Sunday 29 October 2017

விதவைப் பெண் - விவாகரத்து - களத்திர தோஷம்

விதவைப் பெண்
7-ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்கை பெற்றால் அவள் விதவையாவாள்.
மூன்று அசுபர்கள் 7-ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.
8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது,போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.
7-ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைது இருதால் இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.

விவாகரத்து
மங்கையர்களின் ஜாதகத்தில் 7-ம், 8-ம் இடங்கள் கெட்டிருந்தாலும்
லக்கினாதிபதி, 7-ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும்
12-ம் இடத்தில் ராகு, 6-ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும்
7-ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்





6-ம் வீடும், 7-ம் வீடும் தரும் களத்திர தோஷம்
திருமணம் என்றால் உடனே நினைவுக்கு வருவது 7-ம் வீடு தான். ஏனென்றால் அது களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. 7-ம்வீடு களத்திர ஸ்தானமென்றால் 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான 6-ம்வீடு திருமண பந்தத்திற்கு எதிர்மறையான பலனைக் கொடுக்கும் வீடாகும். தம்பதியர்க்குள் கருத்து வேற்றுமை, பிரிவு, ஆகியவை களைக் கொடுக்கும். ஆகவே திருமணப் பொருத்தம் பார்க்கும்போதே7-ம் வீடும், 6-ம் வீடும் சம்பந்தப்பட்டு இருக்கிறதா எனப் பார்த்து ஜாதகங்களைச் சேர்த்தல் நலம்.
வெறும் பத்துப் பொருத்தங்களை மட்டும் பார்த்து ஜாதகங்களை இணைப்பது அவ்வளவு நல்லது அல்ல; சிலர் தசப் பொருத்தம் மட்டும் பார்ப்பர்; சிலர் சமசப்தமம் இருந்தால் மட்டும் போதுமென்று ஜாதகங்களை இணைப்பர். சிலர் நட்சத்திர ஆதிக்க பலம் உள்ளவைகளான மிருகசீரிஷம், மகம்,சுவாதி, அனுஷம் ஆகிய 4நட்சத்திரங்களுக்கும் தசப்பொருத்தம் தேவை இல்லை என்று ஜாதகங்களைச் சேர்ப்பார்கள்.

No comments:

Post a Comment