Friday 27 October 2017

எல்லாம் சிவன் செயல்

எல்லாம் சிவன் செயல்
திகம்பரர் = திக் + அம்பரம், திக்-திசை,அம்பரம்-ஆடை திகம்பரர்என்றால் ஆடை அணியாதவர் என்று பொருள்.



நான்காம் திருமரை
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே.
பொருள்
திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும்இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளைய ராய், சங்குமணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடையபாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில்உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய்உள்ளார்.
கதை
திகம்பர் காலில் விழும் முனி பத்தினிகள்
தவம் செய்த முனிவர்கள் கடவுளைப் பற்றிய சிந்தனையில்லாமல்என்று எண்ணி வாழ்ந்தனர். இதனால் அவர்களுக்கு அகந்தைஏற்பட்டது. இந்த முனிவர்களின் ஆணவத்தை தடுத்து நிறுத்த முயன்றசிவபெருமான் பிச்சை ஏற்கும் பிச்சாடணார் கோலத்தில் உருவெடுத்துமுனிவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றார். பிச்சாடணார் உருவத்தில்வந்திருப்பது இறைவன் என்று அறியாமல் முனிவர்கள் இருந்தனர்.
முனிவர்களின் மனைவிகள் இறைவனுடைய பிச்சாடணார்கோலத்தில் மயங்கினர். தங்களை மறந்து பிச்சாடணார் பின்னால்செல்ல தொடங்கினர். இதனை கண்ட முனிவர்கள் பிச்சாடணமுர்த்தியை அழிக்க அபிசார வேள்வி என்ற யாகத்தை செய்தனர்.யாகத்தில் தோன்றிய புலியை இறைவன் மேல் ஏவினர். இறைவன்புலியை கொன்று புலித்தோலை ஆடையாக கட்டிக்கொண்டார்.
அதன் பிறகு முனிவர்கள் மானை ஏவினார்கள். இறைவன் அதைஅடக்கி இடக்கரத்தில் ஏந்திக்கொண்டார்.
அதன் பிறகும் ஆத்திரம் கொண்ட முனிவர்கள் பாம்புகளை ஏவினர்.சிவபெருமான் அவற்றை தனக்குரிய அணிகலன்களாக மாற்றிஇடுப்பிலும், கழுத்திலும் அமைத்துக்கொண்டார்.
அதன் பிறகு முனிவர்கள் பூத கனங்களை ஏவினர். அவற்றைசிவபெருமான் தன்னுடைய படையில் சேர்த்துக் கொண்டார்.
இறுதியாக மிகப் பெரிய யானைகளை ஏவி விட… இறைவன் இந்தயானைகளின் தோலை உரித்து அதை தன்மீது போர்த்திக்கொண்டார்.
இதன் பிறகுதான் முனிவர்களின் ஆணவம் அடங்கியது. அவர்கள்பக்தி கண்களால் இறைவனைத் தேடினர். இறைவன் முனிவர்களுக்குதாருகாவனேஸ்வரராக காட்சியளித்து அவர்களின் செருக்கைஅடக்கினார்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment