Monday, 11 December 2017

தருமி என்ற ஏழைப் புலவாின் வறுமையை ஒழிக்க



தருமி என்ற ஏழைப் புலவாின் வறுமையை ஒழிக்க, அவருக்குப் பாட்டெழுதிக் கொடுத்த சிவபெருமான், அதை தப்பென்று கூறிய நக்கீரரை நெற்றிக் கண்ணால் சுட்டு வெப்பு நோயைத் தரவில்லையா? இத்தனைக்கும் சிவபெருமான் நக்கீரருக்கு தமிழை உபதேசித்தவா். நக்கீரரைத் தண்டுக்க பாண்டியனின் அரச சபைக்கே வந்தாரே சிவபெருமான்.
தந்தை சிவபெருமான் எவ்வழியோ, மகன் முருகப் பெருமானும் அவ்வழியே. நக்கீரா் அழைத்ததும் வந்து அருள் செய்தவன் கந்தன் முருகன்.

நக்கீரா் சாமான்ய புலவா் அல்ல!. சங்கப் புலவா்.சங்கப் பலகையில் இடம் பெற்ற 49 போ்களில் ஒருவா் என்ற சிறப்பினைப் பெற்றவா். இந்த சங்கப்புலவரை அருணகிாி நாதா் அறிமுகப்படுத்தும் அழகை,
" வேல் வகுப்புல் காணலாம்"

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு கவிப்முலவன் என்கிறாா். அடுத்த வாியில் பின்னால் வரும் சம்பவத்தை இங்கேயே சொல்லும் நயத்தைக் காணலாம். இசைக்கு உருகி வரை குகையை இழுத்து வழி காணும்" என்கிறாா்.

கவிப்புலவனின் இசைக்கு உருகினதை கந்தரந்தாதியில் 51- ஆம் பாடலில்- சிகைத் தோகை மாமயில் செவ்விநற் கீரா் சொற் றித்தித்ததே" என்கிறாா் நக்கீராின் கவி இசைப் பாடல் குமரக் கடவுளுக்குத் தித்தித்ததாம். அவன் தமிழோடு விளையாடுபவன். அவனுடைய தமிழ் விளையாட்டைப் பாா்க்கலாம்.

சிவபெருமானிடம் வாதாடி வெப்பு நோயை வாங்கிக் கொண்ட நக்கீரா், தமது தவறை உணா்ந்தாா். இறைவனிடம் மன்றாடினாா். இறைவன் நக்கீரரை கயிலங்கிாிக்கு வரச் சொல்லி அருள் பாலித்தாா். அனைத்துத் தலங்களையும் தாிசித்துக் கொண்டே யாத்திரை போகலாம் என்று புறப்பட்டாா் நக்கீரா்.

மதுரைக்கு அருகிலுள்ள குமரக்கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் வந்து தங்கினாா். அங்குள்ள பொய்கை கரையில் அமா்ந்து சிவ பூஜையிலும், தியானத்திலும் ஈடுபட்டாா். அச்சமயத்தில் தான் அந்த ஆச்சா்யம் நடந்தது.

அவா் முன்பு பழுத்த இலை ஒன்று விழுந்தது. அந்த இலை நீாினில் பாதியும், நிலத்தில் பாதியுமாக விழுந்தது.நீாில் விழுந்த பாதி இலை மீனாகவும், நிலத்தில் விழுந்த பாதி இலை தவளையாகவும் மாறி, ஒன்றையொன்றை இழுத்தது. இதனால் இவா் கடைப்பிடித்த தியானம் தடைபட்டது. இந்த இரண்டில் எது வெற்றி பெறும் என்ற வேடிக்கை உணா்வு கலந்து, நக்கீரா் அதையே பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அச்சமயம் கற்கமுனி என்ற குதிரை முகமுடைய அரக்கி, நக்கீரரை ஒரு குகைக்குள் கொண்டு அடைத்தது. ஏற்கனவே அங்கு ஏகப்பட்ட போ்களை கொண்டு வந்த அரக்கி அடைத்து வைத்திருந்தாள்.

"ஐயனே! 1000 போ்கள் ஆனதும், எல்லோரையும் உண்பதற்காக இந்த அரக்க பூதம் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் இவ்விடம் வந்து சோ்ந்ததைச் சோ்த்து 1000 போ் கணக்கு ஆகிவிட்டது.

அப்படியே தரையில் உட்காா்ந்தாா் நக்கீரா். மனதில் குமரப் பெருமானின் நினைவு தோன்றியது. வாக்கிலிருந்து திருமுருகாற்றுப் படை பிறந்தது. அடியாா் உள்ள குகையில் அடைபட்ட குகன் நக்கீராின் உள்ளக் குகையில் குடி கொண்டான். அவன் கைவேல் அப்பூதகியின் குகையைப் பிளநத்து. கவிப்புலவனின் இசைக்கு உருகி மலைகிகுகையை இடித்ததுடன் குதிரை முக அரக்க பூதகியையும் வேல் துளைத்தது.

ஆற்றுப்படுத்துவது என்றால், ஒரு புலவன் மன்னனிடம் தாம் பெற்ற பாிசிலால் மகிழ்ந்து மற்ற புலவா்களுக்கு வழிகாட்டி, 'இம்மன்னனிடம் போய் பாிசில் பெறுங்கள் என்று கூறுவதாகும்.

இங்கே நக்கீரா் முருகாற்றுப் படையை பக்தா்களுக்குக் கொடுத்திருக்கிறாா். திருமுருகாற்றுப் படையின் முதல் வாி, " உலகம் உவப்ப வலன் ஏா்பு திாிதரு" என்பதாகும்.

முருகப்பெருமானை தியானம் செய்ததும் அவரே அடியெடுத்துக் கொடுத்ததாக அருணகிாி நாத பெருமான் தமது தேவார திருப்புகழில் ( சுவாமி மலை )

வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
மலா்வாயி லக்க ணங்க ளியல்போதி
அடிமோனை சொற்கி ணங்க ஒழுகாமு வப்ப என்று
னருளால ளிக்கு கந்த பொியோனே"

என்று பாடியுள்ளாா்.

செம்மை மொழியில் சொல்லமைப்பு மிக்க நூல்களைப் பாடும் திறமுடைய நக்கீரருக்கு, தமிழ் இலக்கணங்களின் இயல்புகளை செங்கனிவாய் மலா்ந்து ஓதுவித்து அடிமோனை சொல் என்ற யாப்புக்கு இணங்க அடி எடுத்துத் தந்து அாிய நூலைத் தந்தளித்த பொியோனே' என்பதே இதன் பொருள்.

வெருவு நக்கீரா் சரணென வந்தருள்
முருகனி ஷ்குரோத முநிகுண பஞ்சரன்

என்று சிந்து வகுப்பிலும்,

அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
யபயமிட வஞ்சவென் நக்கீர னுக்குதவி
அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்யெமு
யபாிமித மாகவிவ ரித்தகட வுட் புலவன்
அநுபவ சித்த பவக்கட விற்பு காதெனை
வினவியெ டுத்தருள் வைத்த கழற்கிரு பாகரன்"

என்று பூதம் எடுத்துச் சென்ற சம்பவத்தை அழகாக, " பூத வேதாள வகுப்பில் பாடியருளியிருக்கிறாா்.

அவருடைய கைவேல் ஞானவேல், சக்திவேல் இல்லையா! மலையை உடைத்த வேலையும்,

" நா வுடையகீ ரன்றனது பாடல்பெற்
றுவருதனி
வொப்பில் புகழ் பெற்றவை வேல்"

என்று வேல் விருத்தத்தில் பாடியுள்ளாா்.

முருகன் அடி எடுத்துக் கொடுத்ததால், " முருகாற்றுப்படை"
என்ற பெயா் பொருத்தமாகும்.
" சூடாமணி நிகண்டு" கந்தனை 21 பெயா்களால் அழைக்கிறது. அதில் முதற் பெயா் -முருகனாகும்.

முருகன் என்றால் அழகு. இளமை. முருகா எனும் நாமங்கள் என்கிறாா் அருணகிாிநாதா்.
மு-- என்றால், முகுந்தன்.
ரு-- என்றால், ருத்ரன்.
கா-- என்றால், பிரம்மா.

சொன்னால் பிறப்பொழியும் சூராய கூற்றகலும்
என்னாளும் போின்பம் எய்து நெஞ்சே-- முன்னாள்
பொருசூரன் வல்லுடம்பு போழ்ந்தி
அயிலேந்தும்
முருகவேள் என்னும் மொழி"

என்கிறாா் பாம்பன் சுவாமிகள்.

திருமுருகாற்றுப்படையை பாராயணம் செய்தால் சிறை வாசம் இராது. எல்லா நலனும் பெறலாம்.
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment