Monday 11 December 2017

செவ்வாய் பகவான் தோற்றம் - கோவில் போன்ற செய்திகள்

செவ்வாய் பகவான்

செவ்வாய் என்பது சிவப்புக் கிரகமான செவ்வாய்க் கோளின் பெயராகும். விருச்சிக இராசிகளுக்கு சொந்தக்காரரும், இரகசிய யோகசானத்தின் குருவும் அவரே.



செவ்வாயின் பிறப்பு :
♠ சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் செவ்வாய். சிவபெருமான் சிவந்த மேனியை உடையவர். அதனால் செவ்வாயும் சிவந்தவராக அறியப்படுகிறார். அத்துடன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து கிரகமாக அந்தஸ்து பெற்றார்.

♠ சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்து வந்தது. அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக மாறியது. தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு, கிரக பதவி அளித்தார். கிரக பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும், பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.
செவ்வாயின் வேறு பெயர்கள் :
♠ செந்தீவண்ணன், அங்காரகன், சேய், குருதி, வக்கிரன், பௌமன், குசன், நிலமகன், அரத்தன், அழலோன், ஆரல், உதிரன், அங்காரகன், குஜன், மங்களன், பௌமன், உக்கிரன்.
செவ்வாய் பகவானின் பலன்கள் :
♠ ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருந்தால் அபாயச்சூழல் நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள், கஷ்டமான வேலைகள் என்று எதையும் பிரித்துப் பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள்.

♠ அவர்களுக்கு மனபயம் இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம் போன்றவைகளை அவர்கள் பதட்டமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

♠ வீரர்களின் நாயகன் மற்றும் யுத்தத்தின் நாயகனும் அவர்தான். குணங்களில், துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச் செல்லும் தன்மை ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் செவ்வாய் பகவான்.

♠ இயற்கையில் அனைவரின் ஜாதக அமைப்பிற்கும் உயிர், ஆயுள், தனது வாழ்க்கை துணையின் மூலம் அதிஷ்டம் பெரும் அமைப்பு, உடல் ஆரோக்கியம், வீரம், குடியிருக்கும் வீட்டின் தன்மை, குண இயல்பு, ஒழுக்கம், போன்ற விஷயங்களை விருத்தி செய்து தரும் அமைப்பை பெற்றவர் செவ்வாய் பகவான்.
செவ்வாய் பகவானின் துதி :
என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சி
ஓங்கார சொரூபனே செவ்வாயே
ஏங்கிடும் அடியாரின் குறை நீக்கி
ஏவல் எனைக் காத்திடுவாய் வையகத்தே

இத்துதியை தினமும் கூறினால் எந்த ஒரு கஷ்டமும் நம்மிடையே தோன்றாது.

செவ்வாய் பகவான் கோயில் :
♠ கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைத்தீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வைதீஸ்வரன் கோவில். இக்கோவிலில் அங்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு சிறப்புத்தலமான கோவில் உள்ளது.

♠ செவ்வாய் பகவானை வணங்கி அவரின் அருளை பெற்றால் என்னாளும் துன்பமில்லை.

பிரம்மஹத்தி தோஷம் நீங்க..!

திருவிடைமருதூர் கோவிலில் காலை நேரத்தில் மகாலிங்க சுவாமியையும், மூகாம்பிகை அம்மனையும் வணங்கிவிட்டு பின் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment