Friday 3 November 2017

திதிகளில் செய்யக் கூடியவைகள்



15 + 15 திதிகளில் செய்யக் கூடியவைகள்


பிரதமை - பிரதமை திதியில் உலோகம், கருங்கல், மரம் இவைகளில் சித்திர வேலைகள், பாய் முடைதல், படுக்கைகளில் சித்திர வேலைகள் செய்தல், சித்திரங்கள் வரைதல் கத்தி முதலிய ஆயுதங்களைச் செய்தல் நல்லது.


துவிதியை - துவிதியை திதியில் முஞ்சிப்புல்லால் செய்யவேண்டிய வேலைகள், விவாகம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணங்கள் தயாரித்தல் - அணிதல் புஷ்டிகரமான காரியங்கள் செய்தல், வீடு கட்டுதல் நல்லது.


திருதியை - திருதியை திதியில் சங்கிதம் , வாத்தியம், சகலவிதமான சித்திர காரியங்கள் வீடு கட்ட ஆரம்பித்தல் கிரகப்பிரவேசம் ஆகியவைகளுடன் துவிதியை திதியில் கூறப்பட்டவையும் செய்வது நல்லது.


சதுர்த்தி - சதுர்த்தி திதியில் வதம் செய்தல் மந்திரத்தால் கட்டுதல் விஷ ஆயுதம் அக்னி காரியங்கள் ஆகியவைகளைச் செய்தல் சித்தி ஆகும். மங்களகரமான காரியங்கள் செய்தால் ஓரு மாதத்தில் பின்னமாகும்.


பஞ்சமி - பஞ்சமி திதியில் யாத்திரை, உபநயனம், விவாகம், தேவதா ப்ரதிஷ்டை சாந்தி செய்தல், புஷ்டிதரும் காரியங்கள் ஆகியவைகளைச் செய்யலாம்.பஞ்சமி திதியில் செய்யப்படுகின்ற காரியங்கள் வெகு காலம் நிலைத்திருக்கும்.


சஷ்டி - சஷ்டி திதியில் வேலைக்குச் சேருவது, பசுமாடு, வீடு, வாகனம் ஆகியவை விலைக்கு வாங்குவது - விற்பது மருந்து தயாரித்தல் -உட்கொள்ளுதல் ஆகியவைகளை செய்யலாம்.


சப்தமி - சப்தமி திதியில் வீடு கட்டுதல், உபநயனம்,விவாகம்,தேவதாப்ரதிஷ்டை, இடமாற்றம்,விவசாயம்,ஆபரணம் அணிதல்,யுத்தம் செய்தல் ஆகியவைகளுடன் துவிதியை,திருதியை,பஞ்சமி திதிகளில் கூறப்பட்டுள்ளவையும் நல்லது.


அஷ்டமி - அஷ்டமி திதியில் யுத்தம் , தானியம், வாஸ்து,சிற்பம்,கோபத்தினால் செய்யக்கூடியவை பெண்கள், ரத்தினங்கள்,ஆபரணங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம்.


நவமி - நவமி திதியில் போரிடுதல், பகைவனை சிறைப்பிடித்தல்,பகைவர்களை அழித்தல், நண்பர்களுக்குள் பேதம் உண்டாக்குதல் ஆகியவைகளை செய்யலாம்.


தசமி - தசமி திதியில் சரீர புஷ்டியை தரக்கூடிய காரியங்கள்,மங்களகரமான காரியங்கள், பிரயாணம், புதுமனை புகுதல், ஜலம் சம்பநதப்பட்டவை முக்கியஸ்தரைப் பேட்டி காணுதல், வீடு சம்பந்தமான காரியங்கள் செய்யலாம்.


ஏகாதசி - ஏகாதசி திதியில் விவாகம்,விவசாயம்,உபவாசம்,ஆபரணம்,வாஸ்து சாந்தி,சிற்பம் ஆகியவை சம்பந்தப்பட்ட காரியங்கள் செய்யலாம்.


துவாதசி - துவாதசி திதியில் தனம் தானியங்கள் சம்பாதித்தல், சுப செலவுகள், தர்ம காரியங்கள், நிலையுள்ள மற்றும் நிலையில்லாத காரியங்கள் அனைத்தும் திருவோணம் கூடிய துவாதசி நீங்கலாக மற்ற நாட்களில் செய்யலாம்.


திரயோதசி - திரயோதசி திதியில் வெகுகாலம் நிலைத்திருக்க வேண்டிய சௌபாக்கியமான மங்கள காரியங்கள்,நாட்டியம்,ஆபரணங்கள், வாகன பயிற்சி, எழுதுதல் ஆகியவைகளைச் செய்யலாம்.


சதுர்தசி - சதுர்தசி திதியில் பல் சீரமைத்தல், தையல் தேய்த்தல்,மாமிசம் புசித்தல், யாத்திரை, சுக்லபட்சத்தில் மட்டும் விவாகாதி சுபகாரியங்கள் ஆகியவைகளைச் செய்யலாம்.


பௌர்ணமி - பௌர்ணமி திதியில் வேள்வி, மங்களகரமான காரியங்கள், புஷ்டிதரும் மருந்துண்ணல், போர் செய்வதற்கு வேண்டிய காரியங்கள் திருமண நிச்சயம், சிற்பக்கலைகள், ஆபரணங்கள் தேவதா பிரதிஷ்டை செய்யலாம்.


அமாவாசை - அமாவாசை திதியில் இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைத் தவிர மற்ற எக்காரியங்களும் செய்யக் கூடாது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment