Saturday, 2 December 2017

கபாலி தீர்த்தப் பெருமை!

அந்தக் காலத்தில்... துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை கிராமம். மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கியதாகச் சொல்வார்கள்.

புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் கடற்கரை அருகில் இருந்தது. அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘கடலக் கரை திரையருகே சூழ் மயிலைப்பதிதனில் உறைவோனே’ என்கிறார். எனவே அருணகிரியார் காலத்தில், கோயிலானது கடற்கரைக்கு அருகிலேயே இருந்திருக்க வேண்டும் என அறியலாம்!

‘பிற்காலத்தில், இந்தக் கோயில் போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்டது என சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பு எழுதியுள்ளனர். இதற்கு சாட்சியாக, கோயில் சம்பந்தப்பட்ட பல பகுதிகளும் பொருட்களும் சாந்தோம் கடற்கரையில் இந்தியத் தொல்பொருள் துறை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டன!

தற்போது கோயில் இருக் கும் இடத்தில் முன்பு அருள் பாலித்தது ஸ்ரீசிங்காரவேலர் மட்டுமே என்கிறார்கள். இதற்குச் சான்றாக கபாலீஸ்வரரின் கருவறை விமானத்தை விட சிங்காரவேலரின் கருவறை விமானம் சற்றே உயரமாக இருப்பதையும் காணலாம்!
தற்போதுள்ள ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சுமார் 300 வருடங்களுக்கு முந்தையது என்று சொல்வர். வள்ளல் நைனியப்ப முதலியாரின் மகன் முத்தியப்ப முதலியார். கோயிலை எழுப்பித் தந்ததாகச் சொல்கிறது வரலாறு. சிவனார் மீது கொண்ட பக்தியால், கோயிலையும் அருகில் உள்ள கபாலி தீர்த்தக் குளத்தையும் அமைத்தார்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment