Tuesday 2 May 2017

திசைகளும் தீபங்களும் !!!

திசைகளும் தீபங்களும் !!!
நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி
ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை
பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள்
பற்றியும் தெரியும் ?
தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால்
நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும்
கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தைமட்டும் ஏற்றினால்
சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.
சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள
முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும்
ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.
திரியில்லாமல் தீபம் ஏது?
திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா?
1.சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.
2.முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள
வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
3.மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு
விளக்கேற்ற வேண்டும்.
4.செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத்
திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான
கணேசப்பெருமானுக்கும் உகந்தது இது.
5.தம்பதிகள் மனமொத்து வாழவும் - மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட
புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.திரியுடன்எண்ணையிட்டால்தானே
தீபம் எரியும்? எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால்
பலன்...?நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும்
எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டே?
ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும்
தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு
நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும்,
மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது. அவரவர்கள்
தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு
எண்ணை தீபம். எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே
ஆண்டவனுக்கு உகந்தது;நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய்
எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும்.செல்வங்கள் அனைத்தையும் பெற
விரும்புவோர் வேப்பெண்ணை,இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும்
கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை,
நெய்,நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும்
கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு
ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும்,
தொல்லைகளையும்,பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த
எண்ணையின் தீபங்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment