Saturday 15 July 2017

இறைவனை நாம் எப்போது காணமுடியும் ?

இறைவனை நாம் எப்போது காணமுடியும் ?
தெய்வம், சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், மறுபிறப்பு இவையெல்லாலம் சமூகத்தில் மக்களை ஒழுக்கத்தில் நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்ட விஷயங்களா? அல்லது ஒரு நம்பிக்iயா? அவைகள் இருந்தால் ஏன் நமது கண்களுக்குத் தெரியவில்லை? என்பது பலபேரின் கேள்வி!!! பிறவியிலிருந்தே நமக்கு கண்கள் தெரியாது என்றால், இந்த உலகத்திலேயுள்ள கோடானுபோடி மக்கள் காண்பது எதையும் எம்மால் பார்க்க முடியாது. எம்மால் பார்க்க முடியவில்லை என்பதற்காக இந்த உலகத்திலுள்ள (மற்றவர்கள் பார்க்கின்ற) பொருட்கள் யாவும் இல்லையென்று கூறிவிடமுடியுமா? குறை நம்மிடமல்லவா? அதேபோன்று உலகத்திலுள்ள பெரும்பாலான மக்களது மனதில் காமம், கோபம், பற்று, பொறாமை போன்ற பல விடயங்கள் நிறைந்திருப்பதனால் இறைவனது காட்சியைக் காண முடிவதில்லை. இதற்கெல்லாம் திவ்யமான கண்கள் வேண்டுமென்று மகான்கள் கூறியுள்ளார்கள்.
இரவிலே நாம் தூங்குகிறோம். அப்போது நம்முடைய கண்கள் மூடியே உள்ளன. அப்படித் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நமக்குக் கனவு வருகிறது. அந்தக் கனவில் வரும் காட்சிகளை நாம் அனுபவித்துப் பார்க்கிறோமல்லவா? நமது கண்கள் மூடியே இருக்கின்றன. அப்படி இருக்கும்போது எப்படிக் காட்சிகளைக் கண்டோம்? அவைதான் ‘மனோமயமான கண்கள்’ என்கின்றன புராண இதிகாசங்கள். கனவு காணுகின்ற நம்முடைய மனதிலே உலகப்பற்று இருந்தால் உலகப் பற்றுள்ள விடயங்கள் மட்டும்தான் தோன்றும். இறையருளினாலும் பல பயிற்சிகளினாலும் ‘பற்று’ என்னும் மாசு நம்முடைய மனதிலிருந்து துப்புரவாக நீங்கிவிட்டால், அதி நுணுக்கமான தெய்வீகக் காட்சிகளைக் கனவில் மட்டுமன்றி நேரிலேயும் காணலாம் என்றும், இப்படியான காட்சிகளை காணுகின்ற கண்களுக்குத்தான் திவ்வியமான கண்கள் என்று பெயர் என்றும் ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். எனவே நமக்கும் திவ்யமான கண்கள் இருந்தால் பாம்பன் சுவாமிகள் கண்டது போன்ற காட்சிகளை நாமும் காணமுடியும்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment