Wednesday, 13 September 2017

அண்ணாமலை அன்னதானத்தின் பெருமைகள்

அண்ணாமலை அன்னதானத்தின் பெருமைகள்


கடந்த 5 முற்பிறவிகளில் நாம் செய்த புண்ணியத்தின் விளைவாக நமக்கு இந்தப் பிறவியில் இவ்வளவு சொத்துக்கள்,இவ்வளவு பெயரும் புகழும்,இவ்வளவு சுகங்கள் கிடைத்திருக்கின்றன;அதே போல,நாம் கடந்த 5 முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவுகளே இப்பிறவியில் கடனாக,நோயாக,எதிரியாக,அவமானங்களாக,முழுமை பெறாத வெற்றிகளாக ,பொறாமை உணர்ச்சியாக,நிம்மதியில்லாத வாழ்க்கையாக நம்மை பாடாய்படுத்துகின்றன;
அதென்ன கடந்த 5 முற்பிறவிகள்?
நாம் இப்பிறவியில் செய்யும் அனைத்துச் செயல்களின் பாவ புண்ணியங்கள் நமது இப்பிறவி லக்னத்துக்கு 10 ஆம் இடத்தில் பதிவாகின்றன;உதாரணமாக,இப்பிறவியில் நாம் மீன லக்னத்தில் பிறந்திருக்கிறோம்;என்று வைத்துக் கொண்டால் இப்பிறவியில் நாம் செய்யும் அனைத்து பாவ புண்ணியப்பதிவுகளும் தனுசு லக்னத்தில் பதிவாகும்;அதனால்,அடுத்த(2 ஆம்) பிறவியில் தனுசு லக்னத்தில் பிறப்போம்;2 ஆம் பிறவியில் செய்யும் அனைத்து செயல்களின் பதிவுகளும் தனுசுக்கு 10 ஆம் இடமான கன்னியில் பதிவாகி, 3 ஆம் பிறவியில் கன்னி லக்னத்தில் பிறப்போம்;
கன்னி லக்னத்தில் பிறந்து வாழும் போது,நமது அனைத்துச் செயல்களும்,கன்னிக்கு 10 ஆம் இடமான மிதுனத்தில் பதிவாகும்;அதனால், 4 ஆம் பிறவியில் மிதுன லக்னத்தில் பிறப்போம்;4 ஆம் பிறவியில் மிதுன லக்னத்தில் பிறந்து வாழும் போது,நமது அனைத்துச் செயல்களும் மீனராசியில் பதிவாகி, ஐந்தாம் பிறவியில் நாம் மீண்டும் மீன லக்னத்தில் பிறப்போம்;
நமது முன்னோர்கள் செய்த பாவம்+புண்ணியங்கள் எட்டில் ஒரு பங்கு மட்டுமே நம்மை வந்து சேருகின்றன;
பாவம் 0%,புண்ணியம் 0% என்ற நிலையை எப்போது எட்டுகிறோமோ,அப்போதுதான் நம்மால் சித்தர் ஆக முடியும்;சித்தர் ஆனால் மட்டுமே வாலை தரிசனம் செய்ய முடியும்;வாலை தரிசனம் செய்ய வேண்டும் எனில் அதற்கு குறைந்தது 3 பிறவிகளாக வராகி வழிபாடு செய்ய வேண்டும்;வராகி (அரசாலை) தரிசனம் கிடைக்கவே நாம் 3 பிறவிகளாக தொடர்ந்து அவளைச் சரணடைய வேண்டும்;
வராகி வழிபாடு யாருக்குக் கிடைக்கும்?தொடர்ந்து 3 பிறவிகள் மஹா கால பைரவ வழிபாடு செய்தவர்களுக்கே வராகி வழிபாடு கைகூடும்;அல்லது தொடர்ந்து 3 பிறவிகளில் பழுத்த சிவனடியாராக வாழ்ந்திருக்க வேண்டும்;இவையெல்லாம் சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் சொன்ன தெய்வீக வாக்கு;
இன்று வரை நாம் படும் கஷ்டத்தை நினைத்துப் பார்க்கும் போது இனி ஒருபோதும் பிறக்கவே கூடாது என்ற விரக்தி வந்திருக்கும்;அந்த விரக்தியோடு நம்மால் முக்தியைப் பெற முடியாது;ஆனால் பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைக்க பல ஆயிரக்கணக்கான வழிமுறைகள் இருக்கின்றன;அதில் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மிகச் சுலபமானது அன்னதானம்;அதுவும் அண்ணாமலை அன்னதானமே!
ஒரு சாதாரண நாளில் காசியில் ஒரு லட்சம் பேர்கள் வீதம் ஒரு வருடம் வரை தினமும் அன்னதானம் செய்தால் என்ன புண்ணியமோ அதைவிடவும் அதிகப் புண்ணியம் ஒரு சாதாரண நாளில் அண்ணாமலையில் அன்னதானம் செய்தாலே கிடைத்துவிடும்;
நாம் பிறந்தது முதல் நமது மரண நாள் வரை தினமும் காசியில் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அதைவிடவும் அதிகமான புண்ணியம் அண்ணாமலையில் ஒரு துவாதசி திதியன்று மூன்று வேளைகளும் தலா ஒரே ஒருவருக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;கூடவே மறுபிறவி இல்லாதமுக்தி கிடைத்துவிடும்;என்பதை அருணாச்சலபுராணம் தெரிவிக்கின்றது;
ஒரு தமிழ் வருடத்தில் 24 துவாதசி திதிகள் வருகின்றன;ஆனால்,முழுத் துவாதசி திதியானது 10 முதல் 12 தான் வருகின்றது;அந்த முழுத் துவாதசி திதி வரும் நாட்களை இங்கே உங்களுக்காக கை.வீரமுனி...ஸ்ரீவில்லிபுத்தூர்.27 வருட ஜோதிடர்(டெலிகிராம்9092116990/9364231011) தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம்;
இந்த நாட்களில் காலையில் 6 மணி முதல் 7 மணிக்குள் குறைந்தது பதினெட்டு சாதுக்களுக்கும்;
மதியம் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் குறைந்தது பதினெட்டு துறவிகளுக்கும்;
இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் குறைந்தது பதினெட்டு சாமியார்களுக்கும் அன்னதானம் செய்தால் நமது அனைத்து கர்மவினைகளும் நீங்கி முக்தி கிடைத்துவிடும்;

அன்னதானம் முடித்தப் பின்னர்,இரவு 12 மணிக்கு இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இருந்து கிரிவலம் புறப்படவேண்டும்;மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு,இடுப்பில் குறைந்தது மூன்று எலுமிச்சை பழங்களை ஒரு துண்டில் கட்டிக் கொண்டு,நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஜபித்தவாறு,புறப்படவேண்டும்;
அங்கிருந்து புறப்பட்டு,தேரடி முனீஸ்வரரை வழிபடவேண்டும்;மனதுக்குள் "வழித்துணைக்கு வாருமையா" என்று அவரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்; அங்கிருந்து சில நூறு அடிகள் தூரத்தில் கிழக்கு கோபுரவாசலுக்கு நேராக சாலைப் பகுதியில் நின்று கொண்டு அண்ணாமலையாரிடம் வேண்ட வேண்டும்;இங்கே "பிரபஞ்சத்தின் தந்தையே! எமது முன்னோர்கள் சாபம் தீர அருள்வீராக" என்று முதலில் வேண்டிக்கொண்டு, பிறகு,நமது வேண்டுதல்களை வேண்டிக்கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும்;
கிரிவலப்பாதையில் ஒரு போதும் பேசக் கூடாது;(கூட்டாகச் சென்றால் தேவாரப்பதிகங்கள் பாடலாம்) நள்ளிரவு 12 மணிக்கு கிரிவலம் புறப்பட்டதால்,அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் பூதநாராயணப் பெருமாள் கோவிலில் கிரிவலம் நிறைவடையும்;(நேரம் இல்லாதவர்கள் இங்கே இருந்து வீடு திரும்பலாம்)
மற்றவர்கள்,அங்கிருந்து கோவிலுக்குள் சென்று,உள்பிரகாரத்தினை அடைய வேண்டும்;முதலில் சப்தகன்னியர் சன்னதிக்கு அருகில் அமைந்திருக்கும் துர்வாசரை தரிசிக்க வேண்டும்;அவரிடம் "ஐயா,எமது முன்னோர்கள் சாபம் தீர நேற்று எமக்குத் தெரிந்தவகையில் அன்னதானம் செய்துவிட்டோம்;பிறகு,எமக்கு அறிந்தவகையில் கிரிவலம் சென்றுவிட்டோம்;அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதி தருவீர்களாக" என்று வேண்ட வேண்டும்;
அதன் பிறகே,அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;பிறகு, உண்ணாமலையை தரிசிக்க வேண்டும்;பிறகு,உண்ணாமலை சன்னதிக்கு வெளியில் இருக்கும் நவக்கிரக சன்னதிக்கு அருகில் அமைந்திருக்கும் சித்திரகுப்தர் சன்னதியை பக்க வாட்டில் இருந்து தரிசிக்க வேண்டும்;இப்படிச் செய்தால் மட்டும் தான் இங்கே வந்தமைக்கான புண்ணியம் சூட்சுமமாக அண்ணாமலையாருக்குத் தெரிவிக்கப்படும்;பிறகு,மஹா காலபைரவப்பெருமானை தரிசித்துவிட்டு சொந்த ஊர் திரும்ப வேண்டும்;இந்த முறையை நமக்கு உபதேசித்தவர் சித்தர்களின் தலைவரான அகத்திய மகரிஷி ஆவார்;
வசதி உள்ளவர்கள்,அண்ணாமலையில் அன்னதானம் செய்வதை தமது கடமையாக நினைப்பவர்கள் மதியம் மட்டுமாவது ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் அன்னதானம் செய்யலாம்;
ஜோதிடப்படி,ஒருவரது ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தாலோ அல்லது செவ்வாய் நிற்கும் ராசிக்கு நான்காம் ராசியில் சனி நின்றாலோ அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் இருக்கின்றது என்று அர்த்தம்; அவர்கள் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் இப்படி முழுத் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்யவேண்டும்;(முடிந்தவரையிலும் எவரிடமும் தெரிவிக்காமல் செய்ய வேண்டியது அவசியம்)
ஓம் அருணாச்சலாய நமஹ

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment