Monday, 25 September 2017

எளிய பரிகாரக் குறிப்புகள்!

எளிய பரிகாரக் குறிப்புகள்!

கர்பப்பை புற்றுநோய், கர்ப்பம் நழுவுதல் போன்ற கோளாறுகளால்
வருந்தும் பெண்களுக்கு உதவும் ஓர் உத்தம வழிபாடு இதோ.
திருச்சி மலைக்கோட்டை திருக்கோயில் படிக்கட்டுகளில்
ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கொழுக்கட்டையை வைத்து
வணங்கி மலை ஏறிச் செல்லவும்.
மடியில் அரிசி சாதத்தை கட்டிக் கொள்ளவும். உச்சிப் பிள்ளையாரை
தரிசனம் செய்தவுடன் அங்கிருந்தே ஸ்ரீரெங்கநாதரையும்
தரிசனம் செய்யவும்.
பின் மடியில் உள்ள சாதத்தை மலை மேல் உள்ள காக்கை, குருவி
போன்ற பறவைகளுக்கு தானமாக அளித்து விடவும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நோய்கள், அடி வயிற்றில் உருவாகும்
கட்டி போன்ற பலவிதமான நோய்களுக்கும்
நிவர்த்தி தருவதே மேற்கண்ட
முறையில் அமையும் உச்சிப் பிள்ளையார் வழிபாடாகும்.
சதுர்த்தி, சதுர்த்தசி, மூல நட்சத்திர நாட்களில்
இத்தகைய வழிபாட்டை இயற்றுவது சிறப்பு.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப்
பொதுவாக மன சஞ்சலங்கள் மிகுதியாக இருக்கும்.
இத்தகையோர் வியாழக் கிழமை தோறும் பெரியாழ்வார் அருளிய
திருப்பல்லாண்டு பாசுரங்களை 21 முறைக்குக் குறையாமல் ஓதி பிஸ்தா
பருப்பு கலந்த பசும்பால் தானமாக அளித்து வந்தால் அவசரமாக எடுத்த
முடிவுகளால் விளையும் துன்பங்களிலிருந்து
நிவாரணம் பெற வழி பிறக்கும்.
செய்நன்றி கொன்றவர்களுக்கு எக்காலத்திலும்
விமோசனம் கிடையாது என்று பெரியவர்கள் கூறகின்றனர்.
ஆனால், சித்தர்களின் தாயுள்ளம் அன்னவர்களுக்கும்
வழிகாட்ட கருணை கொண்டிருப்பதால் செய்நன்றி மறத்தல் என்னும்
கடுமையான குற்றங்களுக்கு ஆட்பட்டோர் கூட மனம் திருந்தி
உண்மையிலேயே தங்கள் தவறுக்காக
பிராய சித்தம் பெற விரும்பினால்
அவர்களுக்கு அருள்புரிய சிரித்த முகத்துடன் வீற்றிருப்பவரே திருச்சி
உறையூர் நாச்சியார்கோயில் துõணில் அருள்புரியும்
அகத்திய பெருமான் ஆவார்.
ஸ்ரீராமருடன் அருட்காட்சி தரும் அகத்திய முனியை வணங்கி தூய பசு
நெய் காப்பிட்டு குழந்தைகளுக்குத் தேங்காய் மிட்டாய் தானமாக அளித்து
வந்தால் செய்நன்றி மறந்த குற்றங்களுக்குப் பரிகார முறைகள் தக்கோர்
மூலம் உணர்த்தப் பெறும். செய்நன்றி மறவாத குணம் செறிந்ததே
தென்னை மரமாகும்.
சிறுநீரகக் கல், இடுப்புப் பகுதியில் புற்றுநோய், ரகசிய நோய்கள்
போன்றவற்றால் வருந்துவோர் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று
நெல்லைப் பரப்பி அதன் மேல் ஆறு மொந்தன் பழங்களை வைத்து
தர்ப்பணம் அளிக்கவும். பின்னர் இந்த வாழைப் பழங்களை பசுவிற்குத்
தானமாக அளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து தர்ப்பணம் அளித்து வர
நோய் நிவாரண வழி பிறக்கும்.
பொதுவாக தென் கிழக்கு மூலையான அக்னி மூலையில்
சமையலறை அமைவதே சிறப்பு.
ஆனால், தற்போதைய நிலையில் நாம் நினைத்த வண்ணம் வீடுகள்
நமக்கு வாய்ப்பதில்லை.
இத்தகைய வாஸ்து தோஷங்கள் ஓரளவு சீர்பெற கார்த்திகை மாத
அமாவாசை தினத்தன்று தினையைப் பரப்பி அதன் மேல் தர்பைச் சட்டம்
வைத்து தர்ப்பணம் அளித்து மயில்களுக்கு உணவிட்டு வரவும். தொடர்ந்த
வழிபாடு சிறந்த பலன்களை நல்கும்.
பூ, கல்வி, வேதம், தண்ணீர் இவற்றை காசுக்காக விற்கக் கூடாது
என்பது
தெய்வீகச் சட்டம்.
அறிந்தோ அறியாமலோ கல்வியை காசுக்காக விற்றவர்கள், விற்றுக்
கொண்டு இருப்பவர்கள் மனம் திருந்தி இத்தகைய தோஷத்திலிருந்து
விடுபட விரும்பவது உண்டு. அத்தகையோர் மார்கழி மாத அமாவாசை
தினத்தன்று நெல் அல்லது அரிசியைப் பரப்பி அதன் மேல் ஆறு
செவ்வாழைப் பழங்களை வைத்து தர்ப்பணம் அளிக்கவும். பின்னர் அந்த
செவ்வாழைப் பழங்களுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு
தானமாக அளித்து வர செய்த தவறுகளுக்கு பிராய சித்தம் பெற வழி
பிறக்கும்.
கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்கள் தொடர்ந்து தீய கதிர்களின்
தாக்கத்திற்கு ஆளாவதால் அவர்களுடைய கண்களும் சிறு மூளையும்
அதிகம் பாதிப்படையும் வாய்ப்புகள் ஏற்படுகிறது.
இத்தகையோர் தை மாத
அமாவாசை தினத்தன்று நெற்கதிர்களைக் கொத்தாக வைத்து அதன் மேல்
தர்ப்பைச் சட்டம் வைத்து தர்ப்பணம் அளிக்கவும். சர்க்கரைப் பொங்கலில்
பசு நெய் சேர்த்து ஏழைகளுக்கு,
சிறப்பாக சிவந்த மேனி உடையவர்களுக்கு
அன்னதானம் செய்து வருதல் சிறப்பு.
புனிதமான மேஷ லக்னம், மேஷ ராசி புத ஹோரை நேரத்தில் அவதாரம்
கொண்டவரே ஜடாயு பகவான்.
மைக்ரோ பயாலஜி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் போன்ற
நுண்துறையியல்
பயிலும் மாணவர்கள் புதன் கிழமைகளில் இராமாயணத்தில் ஜடாயு
மோட்சப் பகுதியைப் பாராயணம் செய்து
முந்திரி கலந்த புளியோதரையை
அன்னதானமாக அளித்து வந்தால் தங்கள்
படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.
சிலர் சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியும், தான் செய்த சாதாரண
காரியங்களைப் பெரிய சாதனைகளாக வர்ணித்துக் கொண்டிருப்பது
உண்டு. இவ்வாறு தன்னப் பற்றியே பேசுபவர்களுக்கு அடுத்து கிடைப்பது
சொறி நாய் பிறவி என்பது சித்தர்கள் வாக்கு.
எனவே இத்தகைய மனக் குற்றங்களுக்கு ஆட்பட்டவர்கள்
இப்பிறவியிலேயே பரிகாரம் பெற முயல்வதே புத்திசாலித்தனம்
அல்லவா? இத்தகையோர் தேய்பிறை அஷ்டமி திதிகளில் கால
பைரவருக்கு முழு முந்திரிகளால் மாலை சார்த்தி ஏழைகளுக்குத் தானம்
அளித்து வர தக்க நிவாரண வழிகள் பிறக்கும்
சிறு வயதிலிருந்தோ அல்லது திடீரென்றோ திக்கு வாய்ப் பழக்கத்திற்கு
ஆளாவனவர்கள் உண்டு. இதற்கு எளிமையான நிவாரண முறையை
சித்தர்கள் அருளியுள்ளார்கள். சுத்தமாகத் தயார் செய்த விபூதியில் சிறிது
நீர் விட்டுக் குழைத்து அதை உடலில் 36 பட்டைகளாக இட்டுக் கொண்டு
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய வேயுறு தோளி பங்கன்...
என்று தொடங்கும் பதிகத்தை 11 முறை ஓதி வரவும்.
தொடர்ந்து இவ்வாறு
வழிபட்டு வர திக்கு வாய் குணமாகும்.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் பற்பல அவதாரங்களுள் சாதாரண மனித அளவில்
புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானதாக அமைந்ததே ஸ்
கிருஷ்ணாவதாரம். பகவானின் ராச லீலை, காளிங்க நர்த்தனம்,
கோவர்த்தன கிரிலீலை, குசேலருடன் நட்பு போன்ற அனைத்து
லீலைகளும் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம் என்னும் உயரிய ஞான
நிலையை வெவ்வெறு கோணத்திலிருந்து பிரதிபலிப்பவை ஆகும்.
அத்தகைய ஞான நிலையை எட்டியவர்களுக்கே ஸ்ரீபகவானின் அவதார
லீலைகளின் தெய்வீக தாத்பர்யம் புரிய வரும்.
ஸ்
ரீமகாவிஷ்ணுவின் பற்பல அவதாரங்களுள் சாதாரண மனித அளவில்
புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானதாக அமைந்ததே ஸ்
ரீகிருஷ்ணாவதாரம். பகவானின் ராச லீலை, காளிங்க நர்த்தனம்,
கோவர்த்தன கிரிலீலை, குசேலருடன் நட்பு போன்ற அனைத்து
லீலைகளும் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம் என்னும் உயரிய ஞான
நிலையை வெவ்வெறு கோணத்திலிருந்து பிரதிபலிப்பவை ஆகும்.
அத்தகைய ஞான நிலையை எட்டியவர்களுக்கே ஸ்ரீபகவானின் அவதார
லீலைகளின் தெய்வீக தாத்பர்யம் புரிய வரும்.
ஏழு கடலையும் ஒரு நீர்த் துளியாக்கி தன் உள்ளங் கையில் வைத்து
அகஸ்தியர் அருந்தியதால் எல்லா கடல் நீரும்
புனிதம் அடைந்து விட்டன.
எனவே, கடலில் நீராட விரும்புவோர் கடற்கரையில் “ஸ்ரீஅகஸ்தியரே
போற்றி“ என்று எழுதி அதை கடலலைகள் தழுவிச் சென்ற பின் கடலில்
நீராடினால் நலம் அடைவர்.
கடல் அலைகள் கூறும் ரகசியம் என்ன? எந்த மகான்கள், ரிஷிகள், எந்த நாட்களில் வந்து, என்ன காரணத்திற்காக அங்கே நீராடினார்கள் என்ற இரகதிசயத்தையே கடற் கரைக்கு வருவோரிடம் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் கடல் அலைகளை வணங்கி அவைகள் கூறுவதைக் கேட்டால் உங்கள் பிரச்னைகள் அனைத்திற்கும் தகுந்த நிவர்த்தி முறைகளைக் கூறக் காத்திருக்கின்றன.
காரட், பச்சை பட்டாணி போன்ற காய்கறிகளை கழுதைகளுக்குத் தானமாக
அளித்து வந்தால் கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிட்டும்.
காரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்ற கிழங்கு
வகை உணவுகளை பன்றிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் நீர் மூலம்
பரவும் காலரா, மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள்
உங்களைத் தாக்காது.
உங்கள் கையெழுத்தில் உள்ள எழுத்துக்கள் இடைவெளியில்லாமல் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கும் வண்ணம் அமைந்தால் நீங்கள் செய்யும் காரியங்களில் தடங்கல்கள், இடையூறுகள் ஏற்படாமல் வெற்றிகரமாக அமையும்.
நம் விரல்கள் மூலமாகப் பல தீவினை சக்திகள் உடலுள் புகுந்து நமக்குத் துன்பம் இழைக்கின்றன. எனவே, விரல் நகங்களில் அழுக்கு சேராமல் எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது விரல்கள், உள்ளங் கைகளில் மருதாணி இட்டு வந்தால் எதிர்மறை தீவினை சக்திகளிலிருந்து நம்மை எளிதில் காத்துக் கொள்ளலாம்.
தினமும் சாப்பிடும்போது காக்கைக்கு இறைப் பிரசாதங்களை வைப்பது
போல் உணவு உண்ணும் முன் இலையில் சிறிது பிரசாதத்தைத் தனியாக
எடுத்து வைத்து இதை உணவு உண்ட பின் இலையோடு வெளியே
போட்டு விட வேண்டும். இதுவே பஞ்ச பூதங்களுக்கு உரிய ஆஹூதியாக
அமைந்து இந்தப் பஞ்சப் பூதத்தினாலான உடலுக்கு நல்ல கதி கிடைக்க
அன்னபூரண தேவியின் அருளாசி கிடைக்கும். இப்போ இப்படி செய்யறது
ரொம்ப கொறஞ்சி போச்சு. எல்லாரும் எச்சில்பட்ட மிஞ்சின சாதம், காய்,
கறியைத்தான் இலையுடன் வெளியே எறிகிறார்கள்.
சிவாலயங்களில் மூலவருக்குப் பின்புறத்தில் கோஷ்ட மூர்த்தியாய்
அருள்புரியம் அர்த்தநாரீஸ்வரருக்கு வெள்ளிக் கிழமை, பஞ்சமி திதி
நாட்களில் தேங்காய் எண்ணெயால் ஐந்து எண்ணிக்கையில்
(5, 14, 23) அகல் விளக்கு தீபங்களை ஏற்றி வந்தால் கணவன்,
மனைவியரிடையே உள்ள மனக் குறைகள் நீங்கி
குடும்ப ஒற்றுமை பெருகும்.
ஞாயிற்றுக் கிழமை ராகு கால நேரத்தில் (மாலை 4,30 முதல் 6 மணி
வரை) தூங்கு மூஞ்சி மரத்தை வலம் வந்து வணங்கி வந்தால்
காரணமில்லாமல் தூக்கம் வராமல் அவஸ்தைப் படுபவர்களுக்கு
சுகமான நித்திரை கிட்டும்.
மனிதன் உயிர் வாழ உணவைப் போல பெரியவர்களின் ஆசீர்வாதமும்
அவசியமானதே. கூட்டுக் குடும்ப முறை மறைந்து பெரியவர்களுடன்
வாழ்வது அரிதாகி விட்டதால், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசு, ஆல்,
வேம்பு, வன்னி போன்ற மரங்களை அவ்வப்போது வலம் வந்து
வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment