ஒரு முறை பிரம்மா தனக்கு ஐந்து தலை இருப்பதாக கர்வம் கொண்டு சிவனை நிந்தித்தார். எனவே கோபம் கொண்ட சிவபெருமான் அருகே இருந்த ருத்ரனிடம் பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டிக்கும்படி கூறினார்.
ருத்ரனும் பைரவர் உருவம் கொண்டு பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்தார் கர்வம் அடங்கிய பிரம்மா பைரவரை வணங்கினார். சிவனை வணங்கினார். அவரை மன்னித்தார் சிவன். பின்னர் பிரம்மனின் தலையை துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டினார் பைரவர்.
பூலோகம் சென்று பிச்சை எடுத்தால் இந்த தோஷம் நீங்கும் என சிவபெருமான் பைரவரிடம் கூறினார். பைரவர் அவ்வாறே பிச்சை எடுத்து வரும்போது குடந்தை அருகே உள்ள திருவலஞ்சுழியில் அவரது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
பின் அங்குள்ள ஸ்வேத விநாயகரை பைரவர் வேண்ட அவர் பைரவர் முன் தோன்றி, பைரவரின் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசும்படியும்; அது எங்கு சென்று விழுகிறதோ அந்த இடத்தில் கோயில் கொண்டிருப்பாயாக எனக்கூற பைரவரும் அவ்வாறே செய்தார். அந்த சூலாயுதம் ÷க்ஷத்திரபாலபுரத்தில் போய் விழ, பைரவரும் அத்தலத்திலேயே கோயில் கொண்டார்.
காலபைரவர் ÷க்ஷத்திரபாலகர் என அழைக்கப்பட்டார். அவரது பெயரே அந்த ஊருக்கும் வழங்கலாயிற்று.
பொதுவாக பைரவர் மிகவும் உக்கிரமாகக் காணப்படுவார். ஆனால் இங்குள்ள காலபைரவர் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால் மிகவும் ஆனந்தமாகக் காணப்படுகிறார். அதனாலயே இங்குள்ள காலபைரவர் ஆனந்த காலபைரவர் என அழைக்கப்படுகிறார்.
விரித்த சடை மேல் நோக்கி இருக்க, நான்கு கரங்களிலும் கபாலம் சூலம், பாசம், டமருகம் ஆகியவைகளைக் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார் காலபைரவர்.
எல்லா சிவாலயங்களிலும் நடராஜர், பிரதோஷ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி என சிவ பெருமானின் திருமூர்த்தி பிம்பங்கள் அமைந்திருப்பது இயல்பு. இருப்பினும் பைரவருக்கு அனைத்து ஆலயங்களிலும் தனிச் சிறப்பு உண்டு.
அசுர கணங்கள் பூலோகத்துக்கும் தேவலோகத்துக்கும் தொல்லைகள் தந்த போதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து, அசுரர்களை அழித்து, மக்களை மகிழச் செய்தார் எனச் சொல்வதுண்டு. சிவபெருமானுடைய குமாரர்களாக ஐந்து பேரைச் சொல்வதுண்டு அவர்கள் பஞ்ச குமாரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
விநாயகர்,
முருகன்,
சாஸ்தா,
வீரபத்திரர்,
பைரவர்
முருகன்,
சாஸ்தா,
வீரபத்திரர்,
பைரவர்
என்பவர்களே அந்த ஐந்து குமாரர்கள்.
(அருள்வார்)
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment