ய ஹோமம் - அப்த பூர்த்தி


ஆயுஷ்ய ஹோமம் - அப்த பூர்த்தி


குழந்தை பிறந்து 12 மாதங்கள் முடிந்து 13 வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்யஹோமம் செய்யப்படுகிறது. அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. எனவே அப்தப10 ர்த்தி என்பகை 'ஆண்டு நிறைவு”என்றும் சொல்வார்கள். ஜன்ம நக்ஷத்திரத்தில் குழந்தைக்கு புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு ஸ்நானம் செய்து வைத்து, புது ஆடைகள் அணிவித்து, ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வித்து,குழந்தையின் அம்மான் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். பின்னர் ஹோமம் வளர்த்து, 'ஆயுஷ்ய சூக்தம்”என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்ய10”பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் 
ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்” என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்யும் மந்திரங்களைச் செபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். ஹோமம் செய்த நெய்யின் மிச்சத்தில் அன்னத்தைக் கலந்து அதை மந்திர பூர்வமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இந்த ஆண்டுநிறைவு, நடப்பு மாதத்தில் இரு நக்ஷத்திரங்கள் வருமானால் பின் வருகிற நக்ஷத்திரத்திலேயே இதைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. சில ஸமயம் ஒரே நக்ஷத்திரம் இரண்டு தினங்களில் வரும். இதனால் என்று அநுஷ்டிப்பது என்ற குழப்பமும் வரும். என்றைய தினத்தில் சூரிய உதயத்திலிருந்து உச்சிப் பொழுதுக்குள் குறைந்தது 12 நாழிகை அதாவது 4 மணி 48 நிமிட நேரம் என்று நக்ஷத்திரம் இருக்கிறதோ அன்றைய தினம் அநுஷ்டிக்கவேண்டும்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment