Tuesday 28 November 2017

குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?

குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காகசெய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும்ஒன்று செய்துவிடமுடியாது.




குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொரு வருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரேஅளவில் இருக்கும்.குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால்அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜைசெய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.பிற தெய்வத்தைவணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள்பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தைவணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்குசென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும்.உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறைகண்டிப்பாக . நேரில் சென்று பூஜைசெய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜைசெய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரியவித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போதுதேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால்குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒருகடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச்சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டுவணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதைசெய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.


குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டுபூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களதுமணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடுகட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தைவழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வவழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம்ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மைசெய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும்குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும்என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்துசொல்லும் மகான்களின் உண்மை.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment