Thursday 23 November 2017

இராமாயண மஹிமையின் கதை சுருக்கம்



இராமாயண மஹிமையின் கதை சுருக்கம்


தசரத மஹாராஜா செய்த யாகத்தின் பலனாய் அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து, ரகுகுலத்திற்கு பெருமை அளித்து, வில்வித்தை வாள்வித்தையில் தேர்ந்து,
விஸ்வாமித்ர முனிவரின் யாகத்தை காத்து நின்று,
அகலிகைக்கு சாபவிமோசனமளித்து,




ஜனக நகர் சென்று, சிவ தனுசை வளைத்தொடித்து,நங்கை சீதையை கை பற்றி, சிற்றன்னை கைகேயின் ஆணையால் மரவுரி மான்தோல் தரித்து, மனையாள் சீதை சகோதரன் லக்ஷ்மணுடன் கானகம் சென்று,குஹனின் அன்பான உதவியால் கங்கையை கடந்து,சித்திரகூடம்தனில் தங்கி,
பரதனுக்கு பாதுகையை அளித்து, ராஜ்யத்தை ஆளச்செய்து,
அகஸ்தியரை தரிசித்து, பஞ்சவடி சென்று, அங்கு வந்த அரக்கி சூர்பணகையின் மூக்கை அறுக்கவைத்து, மாய மானான மாரீசனை கொன்று, சீதையை பிறிந்து மனம் தளர்ந்து, ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து, ஸபரியை ஆசிர்வதித்து,அனுமனைக் கண்டு, சுக்ரீவனுடன் நட்பு கொண்டு,வாலியை வதைத்து,
அனுமனுக்கு அனுக்ரஹ பலமளித்து, விளையாட்டாக கடலை தாண்ட செய்து, அஸோக வனம்தனில் அமர்ந் துருந்த சீதையிடம் கனையாழியை கொடுக்கவைத்து,
ராவணனை கண்டு லங்கைக்கு தீயிட்டு வந்த அனுமனிட மிருந்து, சீதை கொடுத்தனுப்பிய சூடாமணியை பெற்று கொண்டு, அலைகடலில் அணைகட்டி பரிவாரங்க ளுடன் லங்கை சென்று, ராவணனை வென்று வதைத்து,
விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு,


அன்பு சீதைக்கு அக்னிதேவனின் ஆசியை பெற்று கொடுத்து,
ஆருயிர் சீதை ஆசை லக்ஷ்மண் தாசன் அனுமனுடன் நந்திக் ராமம் சென்று, அங்கு காத்திருந்த பரதனை அணைத்து கொண்டு, யாவரும் அயோத்தி திரும்பி,அங்கு கூடியிருந்த ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கிவிட்டு,அன்பு தாயார்களின் பொற்பாதங்களில் தலை வைத்து வணங்கி, அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து,மணிமகுடம் ஏற்று கொண்ட மஹானுபாவன் ஸ்ரீராமபிரானை நான் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கி பஜிக்கிறேன்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment