Monday 8 May 2017

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள் !!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள் !!!

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது என அழைக்கப்படுவதற்கு காரணம் 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். மற்ற வைணவத் தலங்களில் 9 ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில் தான் ஏழு பிரகா ரங்களை கொண்டுள்ளது. மற்ற எந்த கோயில்களிலும் கிடையாது. மூலவர் பெரிய பெருமாள் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் தென்திசை நோக்கி பள்ளி கொண்டு உள்ளார். மூலவர் பெரிய பெருமாளின் திருவுருவம் குழைகாரையில் 21 அடி நீளத்தில் அமையப்பெற்று உள்ளது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளர்களை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோவில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட புனுகு சட்டம் எனப்படும் தைலம் பூசப்பட்டு (தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகு ஊட்டப்படுகிறது.
முதல் சுற்று திருவுண்ணாழி திருச்சுற்று, 2ம் சுற்று ராஜமகேந்தின் சுற்று, 3ம் சுற்று குலசேகரன் திருச்சுற்று, 4ம் ஆலிநாடான் திருச்சுற்று, 5ம் அகளங்கன் திருச்சுற்று, 6ம் திருவிக்ரமன் திருச்சுற்று (உத்திரவீதி), 7ம் கலியுகராமன் திருச்சுற்று (சித்திரை வீதிகளில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் கொண்ட பகுதிகளாக விளங்குகிறது).இந்த ஏழு திருச்சுற்றுக்களையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடைய வளஞ்சான் திருச்சுற்று அமைந்து உள்ளது. 4வது திருச்சுற்றில் தன்வந்திரி சன்னதிக்கு வடபுர கோபுர வாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு. இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி மூன்று வாசல் என்பது பெயர்.
இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று இந்த ஐந்து குழிகளிலும் தன்கை விரல்களை வைத்து மூன்று வாசல்கள் வழியாகவும் பார்ப்பாராம். கோயிலின் கருவறையின் மேலே தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல்ரிக், யஜுர், சாம, அதர்மண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளது. விமான த்தின் அமைப்பு தாமரையின் இதழ்களில் இருந்து வெளிவரும் நிலையிலுள்ள நான்கு தங்கக் கலசங்கள் அமைக் கப்பட்டுள்ளன. விமானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மகரவடிவில் உள்ள பகுதியில் தெற்கில் பரவாசுதேவர், மேற்கில் அச்சுதர், வடக்கில் அனந்தர், கிழக்கில் வேணுகோபாலர் அல்லது கிருஷ்ணகோவிந்தர் ஆகிய திருமாலின் திருஉருவங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது என அழைக்கப்படுவதற்கு காரணம் 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். மற்ற வைணவத் தலங்களில் 9 ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில் தான் ஏழு பிரகா ரங்களை கொண்டுள்ளது. மற்ற எந்த கோயில்களிலும் கிடையாது. மூலவர் பெரிய பெருமாள் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் தென்திசை நோக்கி பள்ளி கொண்டு உள்ளார். மூலவர் பெரிய பெருமாளின் திருவுருவம் குழைகாரையில் 21 அடி நீளத்தில் அமையப்பெற்று உள்ளது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை.
அதற்கு பதில் கோயில் பணியாளர்களை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோவில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட புனுகு சட்டம் எனப்படும் தைலம் பூசப்பட்டு (தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகு ஊட்டப்படுகிறது. முதல் சுற்று திருவுண்ணாழி திருச்சுற்று, 2ம் சுற்று ராஜமகேந்தின் சுற்று, 3ம் சுற்று குலசேகரன் திருச்சுற்று, 4ம் ஆலிநாடான் திருச்சுற்று, 5ம் அகளங்கன் திருச்சுற்று, 6ம் திருவிக்ரமன் திருச்சுற்று (உத்திரவீதி), 7ம் கலியுகராமன் திருச்சுற்று (சித்திரை வீதிகளில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் கொண்ட பகுதிகளாக விளங்குகிறது).இந்த ஏழு திருச்சுற்றுக்களையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடைய வளஞ்சான் திருச்சுற்று அமைந்து உள்ளது.
4வது திருச்சுற்றில் தன்வந்திரி சன்னதிக்கு வடபுர கோபுர வாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு. இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி மூன்று வாசல் என்பது பெயர். இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று இந்த ஐந்து குழிகளிலும் தன்கை விரல்களை வைத்து மூன்று வாசல்கள் வழியாகவும் பார்ப்பாராம். கோயிலின் கருவறையின் மேலே தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல்ரிக், யஜுர், சாம, அதர்மண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளது. விமான த்தின் அமைப்பு தாமரையின் இதழ்களில் இருந்து வெளிவரும் நிலையிலுள்ள நான்கு தங்கக் கலசங்கள் அமைக் கப்பட்டுள்ளன. விமானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மகரவடிவில் உள்ள பகுதியில் தெற்கில் பரவாசுதேவர், மேற்கில் அச்சுதர், வடக்கில் அனந்தர், கிழக்கில் வேணுகோபாலர் அல்லது கிருஷ்ணகோவிந்தர் ஆகிய திருமாலின் திருஉருவங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
கம்பீர காட்சி..
ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரமாகும். இதன் உயரம் 236 அடி.13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்கு ராஜகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது. வருடத்திற்கு ஒருமுறைதான் பெருமாளும், தாயா ரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுரத்தின் வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவைதான்.
ஆம் கோயில் பெரிது. ராமபிரானே நமக்கு பெருமாள் ஆவார். அவரால் தொழப்பட்ட இந்த ரங்கநாதன் பெரிய பெருமாள். கோயிலும் பெரிது அதனால் பெரிய கோயில் ஆயிற்று. 7 மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது. இதற்கு சிகரம் வைத்தாற்போல் இத்தலத்தின் கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம் என்று பெயர். இங்குள்ள வாத்தியத்திற்கு பெரிய மேளம் என்று பெயர். இங்கு தயாரிக்கப்படும் பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள்.
சிற்பங்களின் அழகு..
இக்கோயிலில் கட்டிடக்கலைக்கு பறை சாற்றக்கூடிய அளவில் கோயில் 5ம் சுற்றில் உள்ள ஆயிரங்கால் மண்டபமும், அதில் உள்ள திருமாமணி மண்டபமும், ஷேசராய மண்டபமும் ஆகும். சேஷராயர் மண்டபத்தில் உள்ள நுனுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிற்பங்களின் அழகு நம்நாட்டினவரை மட்டுமல்ல வெளிநாட்டவரை ஆச்சரியபட வைக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது. இக்கோயிலுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரம் உள்ள நகர பேருந்திலும், ஸ்ரீரங்கம் ரயில்நிலையத்தில் இருந்தும் நடந்தும் செல்லலாம்.
தன்வந்திரி சன்னதி..
தேவர்களும், அசுரர்களும், திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது விஷத்தால் பாதிக்கப்பட்ட தேவர்களைக் காக்க தனவந்திரி பெருமாள் அவதாரம் எடுத்து காத்தார். இத்திருக்கோயிலில் உயர்ந்த இடத்தில் கிழக்கு நோக்கி தன்வந்திரி சன்னதி உள்ளது. வைணவத்திருத்தலங்களில் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே தன்வந்திரிக்கு தனி சன்னதி உள்ளது.கடும் நோயுற்றவர்கள் இந்த சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட்டால் உடம்பில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். நோயுற்றவர்கள் இந்த சன்னதியில் தன்வந்திரி பெருமாளிடம் வேண்டி, அர்ச்சனை, திருமஞ்சனம் செய்து நோய்நீங்கி வளம் பெற்று வருகிறார்கள்..

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment