Monday 8 May 2017

இந்து மதத்தில் அற்புதங்கள்!!!

இந்து மதத்தில் அற்புதங்கள்!!!

நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம்
வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு
செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம்
கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.

வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.
திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும்
உறிஞ்சப்படுகிறது.

ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில்
நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை
உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும்
போது கருடன் தரிசனம் தருகிறது.

கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருடசேவையின்போது கல்
கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து
வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம்
இன்றும் நடைபெறுகிறது.

முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்
பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக
வருகின்றன.

திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு
தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம்
நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள
தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின்
நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில்
கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும்
அற்புதம் நடக்கிறது.

காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால்
நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார்
கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை
கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு
வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

திருப்பத்தூர் – தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த
நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7
புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்
விட்டு விட்டு சாலை அமைத்தனர்.

வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை
பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக
ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது.
அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக்
கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை,
மகான்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம் செய்தவர்கள்பெறுகிறார்கள்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment