Monday, 25 September 2017

எளிய பரிகாரக் குறிப்புகள்!

எளிய பரிகாரக் குறிப்புகள்!

கர்பப்பை புற்றுநோய், கர்ப்பம் நழுவுதல் போன்ற கோளாறுகளால்
வருந்தும் பெண்களுக்கு உதவும் ஓர் உத்தம வழிபாடு இதோ.
திருச்சி மலைக்கோட்டை திருக்கோயில் படிக்கட்டுகளில்
ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கொழுக்கட்டையை வைத்து
வணங்கி மலை ஏறிச் செல்லவும்.
மடியில் அரிசி சாதத்தை கட்டிக் கொள்ளவும். உச்சிப் பிள்ளையாரை
தரிசனம் செய்தவுடன் அங்கிருந்தே ஸ்ரீரெங்கநாதரையும்
தரிசனம் செய்யவும்.
பின் மடியில் உள்ள சாதத்தை மலை மேல் உள்ள காக்கை, குருவி
போன்ற பறவைகளுக்கு தானமாக அளித்து விடவும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நோய்கள், அடி வயிற்றில் உருவாகும்
கட்டி போன்ற பலவிதமான நோய்களுக்கும்
நிவர்த்தி தருவதே மேற்கண்ட
முறையில் அமையும் உச்சிப் பிள்ளையார் வழிபாடாகும்.
சதுர்த்தி, சதுர்த்தசி, மூல நட்சத்திர நாட்களில்
இத்தகைய வழிபாட்டை இயற்றுவது சிறப்பு.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப்
பொதுவாக மன சஞ்சலங்கள் மிகுதியாக இருக்கும்.
இத்தகையோர் வியாழக் கிழமை தோறும் பெரியாழ்வார் அருளிய
திருப்பல்லாண்டு பாசுரங்களை 21 முறைக்குக் குறையாமல் ஓதி பிஸ்தா
பருப்பு கலந்த பசும்பால் தானமாக அளித்து வந்தால் அவசரமாக எடுத்த
முடிவுகளால் விளையும் துன்பங்களிலிருந்து
நிவாரணம் பெற வழி பிறக்கும்.
செய்நன்றி கொன்றவர்களுக்கு எக்காலத்திலும்
விமோசனம் கிடையாது என்று பெரியவர்கள் கூறகின்றனர்.
ஆனால், சித்தர்களின் தாயுள்ளம் அன்னவர்களுக்கும்
வழிகாட்ட கருணை கொண்டிருப்பதால் செய்நன்றி மறத்தல் என்னும்
கடுமையான குற்றங்களுக்கு ஆட்பட்டோர் கூட மனம் திருந்தி
உண்மையிலேயே தங்கள் தவறுக்காக
பிராய சித்தம் பெற விரும்பினால்
அவர்களுக்கு அருள்புரிய சிரித்த முகத்துடன் வீற்றிருப்பவரே திருச்சி
உறையூர் நாச்சியார்கோயில் துõணில் அருள்புரியும்
அகத்திய பெருமான் ஆவார்.
ஸ்ரீராமருடன் அருட்காட்சி தரும் அகத்திய முனியை வணங்கி தூய பசு
நெய் காப்பிட்டு குழந்தைகளுக்குத் தேங்காய் மிட்டாய் தானமாக அளித்து
வந்தால் செய்நன்றி மறந்த குற்றங்களுக்குப் பரிகார முறைகள் தக்கோர்
மூலம் உணர்த்தப் பெறும். செய்நன்றி மறவாத குணம் செறிந்ததே
தென்னை மரமாகும்.
சிறுநீரகக் கல், இடுப்புப் பகுதியில் புற்றுநோய், ரகசிய நோய்கள்
போன்றவற்றால் வருந்துவோர் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று
நெல்லைப் பரப்பி அதன் மேல் ஆறு மொந்தன் பழங்களை வைத்து
தர்ப்பணம் அளிக்கவும். பின்னர் இந்த வாழைப் பழங்களை பசுவிற்குத்
தானமாக அளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து தர்ப்பணம் அளித்து வர
நோய் நிவாரண வழி பிறக்கும்.
பொதுவாக தென் கிழக்கு மூலையான அக்னி மூலையில்
சமையலறை அமைவதே சிறப்பு.
ஆனால், தற்போதைய நிலையில் நாம் நினைத்த வண்ணம் வீடுகள்
நமக்கு வாய்ப்பதில்லை.
இத்தகைய வாஸ்து தோஷங்கள் ஓரளவு சீர்பெற கார்த்திகை மாத
அமாவாசை தினத்தன்று தினையைப் பரப்பி அதன் மேல் தர்பைச் சட்டம்
வைத்து தர்ப்பணம் அளித்து மயில்களுக்கு உணவிட்டு வரவும். தொடர்ந்த
வழிபாடு சிறந்த பலன்களை நல்கும்.
பூ, கல்வி, வேதம், தண்ணீர் இவற்றை காசுக்காக விற்கக் கூடாது
என்பது
தெய்வீகச் சட்டம்.
அறிந்தோ அறியாமலோ கல்வியை காசுக்காக விற்றவர்கள், விற்றுக்
கொண்டு இருப்பவர்கள் மனம் திருந்தி இத்தகைய தோஷத்திலிருந்து
விடுபட விரும்பவது உண்டு. அத்தகையோர் மார்கழி மாத அமாவாசை
தினத்தன்று நெல் அல்லது அரிசியைப் பரப்பி அதன் மேல் ஆறு
செவ்வாழைப் பழங்களை வைத்து தர்ப்பணம் அளிக்கவும். பின்னர் அந்த
செவ்வாழைப் பழங்களுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு
தானமாக அளித்து வர செய்த தவறுகளுக்கு பிராய சித்தம் பெற வழி
பிறக்கும்.
கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்கள் தொடர்ந்து தீய கதிர்களின்
தாக்கத்திற்கு ஆளாவதால் அவர்களுடைய கண்களும் சிறு மூளையும்
அதிகம் பாதிப்படையும் வாய்ப்புகள் ஏற்படுகிறது.
இத்தகையோர் தை மாத
அமாவாசை தினத்தன்று நெற்கதிர்களைக் கொத்தாக வைத்து அதன் மேல்
தர்ப்பைச் சட்டம் வைத்து தர்ப்பணம் அளிக்கவும். சர்க்கரைப் பொங்கலில்
பசு நெய் சேர்த்து ஏழைகளுக்கு,
சிறப்பாக சிவந்த மேனி உடையவர்களுக்கு
அன்னதானம் செய்து வருதல் சிறப்பு.
புனிதமான மேஷ லக்னம், மேஷ ராசி புத ஹோரை நேரத்தில் அவதாரம்
கொண்டவரே ஜடாயு பகவான்.
மைக்ரோ பயாலஜி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் போன்ற
நுண்துறையியல்
பயிலும் மாணவர்கள் புதன் கிழமைகளில் இராமாயணத்தில் ஜடாயு
மோட்சப் பகுதியைப் பாராயணம் செய்து
முந்திரி கலந்த புளியோதரையை
அன்னதானமாக அளித்து வந்தால் தங்கள்
படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.
சிலர் சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியும், தான் செய்த சாதாரண
காரியங்களைப் பெரிய சாதனைகளாக வர்ணித்துக் கொண்டிருப்பது
உண்டு. இவ்வாறு தன்னப் பற்றியே பேசுபவர்களுக்கு அடுத்து கிடைப்பது
சொறி நாய் பிறவி என்பது சித்தர்கள் வாக்கு.
எனவே இத்தகைய மனக் குற்றங்களுக்கு ஆட்பட்டவர்கள்
இப்பிறவியிலேயே பரிகாரம் பெற முயல்வதே புத்திசாலித்தனம்
அல்லவா? இத்தகையோர் தேய்பிறை அஷ்டமி திதிகளில் கால
பைரவருக்கு முழு முந்திரிகளால் மாலை சார்த்தி ஏழைகளுக்குத் தானம்
அளித்து வர தக்க நிவாரண வழிகள் பிறக்கும்
சிறு வயதிலிருந்தோ அல்லது திடீரென்றோ திக்கு வாய்ப் பழக்கத்திற்கு
ஆளாவனவர்கள் உண்டு. இதற்கு எளிமையான நிவாரண முறையை
சித்தர்கள் அருளியுள்ளார்கள். சுத்தமாகத் தயார் செய்த விபூதியில் சிறிது
நீர் விட்டுக் குழைத்து அதை உடலில் 36 பட்டைகளாக இட்டுக் கொண்டு
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய வேயுறு தோளி பங்கன்...
என்று தொடங்கும் பதிகத்தை 11 முறை ஓதி வரவும்.
தொடர்ந்து இவ்வாறு
வழிபட்டு வர திக்கு வாய் குணமாகும்.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் பற்பல அவதாரங்களுள் சாதாரண மனித அளவில்
புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானதாக அமைந்ததே ஸ்
கிருஷ்ணாவதாரம். பகவானின் ராச லீலை, காளிங்க நர்த்தனம்,
கோவர்த்தன கிரிலீலை, குசேலருடன் நட்பு போன்ற அனைத்து
லீலைகளும் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம் என்னும் உயரிய ஞான
நிலையை வெவ்வெறு கோணத்திலிருந்து பிரதிபலிப்பவை ஆகும்.
அத்தகைய ஞான நிலையை எட்டியவர்களுக்கே ஸ்ரீபகவானின் அவதார
லீலைகளின் தெய்வீக தாத்பர்யம் புரிய வரும்.
ஸ்
ரீமகாவிஷ்ணுவின் பற்பல அவதாரங்களுள் சாதாரண மனித அளவில்
புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானதாக அமைந்ததே ஸ்
ரீகிருஷ்ணாவதாரம். பகவானின் ராச லீலை, காளிங்க நர்த்தனம்,
கோவர்த்தன கிரிலீலை, குசேலருடன் நட்பு போன்ற அனைத்து
லீலைகளும் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம் என்னும் உயரிய ஞான
நிலையை வெவ்வெறு கோணத்திலிருந்து பிரதிபலிப்பவை ஆகும்.
அத்தகைய ஞான நிலையை எட்டியவர்களுக்கே ஸ்ரீபகவானின் அவதார
லீலைகளின் தெய்வீக தாத்பர்யம் புரிய வரும்.
ஏழு கடலையும் ஒரு நீர்த் துளியாக்கி தன் உள்ளங் கையில் வைத்து
அகஸ்தியர் அருந்தியதால் எல்லா கடல் நீரும்
புனிதம் அடைந்து விட்டன.
எனவே, கடலில் நீராட விரும்புவோர் கடற்கரையில் “ஸ்ரீஅகஸ்தியரே
போற்றி“ என்று எழுதி அதை கடலலைகள் தழுவிச் சென்ற பின் கடலில்
நீராடினால் நலம் அடைவர்.
கடல் அலைகள் கூறும் ரகசியம் என்ன? எந்த மகான்கள், ரிஷிகள், எந்த நாட்களில் வந்து, என்ன காரணத்திற்காக அங்கே நீராடினார்கள் என்ற இரகதிசயத்தையே கடற் கரைக்கு வருவோரிடம் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் கடல் அலைகளை வணங்கி அவைகள் கூறுவதைக் கேட்டால் உங்கள் பிரச்னைகள் அனைத்திற்கும் தகுந்த நிவர்த்தி முறைகளைக் கூறக் காத்திருக்கின்றன.
காரட், பச்சை பட்டாணி போன்ற காய்கறிகளை கழுதைகளுக்குத் தானமாக
அளித்து வந்தால் கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிட்டும்.
காரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்ற கிழங்கு
வகை உணவுகளை பன்றிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் நீர் மூலம்
பரவும் காலரா, மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள்
உங்களைத் தாக்காது.
உங்கள் கையெழுத்தில் உள்ள எழுத்துக்கள் இடைவெளியில்லாமல் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கும் வண்ணம் அமைந்தால் நீங்கள் செய்யும் காரியங்களில் தடங்கல்கள், இடையூறுகள் ஏற்படாமல் வெற்றிகரமாக அமையும்.
நம் விரல்கள் மூலமாகப் பல தீவினை சக்திகள் உடலுள் புகுந்து நமக்குத் துன்பம் இழைக்கின்றன. எனவே, விரல் நகங்களில் அழுக்கு சேராமல் எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது விரல்கள், உள்ளங் கைகளில் மருதாணி இட்டு வந்தால் எதிர்மறை தீவினை சக்திகளிலிருந்து நம்மை எளிதில் காத்துக் கொள்ளலாம்.
தினமும் சாப்பிடும்போது காக்கைக்கு இறைப் பிரசாதங்களை வைப்பது
போல் உணவு உண்ணும் முன் இலையில் சிறிது பிரசாதத்தைத் தனியாக
எடுத்து வைத்து இதை உணவு உண்ட பின் இலையோடு வெளியே
போட்டு விட வேண்டும். இதுவே பஞ்ச பூதங்களுக்கு உரிய ஆஹூதியாக
அமைந்து இந்தப் பஞ்சப் பூதத்தினாலான உடலுக்கு நல்ல கதி கிடைக்க
அன்னபூரண தேவியின் அருளாசி கிடைக்கும். இப்போ இப்படி செய்யறது
ரொம்ப கொறஞ்சி போச்சு. எல்லாரும் எச்சில்பட்ட மிஞ்சின சாதம், காய்,
கறியைத்தான் இலையுடன் வெளியே எறிகிறார்கள்.
சிவாலயங்களில் மூலவருக்குப் பின்புறத்தில் கோஷ்ட மூர்த்தியாய்
அருள்புரியம் அர்த்தநாரீஸ்வரருக்கு வெள்ளிக் கிழமை, பஞ்சமி திதி
நாட்களில் தேங்காய் எண்ணெயால் ஐந்து எண்ணிக்கையில்
(5, 14, 23) அகல் விளக்கு தீபங்களை ஏற்றி வந்தால் கணவன்,
மனைவியரிடையே உள்ள மனக் குறைகள் நீங்கி
குடும்ப ஒற்றுமை பெருகும்.
ஞாயிற்றுக் கிழமை ராகு கால நேரத்தில் (மாலை 4,30 முதல் 6 மணி
வரை) தூங்கு மூஞ்சி மரத்தை வலம் வந்து வணங்கி வந்தால்
காரணமில்லாமல் தூக்கம் வராமல் அவஸ்தைப் படுபவர்களுக்கு
சுகமான நித்திரை கிட்டும்.
மனிதன் உயிர் வாழ உணவைப் போல பெரியவர்களின் ஆசீர்வாதமும்
அவசியமானதே. கூட்டுக் குடும்ப முறை மறைந்து பெரியவர்களுடன்
வாழ்வது அரிதாகி விட்டதால், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசு, ஆல்,
வேம்பு, வன்னி போன்ற மரங்களை அவ்வப்போது வலம் வந்து
வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

சூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் !!!

சூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் !!!
ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி மேன்மேலும் சிறப்பு பெறுகிறது.
சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை யாவரும் அறிந்ததே.
சூரபத்மனை முருகப் பெருமான் முற்றிலும் வதம் செய்யாமல் வாகனமாகவும் கொடியாகவும் ஏற்றுக் கொண்டது ஏன் என்ற கேள்விக்கு புராணம் கூறும் தகவலைப் பார்ப்போம்.
முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயிணி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.
சிவ- பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை வேண்டும். எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால்தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, "நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், "எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகன்.

பேரனைச் சுமக்க தாத்தாவிற்கு கஷ்டமா என்ன? அதனால்தான் மயில் வாகனமாக மாறி, பேரனைச் சுமந்தார் தாத்தாவான சூரபத்மன்.
சூரபத்மன் ஆணவத்தை அழிப்பதற் கென்றே அவதரித்தவர் முருகப் பெருமான். இந்த சிவமைந்தன் முற்பிறவி யில் பிரம்மதேவனின் மைந்தனாக- பிரம்மஞானி சனத்குமாரர் என்ற பெயர் தாங்கி முக்காலம் அறிந்த ஞானியாகத் திகழ்ந்தார். ஒருசமயம் சூரர்களைப் போரிட்டு வதம் செய்வதுபோல் கனவு கண்டார்.
அதனை தன் தந்தையான பிரம்மாவிடம், ""தந்தையே! நான் சேனாதிபதியாக நின்று அசுரர்களை வதம் செய்வதாகக் கனவு கண்டேன்'' என்று சொன்னார்.
அதற்கு அவர், ""சனத்குமாரா, உன் கனவு பலிக்கும். ஆனால், நீ பிரம்மஞானியாக இருப்பதால் இந்தப் பிறவியில் அது இயலாத காரியம். அடுத்த பிறவியில் உனக்கு அந்தப் பாக்கியம் கிட்டும்'' என்றார்.
முருகப் பெருமானின் அவதாரத்தை முன்னிட்டு சிவனும் பார்வதியும் சனத்குமாரரைக் காண வந்தார் கள். தியானத்தில் இருந்த சனத்குமாரர் தியானம் முடிவடைந்ததும் தன்முன் சிவனும் பார்வதியும் நிற்பதைக் கண்டு வணங்கினார். அப்போது பரமசிவன், ""மகனே, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.
அதற்கு சனத்குமாரர், ""நீங்கள் ஒன்றும் எனக்கு வரம் தர வேண்டாம். உங்களுக்கு வேண்டுமானால் நான் வரம் தருகிறேன், கேளுங்கள்'' என்றார்.
சற்றும் கோபம் கொள்ளாத பரமசிவன், ""நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்'' என்றார்.
சனத்குமாரரும், ""உங்கள் விருப்பப்படியே உம் அருளால் மகனாகப் பிறப்பேன்'' என்றார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, ""உம் அருளால் மகனாகப் பிறப்பேன் என்றால், என் பங்கு ஒன்றுமில்லாததுபோல் தெரிகிறதே'' என்றாள்.
""ஆம் அன்னையே. கர்ப்பவாசத்தில் தோன்றி, கீழ்முகமாகப் பிறப்பது எனக்கு அருவருப்பாக இருக்கிறது. எனவே, அருள் கூர்ந்து தங்கள் கணவரின் அருள் பார்வையால் நான் அவதரிக் கும்படி செய்யுங்கள்'' என்றார். பார்வதியும், ""சரி; உன் விருப்பம்போல் நடக்கும்'' என்று ஆசீர் வதித்தாள்.
காலம் கடந்தது. பஸ்மாசுரனைக் கொல்ல சிவபெருமான் மகாவிஷ்ணுவுடன் சென்றபோது, பார்வதி தனித்திருப்பதை அறிந்த பஸ்மாசுரன் பார்வதியைத் தேடி வந்தான். தன் கணவனைப் பிரிந்த சோகத்தில் உருகிக் கொண்டிருந்த பார்வதி, பஸ்மாசுரன் வருவதை அறிந்து அவனிடமிருந்து தப்பிக்க பொய்கையாக மாறினாள். அதுதான் சரவணப் பொய்கை என்று பெயர் பெற்றது.
மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் பஸ்மாசுரன் எரிந்து சாம்பல் ஆனதும், பரமசிவன் கயிலாயம் வரும் வழியில், பார்வதி பொய்கையாக மாறி இருப்பதைக் கண்டு, இதுதான் தக்க சமயம் என்று தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை அந்தப் பொய்கையில் விழும்படி செய்தார்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந்தைகளாக தாமரை மலர்கள்மேல் படுத்திருந்தன. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றினார் கள். இதனைக் கண்ட பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். அந்தக் குழந்தைதான் ஆறுமுகம் கொண்ட சரவணன் என்ற முருகப் பெருமான். இவ்வாறாக சனத்குமாரர் முருகனாக அவதரித் தார். சூரபத்ம வதமும் நிகழ்ந்தது. தேவர்களும் மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வுகள் காரணமாகத்தான் ஐப்பசி மாதம் வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. சஷ்டி திதி அன்று சூரசம் ஹார நிகழ்ச்சி திருச் செந்தூர் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது முருக பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத நியதிகள் உள்ளன.
தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் பிரசாதத்தை உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். மௌன விரதம் கடைப்பிடித்தால் மிகவும் சிறந்தது. மாலையில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகப் பெருமானை ஆவாகனம் செய்து பூஜித்தல் வேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்தல் சிறப்பாகும். இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங் காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது.
ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவுண்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஆறு ஆண்டுகள் முறைப் படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
கந்தசஷ்டி தொடங்கி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியன்று விரதம் கடைப்பிடித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; உடல் வளம் பெறும்; குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்; சுபகாரியங்கள் நடக்கும்.
முருகன் திருத்தலங்களிலும் கோவில்களிலும் இந்த சஷ்டி விழா மிகவும் பிரமாதமாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம்.
இதில் முதலிடத்தைப் பெறுவது திருச் செந்தூர். இங்குதான் மணப்பாடு என்னுமிடத்தில் சூரசம்ஹாரம் நடந்தது என்பர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ள கடல், தன் அலைகளால் முருகப் பெருமானை வழிபடுவது போல் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள குறுக்குத் துறை முருகன் கோவிலுக்குத் தனிச் சிறப் புகள் உண்டு. இங்கு முருகப் பெருமான் சுயம்பு மூர்த்தியாக பாறையில் உருவாகியிருக்கிறார். திருச்செந்தூரில் பாறை யின்மீது முருகன் கோவில் உள்ளதைப்போல், குறுக்குத் துறை முருகன் கோவிலும் பாறையின் மேல் உள்ளது. மேலும் கோவிலின் கிழக்குப் பகுதியில் தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இத்திருத்தலத்தை சின்ன திருச் செந்தூர் என்று சொல்வர். தவிர, இந்த மூலவர் சிலையிலிருந்துதான் கல் எடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவர் சிலை வடிக்கப்பட்டதாகவும் சொல்வர்.
ஐப்பசி மாத தீபாவளி அமாவாசைக்குப்பின் தொடர்ந்து விரதம் கடைப்பிடிக்க இயலாத வர்கள் கந்தசஷ்டி திருநாளில் விரதம் கடைப் பிடித்து, அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் பேறுகள் பெற்று சுகமுடன் வாழலாம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

வேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்!

வேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்!

பரிகார பூஜை செய்வதற்காக நவகிரககோயில்களுக்குச் செல்கிறோம் அங்கே கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள். எல்லா கோயில்களுக்குமே இவை பொருந்துபவை. கோயில் நுழைவாயிலில் கை- கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
முதல்நாள் இரவே பரிகாரத் தலத்திற்குச் சென்றுவிடுவது நல்லது. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற தலங்களுக்குச் செல்லவேண்டாம். புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப் பாடு தேவை.
பெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது நல்லது. யாரிடமும் கடன் வாங்கிச் செல்லவேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்குச் கென்று சொல்லி வாங்காதீர். போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்; தோஷமில்லை. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும். பொழுதுபோவதற்காக (சுற்றுலா) கோயில் செல்லாதீர். தங்கள் சக்திக்கேற்றபடி பூ ஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது; எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாகச் செய்ய வேண்டாம். பூ ஜைக்கு அமாவாசை, பவுர்ணமி, தங்கள் பிறந்தநாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
தலங்களுக்குச் செல்வதற்குமுன் ஒரு நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டிற்குச் செல்லாதீர். நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அர்ச்சகர் அல்லது ஜோதிடரைக் கேட்டு, தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம். மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர். பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார தலத்தில் வாங்குவது சிறந்தது. முதலில் விநாயருக்கு அறுகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு ஒரு பிரதட்சணம் வந்து, பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறுகாயை உடையுங்கள்.
கோயிலுக்குள் யாருடனும் பேசவேண்டாம், செல்போன்களைத் தவிர்க்கவும். வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க ÷ வண்டும். சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள். மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்கவேண்டும் இதற்கு சந்தனம் உபயோகிக்ககூடாது. பூஜைப் பொருட்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை எவர்சில்வர் தாம்பாளம் கூடை இவற்றில் வைத்துக்கொடுங்கள்.
பால்கோவா, இனிப்புகள் அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம். திரைபோட்டபின் பிரதட்சிணம் வர ÷ வண்டாம். விநாயகருக்கு ஒன்று, தனி அம்பாளுக்கு இரண்டு சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம்வாருங்கள். ஒரு பி ரதட்சிணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி பின் அடுத்ததைத் துவங்கவும். கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக்கூடாது.
பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம். நெய் அல்லது எண்ணெய்யை பிற விளக்குகளில் ஊற்ற வேண்டாம். அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய் துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும். பரிகாரம் செய்தபின் பூஜை ப்பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன. வேகமாக பி ரதட்சிணம் வராமல் பொறுமையாக வருவது நல்லது. பலனை முழுமையாகப் பெற ஒரு வருட காலம் வரை ஆகலாம். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். ஒவ்வொரு கோயிலிலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும் சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்த்துவிடக்கூடாது.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்காக ஐந்து மூக்கு தீபம் ஏற்ற வேண்டும். திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும் தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகர்த்துவது கூடாது. ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி குங்குமத்தை பேப்பரில் வாங்கக்கூடாது. பெற்ற விபூதி, குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும். அறுகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை மரிக்கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ, போன்ற பூவகைகளால் பூஜிப்பது நல்லது.
காளி, துர்க்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானவை. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது. சாதாரண மாலையை வா ங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள். சுவாமி சன்னிதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.
கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சிணை தருவது போன்றவை பூஜையின் பலனை அதிகரிக்கும் ஜீவகாருண்யம் உயர்வு த ரும். பிரதான மூர்த்திகளை மட்டுமின்றி பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னிதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபமேற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம். தல வரலாறு புத்தகம் வாங்கி தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும். விபூதி, குங்குமம் வாங்கும் முன்பே அர்ச்சகருக்கு தட்சிணை கொடுத்துவிட வேண்டும்.
சங்கல்பம் மிக முக்கியம். கோபுர தரிசனம் கோடி நன்மை. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிராகாரத்தில் தீபமேற்றி வழிபடுங்கள். சொடுக்கப் ÷ பாடாதீர். கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து சற்று நேரம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவு செய்யவும். ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதிவரை இருக்க ÷ வண்டும்; மாறக்கூடாது. பிரார்த்தனைகள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் இருக்கக்கூடாது. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள்தானே தவிர, கர்மவினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும். பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை முறையே பித்ருக்கள், குலதெய்வம், விநாயகர், தசாநாதன், பி ரச்சினை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
நவகிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமன், பசு, யானைக்கு உண்டு. தோஷ நிவர்த்திப் பூஜைகளை 30 வ யதிற்குள் செய்துவிடுங்கள். இயல்பான - முழுமையான நம்பிக்கையுடன் பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சின்னச்சின்ன பூ ஜைகளைவிட அனைத்தும் அடங்கிய முறையான பிரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூ ஜைக்குரிய அனுமதி கிடைக்கும். ஆண்டவனை நினைத்துக்கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள்,
தெரியாமல் செய்தபாவங்கள்,அறிந்து செய்த பாவங்கள்,அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு
சனிக்கிழமையன்று காலையில் வன்னி மரம் அருகே அமைந்துள்ள விநாயகர்க்கு பச்சரிசியை ஒரு கையில் அள்ளி (நன்கு பொடி செய்து) சூரியநமஸ்காரம் செய்துவிட்டு மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த
பச்ச அரிசிமாவை வன்னி மரம்விநாயகரைச்
சுற்றிப்போட வேண்டும் ,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள்
தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.
எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.
இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.
இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன்இழந்துபோய்விடும்.
இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்!!!

குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்!!!

குல தெய்வம் இன்னதென அறியாதவர் செய்ய வேண்டியது என்னவெனில் தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் பிரம்ம முகூர்த்த வேளையில் சுத்தமான பசு நெய்
விட்டு ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
அந்த விளக்கயே உங்கள் குல தெய்வமாக பாவிக்க வேண்டும். அந்த விளக்கிடமே என் குல தெய்வத்தை அறிந்து கொள்ள உதவுமாறு பிரார்த்தனை வைக்க வேண்டும்.
இப்படியே தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் செய்து வர உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருந்தாலும் சரி, சரியாக தொண்ணூறு நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய உண்மையான தகவல் உங்களை வந்து சேரும்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

அந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...

அந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் கிரகம் 8இல நிக்குது, சரியில்லே" இப்படியெல்லாம் சொல்லி சோதிடர் உங்களை வறுத்தெடுக்கிறாரா?

மகளுக்கு செவ்வாய்தோஷம், மகனுக்கு ஏழரைச் சனி என்று வீண் அச்சத்தால் கலங்கிக்கொண்டிருக்கிறீர்களா?
எடுத்ததற்கெல்லாம் சகுனம், அபசகுனம், இராகுகாலம் பார்த்துக் கொண்டிருப்பவரா நீங்கள்?
"வீட்டில் வாஸ்து தோஷமாம்..அங்க இடிச்சுக்கட்டணுமாம்..."
"பெயரில் அதிர்ஷ்டமில்லையாம் பெயரை மாற்றணுமாம்"
யார் யாரோ சொல்லும் கதையெல்லாம் கேட்டு இப்படி இடிந்துபோய் உட்கார்ந்திருக்கிறீர்களா?
கவலையை விடுங்கள்...உங்களுக்கான வழி தான் இங்கு சொல்லப்படபோகிறது!
என்னடா, பக்தி ஸ்பெஷல், சக்தி விகடன் போல ஆரம்பிக்குது..ஏதாவது கோயிலுக்கு போகச் சொல்றாங்களான்னு நீங்கள் கேட்பது புரிகிறது
சோதிடம், வாஸ்து, காலம் இது எல்லாவற்றையும் விஞ்சிய ஒரு பொருளை நீங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள்...
அது! கடவுள்!!
கடவுளை விஞ்சி, நம்மை, என்ன சக்தி, என்னதான் செய்துவிடும்? அவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்..
தோஷம், கிரகம், நாள் கோள் எதுவுமே உங்களை ஒன்றுமே செய்துவிடாது!அவை எல்லாம் அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவை...அப்படியிருக்க சிவனடியாரான நாம் எதற்காகவும் அஞ்சத் தேவையில்லை! தோஷ பரிகாரம், சோதிடம் பார்த்தல், பரிகாரத்தலங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்லுதல் இதெல்லாவற்றையும் இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!
மிக இலகுவான வழிமுறையைக் காட்டித் தந்திருக்கிறார்கள் ஆன்றோர்கள்...எதற்காக வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதிக்கும் பணத்தை வீண்செலவு செய்யவேண்டும்? இனிச் சொல்லப்படுவதை முழுமனதோடு சிலநாட்கள் செய்துபாருங்கள்..உங்களில் மாற்றம் ஏற்படுவது உங்களுக்கே புரியும்!
நாளும் கோளும் அடியவர்களை ஒன்றுமே செய்யாது என்று அப்பர்சுவாமிகளிடம், ஞானசம்பந்தப்பெருமான பாடிய அழகான பதிகம் உள்ளது. அது - கோளறுபதிகம்!
உண்மையில் அது அப்பர் சுவாமிகளிடம் பாடிய பதிகம் இல்லை..அப்பர் சுவாமிகளின் பெயரில் நமக்காகப் பாடிச் சென்ற பதிகம்!
அந்தப் பதிகத்தைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
தினமும் இருவேளையும், அல்லது நேரங்கிடைக்கும் போதெல்லாம், அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றோ அல்லது உங்கள் வீட்டு பூசையறையிலோ, மனமுருகி இந்தப் பதினொரு பதிகங்களையும் ஓதுங்கள்! ஓதும்போதே அதன் முழுமையான பொருளையும் உணர்ந்து ஓதுங்கள்! மனதைச் சிதறவிடாமல், முழுமனதோடு காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடுங்கள்!
சிலநாட்களிலேயே பாருங்கள்!
உங்கள் மனதில் ஒரு தெளிவு பிறந்திருக்கும்!
எதற்கும் அஞ்சாத வைராக்கியம் உங்கள் மனதில் தோன்றியிருக்கும்!
எல்லாவற்றுக்கும் மேலாக, சம்பந்தப்பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அந்தப் பதிகங்கள் ஏற்படுத்தும் தெய்வீக அதிர்வால், உங்கள் இல்லத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது!
உங்கள் வசதிக்காக, இப்பதிகம் சந்திபிரிக்கப்பட்டு இலகுவான நடையில் தரப்படுகிறது, கீழேயே பொருளும் தரப்பட்டுள்ளது. பதிகத்தை ஓதும்போது, பொருளையும் மனதுள் உருப்போட்டு ஓதுங்கள். உண்டாகும் பலன் பன்மடங்காகும்! சோதிடர்கள், சில அர்ச்சகர்கள் ஏற்படுத்தும் வீண் அச்சங்களில் பயந்துநடுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதைக்கூறி, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள்! சிவனருள் சித்திக்கும்!
ஆங்கிலத்தில் மின்னூலாக
இங்கே:http://slokas.yolasite.com/resources/kolaru%20pathigam.pdf
இங்கே பதிகம் யூடியூப் காணொளியாக: http://www.youtube.com/watch?v=uWO9_Pb7kJo
ஓம் நமச்சிவாய! _/\_
பதிகம்:
திருச்சிற்றம்பலம்
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன்.
ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன்.இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!
2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று - பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு - பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!
3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.
4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் - ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி - அதள் - அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.
10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.
11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
திருச்சிற்றம்பலம்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

டயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ

ஜோதிட ரத்னா டாக்டர் ஸ்ரீ குமார் அவர்கள் இனி திங்கள்கிழமை தோறும் சங்கரா தொலைகாட்சியின் டயல் சங்கரா நிகழ்ச்சியில் மதியம் 3.00 மணிமுதல் 3.30 மணிவரை ஜோதிட பலன்களை அளிக்க உள்ளார்... நண்பர்கள் அனைவரும் நிகழ்ச்சியை காணுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்....
சென்ற வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ உங்களுக்காக ..(18-09-2017)
மேலும் இந்த YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யவும்..
லிங்க்:https://youtu.be/Q17D7zzxRwg




நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com

Email ID :kamaleesrikumar@gmail.com

Thursday, 21 September 2017

வீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்கான எளிய முறை !!!

வீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்கான எளிய முறை !!!


ஒருவரது வீட்டில் தரித்திரம் இருந்தால் அந்த வீட்டில் எண்ணிலடங்கா பல பிரச்சனைகள் வரும். பண வரவு குறையும், மருத்துவ செலவு அதிகரிக்கும், வீட்டில் சண்டை சச்சரவு உண்டாகும். இப்படி பல பிரச்சனைகள் சுற்றி சுற்றி அடிக்கும். வீட்டில் உள்ள தரித்திரத்தை விரட்ட ஒரு மிக சிறந்த வழி இருக்கிறது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
பஞ்சமி திதி அன்று விரதமிருந்து தீப வழிபடு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள அனைத்து விதமான தரித்திரங்களையும் விரட்ட முடியும். அமாவாசை முடிந்த ஐந்தாவது நாளிலும், பவுர்ணமி முடிந்த ஐந்தாவது நாளிலும் வருவதே பஞ்சமி திதி.

வடமொழியில் பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஐந்தாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
பல சிறப்புக்கள் மிக்க பஞ்சமி திதியன்று காலை முதல் மாலை வரை விரதமிருந்து பின் ஐந்து வகையான எண்ணெய்கள் கொண்டு ஐந்து முக விளக்கினை ஏற்ற வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும்படி பஞ்சமி தேவியை நினைத்துக்கொண்டு விளக்கின் ஓர் முகத்தை பார்த்தபடியே கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.
மந்திரம்:
ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ
இந்த பூஜையின்போது சுவாமிக்கு பழம், கற்கண்டு ஆகியவற்றை நெய்வேத்தியம் செய்ய வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை முடித்துக்கொள்ளலாம். இந்த பூஜையை முறையாக செய்வதன் மூலம் வீட்டில் உள்ள தரித்திரங்கள் விலகி நிம்மதி நிலைக்கும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com